September 20, 2018

திருக்குறள்-பதிவு-22


                   திருக்குறள்-பதிவு-22

சார்லஸ் டார்வின்
கூற்றுப்படி
குரங்கிலிருந்து
வந்தவன் மனிதன்
அதாவது,
விலங்கிலிருந்து
வந்தவன் மனிதன்

தசாவதாரத்தில்
உள்ள கூற்றுப்படி,
வராக அவதாரம்;
சிம்ம அவதாரம்;
வாமன அவதாரம்;
என்ற வரிசையில்
வராக அவதாரம்
என்பது
விலங்காக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;
சிம்ம அவதாரம்
என்பது
விலங்கும், மனிதனும்
சேர்ந்து ஒரு
உருவமாக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;
வாமன அவதாரம்
என்பது
மனிதனாக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;

இந்த தசாவதார
வரிசையில்
விலங்கிலிருந்து
மனிதன் தோன்றினான்
என்று சொல்லப்
பட்டிருக்காது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்று
சொல்லப்பட்டிருக்கும்

விலங்கிலிருந்து
மனிதன் தோன்றுவதற்கு
முன்பாக இடையில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை
ஒன்று உண்டு அந்த
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்று
நம் முன்னோர்கள்
சொல்லி இருப்பார்கள்

சார்லஸ் டார்வின்
விலங்கிலிருந்து
மனிதன் நேரடியாக
தோன்றினான் என்று
சொல்லி இருப்பார்.

சார்லஸ் டார்வின்
சொன்னது போல்
விலங்கிலிருந்து மனிதன்
நேரடியாக தோன்றி
இருக்க முடியாது.

தசாவதாரத்தில் சொல்லப்
பட்டிருப்பது போல
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றி இருக்க முடியும்

நீரில் வாழ்ந்த
உயிரினம்
நேரடியாக நிலத்தில்
வாழ்வதற்குரிய
உடலமைப்பைப்
பெற்றிருக்கவில்லை.
நீரிலும், நிலத்திலும்
வாழ்வதற்குரிய
உடலமைப்பைப்
பெற்ற பிறகு,
நீரை விட்டு விட்டு
நிலத்தில் வாழக்கூடிய
தகவமைப்பைப் பெற்றது
பிறகு தான்
நிலத்தில் வாழ்ந்தது.

இரண்டு ஒன்றாக
இருக்கும் போது
இரண்டில் ஒன்று கழிந்து
ஒன்று உருவானது
ஒன்று நேரடியாக
மாற்றமடையவில்லை.

அதைப்போலத்தான்
விலங்கு நிலை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை
பிறகு இதில் உள்ள
விலங்கு நிலை கழிந்து
மனிதன் என்ற
நிலை தோன்றியது.

விலங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்பது
சார்லஸ் டார்வின் கருத்து
விலங்குக்கும்
மனிதனுக்கும் இடையில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை என்ற
ஒன்று உண்டு என்பது
தசாவதாரத்தின் மூலம்
நம் முன்னோர்கள்
சொல்ல வரும் கருத்து

சார்லஸ் டார்வின்
விலங்குக்கும்
மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
கண்டு பிடிக்காமல்
போய் இருக்கலாம்
அல்லது
இன்னும் வாழ்ந்திருந்தால்
அவர் அதனை
கண்டுபிடித்திருக்கலாம்
ஆனால்,
விலங்குக்கும்
மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
இன்றளவும்
யாரும் கண்டுபிடிக்கவில்லை
இந்த விஷயத்தை
கண்டுபிடிக்க
இன்னும் விஞ்ஞானிகள்
எத்தனை நூற்றாண்டுகள்
எடுத்துக் கொள்ளப்
போகிறார்கள் என்பதும்
அல்லது
கடைசிவரை
கண்டுபிடிக்காமல் இருந்து
விடப்போகிறார்கள்
என்பதும் தெரியாது.

ஆனால் பல
நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
நம் முன்னோர்கள்
விலங்கு நிலையிலிருந்து
மனிதன் நேரடியாக
தோன்றவில்லை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
அதில் உள்ள
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் தோன்றினான்
என்கிறார்கள்.

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்பதை
உணர்ந்த நம்
முன்னோர்கள்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு நிலைக்கு
ஒரு பெயரை
வைத்திருக்கிறார்கள்
அதனை சிற்பமாக
வடித்து வைத்திருக்கிறார்கள்
அது என்ன
என்பதைப் பற்றி
தெரிந்து கொள்வோம்

--------- இன்னும் வரும்
---------- 20-09-2018
////////////////////////////////////////////////





September 18, 2018

திருக்குறள்-பதிவு-21


                      திருக்குறள்-பதிவு-21

இந்த உலகத்தில்
அதர்மம் தலைவிரித்து
ஆடும்போதெல்லாம்
அதர்மத்தை அழித்து
தர்மத்தை
நிலைநாட்டுவதற்கு
கடவுள் அவதாரம்
எடுக்கிறார்
ஒவ்வொரு காலகட்டத்திலும்
அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்டுவதற்கு
விஷ்ணு 10
அவதாரங்கள் எடுத்தார்
விஷ்ணுவின் பத்து
அவதாரங்களை
தசாவதாரம்
என அழைக்கிறோம்

உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
நம் முன்னோர்கள்
தசாவதாரத்தின்
மூலம் விளக்குகிறார்கள்

(1) மச்ச அவதாரம்

மச்சம் என்றால் மீன்
என்று பொருள்.
மீன் நீரில் வாழக்கூடிய
உயிரினம் ஆகும்

இந்த பிரபஞ்சத்தில்
உயிரினங்கள் முதன்
முதலில் நீரில்
இருந்து தான்
தோன்றியது

மீன் நீரில்
வாழும் உயிரினம் ஆகும்
இதனைக் குறிப்பது தான்
மச்ச அவதாரம்.

(2)கூர்ம அவதாரம்

கூர்மம் என்றால் ஆமை
என்று பொருள்.
ஆமை நீரிலும்,
நிலுத்திலும்
வாழக்கூடிய
உயிரினம் ஆகும்

நீரில் தோன்றிய
உயிரினம்
அடுத்து தரையில்
வாழ்வதற்கான
முயற்சிகளை
மேற்கொண்டாலும்
முழுவதுமாக
அதனால் தரையில்
வாழ முடியவில்லை
எனவே, நீரிலும்,
நிலத்திலும் வாழ்வதற்குரிய
தகவமைப்பைப் பெற்று
நீரிலும் நிலத்திலும்
வாழ்ந்தது

ஆமை நீரிலும்
நிலத்திலும் வாழும்
உயிரினம் ஆகும்
இதனைக் குறிப்பது தான்
கூர்ம அவதாரம்

(3)வராக அவதாரம்
வராகம் என்றால்
பன்றி என்று
பொருள்
பன்றி நிலத்தில்
வாழும் உயிரினம்
ஆகும்

நீரிலும் நிலத்திலும்
வாழ்ந்த உயிரினம்
நிலத்தில் மட்டுமே
வாழ்வதற்குரிய
முயற்சிகளை மேற்கொண்டு
நிலத்தில் மட்டுமே
வாழக்கூடிய நிலையை
அடைந்தது
நிலத்தில் மட்டும்
வாழ்ந்தாலும்
தன்னுடைய பழைய
நினைவின் தூண்டுதலினால்
அடிக்கடி போய் நீரில்
படுத்துக் கொள்கிறது
அதாவது பன்றி
சாக்கடையில் போய்
புரண்டு உருள்கிறது
பன்றிக்கு நீரில்
வாழ்ந்த பதிவு
இருக்கின்ற காரணத்தினால்
சாக்கடையில் அடிக்கடி
போய் படுத்துக்
கொள்கிறது

பன்றி நிலத்தில்
வாழும் உயிரினம்
ஆகும்
இதைக் குறிப்பது தான்
வராக அவதாரம்

(4)நரசிம்ம அவதாரம்
நர+சிம்மம்=நரசிம்மம்
நர என்றால் மனிதன்
என்று பொருள்
சிம்மம் என்றால்
சிங்கம் என்று பொருள்
நரசிம்மம் என்றால்
மனிதனும், சிங்கமும்
சேர்ந்தது என்று
பொருள்
அதாவது
நரசிம்மம் என்பதற்கு
மனிதன் உடலையும்
சிங்கத்தின் தலையையும்
கொண்ட உயிரினம்
என்று உருவகப்படுத்தி
இருக்கிறார்கள்
நம் முன்னோர்கள்

விலங்கானது
மனிதன் என்ற நிலையை
அடைவதற்கு முன்பாக
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு நிலை
இருக்கிறது
என்கிறார்கள்
நம் முன்னோர்கள்
அதைத் தான்
நரசிம்ம அவதாரமாக
காட்டி இருக்கிறார்கள்

நம் முன்னோர்களும்
சார்லஸ் டார்வினும்
இந்த இடத்தில்
தான் வேறுபடுகிறார்கள்

சார்லஸ் டார்வின்
குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்கிறார்
அதாவது
விலங்கிலிருந்து
மனிதன்
வந்தான் என்கிறார்
ஆனால்
நம் முன்னோர்கள்
விலங்கிலிருந்து
மனிதன் வரவில்லை
விலங்கிலிருந்து
மனிதன் வருவதற்கு
முன்பாக இடையில்
ஒரு உயிரினம்
இருக்கிறது
அது தான்
மனிதனும், விலங்கும்
சேர்ந்த ஒரு நிலை
என்று உருவகப்படுத்தி
இருக்கிறார்கள்
அதைத் தான்
நரசிம்ம அவதாரமாக
நமக்கு சுட்டிக்
காட்டியிருக்கிறார்கள்

நம் முன்னோர்களும்
சார்லஸ் டார்வினும்
வேறு பட்டு
நிற்கும் நிலையினை
ஆராய்வோம்

--------- இன்னும் வரும்
---------- 18-09-2018
////////////////////////////////////////////////


