March 06, 2019

திருக்குறள்-பதிவு-120


                    திருக்குறள்-பதிவு-120

“மூன்று கூறுகளாக
பிரிக்கப்பட்டுள்ள
ஜியார்டானோ
புருனோவின்
முழு உருவ
வெண்கல சிலை  ;
மூன்று விதமான
தன்மைகளைக்
கொண்டு ;
மூன்று விதமான
முக்கிய செய்திகளைச்
சொல்கிறது ; “  

“ முதல் கூறில்
ஜியார்டானோ
புருனோவின் முழு
உருவ வெண்கல
சிலை உள்ளது  

“ இரண்டாவது கூறில்
ஜியார்டானோ
புருனோவுடன்
சம்பந்தப்பட்ட 8
நபர்களின் உருவங்கள்
பொறிக்கப்பட்டுள்ளது,  

“ மூன்றாவது கூறின்
மூன்று பக்கங்களில்
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கையில் நடந்த
மூன்று முக்கியமான
நிகழ்ச்சிகளும்,  

“ மூன்றாவது கூறின்
நான்காவது பக்கத்தில்
ஒரு முக்கிய
வாசகமும் இடம்
பெற்றுள்ளது, “

“ ஜியார்டானோ
புருனோ
சிலையின்
மூன்றாவது
கூறின் நான்காவது
பக்கத்தில்
எழுதப்பட்டுள்ள
எழுத்துக்கள்
இது தான். “

ITALIAN

IX GIVGNO
MDCCCLXXXIX
A BRVNO
IL SECOLO DA
LVI DIVINATO
QVI
DOVE IL ROGO
ARSE

ENGLISH

TO BRUNO-
FROM THE AGE
HE PREDICTED
HERE WHERE
THE FIRE BURNED

தமிழ்

சிலையின்
விவரங்களைப் பற்றி
தெரிவிக்கும் விதத்தில்
அமைந்துள்ள இந்த
வார்த்தைகளில்
இடம்பெற்றுள்ள
முக்கியமான ஒரு
வாசகம் இது தான்

“நெருப்பை
நெருப்பால்
எரித்த இடம்
இங்கு தான்”

இந்த மூன்று
கூறுகளும்
இணைந்தது தான்
ஜியார்டானோ
புருனோவின் முழு
உருவ வெண்கல சிலை.

“ ஜியார்டானோ புருனோ
என்பவர் யார்……..……..?
அவர் எத்தகைய
கொள்கைகளைக்
கொண்டவர் ;
அவர் தன்னுடைய
வாழ்க்கையை
எத்தகைய
போராட்டங்களுக்கு
மத்தியில் வாழ்ந்தவர் ;
அவர் எதற்காக
கொல்லப்பட்டார் ;
அவரைக்
கொன்றவர்கள்
யார்…………………..?
அவர்கள்
அனைவரும்
எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவர்கள் ;
ஆகியவற்றை
மட்டுமல்ல
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை
பற்றி தெரிந்து கொள்ள
வேண்டுமானால் ,
சிலையின் அனைத்து
கூறுகளில் உள்ள
ஆழமான
அர்த்தங்களைத்
தெரிந்து கொண்டாலே
போதும் ;”

“ 1889-ஆம் ஆண்டு
எட்டோர் ஃபெராரி
(Ettore Ferrari)
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
மீது ஜியார்டானோ
புருனோவின் சிலையை
வடித்து முடித்தார் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
1889-ஆம் ஆண்டு
ஜுன்மாதம்
9-ம் தேதி திறக்க
முடிவு செய்யப்பட்டது, “

“ ஆனால்,
ஜியார்டானோ
புருனோவின் சிலையை
திறக்கக்கூடாது - என்று
எதிர்ப்புக் குரல்கள்
ஓங்கி ஒலிக்கத்
தொடங்கியது
சண்டைகள்
நெருப்பென பற்றி
எரியத் தொடங்கியது “

“ ஜியார்டானோ
புருனோவின்
ஆரவாளர்களுக்கும் ;
ஜியார்டானோ
புருனோவின்
எதிர்ப்பாளர்களுக்கும் ;
இடையே மிகப்
பெரிய போர்
மூளத் தொடங்கியது ; “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  06-03-2019
//////////////////////////////////////////////




March 05, 2019

திருக்குறள்- பதிவு-119


                      திருக்குறள்- பதிவு-119

" ஜியார்டானோ
புருனோவினுடைய
முழு உருவ வெண்கல
சிலையின் மூன்றாவது
கூறு ஜியார்டானோ
புருனோவின் வாழ்க்கையில்
நடந்த முக்கியமான
மூன்று நிகழ்ச்சிகளை
சித்தரிக்கிறது "

"இந்த மூன்று
நிகழ்ச்சிகளும் ஒன்றுடன்
ஒன்று நெருங்கிய
தொடர்பு உடையது "

ஒன்று :
"ஜியார்டானோ புருனோ
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
பேசிய நிகழ்ச்சி
(Giordano Bruno
as a Professor)

