August 04, 2024

ஜபம்-பதிவு-997 மரணமற்ற அஸ்வத்தாமன்-129 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-997

மரணமற்ற அஸ்வத்தாமன்-129

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

என்னை நம்பி வந்த அனைவரும்

எனக்காக வந்த அனைவரும்

என்னைக் காக்க வந்த அனைவரும்

என்னைச் சார்ந்த அனைவரும்

என்னைச் சுற்றியுள்ள அனைவரும்

நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்டு

என்னை விட்டுப் பிரிந்து விட்ட நிலையில்

இவ்வுலகை விட்டு சென்று விட்ட நிலையில்

இனி திரும்பி வர முடியாத இடத்திற்கு

சென்று விட்ட நிலையில்

தன்னை வீரன் என்று சொல்லிக் கொள்ளும் அந்த பீமன்

ஒரு சில அடிமைகளால் வீரன் என்று சொல்லப்படும் அந்த பீமன்

தற்பெருமை அடித்துக் கொள்ளும் அந்த பீமன்

சாப்பாட்டைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத அந்த பீமன்

அறிவற்ற அந்த பீமன்

வீரன் என்ற சொல்லுக்கே இழுக்காக இருக்கும் அந்த பீமன்

வீரன் என்ற வார்த்தைக்கே தகுதி இல்லாத அந்த பீமன்

வீரத்திற்கே களங்கமாக இருக்கும் அந்த பீமன்

கதாயுதப் போருக்கு என்று விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி

கதாயுதப் போருக்கு என்று வகுக்கப்பட்ட நீதி நெறிகளை மீறி

கதாயுதப் போருக்கு என்று நடைமுறையில் இருக்கும் நியாய தர்மங்களை மீறி

எப்போதும் தந்திர வேலைகளையே செய்து கொண்டிருக்கும்

கிருஷ்ணனின் சூழ்ச்சி நிறைந்த வழி காட்டுதலினால்

கிருஷ்ணன் செய்து காட்டிய தரம் குறைந்த செய்கையினால்

கிருஷ்ணனின் தூண்டுதலினால்

பீமன் என் இடுப்புக்குக் கீழே தொடைகளில் தாக்கி

காயத்தை ஏற்படுத்தி

பாதிப்பை உண்டாக்கிய காரணத்தினால்

வலியின் தாக்கமும்

வேதனையும்

என்னை துன்பத்திற்கு உள்ளாக்கிய நிலையில்

நான் கொஞ்சம் கொஞ்சமாக

உயிரை விட்டுக் கொண்டிருக்கும் நிலையில்

என்னுடைய உயிர் என் உடலை விட்டு

வெளியேறிக் கொண்டிருப்பதை

நான் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்

தர்மம் என்ற வார்த்தையைச் சொல்லி நடத்தப்பட்ட

தர்மத்தைக் கொன்று நடத்தப்பட்ட

தர்மத்தின் பேரால் நடத்தப்பட்ட

அதர்மச் செயல்களினால் தான்

நயவஞ்ச வேலைகளினால் தான்

தர்மம் என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு

கிருஷ்ணனும், பாண்டவர்களும் சேர்ந்து செய்த

அதர்மச் செயல்களினால் தான்

இன்று நான் இறப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்

 

பாண்டவர்களில் ஐவரில் ஒருவரைத் தேர்ந்தெடு

எங்களில் ஒருவரை தோற்கடித்து விட்டால்

நாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக் கொள்கிறோம்

உன்னுடைய ஆயுதத்தை நீயே தேர்ந்தெடுக்கலாம்

உன்னுடைய எதிரியையும் நீயே தேர்ந்தெடுக்கலாம்

என்று யுதிஷ்டிரன் என்னிடம் சொன்ன போது

என்னுடைய ஆயுதமாக கதாயுதத்தைத் தேர்ந்தெடுத்தேன்

 

நான் கதாயுதப் போர் செய்வதற்கு பீமனைத் தவிர்த்து

யாரைத் தேர்ந்தெடுத்து இருந்தாலும்

அவர் இந்நேரம் இறந்திருப்பார். நான் வெற்றி பெற்று இருப்பேன்

 

என்னுடன் சண்டையிட்டால் சிறிது நேரம் கூட

தாக்குப்பிடிக்க முடியாத அவர்களை நான் தேர்ந்து எடுத்து

இருந்தால் நான் தான் வெற்றி இருப்பேன்

ஆனால் நான் அவர்கள் யாரையும் தேர்ந்து எடுக்கவில்லை

 

கதாயுதம் தெரிந்த பீமனை தேர்ந்து எடுத்தேன்

என்னுடன் சிறிது நேரம் தாக்குப் பிடிப்பான் என்ற

காரணத்தினால் தேர்ந்து எடுத்தேன்

 

நியாயப்படி தேர்ந்தெடுத்தேன்

தர்மத்தின்படி தேர்ந்தெடுத்தேன்

நானும் நியாயத்தின் படி தான் சண்டையிட்டேன்

நீதி தவறாமல் சண்டையிட்டேன்

விதிமுறைகளை மீறாமல் சண்டையிட்டேன்

 

காதாயுதப் போரில் இடுப்புக்குக் கீழே தொடைகளில்

தாக்கக் கூடாது என்பது விதி

ஆனால் பீமன் அந்த விதிமுறைகளை எல்லாம் மீறி

என் தொடைகளில் அடித்து என்னை சாய்த்தான்

அடிபட்டுக் கீழே காயங்களுடன் வலியுடன் கிடந்த என்னை

அந்த பீமன் என் தலையை காலால் மிதித்தான்

ஒரு அரசன் என்றும் பாராமல் என் தலையில் மிதித்தான்

என்னை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு

அவனுடைய காலால் என் தலையில் மிதித்தான்

பீமன் என்னை காலால் மிதித்தற்கு நான் கவலைப்படவில்லை

ஒரு வீரனின் காலில் மிதிபட்டு இருந்தால் கவலைப்பட்டு இருக்க மாட்டேன்

ஒரு கோழையின் காலால் மிதிபட்டேனே என்று தான் கவலைப்படுகிறேன்

 

நியாயப்படி சண்டையிட பீமனை தேர்ந்து எடுத்த நான் கெட்டவன்

நியாயப்படி சண்டையிட்ட நான் கெட்டவன்

தர்மத்தின் படி சண்டையிட்ட நான் கெட்டவன்

விதிமுறைகளை மீறாமல் சண்டையிட்ட நான் கெட்டவன்

ஆனால், விதிமுறைகளை மீறி தொடையில் அடித்து

என்னை சாய்த்த பீமன் நல்லவன்

அவனை இந்த உலகம் தர்மத்தை நிலை நாட்டியவன் என்கிறது

 

தர்மத்தை காப்பாற்றுவதற்காக பீமன் என் தொடையில் அடித்தான்

என்று பீமன் செய்த தவறுக்கு கிருஷ்ணன் ஒரு விளக்கம் கொடுக்கிறார்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-996 மரணமற்ற அஸ்வத்தாமன்-128 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-996

மரணமற்ற அஸ்வத்தாமன்-128

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

கதாயுதப்போரில் பீமன் விதிமுறைகளை மீறி துரியோதனனின் இடுப்புக்குக் கீழே தொடையில் தாக்கி துரியோதனனை வீழ்த்தினான் என்ற விஷயத்தைக் கேள்விபட்ட அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் ஆகிய மூன்று பேரும் குதிரையில் வேகமாக வந்து

துரியோதனனைப் பார்த்தனர்.

 

ஆயிரக்கணக்கான இரத்தினங்களால் ஆன கிரீடத்தை

அணிந்த நிலையில் இருந்தவனும்,

பல மன்னர்களிடமிருந்து கப்பம் வசூலித்து

பெரும் வாழ்வு வாழ்ந்த நிலையில் இருந்தவனும்,

குபேரனுக்கு நிகரான செல்வம் பெற்ற நிலையில் இருந்தவனும்,

ஒரு மாளிகையிலிருந்து மற்றொரு மாளிகைக்கு நடந்து செல்ல

தங்கத்தால் பாதை அமைத்த நிலையில் இருந்தவனும்,

இந்திரனுக்கு நிகரான அழகைப் பெற்ற நிலையில் இருந்தவனும்,

சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான நிலையில் இருந்தவனும்

சந்திரனின் குளிர்ச்சியை தன்னுள் கொண்டவனாக இருந்தவனும்,

ஈரேழு லோகத்திலும் வெல்ல முடியாத வீரத்தைக் கொண்டவனாக இருந்தவனும்,

வீரத்திற்கு உதாரணம் என்று சொல்லப்படக்கூடிய நிலையில் இருந்தவனும்,

வீரத்திற்கே விதையாக இருந்தவனும்,

யாராலும் வீழ்த்த முடியாத சிறப்பைப் பெற்றவனாக இருந்தவனும்,

பலத்தில் யானை போன்ற நிலையில் இருந்தவனும்,

கதாயுதப் போரில் யாராலும் வெல்ல முடியாத நிலையில் இருந்தவனும்,

ஆகிய துரியோதனன் தற்போது,

பூமியில் புரண்டு கொண்டிருக்கும்

நிலையில் இருக்கக் கூடிய நிலையினையும்,

இரத்தத்தால் உடல் நனைக்கப்பட்ட

நிலையில் இருக்கக் கூடிய நிலையினையும்,

புழுதியினால் உடல் அழுக்கடைந்த

நிலையில் இருக்கக் கூடிய நிலையினையும்,

கண்டு வேதனை அடைந்தனர்.

