February 19, 2023

ஜபம்-பதிவு-925- மரணமற்ற அஸ்வத்தாமன்-57 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-925-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-57

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

நம்முடன்

நட்புறவுடன் இருக்கும்

நண்பர்களின்

தனித்திறமையை

அறிவுக் கூர்மையை

செயலாற்றும்

தன்மையை

புரிந்து கொண்டும்

பாராட்ட

மனம் இல்லாமல்

இருந்தாலும்

பரவாயில்லை

 

அவமானப்படுத்துவது

என்பது தகாத

செயலாகும்

 

இவ்வாறு

அவமானப்படுத்தியவர்கள்

தாங்கள்

எந்த நிலையில்

இருந்தார்களோ

அந்த

நிலையிலேயே

தான் இருப்பார்கள்

சிந்தனை செய்யும்

திறனற்ற

அவர்களால்

வாழ்க்கையை

வாழ்க்கையாக

வாழ முடியாது

 

வாழ்க்கையின்

உயர்ந்த நிலைகளை

தங்களுடைய

வாழ்க்கையில்

அவர்களால்

காணவே

முடியாது ஆனால்

அவமானப்படுத்தப்பட்டவர்கள்

வாழ்க்கையின்

உயர்ந்த நிலைகளை

அடைவார்கள்

சாதனை

செய்வார்கள்

சரித்திரம்

படைப்பார்கள்

யாரும் செய்யாத

செயலைச்

செய்வார்கள்

யாராலும் செய்ய

முடியாததையும்

செய்வார்கள்

 

ஏனென்றால்

அவமானப்படுத்தப்பட்டவர்கள்

வாழ்க்கை என்றால்

என்ன என்பதைப்

புரிந்து

கொண்டவர்கள்

 

அவமானப்படுத்தியவர்கள்

வாழ்க்கை

இழந்து நிற்பார்கள்

ஆனால்

அவமானப்படுத்தப்பட்டவர்கள்

வாழ்க்கையில்

உயர்ந்து

நிற்பார்கள்

 

அவமானத்தை

சந்திக்காதவர்கள்

இந்த

உலகத்தில் யாருமே

இருக்க முடியாது

 

அவமானத்தை

அனுபவத்தின்

படிக்கட்டுக்களாக மாற்றி

செயலாற்றியவர்களே

வாழ்க்கையில் வெற்றி

பெற்றிருக்கிறார்கள்

அவமானத்தை

எதிர்த்து நிற்க

தைரியம்

இல்லாதவர்கள்

அழிந்து தான்

போய்

இருக்கிறார்கள்

 

அவமானம்

என்பது

சாதாரணமானது

கிடையாது

 

அவமானத்தை

அசிங்கமாக

கருதினால்

அது நமக்கு

இழப்பு தான்

அவமானத்தை

அனுபவமாக

கருதினால்

அது நமக்கு

வெற்றி தான்

 

அவமானத்தை

இழிவாக

நினைக்காதே

வாழ்க்கை

உனக்கு

கற்றுத் தந்த

பாடமாக

எடுத்துக்கொள்

 

ஏழை என்று

நினைத்துத்தானே

உன்னை

அவமானப்படுத்தினார்கள்

சாப்பிட்டிற்கு வழி

இல்லாதவன்

என்று

தானே உன்னை

அவமானப்படுத்தினார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-924- மரணமற்ற அஸ்வத்தாமன்-56 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-924-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-56

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

யார்

அவமானப்

படுத்தினார்களோ

அவர்கள்

முன்னால்

வாழ்ந்து

காட்டமுடியும்

எதற்காக நம்மை

அவமானப்படுத்தினார்களோ

அதை அடைந்து

காட்ட முடியும்

யார் நம்மை

அவமானப்படுத்தினார்களோ

அவர்கள் முன்னால்

அவர்களை விட

உயர்ந்த நிலையை

அடைந்து

சாதனைகளைச்

செய்து காட்ட

முடியும்

 

இந்த அவமானம்

தான் ஒருவருடைய

வாழ்க்கையை

உயர்த்தவும் செய்யும்

அழிக்கவும் செய்யும்

 

அவமானங்கள்

நம் வாழ்க்கையை

செம்மைப்படுத்தும்

அவமானங்கள்

நம் வாழ்க்கையை

வளப்படுத்தும்

அவமானங்கள்

நம் வாழ்க்கையை

உயர்நிலைப்படுத்தும்

 

அவமானத்திற்குள்

மாட்டிக் கொண்டு

மனவேதனைப்

பட்டுக் கொண்டு

இருந்தால் நாம்

நம்முடைய

வாழ்க்கையை

இழந்து விடுவோம்

 

அவமானத்தை

எதிர்த்து நின்று

போராடினால்

வாழ்க்கையில்

உயர்ந்த நிலையை

அடைவோம்

 

மன உறுதி

இல்லாதவர்

இந்த அவமானத்தில்

அழுந்தி

அழிந்து விடுவர்

மனஉறுதி

கொண்டவர்

இந்த

அவமானத்தைக்

கடந்து

வெற்றி பெறுவர்

 