இரண்டு :
ஜியார்டானோ புருனோவை
விசாரணை செய்த நிகழ்ச்சி
(Trial of Giordano Bruno)

மூன்று :
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட நிகழ்ச்சி
(The Death of Giordano
Bruno)

“ இந்த மூன்று நிகழ்ச்சிகளும்
சிலையின் பக்கத்திற்கு
ஒன்றாக - மூன்று
பக்கங்களில்
மூன்று படங்களில்
சித்தரிக்கப்பட்டுள்ளது “

ஒன்று
(Giordano Bruno
as a Professor)
" ஜியார்டானோ புருனோ
எந்த கருத்துக்களைக்
கொண்டிருந்தாரோ ?- அந்த
கருத்துக்களைத் தான்
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
பேசினார் "

" சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்தே
சரியானது ; - பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்று பைபிளில்
சொல்லப்பட்ட கருத்து
தவறானது என்றார் ;"

" கல்வியும், விஞ்ஞானமும் ,
சுதந்திரமாக இருக்க
வேண்டும் - கிறிஸ்தவ
மதத்தின் ஆணைகளுக்கு
கட்டுப்பட்டு இருக்கக்
கூடாது என்றார் ; "

" அன்பையும்,
கருணையையும்
போதிக்கும் மதமாகத்தான்
கிறிஸ்தவ மதம் இருக்க
வேண்டுமேயொழிய……!
மக்களை அடிமையாக
வைத்து அரசாட்சி
செய்ய நினைக்கும்
மதமாக கிறிஸ்தவ
மதம் இருக்கக்
கூடாது என்றார் ;"

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிலும் ;
சர்ச்சுகளிலும் ;
பைபிளிலும்  ;
திருத்தங்கள் செய்து
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்றார் "

" தான் சொன்ன
கருத்திலிருந்து
ஜியார்டானோ புருனோ
அணு அளவும் பின்
வாங்கவில்லை "

இரண்டு :
(Trial of Giordano Bruno)
“ ஜியார்டானோ
புருனோவிற்கு
எதிராக நடத்தப்பட்ட
விசாரணையில் அவர்
தண்டனையிலிருந்து
தப்பிப்பதற்காக ஒரு
வாய்ப்பு தரப்பட்டது “

“ கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செய்த
செயல்கள் அனைத்தும்
தவறு என்றும் - இனி
வருங்காலங்களில்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக இதைப் போல்
வேறு தவறுகள் ஏதும்
செய்ய மாட்டேன் என்றும்
பொது மக்கள்
முன்னிலையில்
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்டுக் கொண்டால்
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
விட்டு விடுவதாக
சொல்லப் பட்டது “

“ ஆனால் ஜியார்டானோ
புருனோ தான் கொண்ட
கொள்கையிலிருந்து
பின் வாங்காமல்
மன்னிப்பு கேட்கவில்லை “

மூன்று :
(The Death of Giordano
Bruno)
“ ஜியார்டானோ புருனோ
உயிரோடு இருந்தால்
அவருடைய கருத்துக்கள்
மக்கள் மனதில் பெரிய
தாக்கத்தை எற்படுத்தி  ;
அதன் மூலம்
பாதிப்பை ஏற்படுத்தி ;
அதன் மூலம்
பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தி ;
விடக்கூடும் என்று
நினைத்த காரணத்தினால் , “

“ மக்கள் அனைவரும்
ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
சரி என்று உணர
ஆரம்பித்து விட்டால்
கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
போராடுவார்கள் ;
அதோடு நிற்காமல்
கிறிஸ்தவ மதத்தை
எதிர்த்து செயல்பட
ஆரம்பித்து விடுவார்கள் ;
என்ற காரணத்தினால் , “

“ ஜியார்டானோ
புருனோ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டார் என்று
குற்றம் சுமத்தப்பட்டு
17-02-1600 அன்று
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார் ;”

 “ஜியார்டானோ
புருனோவின் வாழ்வில்
நடந்த இந்த மூன்று
நிகழ்ச்சிகளும் - சிலையின்
மூன்று பக்கங்களில்
பக்கத்திற்கு ஒன்றாக
செதுக்கப்பட்டுள்ளது “

“ சிலையின் நான்காவது
பக்கத்தில் ஒரு
முக்கியமான வாசகம்
இடம் பெற்று உள்ளது
அது தான்………………………………..? “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  05-03-2019
//////////////////////////////////////////////







March 04, 2019

திருக்குறள்-பதிவு-118


                    திருக்குறள்-பதிவு-118

ஐந்து :
மைக்கேல் சர்வீட்டஸ்
(1509-1553)
Micheal Servetus(1509-1553)
“ ஸ்பானிய இறையியல்
வல்லுநர் ;மருத்துவர் ;
மற்றும் வரைபட நிபுணர்
(Cartographer) “

“திரித்துவத்தின் பிழைகள்
(Errors of the Trinity)
என்ற புத்தகத்தை
வெளியிட்டார் - அதில்
அவர் திரித்துவத்தில்
நம்பிக்கை கொண்டு
அதனை பின்பற்றுபவர்கள்
அனைவரும் - மூன்று
தெய்வத்தின் மீது
நம்பிக்கை கொண்டு
அதை வணங்குபவர்கள் ;
அதாவது பல்தெய்வ
வழிபாடு கொண்டவர்கள் ; “
என்றார் ;”

“ திரித்துவக் கடவுள்
என்பது மூன்று
தலைகளைக் கொண்ட
ஒரு அசுரன் மற்றும்
கோரமான உருவம்
கொண்ட பிசாசு என்றார்.”