 

அஸ்வத்தாமன் : நண்பா அன்றும் உன்னுடன் இருந்தேன். இன்றும் உன்னுடன் இருக்கிறேன். நாளையும் உன்னுடன் இருப்பேன்.

 

வீரம் நிறைந்த உன்னுடைய வம்சத்தில், கோழைத்தனமான பாண்டவர்கள் இருப்பது கேவலம். அதை விட கேவலம் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பது.

 

அவர்களை உயிருடன் விட்டு வைத்தது தவறு. அதனால் எல்லா தவறுகளையும் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அவர்களை விட்டு வைத்தால் இன்னும் பல தவறுகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

பாண்டவர்கள் செய்யும் தவறுகளுக்கு புதியதாக ஒரு விளக்கம் கொடுப்பதற்கு என்று கிருஷ்ணன் இருக்கின்ற காரணத்தினால் பாண்டவர்கள் துணிந்து தவறுகளைத் தொடர்ந்து  செய்து கொண்டு வருகின்றனர்.

 

முடிவு எதுவும் இல்லாமல் தவறுகளைச் செய்து வருகின்றனர்.

 

தவறுகளை நியாயப் படுத்துபவர்கள் இருக்கிறவர்கள் இருக்கின்ற வரை

தவறு செய்பவர்கள் தவறுகளை செய்து கொண்டு தான் இருப்பார்கள்

தவறுகளைத் திருத்திக் கொள்ளவே மாட்டார்கள்

தவறுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

 

தவறு செய்பவர்களிடம் நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டவில்லை என்றால் தாங்கள் செய்வது சரி என்று நினைத்துக் கொண்டு தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பார்கள்

 

பாண்டவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் தவறானவை என்று வீரத்தினால் தான் அவர்களிடம் சொல்ல வேண்டும்.  ஆனால் வீரம் என்றால் என்ன என்று தெரியாத அந்த கோழைத்தனமான பாண்டவர்களிடம் வீரத்தால் எப்படி சொல்ல முடியும்.

 

வீரத்தால் பாண்டவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்ட முடியாது.

பாண்டவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சூழ்ச்சி

சூழ்ச்சி மட்டுமே அவர்களுக்கு தெரியும்

சூழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் தெரியாது

அந்த சூழ்ச்சியை சொல்லிக் கொடுத்தது அந்த கிருஷ்ணன்

சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும்

சூழ்ச்சியால் தான் அவர்களை வீழ்த்த வேண்டும்.

அப்போது தான் உனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க முடியும்

 

துரியோதனன் : வருத்தப்படாதே நண்பா! தாங்கள் செய்த தவறான செயல்களுக்கு

வருத்தப்பட வேண்டியது பாண்டவர்கள் தான். தாங்கள் செய்வது சரி என்று நினைக்கும் பாண்டவர்கள் எப்படி வருத்தப்படுவார்கள். வருத்தப்பட மாட்டார்கள்.

 

தர்மத்தை நிலை நாட்டுவதாக சொல்லி விட்டு

தர்மத்தைக் காப்பாற்ற வந்தவர்கள் போல் நாடகம் ஆடிவிட்டு

தர்மம் என்ற வார்த்தையைச் சொல்லி சொல்லியே

அதர்ம வேலைகளைத் தொடர்ந்து செய்து விட்டு

தர்மத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டு

தர்மத்தைத் தலை குனிய வைத்து விட்டு

பாண்டவர்கள் செய்யும் செயல்கள் தான் தர்மம்

கௌரவர்கள் செய்யும் செயல்கள் அதர்மம் என்று

தங்களுக்கு என்று தனியாக

ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு

பாண்டவர்கள் அதர்மச் செயல்களைச் செய்தாலும்

அதை தர்மம் என்று சொல்லித் திரிந்து கொண்டு

தங்களை தர்மவான்களாக இந்த உலகத்தில் காட்டிக் கொண்டு

தங்களை தர்மவான்கள் என்று மக்களை நம்ப வைத்துக் கொண்டு

நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டு

இந்த உலகத்தில் ஏமாந்தவர்களை ஏமாற்றிக் கொண்டு

கிருஷ்ணனும் பாண்டவர்களும் சேர்ந்து செய்த

கோழைத்தனமான செய்கைகளினால்

சூழ்ச்சி நிறைந்த வேலைகளினால்

தேவையற்ற செயல்களினால்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

August 03, 2024

வரலாறு-(17)-இந்தியர்களுக்கு வரலாற்று அறிவு இல்லை என்று சொன்ன கால்டுவெல்-03-08-2024

