December 28, 2018

திருக்குறள்-பதிவு-76


                       திருக்குறள்-பதிவு-76

“அற்புதம் என்றால்
என்ன என்று
தெரியுமா?” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“மோசஸ்,
இயேசு கிறிஸ்து
ஆகியோர் செய்தது
தான் அற்புதத்தில்
மிகப் பெரிய அற்புதம்,
அது தான்
உண்மையான அற்புதம்”
என்றாள் அந்தப் பெண்

“அற்புதம் என்றால்
அற்புதம் மட்டுமே ;
அற்புதத்தில் மிகப்
பெரிய அற்புதம் ;
உண்மையான
அற்புதம் ; என்பது
எதுவும் கிடையாது
அற்புதத்தை உணராதவர்கள்
அற்புதம், அற்புதம் என்று
தேடி அலைவார்கள்
அற்புதத்தை உணர்ந்தவர்கள்
அற்புதம், அற்புதம்
என்று அற்புதம் பின்னால்
அலைய மாட்டார்கள்

இதுவரை இந்த
உலகத்தில் பிறரால்
நிகழ்த்தி காட்டப்பட்ட
அற்புதங்களும் ;
அற்புதம் என்ற பெயரில்
பிறரால் தற்போது
நிகழ்த்தி காட்டப்பட்டுக்
கொண்டிருக்கும்
அற்புதங்களும் ;
அற்புதம் அல்ல
அற்புதம் என்பது
எல்லாவற்றிற்கும்
மேலானது ;
அந்த அற்புதத்தை அறிந்து
அந்த அற்புதத்துடன்
இணைவது தான்
அற்புதத்தில் அற்புதம் ;

முதலில் அற்புதம்
என்றால் என்ன என்று
அறிந்து கொள் ;
அதற்கு பிறகு
அற்புதத்தை உணரலாம் ;
அற்புதம் என்றால் என்ன
என்று அறியாமல்
அற்புதத்தை உணர
முடியாது” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“அற்புதம் என்றால்
என்ன என்று எனக்கு
சொல்லித் தாருங்கள்
புருனோ” என்றாள்
அந்தப் பெண்.

“கல், மண்,
செடி, கொடி, மரம்
விலங்குகள்,
மனிதர்கள்- என
இந்த பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்தும் ஒன்றுடன்
ஒன்று இணைக்கப்பட்டுள்ளது
இந்தப் பிரபஞ்சத்தில்
உள்ள எந்த ஒன்றும்
தனித்து இல்லை எல்லாம்
ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது

இவைகள் அனைத்தும்
ஒரு குறிப்பிட்ட ஒன்றால்
அறிய முடியாத ஒன்றால்
கண்ணுக்குத்
தெரியாத ஒன்றால்
சூட்சும நிலையில்
இணைக்கப் பட்டுள்ளன

அது மட்டுமல்ல
அவைகள் ஒவ்வொன்றும்
அவைகளுக்கு என்று
நிர்ணயிக்கப்பட்ட
நியதிகளின்படி
அணு அளவும்
பிசகாமல் அனைத்தும்
இயக்க ஒழுங்கு
மாறாமல் இயங்கிக்
கொண்டு இருக்கிறது

இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்தும்
எப்படி ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது
என்பதையும் ;
அவைகள் எப்படி
இயக்க ஒழுங்கு மாறாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதையும் ;
இவைகள் அனைத்தையும்
தன்னுள் வைத்து
இயக்கிக் கொண்டிருப்பது
எது என்பதையும்
அறிந்து கொள்வது
தான் அற்புதம்
அதை உணர்வது
கொள்வது தான் அற்புதம்

இந்த அற்புதத்தை
உணர்ந்து கொண்டால்
வேறு அற்புதத்தை
தேடி ஓட வேண்டிய
அவசியமில்லை ;
அற்புதத்தை
நிகழ்த்துபவர்களைக்
கண்டு அதிசயப்பட
வேண்டிய அவசியமில்லை ;
அற்புதம் செய்பவர்களிடம்
அடிபணிய வேண்டிய
அவசியம் இல்லை ;

அற்புதம் என்றால்
என்ன என்று
தெரிந்து கொள்
அப்போது நீ அற்புதம்
அற்புதம் என்று
அலைய மாட்டாய் ;
அத்தகைய அற்புதத்தை
தெரிந்து கொள்” என்றார்
ஜியார்டானோ புருனோ

“அந்த அற்புதத்தை
எனக்கு காட்டுவீர்களா
அந்த அற்புதத்தை காணும்
வழி முறையை எனக்கு
சொல்லித் தருவீர்களா
புருனோ” என்றாள்
அந்தப் பெண்

