August 04, 2024

ஜபம்-பதிவு-998 மரணமற்ற அஸ்வத்தாமன்-130 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-998

மரணமற்ற அஸ்வத்தாமன்-130

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

என்னுடன் சண்டையிட்டு வெற்றி பெற முடியாத பீமன்

சூழ்ச்சியால் என்னை வீழ்த்தியதற்கு பெருமை பட்டுக் கொள்கிறான்

விதிமுறைகளை மீறீ என்னை வீழ்த்திய பீமன்

தர்மத்தை நிலைநாட்டியவன் என்கிறான் கிருஷ்ணன்

 

வீரத்தை நிலை நாட்ட வேண்டிய இடத்தில்

வீரத்தை நிலை நாட்டாமல் தர்மத்தின் பெயரைச் சொல்வது

எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை

 

கிருஷ்ணன் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றால்

வேறு எங்காவது போய் தர்மத்தை நிலை நாட்ட வேண்டியது தானே

கிருஷ்ணன் அவனுடைய நாட்டிற்குச் சென்று

தர்மத்தை நிலை நாட்ட வேண்டியது தானே

தர்மத்தை எங்கே நிலை நாட்ட வேண்டுமோ

அங்கே நிலை நாட்டாமல் விட்டு விட்டு

எங்கே தர்மத்தை நிலை நாட்டக் கூடாதோ

அங்கே தர்மத்தை நிலை நாட்டுகிறேன்

என்று சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பது அயோக்கியத் தனம்

தர்மத்தை நிலை நாட்டுகிறேன் என்று சொல்லி விட்டு

கிருஷ்ணனும், பாண்டவர்களும் செய்யும்

அக்கிரமங்களும் அநியாயங்களும் அதிகம்

 

செய்யும் தவறுகளை மறைக்க தர்மம் என்ற வார்த்தைகளைப்

பயன்படுத்துகின்றனர் கிருஷ்ணனும், பாண்டவர்களும்

 

இன்னும் இந்த கிருஷ்ணன் எவ்வளவு காலம் தர்மம்

என்ற வார்த்தையை சொல்லி சொல்லி

கெட்டவைகளை செய்யப்போகிறானோ

கெட்ட செயல்களைச் செய்யப் போகிறானோ

தெரியவில்லை

 

தர்மம் என்ற வார்த்தையைச் சொல்லி சொல்லியே

அனைவரையும் அழித்து விட்டான்

அனைத்தையும் அழித்து விட்டான்

இனி எதை எல்லாம் அழிக்கப் போகிறானோ தெரியவில்லை

 

நான் இறப்பைப் பற்றி கவலைப்படவில்லை

 

பாண்டவர்கள் செய்த

அதர்மச் செயல்களால் வீழ்த்தப்பட்டு

இறக்கப் போகிறேனே

என்று தான் கவலைப்படுகிறேன்

 

பாண்டவர்களை வீழ்த்த முடியாமல்

இறக்கப் போகிறேனே

என்று தான் கவலைப்படுகிறேன்

 

பாண்டவர்களைக் கொல்லாமல்

இறக்கப் போகிறேனே

என்று தான் கவலைப்படுகிறேன்

 

பாண்டவர்கள் இறப்பதைப் பார்க்காமல்

இறக்கப் போகிறேனே

என்று தான் கவலைப்படுகிறேன்

 

பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற மகிழ்ச்சியான

செய்தியைக் கேளாமல்

இறக்கப் போகிறேனே

என்று தான் கவலைப்படுகிறேன்

 

இனி என்னால் எதுவும் செய்ய முடியாது

அனைத்தும் முடிந்து விட்டது

 

இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை

 

அஸ்வத்தாமன் :நான் இருக்கும் வரை எதுவும் முடியாது

முடியவும் விட மாட்டேன்

 

துரியோதனன் :ஆமாம் போர் முடிந்து விடக்கூடாது

நான் காயம் பட்ட காரணத்தினால் போர் முடிந்து விடக்கூடாது

பாண்டவர்கள் இறக்காமல் போர் முடிந்து விடக்கூடாது

 

தடைப்பட்டு நிற்கும் போரை நீதான் தொடர வேண்டும்

உன்னால் மட்டுமே போரை தொடர முடியும்

போரைத் தொடர்ந்து நடத்த முடியும்

உன்னைத் தவிர வேறு யாராலும் போரை நடத்த முடியாது

உனக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கிறது

வேறு யாருக்கும் அந்தத்தகுதி இல்லை

 

போர் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில்

பாண்டவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று

நினைப்பவர்களுடைய நினைவை சிதைக்கும் வகையில்

போர் முடிந்து விடவில்லை

போரைத் தொடர்வதற்கு அஸ்வத்தாமன் நானிருக்கிறேன் என்று

கௌரவர்களின் சார்பாக போரிடுவதற்கு நானிருக்கிறேன் என்று

சீறும் சிங்கமென

பாயும் புலியென

உறுமும் சிறுத்தையென

அனைவரும் அஞ்சி நடுங்கும் வகையில்

நண்பா

போரைத் தொடர்ந்து நடத்துவாயா

பாண்டவர்களைக் கொல்வாயா

என் லட்சியத்தை நிறைவேற்றுவாயா

 

நீ தான் குருஷேத்திரப் போரை தொடர்ந்து நடத்த வேண்டும்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

No comments:

Post a Comment