 

வரலாறு-(17)-இந்தியர்களுக்கு வரலாற்று அறிவு இல்லை என்று சொன்ன கால்டுவெல்-03-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்தியர்களுக்கு வரலாற்று

அறிவு இல்லை

என்று சொன்னார்

திராவிட மொழிகளின்

ஒப்பிலக்கணம்

என்ற நூலை எழுதிய

கால்டுவெல்

 

இந்தியர்கள் தங்கள்

வரலாற்றை

நாணயங்களிலும்,

கல்வெட்டுகளிலும்

தேடிக் கொண்டிருக்கின்றனர்

என்று சொன்னது

இந்தியாவில்

மிகப்பெரிய எதிர்ப்பைக்

கிளப்பிய வரலாறு

எத்தனை பேருக்குத்

தெரியும்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----03-08-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////////






August 02, 2024

வரலாறு-(16)-தமிழை வளர்க்க வரவில்லை வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி-02-08-2024

 

வரலாறு-(16)-தமிழை வளர்க்க வரவில்லை வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி-02-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் தான்

தமிழை வளர்த்தார்கள் என்பது தவறான விஷயம்

 

ஏற்கனவே தமிழ் நாட்டில்

தமிழ் வளர்ந்த நிலையில்

உச்சநிலையில் தான் இருந்தது

ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

தமிழை வளர்த்து வைத்து இருந்தார்கள்

 

நம்முடைய கலை

பண்பாடு கலாச்சாரம்

ஆகியவற்றைக் கேள்விபட்டு

வியாபாரம் செய்ய வந்தார்கள்

நாட்டை அடிமைப்படுத்தினார்கள்

 

வியாபாரம் செய்ய

வந்தவர்கள்

நம்மை அடிமை நிலையில்

வைத்திருந்தவர்கள் எப்படி

நம்முடைய தமிழை வளப்பார்கள்

 

அவர்கள் வளர்த்தது

ஐரோப்பாவின் மதத்தை

என்பதை வரலாற்றை ஆராய்ந்துப்

பார்த்தால் தெரியும்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----02-08-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




August 01, 2024

வரலாறு-(15)-மதுரையில் கிறிஸ்தவமதம் பரப்பியவர், தத்துவ போதக சுவாமி எனப்படும் இராபர்ட்-டி-நோபிலி--01-08-2024

 

வரலாறு-(15)-மதுரையில் கிறிஸ்தவமதம் பரப்பியவர், தத்துவ போதக சுவாமி எனப்படும் இராபர்ட்-டி-நோபிலி--01-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மதுரையில்

கிறிஸ்தவ மதம்

பரவுவதற்கும்

இந்துக்கள்

பலர்

இந்து மதத்திலிருந்து

கிறிஸ்தவ மதத்திற்கும்

மதம் மாறியதற்கும்

முக்கிய காரணமாக

இருந்தவர்

தத்துவ போதக சுவாமி

எனப்படும்

இராபர்ட்-டி-நோபிலி

அவரைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----01-08-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////





July 31, 2024

வரலாறு-(14)-தமிழின் முதல் அச்சுப் புத்தகம்-31-07-2024

 

வரலாறு-(14)-தமிழின் முதல் அச்சுப் புத்தகம்-31-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தமிழின்

முதல்

அச்சு நூலை

எழுதியது

யார் என்று

பலருக்குத் தெரியாது

அதன் வரலாறும்

தெரியாது

 

வரலாறைத்

தெரிந்து கொள்வோம்

 

தமிழின் முதல்

அச்சு நூல்

எது என்றும்

பார்ப்போம்

 

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----31-07-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////




 

July 30, 2024

வரலாறு-(13)-தமிழின் முதல் உரைநடை நூலை, வீரமாமுனிவர் எழுதவில்லை -30-07-2024

 

வரலாறு-(13)-தமிழின் முதல் உரைநடை நூலை, வீரமாமுனிவர் எழுதவில்லை -30-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தமிழின் முதல்

உரைநடை நூலை

வீரமாமுனிவரும்

எழுதவில்லை

 

தத்துவ போதக

சுவாமியும்

எழுதவில்லை

 

தமிழின் முதல்

உரைநடைநூலை

யார் எழுதியது

என்று பார்ப்போம்

 

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

-----30-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////