“அற்புதம் என்றால் என்ன
என்று தெரிந்து கொள்ள
வேண்டுமானால்
அற்புதம் என்றால் என்ன
என்று உணர
வேண்டுமானால் - நீ
உன் சுவாசத்தை
மாற்ற வேண்டும்
சுவாசத்தை மாற்றுவதன்
மூலம் - நீ அற்புதம்
என்றால் என்ன என்பதை
உணர முடியும்

உட்சுவாசம்
வெளி சுவாசம் என்று
ஓடிக் கொண்டிருக்கும்
சுவாசத்தை உட்சுவாசமாக
(Inner Breath)
மட்டுமே மாற்ற
வேண்டும்” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“எனக்கு சுவாசத்தை
உட்சுவாசமாக மட்டுமே
எப்படி மாற்றுவது
என்பதை சொல்லித்
தாருங்கள்” புருனோ
என்றாள் அந்தப்பெண்

இங்கே வா இந்த
இடத்தில் வந்து உட்கார்
உனக்கு சுவாசத்தை
எப்படி மாற்ற வேண்டும்
வெளி சுவாசத்தை நிறுத்தி
உட்சுவாசமாக மட்டுமே
சுவாசத்தை எப்படி
ஓட வைப்பது
என்பதை செய்து
காட்டுகிறேன் என்றார்
ஜியார்டானோ புருனோ

---------  இன்னும் வரும்
---------  28-12-2018
///////////////////////////////////////////////////////////


December 27, 2018

திருக்குறள்-பதிவு-75


                     திருக்குறள்-பதிவு-75

ஜியார்டானோ
புருனோவினுடைய
வாழ்க்கையில் மக்களால்
நடந்ததாக சொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவிற்கு
எதிராக சொல்லப்பட்ட
பெரும்பாலான சம்பவங்களின்
வார்த்தைகள் அனைத்தும்
அவரைப் பிடிக்காதவர்கள்
காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக சொல்லப்பட்ட
வார்த்தைகளாக இருந்தும் ;
மதவெறியின் காரணமாக
அவர் மீது
சுமத்தப்பட்ட போலிக்
குற்றச்சாட்டுக்களாக
இருந்தும் ;  அவைகள்
உண்மையானவைகளா
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் ஜியார்டானோ
புருனோ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டார் என்ற
காரணத்திற்காக அவைகள்
அனைத்தும் ஆதாரங்களாக
எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆனால், ஜியார்டானோ
புருனோவினுடைய
வாழ்க்கையில் மக்களால்
நடந்ததாக சொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவிற்கு
ஆதரவாக சொல்லப்பட்ட
பெரும்பாலான சம்பவங்களின்
வார்த்தைகள் அனைத்தும்
அவரது ஆதரவாளர்களால்
சொல்லப்பட்ட வார்த்தைகள்
என முடிவு செய்யப்பட்டு
அந்த சம்பவங்களில்
சொல்லப்பட்ட வார்த்தைகள்
உண்மையானவைகளாக
இருந்தாலும் அவைகள்
அனைத்தும் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை
அவைகள் அனைத்தும்
புறக்கணிக்கப் பட்டன.

இவ்வாறு மக்களுடைய
மனநிலை எந்த
நிலையில் இருக்கிறது
என்பதை ரகசியமாக
ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்த சமயத்தில்
செனட் சபை கூட்டப்பட்டு
செனட் சபை
உறுப்பினர்கள் கலந்து
கொண்ட கூட்டத்தில்
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்கு
அனுப்புவதற்கான
தீர்மானத்தின் மீது
விவாதம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது,

ஜியார்டானோ புருனோவின்
மீது பல்வேறு
குற்றச்சாட்டுக்களை சுமத்தி
ஜியார்டானோ புருனோவை
ஒரு குற்றவாளியாக
முத்திரை குத்தி
அவரை தாக்கியே
அனைவரும் விவாதத்தில்
பேசிக் கொண்டு இருந்தனர்
ஒரு தீர்மானத்தின் மீது
எதிர்த்துப் பேச
ஆளில்லாமல்
ஒருதலைப் பட்சமாக
ஜியார்டானோ புருனோவை
தாக்கிப் பேசிக்
கொண்டிருந்தது அங்கு
தான் நடந்து
கொண்டு இருந்தது

விவாதத்தின் முடிவில்
ஜியார்டானோ புருனோ
ரோம் நகருக்கு
கைதியாக தொடர்
விசாரணைக்கு
அனுப்பட வேண்டும்
என்ற தீர்மானத்தின்
மீது வாக்கெடுப்பு
நடத்தப்பட்டது

தீர்மானத்தின் மீது
நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்
மொத்தமுள்ள 172 செனட்
உறுப்பினர்களில்
தீர்மானத்திற்கு ஆதரவாக
142 உறுப்பினர்களும்
தீர்மானத்திற்கு எதிராக
10 உறுப்பினர்களும்
வாக்களித்து இருந்தனர்,
20 உறுப்பினர்கள்
வாக்களிக்கவில்லை.