September 14, 2018

திருக்குறள்-பதிவு-20


                      திருக்குறள்-பதிவு-20

டார்வினின்
கண்டுபிடிப்பு
யாருமே கண்டுபிடிக்க
முடியாத அபூர்வமான
கண்டுபிடிப்பு;
உலகையே
புரட்டிபோட்ட
கண்டுபிடிப்பு;
யாரும் நம்பவே
முடியாத கண்டுபிடிப்பு;
சிந்தித்துக் கூட
பார்க்க முடியாத
கண்டுபிடிப்பு:

இத்தகைய உயர்ந்த
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
உயிரிகளின் மிக
அடிப்படையான
ஆதாரத்தை
ஆதாரங்களோடு
உண்மையை
வெளிப்படுத்துவதற்கு,
ஒரு மனிதன்
தன் வாழ்க்கையில்
ஏராளமான
போராட்டங்களையும்
எவ்வளவு கஷ்டங்களையும்
சந்திக்க வேண்டியிருந்தது
என்பதை டார்வின்
வாழ்க்கையைப்
பார்த்தாலே
தெரியும்

சார்லஸ் டார்வின்
உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டைக்
கண்டு பிடித்து
இந்த உலகத்திற்கு
சொன்ன போது
இந்த உலகம்
சார்லஸ் டார்வினுக்கு
எதிராக
பல்வேறு
பிரச்சினைகளை
கொண்டு வந்தது.

ஐந்து நாட்கள்
அண்ட சராசரங்களையும்
படைத்த பரமபிதா
ஆறாவது நாள்
களிமண்ணை
உருட்டி ஆதாமையும்
அவன் விலா
எலும்பிலிருந்து
ஏவாளையும் படைத்து
விட்டு ஏழாவது நாள்
ஓய்வு எடுத்துக்
கொண்டார்
என்று பைபிளில்
சொல்லப்பட்டதற்கு
எதிராக ஒரு
மதத்திற்கு எதிராக
ஒட்டு மொத்த
கிறிஸ்தவர்களுக்கு
எதிராக இருந்த
டார்வினின் கண்டுபிடிப்பு
எவ்வளவு
எதிர்ப்புகளை சந்தித்து
இருக்கும்

பைபிளில் சொல்லப்
பட்டதற்கு எதிராக
சார்லஸ் டார்வினின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
சார்லஸ் டார்வின்
தன் வாழ்நாளில்
பல்வேறு எதிர்ப்புகளைச்
சந்தித்தார்.

மதத்திற்கும் தான்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பிற்கும்
எந்தவித சம்பந்தமும்
இல்லை என்று
சார்லஸ் டார்வின்
எவ்வளவு எடுத்துச்
சொல்லியும்
இந்த உலகம்
ஏற்றுக் கொள்ளவேயில்லை.

உலகைக் கூர்ந்து
கவனிப்பதையும்
ஆராய்ச்சிகள்
செய்வதையும்
நிறுத்துமாறு
நான் எப்போது
நிர்பந்திக்கப்படுகிறேனோ
அன்றைய
தினமே நான்
இறந்து போவேன்
என்றார் சார்லஸ்
டார்வின்

சார்லஸ் டார்வின்
1882-ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம்
19-ம் நாள்
இவ்வுலக வாழ்வை
நீத்தார்.
இங்கிலாந்தின்
வெஸ்ட்
மினிஸ்டர் அப்பேயில்
(Westminster Abbey)
அவரது உடல்
அடக்கம் செய்யப்பட்டது
இரண்டு பெரிய
விஞ்ஞானிகளுடன்
ஜான் ஹெர்ஸ்ஷல்
மற்றும்
சர் ஐசக் நியூட்டன்
இவர்களுடன்
சார்லஸ் டார்வின்
ஏப்ரல் 26-ஆம் தேதி
மிகுந்த அரசு
மரியாதையுடன்
சார்ல்ஸ் டார்வின்
உடல் அடக்கம்
செய்யப்பட்டது

சார்ல்ஸ் டார்வின்
இறந்து ஒன்றரை
நூற்றாண்டுகளுக்குப்
பின்னர்
அவரின் கோட்பாட்டை
லண்டனின்
தேவாலய சர்ச்
தவறென்று
சொன்னதற்கு மன்னிப்பு
கேட்டுக் கொண்டது

1859-ஆம் ஆண்டு
சார்லஸ் டார்வின்
தான் கண்டுபிடித்த
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
இந்த உலகத்திற்கு
வழங்கிய போது
எவ்வளவு எதிர்ப்புகளை
சார்லஸ் டார்வின்
சந்திக்க வேண்டி
இருந்தது என்பதை
வரலாறு
தெள்ளத் தெளிவாக
நமக்கு உணர்த்துகிறது

ஆனால்,
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
அதாவது
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
அனைவரும்
புரிந்து கொள்ளும்
வகையில்
எளிமையாக
நம் முன்னோர்கள்
சொல்லி இருக்கிறார்கள்
என்பது எத்தனை
பேருக்குத் தெரியும்

--------- இன்னும் வரும்
---------- 14-09-2018
///////////////////////////////////////////////////////////