August 04, 2024

ஜபம்-பதிவு-996 மரணமற்ற அஸ்வத்தாமன்-128 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-996

மரணமற்ற அஸ்வத்தாமன்-128

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

கதாயுதப்போரில் பீமன் விதிமுறைகளை மீறி துரியோதனனின் இடுப்புக்குக் கீழே தொடையில் தாக்கி துரியோதனனை வீழ்த்தினான் என்ற விஷயத்தைக் கேள்விபட்ட அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் ஆகிய மூன்று பேரும் குதிரையில் வேகமாக வந்து

துரியோதனனைப் பார்த்தனர்.

 

ஆயிரக்கணக்கான இரத்தினங்களால் ஆன கிரீடத்தை

அணிந்த நிலையில் இருந்தவனும்,

பல மன்னர்களிடமிருந்து கப்பம் வசூலித்து

பெரும் வாழ்வு வாழ்ந்த நிலையில் இருந்தவனும்,

குபேரனுக்கு நிகரான செல்வம் பெற்ற நிலையில் இருந்தவனும்,

ஒரு மாளிகையிலிருந்து மற்றொரு மாளிகைக்கு நடந்து செல்ல

தங்கத்தால் பாதை அமைத்த நிலையில் இருந்தவனும்,

இந்திரனுக்கு நிகரான அழகைப் பெற்ற நிலையில் இருந்தவனும்,

சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான நிலையில் இருந்தவனும்

சந்திரனின் குளிர்ச்சியை தன்னுள் கொண்டவனாக இருந்தவனும்,

ஈரேழு லோகத்திலும் வெல்ல முடியாத வீரத்தைக் கொண்டவனாக இருந்தவனும்,

வீரத்திற்கு உதாரணம் என்று சொல்லப்படக்கூடிய நிலையில் இருந்தவனும்,

வீரத்திற்கே விதையாக இருந்தவனும்,

யாராலும் வீழ்த்த முடியாத சிறப்பைப் பெற்றவனாக இருந்தவனும்,

பலத்தில் யானை போன்ற நிலையில் இருந்தவனும்,

கதாயுதப் போரில் யாராலும் வெல்ல முடியாத நிலையில் இருந்தவனும்,

ஆகிய துரியோதனன் தற்போது,

பூமியில் புரண்டு கொண்டிருக்கும்

நிலையில் இருக்கக் கூடிய நிலையினையும்,

இரத்தத்தால் உடல் நனைக்கப்பட்ட

நிலையில் இருக்கக் கூடிய நிலையினையும்,

புழுதியினால் உடல் அழுக்கடைந்த

நிலையில் இருக்கக் கூடிய நிலையினையும்,

கண்டு வேதனை அடைந்தனர்.

 

அஸ்வத்தாமன் : நண்பா அன்றும் உன்னுடன் இருந்தேன். இன்றும் உன்னுடன் இருக்கிறேன். நாளையும் உன்னுடன் இருப்பேன்.

 

வீரம் நிறைந்த உன்னுடைய வம்சத்தில், கோழைத்தனமான பாண்டவர்கள் இருப்பது கேவலம். அதை விட கேவலம் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பது.

 

அவர்களை உயிருடன் விட்டு வைத்தது தவறு. அதனால் எல்லா தவறுகளையும் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அவர்களை விட்டு வைத்தால் இன்னும் பல தவறுகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

பாண்டவர்கள் செய்யும் தவறுகளுக்கு புதியதாக ஒரு விளக்கம் கொடுப்பதற்கு என்று கிருஷ்ணன் இருக்கின்ற காரணத்தினால் பாண்டவர்கள் துணிந்து தவறுகளைத் தொடர்ந்து  செய்து கொண்டு வருகின்றனர்.

 

முடிவு எதுவும் இல்லாமல் தவறுகளைச் செய்து வருகின்றனர்.

 

தவறுகளை நியாயப் படுத்துபவர்கள் இருக்கிறவர்கள் இருக்கின்ற வரை

தவறு செய்பவர்கள் தவறுகளை செய்து கொண்டு தான் இருப்பார்கள்

தவறுகளைத் திருத்திக் கொள்ளவே மாட்டார்கள்

தவறுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

 

தவறு செய்பவர்களிடம் நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டவில்லை என்றால் தாங்கள் செய்வது சரி என்று நினைத்துக் கொண்டு தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பார்கள்

 

பாண்டவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் தவறானவை என்று வீரத்தினால் தான் அவர்களிடம் சொல்ல வேண்டும்.  ஆனால் வீரம் என்றால் என்ன என்று தெரியாத அந்த கோழைத்தனமான பாண்டவர்களிடம் வீரத்தால் எப்படி சொல்ல முடியும்.

 

வீரத்தால் பாண்டவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்ட முடியாது.

பாண்டவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சூழ்ச்சி

சூழ்ச்சி மட்டுமே அவர்களுக்கு தெரியும்

சூழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் தெரியாது

அந்த சூழ்ச்சியை சொல்லிக் கொடுத்தது அந்த கிருஷ்ணன்

சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும்

சூழ்ச்சியால் தான் அவர்களை வீழ்த்த வேண்டும்.

அப்போது தான் உனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க முடியும்

 

துரியோதனன் : வருத்தப்படாதே நண்பா! தாங்கள் செய்த தவறான செயல்களுக்கு

வருத்தப்பட வேண்டியது பாண்டவர்கள் தான். தாங்கள் செய்வது சரி என்று நினைக்கும் பாண்டவர்கள் எப்படி வருத்தப்படுவார்கள். வருத்தப்பட மாட்டார்கள்.

 

தர்மத்தை நிலை நாட்டுவதாக சொல்லி விட்டு

தர்மத்தைக் காப்பாற்ற வந்தவர்கள் போல் நாடகம் ஆடிவிட்டு

தர்மம் என்ற வார்த்தையைச் சொல்லி சொல்லியே

அதர்ம வேலைகளைத் தொடர்ந்து செய்து விட்டு

தர்மத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டு

தர்மத்தைத் தலை குனிய வைத்து விட்டு

பாண்டவர்கள் செய்யும் செயல்கள் தான் தர்மம்

கௌரவர்கள் செய்யும் செயல்கள் அதர்மம் என்று

தங்களுக்கு என்று தனியாக

ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு

பாண்டவர்கள் அதர்மச் செயல்களைச் செய்தாலும்

அதை தர்மம் என்று சொல்லித் திரிந்து கொண்டு

தங்களை தர்மவான்களாக இந்த உலகத்தில் காட்டிக் கொண்டு

தங்களை தர்மவான்கள் என்று மக்களை நம்ப வைத்துக் கொண்டு

நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டு

இந்த உலகத்தில் ஏமாந்தவர்களை ஏமாற்றிக் கொண்டு

கிருஷ்ணனும் பாண்டவர்களும் சேர்ந்து செய்த

கோழைத்தனமான செய்கைகளினால்

சூழ்ச்சி நிறைந்த வேலைகளினால்

தேவையற்ற செயல்களினால்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

No comments:

Post a Comment