////////////////////////////////////////////////////
வாக்கெடுப்பின் முடிவு
 மொத்த ஓட்டுகள் – 172
           ஆதரவு – 142
           எதிர்ப்பு -  10
 வாக்களிக்காதவர்கள் -20
////////////////////////////////////////////////////////

தீர்மானத்தின் மீது
நடைபெற்ற
வாக்கெடுப்பைத் தொடர்ந்து
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்கு
அனுப்புவதற்குத் தேவையான
அனைத்து பணிகளும்
செய்யப்பட்டன.

ஜியார்டானோ
புருனோவை ரோம்
நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்காக
அழைத்துச் செல்வதற்காக
நிறுத்தி வைக்கப்பட்டு
இருந்த கப்பலை
நோக்கி காவலர்கள்
ஜியார்டானோ
புருனோவை அழைத்துச்
சென்று கொண்டிருந்தனர்.

ஜியார்டானோ
புருனோ ஏறுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட
கப்பலில் இருந்து
சற்று தொலைவில்
ஒரு பெண் நின்று
கொண்டிருந்தாள்.

ஜியார்டானோ
புருனோ கப்பலில்
ஏறுவதற்கு முன் அந்தப்
பெண்ணைப் பார்த்தார்
ஆயிரம் அர்த்தங்கள்
கொண்ட சிறிய
புன்முறுவலை உதிர்த்தார் ;
அந்த புன்முறுவலின்
அர்த்தத்தை அந்த
பெண்ணால் மட்டும் தான்
உணர்ந்து கொள்ள
முடியும் ; ஆம் இந்த
உலகத்தில் ஜியார்டானோ
புருனோ உயிருடன்
வாழ்ந்த காலத்தில்
ஜியார்டானோ
புருனோவை முழுவதுமாக
அறிந்து வைத்திருந்த
ஒரே நபர் அந்த
பெண் மட்டுமே !!

Madonna of Venice
என்று அழைக்கப்பட்ட
அந்தப் பெண்
ஒரு முறை
ஜியார்டானோ புருனோவை
அணுகி மோசஸ்,
இயேசு கிறிஸ்து
போன்று தாங்கள்
அற்புதங்கள் செய்வீர்கள்
என்று கேள்விப்பட்டேன்
தாங்கள் எனக்கு
அந்த அற்புதங்களை
செய்து காட்ட முடியுமா
அந்த அற்புதங்களை
செய்வது எப்படி
என்ற முறையினை
எனக்கு சொல்லித்
தர முடியுமா என்று
கேட்டாள்.

அதற்கு ஜியார்டானோ
புருனோ அற்புதங்கள்
என்றால் என்ன
என்று தெரியுமா?
என்றார்..

---------  இன்னும் வரும்
---------  27-12-2018
/////////////////////////////////////////////////


திருக்குறள்-பதிவு-74


                       திருக்குறள்-பதிவு-74

வெனிஸ் நகரத்தின்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ஜியார்டானோ
புருனோவின் மீது முதல்
கட்ட விசாரணையை
நடத்தி முடித்து விட்டது.

இந்த நிலையில் ரோம்
நகரத்தின் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
ஜியார்டானோ புருனோவின்
மீது மேற்கொண்டு
தொடர் விசாரணை ரோம்
நகரத்தில் நடத்தப்பட
வேண்டும் என்று முடிவு
செய்து ஜியார்டானோ
புருனோவை ரோம்
நகருக்கு அனுப்பி
வைக்க வேண்டும் என்று
வெனிஸ் நகரத்தின்
ஆட்சியாளர்களை
கேட்டுக் கொண்டதுடன்
வெனிஸ் நகரத்தின்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
கேட்டுக் கொண்டது.

