August 04, 2024

ஜபம்-பதிவு-997 மரணமற்ற அஸ்வத்தாமன்-129 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-997

மரணமற்ற அஸ்வத்தாமன்-129

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

என்னை நம்பி வந்த அனைவரும்

எனக்காக வந்த அனைவரும்

என்னைக் காக்க வந்த அனைவரும்

என்னைச் சார்ந்த அனைவரும்

என்னைச் சுற்றியுள்ள அனைவரும்

நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்டு

என்னை விட்டுப் பிரிந்து விட்ட நிலையில்

இவ்வுலகை விட்டு சென்று விட்ட நிலையில்

இனி திரும்பி வர முடியாத இடத்திற்கு

சென்று விட்ட நிலையில்

தன்னை வீரன் என்று சொல்லிக் கொள்ளும் அந்த பீமன்

ஒரு சில அடிமைகளால் வீரன் என்று சொல்லப்படும் அந்த பீமன்

தற்பெருமை அடித்துக் கொள்ளும் அந்த பீமன்

சாப்பாட்டைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத அந்த பீமன்

அறிவற்ற அந்த பீமன்

வீரன் என்ற சொல்லுக்கே இழுக்காக இருக்கும் அந்த பீமன்

வீரன் என்ற வார்த்தைக்கே தகுதி இல்லாத அந்த பீமன்

வீரத்திற்கே களங்கமாக இருக்கும் அந்த பீமன்

கதாயுதப் போருக்கு என்று விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி

கதாயுதப் போருக்கு என்று வகுக்கப்பட்ட நீதி நெறிகளை மீறி

கதாயுதப் போருக்கு என்று நடைமுறையில் இருக்கும் நியாய தர்மங்களை மீறி

எப்போதும் தந்திர வேலைகளையே செய்து கொண்டிருக்கும்

கிருஷ்ணனின் சூழ்ச்சி நிறைந்த வழி காட்டுதலினால்

கிருஷ்ணன் செய்து காட்டிய தரம் குறைந்த செய்கையினால்

கிருஷ்ணனின் தூண்டுதலினால்

பீமன் என் இடுப்புக்குக் கீழே தொடைகளில் தாக்கி

காயத்தை ஏற்படுத்தி

பாதிப்பை உண்டாக்கிய காரணத்தினால்

வலியின் தாக்கமும்

வேதனையும்

என்னை துன்பத்திற்கு உள்ளாக்கிய நிலையில்

நான் கொஞ்சம் கொஞ்சமாக

உயிரை விட்டுக் கொண்டிருக்கும் நிலையில்

என்னுடைய உயிர் என் உடலை விட்டு

வெளியேறிக் கொண்டிருப்பதை

நான் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்

தர்மம் என்ற வார்த்தையைச் சொல்லி நடத்தப்பட்ட

தர்மத்தைக் கொன்று நடத்தப்பட்ட

தர்மத்தின் பேரால் நடத்தப்பட்ட

அதர்மச் செயல்களினால் தான்

நயவஞ்ச வேலைகளினால் தான்

தர்மம் என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு

கிருஷ்ணனும், பாண்டவர்களும் சேர்ந்து செய்த

அதர்மச் செயல்களினால் தான்

இன்று நான் இறப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்

 

பாண்டவர்களில் ஐவரில் ஒருவரைத் தேர்ந்தெடு

எங்களில் ஒருவரை தோற்கடித்து விட்டால்

நாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக் கொள்கிறோம்

உன்னுடைய ஆயுதத்தை நீயே தேர்ந்தெடுக்கலாம்

உன்னுடைய எதிரியையும் நீயே தேர்ந்தெடுக்கலாம்

என்று யுதிஷ்டிரன் என்னிடம் சொன்ன போது

என்னுடைய ஆயுதமாக கதாயுதத்தைத் தேர்ந்தெடுத்தேன்

 

நான் கதாயுதப் போர் செய்வதற்கு பீமனைத் தவிர்த்து

யாரைத் தேர்ந்தெடுத்து இருந்தாலும்

அவர் இந்நேரம் இறந்திருப்பார். நான் வெற்றி பெற்று இருப்பேன்

 

என்னுடன் சண்டையிட்டால் சிறிது நேரம் கூட

தாக்குப்பிடிக்க முடியாத அவர்களை நான் தேர்ந்து எடுத்து

இருந்தால் நான் தான் வெற்றி இருப்பேன்

ஆனால் நான் அவர்கள் யாரையும் தேர்ந்து எடுக்கவில்லை

 

கதாயுதம் தெரிந்த பீமனை தேர்ந்து எடுத்தேன்

என்னுடன் சிறிது நேரம் தாக்குப் பிடிப்பான் என்ற

காரணத்தினால் தேர்ந்து எடுத்தேன்

 

நியாயப்படி தேர்ந்தெடுத்தேன்

தர்மத்தின்படி தேர்ந்தெடுத்தேன்

நானும் நியாயத்தின் படி தான் சண்டையிட்டேன்

நீதி தவறாமல் சண்டையிட்டேன்

விதிமுறைகளை மீறாமல் சண்டையிட்டேன்

 

காதாயுதப் போரில் இடுப்புக்குக் கீழே தொடைகளில்

தாக்கக் கூடாது என்பது விதி

ஆனால் பீமன் அந்த விதிமுறைகளை எல்லாம் மீறி

என் தொடைகளில் அடித்து என்னை சாய்த்தான்

அடிபட்டுக் கீழே காயங்களுடன் வலியுடன் கிடந்த என்னை

அந்த பீமன் என் தலையை காலால் மிதித்தான்

ஒரு அரசன் என்றும் பாராமல் என் தலையில் மிதித்தான்

என்னை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு

அவனுடைய காலால் என் தலையில் மிதித்தான்

பீமன் என்னை காலால் மிதித்தற்கு நான் கவலைப்படவில்லை

ஒரு வீரனின் காலில் மிதிபட்டு இருந்தால் கவலைப்பட்டு இருக்க மாட்டேன்

ஒரு கோழையின் காலால் மிதிபட்டேனே என்று தான் கவலைப்படுகிறேன்

 

நியாயப்படி சண்டையிட பீமனை தேர்ந்து எடுத்த நான் கெட்டவன்

நியாயப்படி சண்டையிட்ட நான் கெட்டவன்

தர்மத்தின் படி சண்டையிட்ட நான் கெட்டவன்

விதிமுறைகளை மீறாமல் சண்டையிட்ட நான் கெட்டவன்

ஆனால், விதிமுறைகளை மீறி தொடையில் அடித்து

என்னை சாய்த்த பீமன் நல்லவன்

அவனை இந்த உலகம் தர்மத்தை நிலை நாட்டியவன் என்கிறது

 

தர்மத்தை காப்பாற்றுவதற்காக பீமன் என் தொடையில் அடித்தான்

என்று பீமன் செய்த தவறுக்கு கிருஷ்ணன் ஒரு விளக்கம் கொடுக்கிறார்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

No comments:

Post a Comment