அவமானம்

யார்

வாழ்க்கையில்

எதிர்ப்படுகிறதோ

அவர் அதை

எப்படி எதிர்

கொள்கிறார்

என்பதைப்

பொறுத்துதான்

அவருடைய

வாழ்க்கை

அழியுமா

அல்லது

உயருமா

என்பதைச்

சொல்ல

முடியும்

 

எப்போதுமே

நண்பர்கள்

தன்னுடன்

நட்பாக பழகும்

நண்பன்

எத்தகைய

தனித்திறமையை

உடையவனாக

இருக்கிறான்

என்பதையும்

 

எத்தகைய

அறிவுக்கூர்மை

கொண்டவனாக

இருக்கிறான்

என்பதையும்

 

எத்தகைய

திறமைசாலியாக

இருக்கிறான்

என்பதையும்

 

செயல்படும்

திறனில்

எப்படி

சிறப்பாக

இருக்கிறான்

என்பதையும்

 

தெரிந்தும்

தெரியாதது

போல்

இருப்பார்கள்

 

பாராட்ட

மனம்

இல்லாமல்

இருப்பார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-923- மரணமற்ற அஸ்வத்தாமன்-55 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-923-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-55

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

என்னுடைய

நண்பர்கள்

அரைத்த

அரிசி மாவை

தண்ணீரில் கலந்து

எனக்கு

கொடுத்தார்கள்

அதை பால்

என்று நினைத்து

நான் குடித்ததைப்

பார்த்து ஏளனமாகச்

சிரித்து என்னைச்

சுற்றி நின்று

கொண்டு கைதட்டி

ஆரவாரம் செய்து

என்னை அவமானப்

படுத்தினார்கள்

 

நண்பர்களை

உண்மையானவர்கள்

என்று நினைத்தேன்

நண்பர்களுக்குள்

ஏமாற்ற மாட்டார்கள்

என்று நினைத்தேன்

அவமானப்படுத்த

மாட்டார்கள்

என்று நினைத்தேன்

அசிங்கப்படுத்த

மாட்டார்கள்

என்று நினைத்தேன்

ஏளனப்படுத்த

மாட்டார்கள்

என்று நினைத்தேன்

 

என்னை ஏமாற்றி

விட்டார்கள்

நட்பின்

புனிதத்தன்மையைக்

கெடுத்து விட்டார்கள்

நண்பர்களின்

மேல் நான்

வைத்த நம்பிக்கையை

சிதைத்து விட்டார்கள்

நட்புக்கு துரோகம்

செய்து விட்டார்கள்

அவர்கள் எனக்கு

கெடுதல் செய்து

விட்டார்கள்

என்னுடைய

ஏழ்மையை

இகழ்ந்து

விட்டார்கள்

என்னை

அவமானப்படுத்தி

விட்டார்கள்

 

நண்பர்களுக்குள்

உயர்வு தாழ்வு

இருக்கக்கூடாது

பணக்காரன்

ஏழை என்ற

பாகுபாடு

இருக்கக் கூடாது

உயர்ந்தவன்

தாழ்ந்தவன்

என்ற

சாதி வேறுபாடு

இருக்கக் கூடாது

அதை எல்லாம்

அவர்கள்

பார்த்தார்கள்

நான்

பார்க்கவில்லை

நான் நட்பை

மட்டுமே

பார்த்தேன்

வேறு

எதையும்

நான்

பார்க்கவில்லை

 

யாரை எல்லாம்

நான் நண்பன்

என்று பார்த்தேனோ

அவர்கள் எல்லாம்

என்னை நண்பனாக

பார்க்கவில்லை

என்னை

ஏழையாகப்

பார்த்தார்கள்

ஏமாளியாகப்

பார்த்தார்கள்

அறிவில்லாதவன்

என்று பார்த்தார்கள்

ஒன்றும் அறியாதவன்

என்று பார்த்தார்கள்

என்னை

அவமானப்படுத்தி

பார்த்தார்கள்

 

துரியோதனன் :

அவமானங்களை

நமக்கு

ஏற்படுத்தியவர்களையும்

அவமானங்களை

நமக்கு எதற்காக

ஏற்படுத்தினார்கள்

என்பதையும்

நாம் எப்போதும்

மறக்கவே கூடாது

 

ஒவ்வொரு கணமும்

அந்த

அவமானத்தை

நினைத்துக் கொண்டே

இருக்க வேண்டும்

அப்போது தான்

நம்மால்

வாழ்க்கையில்

உயர முடியும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-922- மரணமற்ற அஸ்வத்தாமன்-54 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-922-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-54

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

வாழ்க்கை

என்பது ஒரு

பூந்தோட்ம்

அதை ரசித்து

வாழ வேண்டும்

போர்க்களமாக

நினைத்து

போராடி

வாழக்கூடாது

 

வாழ்க்கையை

பூந்தோட்டமாக

நினைத்து

ரசித்து வாழ்

 