ரோம் நகரம்
வெனிஸ் நகரத்தை
கேட்டுக் கொண்டதுடன்
நிறுத்தாமல் ஜியார்டானோ
புருனோவை வெனிஸ்
நகரத்திலிருந்து ரோம்
நகரத்திற்கு அழைத்து
வருவதற்காக கப்பலையும்
அனுப்பி வைத்தது

வெனிஸ் நகரத்தின்
ஆட்சியாளர்களும்
வெனிஸ் நகரத்தின்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினரும்
ஜியார்டானோ
புருனோவை ரோமுக்கு
அனுப்பி வைப்பதற்கு
எந்தவிதமான நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டும்
என்று கலந்து
ஆலோசித்தனர்

ஜியார்டானோ புருனோ
சாதாரண மனிதர் இல்லை ;
பல்வேறு புத்தகங்களை
எழுதி அனைவர்
மனதிலும் நிறைந்தவர் ;
உலகத்தில் உள்ள அனைத்து
மக்களாலும் அறியப்பட்டவர் ;
உலகம் முழுவதும
அறியப்பட்ட ஒரு
தத்துவமேதை ;
ரோம் கேட்டுக் கொண்டது
என்பதற்காக அவரை உடனே
அனுப்பி வைக்க முடியாது ;
சட்டப்படி என்ன
என்ன நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டுமோ
அவைகளை கடைப்பிடித்து
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு
அனுப்பி வைப்பதற்கான
முயற்சிகளை
மேற்கொள்ளலாம் என்று
முடிவு எடுக்கப்பட்டது

அதன்படி,
முதற்கட்டமாக
மக்களிடையே கருத்து
கேட்பது என்றும் ,
இரண்டாம் கட்டமாக
வெனிஸ் நகரத்தின்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையில் ஜியார்டானோ
புருனோவிற்கு எதிராக
வாக்கெடுப்பு நடத்தி
வாக்கெடுப்பு வெற்றி
பெறும் பட்சத்தில்
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு அனுப்பி
வைப்பது என்றும் முடிவு
செய்யப்பட்டது

ஜியார்டானோ
புருனோவை எதிர்ப்பவர்கள்
சொன்ன பல்வேறு
காரணங்களில் இரண்டு
காரணங்கள் ஜியார்டானோ
புருனோவிற்கு எதிரான
முக்கிய சாட்சியங்களாக
எடுத்துக் கொள்ளப்பட்டன,.

காரணம் – 1 :
ஆண்டவனால் சொல்லப்பட்டு
பைபிளில் எழுதப்பட்ட
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது என்ற
கோட்பாடு தவறு என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்ற நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
கோட்பாடே சரியானது
என்றும் ஜியார்டானோ
புருனோ சொல்லியதன்
மூலம் ஆண்டவன்
வாக்கை இழிவு
செய்வதுடன் ;
பைபிளையும் அவமதிக்கும்
விதத்தில் நடந்து
கொண்டு இருக்கிறார் ;
அவரை ரோம் நகருக்கு
அனுப்ப வேண்டும்
அங்கு அவரைக் கொல்ல
வேண்டும் என்றார்கள்

காரணம் – 2 :
கன்னி மேரியின்
புனிதத் தன்மையைப்
பற்றியும் ;
இயேசு கிறிஸ்துவின்
பிறப்பைப் பற்றியும் ;
இழிவு படுத்தும்
விதத்தில் பேசினார்
ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்
நீங்கள் ஒரு கிறிஸ்தவர்
குடும்பத்தில் பிறந்தவர்
கிறிஸ்தவராக வளர்ந்தவர்
கிறிஸ்தவர்
பள்ளியில் படித்தவர்
கிறிஸ்தவர் கல்லூரியில்
வகுப்பு நடத்தியவர்
கிறிஸ்தவ மதத்தைப் பற்றி
நன்கு அறிந்து இருப்பவர்
கிறிஸ்தவ மதத்தின்
மத போதகராக இருப்பவர்
கிறிஸ்தவ மதத்தின்
மதபோதகர்களில்
சிறந்தவராகக் கருதப்படுபவர்
கிறிஸ்தவ மதத்தில்
FATHER ஆக இருப்பவர்
ஏன் இப்படி பேசுகிறீர்கள்
என்று கேட்டதற்கு
நீங்கள் பேசுவது மதம்
நான் பேசுவது தத்துவம்
மற்றும் அறிவியல்
என்கிறார் மதம் என்ற
கண்ணாடியை அணிந்து
கொண்டு பார்த்தால்
உங்களுக்கு தத்துவம்
என்றால் என்ன என்றும்
அறிவியல் என்றால்
என்ன என்றும் தெரியாது
மதம் என்ற கண்ணாடியை
கழட்டிவிட்டு பாருங்கள்
உங்களுக்கு நான் சொன்னது
புரியும் என்று பேசுகிறார்
இவ்வாறு கிறிஸ்தவ
மதத்தை இழிவுபடுத்தி
பேசியதற்காக ஜியார்டானோ
புருனோவைக் கொல்ல
வேண்டும் என்றார்
ஒரு பெண்மணி

இந்த இரண்டு காரணங்களும்
ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்று
நிரூபிக்க போதுமானதாக
இருந்தது.

---------  இன்னும் வரும்
---------  26-12-2018
///////////////////////////////////////////////////////////