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும்,
கிறிஸ்தவர்களும்
இந்த புத்தகத்தை எதிர்த்த
காரணத்தினால்
ஸ்பானிய பேரரசர்
சார்லஸ்-V அவர்கள் அந்த
புத்தகத்தை தடை செய்தார் “

“ மைக்கேல் சர்வீட்டஸ்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டார் ;
என்ற காரணத்திற்காக
ஜெனிவாவில்
அக்டோர் 27, 1553
(27-10-1553) அன்று
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார் ; “

ஆறு :
அனோயோ பாலேரியா
(1500 -1703)
Aonio Paleario (1500 -1703)
“ இத்தாலிய சீர்திருத்தவாதி ;
கிரேக்க மற்றும்
எபிரேயு ஆசிரியர் ; “

“இயேசுவின் இறப்பில்
கிடைத்த நன்மைகள்
(The Benefits of Christ’s
Death) என்ற புத்ககம்
ஒன்றை வெளியிட்டார்

" அவருடைய புத்தகத்தில்
இயேசு கிறிஸ்துவின்
இறப்பு உண்மையில்
யாருக்கெல்லாம்
ஆதாயமாக இருக்கிறது ;"

"இயேசு கிறிஸ்துவின்
இறப்பை வைத்து
தங்கள் பிழைப்பை
ஓட்டிக் கொண்டு
இருப்பவர்கள்
எல்லாம் யார்?"

"இயேசு கிறிஸ்துவின்
இறப்பை மூலதனமாக
வைத்து - பணம் சம்பாதித்து
சுகபோகமாக வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள்
எல்லாம் யார் என்று
விளக்கமாக எழுதினார் ;"

"இத்தகைய காரணங்களினால்
அவர் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டார் என்று
குற்றம் சாட்டப்பட்டு
கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டு
தொடர்ந்து சித்திரவதை
செய்யப்பட்டு
இரண்டு வருடங்கள்
கழித்து ரோம் நகரத்தில்
அவர் உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்”

ஏழு :
ஜான் விக்ளிஃப் (1330-1384)
John Wycliffee (1330-1384)
“ஆங்கில தத்துவவாதி ;
இறையியல் வல்லுநர் ;
போதகர் ; “

" இவர் ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்தின்
புகழ்பெற்ற தத்துவ மேதை
மற்றும் இறையியல்
பேராசிரியர் "

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்
பட்டிருக்கும் திருப்பலியில்
வழங்கப்பட்டு
உட்கொள்ளப்படும்
அப்பம் (Bread)
இயேசுவின் உடலாகவும்,
மதுரசம் (Wine)
இயேசுவின் இரத்தமாகவும்
மாற்றமடைகிறது என்ற
கோட்பாடு தவறானது
என்றார்.  

“ தனிப்பட்ட ஒப்புதல்
வாக்குமூலம்
இயேசு கிறிஸ்துவால்
கட்டளையிடப்படவில்லை ;
அப்போஸ்தலர்களால்
பயன்படுத்தப்படவில்லை ;
என்றார் ; “

" கிறிஸ்தவர்கள்
பின்பற்றி வரும்
மத நம்பிக்கைகளைப்
பற்றி பல்வேறு விதமான
கேள்விகளை எழுப்பினார் ;
அவர் கேட்ட கேள்விகள்
மக்களிடையே மிகப்பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தின ; "

 "இத்தகைய தாக்கத்தால்
மிரண்டு போனவர்கள்
அவரை பல்வேறு விதமான
துன்பங்களுக்கு உட்படுத்தி
அவரை இறக்க வைத்தனர் :

" அவர் இறந்த பிறகு
அவருடைய படைப்புகள்
அனைத்தையும்
தடை செய்தனர் ;"

எட்டு :
ஜான் ஹஸ் (1369-1415)
John Hus (1369-1415)
செக் மத சீர்திருத்தவாதி ;

“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடை
முறைப்படுத்தி
கிறிஸ்தவர்களால்
கடைபிடிக்கப்பட்டு
வரும் மத வழக்கங்களில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்றார் “

“ விஞ்ஞானத்திற்கு எதிராக
பைபிளில் உள்ள
கருத்துக்களை திருத்தம்
செய்ய வேண்டும் என்றார் “

“ மதகுருமார்கள்
குருக்கள் போப்
ஆகியோருக்கான
ஓழுக்கங்களை முறைப்
படுத்த வேண்டும் என்றார்

“ கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காக
ஜுலை 6,1415
(06-07-1415) அன்று
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  04-03-2019
//////////////////////////////////////////////