போர்க்களமாக

நினைத்து

போராடி

வாழ்க்கையைத்

தொலைத்து

விடாதே

 

அஸ்வத்தாமன் :

அவமானத்தைத்

துடைப்பதற்கு

போராட

வேண்டாம்

என்கிறாயா

 

துரியோதனன் :

வழியைத் தேடு

என்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

வழியை

எப்படி

தேடுவது

 

துரியோதனன் :

உனக்கு நேர்ந்த

அவமானத்தைச்

சொல்

வழியை நான்

சொல்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

இது போல்

யாரும்

என்னிடம்

பேசியது

கிடையாது

 

உன்னுடைய

வார்த்தைகள்

என் உயிரில்

ஏதோ ஒரு

மாற்றத்தை

ஏற்படுத்துகிறது

 

துரியோதனன் :

பிறருடைய

சொல்

உடல் வரை

தான் பாயும்

ஆனால்

நண்பனின்

சொல் மட்டுமே

உயிர் வரை

பாயும்

 

நீ என்னை

நண்பனாக

ஏற்றுக் கொண்டு

வருகிறாய்

என்பதையே

இது காட்டுகிறது

 

அஸ்வத்தாமன் :

நீ சொல்வதும்

உண்மையாகத்தான்

இருக்கும் போல்

இருக்கிறது

என்னுடைய

மனக்குறைகளை

உன்னிடம் சொல்ல

வேண்டும் போல்

இருக்கிறது

 

துரியோதனன் :

உன் மனதை

அழுத்திக்

கொண்டிருக்கும்

பாரங்களை

என் மேல்

இறக்கி

வைத்து விடு

 

உன் மனம்

அமைதி

அடைந்து

விட்டதை

நீ காண்பாய்

 

அஸ்வத்தாமன் :

இளவயதில்

என்னுடைய

நண்பர்கள்

எனக்கு எதைக்

கொடுத்தாலும்

சாப்பிடுவேன்

காரணம்

என்னுடைய

நண்பர்கள்

எனக்கு நல்லது

செய்வார்கள்

கெட்டது

செய்ய

மாட்டார்கள்

என்ற

காரணத்தினால்

தான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-921- மரணமற்ற அஸ்வத்தாமன்-53 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-921-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-53

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

(வகுப்பு முடிந்து

சென்ற

அஸ்வத்தாமனை

அழைத்து

துரியோதனன்

பேசுகிறான்)

 

துரியோதனன் :

அஸ்வத்தாமா

நில் உன்னிடம்

கொஞ்சம் பேச

வேண்டும்

 

அஸ்வத்தாமன் :

என்னிடம்

பேசுவதற்கு

என்ன

இருக்கிறது

 

துரியோதனன் :

நண்பனிடம்

பேசுவதற்கு

எவ்வளவோ

விஷயங்கள்

இருக்கும்

 

அஸ்வத்தாமன் :

எனக்கு

நண்பர்கள் என்று

யாரும்

கிடையாது

 

துரியோதனன் :

என்னை

நண்பனாக

ஏற்றுக் கொள்

 

அஸ்வத்தாமன் :

யாரையும்

நண்பனாக

ஏற்றுக் கொள்ளும்

மனநிலையில்

நான் இல்லை

 

துரியோதனன் :

எதற்காக

 

அஸ்வத்தாமன் :

நண்பர்களால்

அவமானப்

படுத்தப்பட்டதால்

 

துரியோதனன் :

என்ன காரணம்

 

அஸ்வத்தாமன் :

நான் ஏழை

என்ற

காரணம் தான்

 

துரியோதனன் :

ஏழையை

பணக்காரர்கள்

அவமானப்படுத்துவது

என்பது

காலம் காலமாக

இந்த உலகத்தில்

நடந்து வரும்

நடைமுறைதானே

 

இது ஒன்றும்

புதியது

இல்லையே

இதில்

வருத்தப்படுவதற்கு

என்ன இருக்கிறது

 

அஸ்வத்தாமன் :

அவமானப்படுத்தியது

நண்பர்கள்

அல்லவா

நான்

நண்பர்களாக

ஏற்றுக்

கொண்டவர்கள்

அல்லவா

அதனால் தான்

வருத்தப்படுகிறேன்

எனக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைக்கப் போராடிக்

கொண்டிருக்கிறேன்

 

போராட்டமே

வாழ்க்கை

அல்லவா

 

வாழ்க்கையே

ஒரு போர்க்களம்

அல்லவா

 

போராடித்தான்

பார்க்க

வேண்டும்

அல்லவா

 

துரியோதனன் :

வாழ்க்கை

என்பது

போர்க்களம்

கிடையாது

 

எப்போதும்

போராடிக்

கொண்டு

இருப்பதற்கு

 

வாழ்க்கையில்

நடக்கும்

ஒவ்வொரு

விஷயத்திற்கும்

நாம்

போராடிக்

கொண்டு

இருந்தால்

சாகும் வரை

போராடிக்

கொண்டு

தான் இருக்க

வேண்டும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////