August 04, 2024

ஜபம்-பதிவு-1004 மரணமற்ற அஸ்வத்தாமன்-136 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1004

மரணமற்ற அஸ்வத்தாமன்-136

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

இவர்கள் நால்வரும்

முழு மனதுடன் போர் புரியவில்லை

அரை மனதுடன் தான் போர் புரிந்தார்கள்

முழு மனதுடன் போர் புரிந்து இருந்தால்

பாண்டவர்களால் இவர்களை வீழ்த்தி இருக்கவே முடியாது.

பாண்டவர்கள் இவர்களைக் கொன்று இருக்கவே முடியாது

பாண்டவர்கள் வெற்றி பெற்று இருக்கவே முடியாது

அரை மனதுடன் போர் புரிந்த காரணத்தினால் தான்

இவர்களைக் கொல்லவே முடிந்தது

இங்கே கிருஷ்ணரின் சூழ்ச்சி இருந்தது

 

கிருபர்  : கிருஷ்ணன் சூழ்ச்சி செய்தார் என்றால்

நீயும் ஏன் அதே சூழ்ச்சியைச் செய்ய வேண்டும் என்கிறாய்

சூழ்ச்சிக்கு சூழ்ச்சி என்பது பதில் கிடையாது

இரவில் ஏன் போர் புரிய வேண்டும் என்கிறாய்

கிருஷ்ணன் செய்த தவறை

கடவுள் என்று சொல்லப்படுகிற கிருஷ்ணன் செய்த தவறை

நீயும் ஏன் செய்ய முயற்சி செய்கிறாய்

நாளை காலை சூரியன் உதிக்கட்டும்

நாளை காலை போர் செய்வோம்

 

அஸ்வத்தாமன் : கடமை என்னை அழைக்கிறது. எனக்கு இடப்பட்ட கடமையை நான் முடிக்க வேண்டும். எனக்கிருக்கும் காலம் குறைவு. அதற்குள் எனக்குள்ள கடமையை முடிக்க வேண்டும். கால நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் என்னால் என்னுடைய கடமையை முடிக்க முடியாது.

 

நான் போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு எனக்கு நேரம் காலம் கிடையாது. இரவு பகல் கிடையாது. அதை எல்லாம் பார்க்கும் நிலையில் நான் இல்லை.

 

என்னுடைய எண்ணத்தை யாராலும் மாற்றவும் முடியாது. என்னுடைய எண்ணத்தை நான் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.

 

உங்களுக்கு போர் செய்ய விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள். நான் செய்வது சரி என்று நீங்கள் நினைத்தால் என்னுடன் இணைந்து போர் செய்ய வாருங்கள். இரவில் போர் செய்ய விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள்.

 

பகலில் தான் போர் செய்வோம் என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் செல்லலாம். தன்னந்தனியாக நான் ஒருவனே பார்த்துக் கொள்கிறேன்.

 

கிருபர் : போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு பின் வாங்குவது முறை கிடையாது. உன்னுடன் வந்து விட்டேன். எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன். எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நான் தயார்

 

கிருதவர்மன் : நானும் தயார்

 

அஸ்வத்தாமன் பாண்டவர்கள் இருக்கும் பாசறையில் நுழைகிறான். கிருபரும், கிருதவர்மனும் பாசறையின் வெளியில் இருக்கின்றனர். அஸ்வத்தாமன் ஒரு கூடாரத்தில் நுழைகிறான். அங்கு திருஷ்டத்யும்னன் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனை காலால் எட்டி உதைத்தான். தூக்கத்தில் விழித்து எழுந்தான் திருஷ்டத்யும்னன்.

திருஷ்டத்யும்னன் : உறங்கும் சமயத்தில் போர் செய்ய வந்திருக்கிறாயே

உறங்கிக் கொண்டிருப்பவர்களுடன் போர் செய்ய வந்திருக்கிறாயே

இரவில் போர் செய்ய வந்திருக்கிறாயே

நீயெல்லாம் ஒரு வீரனா

போரின் விதிமுறைகள் உனக்கு தெரியும் அல்லவா

 

அஸ்வத்தாமன் : நான் இரவில் போர் செய்ய வந்திருப்பது

புதிய போர் முறையைக் கொண்டு வருவதற்கு

பழைய போர் முறையை மாற்றுவதற்கு

காலங்காலமாக நடைபெற்று வரும் போர் முறையில்

மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு

புது முறையைக் புகுத்துவதற்கு

சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு

வருங்காலத்தில் பின்பற்றுவதற்கு

புதிய போர் முறையை உருவாக்குவதற்கு

நான் இரவில் போர் செய்ய வந்திருக்கிறேன்

 

எதிர்காலத்தில் செய்யப்படும் போர்முறைக்கு

முன்னுதாரணமாக என்னுடைய போர் முறை

இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக

போர் முறையில் ஒரு புதிய மாற்றத்தை

உருவாக்கி இரவு நேரத்தில் போர் செய்ய வந்திருக்கிறேன்

 

நான் செய்யும் இந்த போர் முறையைத் தான்

வருங்காலத்தில் பின்பற்றப் போகிறார்கள்

 

வருங்காலத்தில் அனைவராலும் பின்பற்றப்படும்

ஒரு போர் முறையைத் தான்  

நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்

 

வருங்காலத்தில் போரானது

அதற்கென்று ஒதுக்கப்பட்ட களத்தில் நடைபெறாது

அதற்கென்று தனியாக சட்ட திட்டங்கள் இருக்காது

இரவு பகல் என்று பார்க்காமல்

கால நேரம் எதுவும் பார்க்காமல் போர் நடைபெறும்

சிறுவர்கள் சிறுமிகள் பெண்கள் குழந்தைகள்

என்று பார்க்காமல் அனைவரும் கொல்லப்படுவார்கள்

இத்தகைய ஒரு நிலையில் தான்

வருங்காலத்தில் போர்கள் நடைபெறப்போகிறது

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment