October 06, 2019

பரம்பொருள்-பதிவு-69


             பரம்பொருள்-பதிவு-69

நாரதர் :

“நாரதர் சாதாரண
மனிதர்களைப் போல்
ஆண் பெண்
சேர்க்கையினால்
பிறந்தவர் அல்ல ;
அவர் பிரம்மதேவரின்
பக்குவமான
சிந்தனையினால்
அவரது மனதிலிருந்து
தோன்றிய உத்தம
புருஷர் நாரதர்

“அவரது தந்தை
பிரம்மதேவரால் கூட
எளிதில்
செல்ல முடியாத
வைகுண்ட லோகத்திற்கு
நினைத்த மாத்திரத்தில்
செல்லும் தகுதி
படைத்தவர்
நாரதர் “

“வேத மந்திரங்களை
ஆகாயத்திலிருந்து
கிரகிக்கக்கூடிய
விசேஷசதன்மை
பெற்ற ரிஷிகளில்
முக்கியமானவர்
நாரதர் - என்று
ரிக் வேதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது

“ஸாமவேதத்திலும்
நாரதர் சிறப்பிடம்
பெறுகிறார்”

“முக்காலங்களையும்;
மூன்று
லோகங்களையும்;
கடந்து செல்லக்
கூடியவராகவே
எல்லா புராணங்களும்
நாரதரை
கூறுகின்றன;
இதனால் தான்
நாரதர்
திரிலோக சஞ்சாரி
என்றும்
அழைக்கப்படுகிறார்”

“மூவுலகையும்
சுற்றி வந்து
மூவுலகிலும்
நடைபெறும்
பல்வேறு நிகழ்வுகளை
அறிந்து அதை
எடுத்துச் சென்று
யாருக்கு தேவையோ
அவரிடம் சேர்க்கும்
விசேஷ தூதுவராகவும்
பத்திரிக்கையாளராகவும்
செயல்படுகிறார்
நாரதர்

“இசைக்கருவியான
வீணையைக்
கண்டுபிடித்தவரும்
நாரதரே

“அனைத்து அசுரர்களும்
தேவர்களும்
மதிக்கும் ஒரே
ஒரு ரிஷி
நாரதர்மட்டுமே”

“அனைத்து
தேவர்களையும்
சிறைப்பிடித்த
ராவணன் கூட
நாரதரை விட்டு
வைத்ததன் காரணம்
நாரதர் மீது
ராவணன்
வைத்திருந்த
மரியாதை தான்”

“நாரதர் சந்தன
முனிவரிடம்
இருந்து பூமி
வித்தையை கற்றுத்
தேர்ந்தார் ;
வித்தைகளிலேயே
மிக உயரிய
வித்தையாக
இது கருதப்படுகிறது ;
இது மட்டுமின்றி
ஆயக்கலைகள்
ஆறுபத்தி நான்கையும் ;
கற்றுத் தேர்ந்தவர்
நாரதர் “

நாரதருக்கு மரணம்
என்பதே இல்லை ;
என்று புராணங்கள்
கூறுகின்றது
வெகுசிலரே இந்த
அமரத்துவத்தை
அடைந்திருக்கிறார்கள் ;
மொத்தமாக 12 நபர்கள்
மட்டுமே இந்த
சிரஞ்சீவி வரத்தை
பெற்றவர்கள் ;
என்பது
குறிப்பிடத்தக்கது “

“முக்தி பெற்ற
தளத்தில்
நித்தியமாக
வீற்றுள்ளவர்
நாரதர் “

“இத்தகைய பல்வேறு
சிறப்புகளைக் கொண்ட
நாரதரைத் தான்
நாம் கலகக்காரர்
என்கிறோம் ;
கலகம் விளைவிப்பவர்
என்கிறோம் ;
பிரச்சினையை
உண்டு பண்ணுபவர்
என்கிறோம் ;
இருவருக்கிடையே
சண்டையை
ஏற்படுத்துபவர்
என்கிறோம் ;
உறவுகளுக்குள் பிளவை
உண்டாக்குபவர்
என்கிறோம் ;”

“ உண்மையில்
நாரதர் எத்தகைய
உயரிய செயலைச்
செய்கிறார்
என்பதும் ;
பிறரை எத்தகைய
செயலைச்
செய்யத் தூண்டுகிறார்
என்பதும் ;
தெரியுமா………………………..?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 06-10-2019
//////////////////////////////////////////

October 04, 2019

பரம்பொருள்-பதிவு-68


             பரம்பொருள்-பதிவு-68

இந்திரபிரஸ்தம் :

" மதில் சுவர்கள்
வானத்தை முட்டி
நிற்கின்றன - என்று
சொல்லத்தக்க வகையில்
உயர்ந்த மதில்
சுவர்களோடு
ஆழமான அகழிகள் சூழ
இந்திரபிரஸ்தம் நகரம்
நிர்மாணிக்கப்பட்டது "

" நகரின் நுழைவாசல்
கருடனின் விரிந்த
இறக்கைகள் போலிருந்தன ;
கூரான கொக்கிகளும் ;
கம்பி சுற்றிய
பெரிய தூண்களும் ;
பெரிய இரும்புச்
சக்கரங்களும் ;
வேறுபல யந்திர
சாதனங்களும் ;
கோட்டைமதில் மீது
பொருத்தப்பட்டு
யாராலும் வெல்லவே
முடியாத நகரமாக
இந்திரபிரஸ்தம்
நகரம் விளங்கியது "

"நகரின் வீதிகள்
அகலமாகவும்
பாதுகாப்பானதாகவும்
இருந்தன ;
கேளிக்கை விடுதிகளும்
செயற்கை குன்றுகளும்
ஏரிகளும் குளங்களும்
பிரமிபூட்டும்
வகையில் நிரம்பி
இருந்தன ;
தாமரை, அல்லி
போன்ற பூக்கள்
பூ பூத்து நிரம்பி
இருந்தன ;
அன்னம், வாத்துக்கள்
ஆகியவை காண்போரை
கவரும் வகையில்
உலாவந்து கொண்டு
இருந்தன ;
மொத்தத்தில்
தேவ நகரம் போல
இந்திரப்பிரஸ்தம் நகரம்
காட்சி அளித்தது "

"வயல்களில் மிக
அதிக அளவில் கரும்பு
விளைந்து விட்டதால்
தேவைக்கு அதிகமாகி
விட்டது - இதனால்
வெட்டுவதற்கு அவசியம்
இல்லாமல் சாய்ந்து
விழுந்து அதில் இருந்து
புறப்பட்ட சாறு
ஆறாய் ஓடி
குளங்களை ஏற்படுத்தியது
அன்னப்பறவைகள்
அந்த கருப்பஞ்சாறு
குளங்களில்
நீந்திய காட்சி
பிரம்மிக்கத்தக்கதாக
இருந்தது."

"பேரழகுடன் விளங்கிய
இந்திரபிரஸ்தம் நகரில்
இந்திரலோகத்தில்
கிடைக்காத
பொருட்கள் கூட கிடைத்தன"

"திலோத்தமை என்ற
இந்திரலோகத்து
பேரழகியும் அங்கே
இருந்தாள் "

"இந்திரபிரஸ்தம்
நகரில் தங்கி வாழ
பிராமணர்களும் ;
வியாபாரிகளும் ;
கலைஞர்களும் ;
வந்தார்கள் "

"இந்திரபிரஸ்தத்தில்
ஏராளமான மக்கள்
குடியேறினர்  ;
இல்லை என்ற
சொல்லுக்கே
இடமில்லாமல்
பல தொழில் புரிந்து
மகிழ்வுடன் வாழ்ந்தனர்  "

"பிறருக்கு
தீங்கு செய்ய வேண்டும்
என்ற எண்ணம்
கொண்டு தீங்கு
செய்யாதவர்கள் ;
பஞ்சமா பாதகங்கள்
என்று சொல்லப்படக்கூடிய
பொய், சூது,
கொலை, கொள்ளை,
கற்புநெறி பிறழ்தல்
ஆகியவைகளை
நினைத்து கூடப்
பார்க்காதவர்கள் ;
அன்பு, கருணையை
வாய்மொழி
வார்த்தையாக மட்டும்
சொல்லாமல்
செயல் வடிவில்
காட்டுபவர்கள் ;
தங்கி வாழக்கூடிய
நகரமாக இந்திரபிரஸ்தம்
நகரம் திகழ்ந்தது "

"பாண்டவர்களின்
அரண்மனை
நகரின் ஒரு அழகான
நல்ல இடத்தில்
அமைந்திருந்ததோடு
குபேரனின்
இருப்பிடம் போல
செல்வச்செழிப்புடன்
காணப்பட்டது"

"திரௌபதியை
திருமணம்
செய்து கொண்ட
பஞ்சபாண்டவர்களான
யுதிஷ்டிரர்,
பீமன், அர்ஜுனன்,
நகுலன், சகாதேவன்
ஆகியோர்
திரௌபதியுடன்
இந்திரபிரஸ்தத்தில்
வாழ்ந்து வந்தனர்"

"இத்தகைய சூழ்நிலையில்
நாரத மகரிஷி
இந்திரபிரஸ்தத்திற்கு
வருகை புரிந்தார்"

"நாரதர்
ஏன் வருகிறார் ?
எதற்காக வருகிறார்?
என்ன காரணத்திற்காக
வருகிறார்?
என்ன பிரச்சினையை
கொண்டு வரப்போகிறார்?
என்ன பிரச்சினையை
உருவாக்கப்போகிறார்?
என்ன பிரச்சினையை
பெரிதாக்கப்போகிறார்?
என்று பஞ்சபாண்டவர்களும்
திரௌபதியும் நினைத்து
கலக்கம் அடைந்து
கொண்டிருந்த நிலையில்
தேவரிஷி நாரதர்
அவர்களை நோக்கி
நடந்து வந்து
கொண்டிருந்தார்"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------04-10-2019
//////////////////////////////////////////


October 02, 2019

பரம்பொருள்-பதிவு-67


             பரம்பொருள்-பதிவு-67

“திருதராஷ்டிரன்
தர்மரை அழைத்தான்
மகனே! நீ உன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
நகருக்கு சென்று
அங்கே போய்
தங்கியிரு என்றான் “

“திருதராஷ்டிரனின்
கோரிக்கையை
உத்தரவாகவே
ஏற்றுக் கொண்டு
தர்மர் தன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
சென்று தங்கி
இருக்க முடிவு
செய்தான்”
       
“ஆனால் தர்மருக்கு
காண்டவபிரஸ்தம்
சென்று எப்படி
தங்குவது என்ற
யோசனை எழுந்தது ;
ஏனென்றால்
காண்டவபிரஸ்தம்
காட்டுப் பகுதியில்
இருந்தது ; ”

“அந்த ஊரே
பாழடைந்து
போய் விட்டதால்
மக்கள் யாரும்
அங்கு வசிக்கவில்லை. ;
மனிதர்கள் யாரும்
வசிக்கக்கூடிய
இடமாக
காண்டவபிரஸ்தம்
இல்லை ;”

“திருதராஷ்டிரன்
வார்த்தையை
மறுக்கக்கூடாது
என்ற காரணத்திற்காக
தர்மர் ஒன்றுக்கும்
உதவாமல் இருந்த
காண்டவபிரஸ்தம்
நகருக்கு தன்
தம்பிகளுடன்
வசிப்பதற்காக
புறப்பட்டார்”

“தர்மர் தன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
செல்வதைக் கேள்விபட்ட
பரம்பொருளான
கிருஷ்ணரும்
உடன் சென்றார்”

“காண்டவபிரஸ்தம்
சென்றவுடன்
கிருஷ்ணர்
விஸ்வகர்மாவையும் ;
இந்திரனையும் ;
அழைத்தார்.
அவர்கள் இருவரும்
நேரில் வந்து
கிருஷ்ணரை
வணங்கி நின்றனர் “

“கிருஷ்ணர்
அவர்களை நோக்கி
இந்த காட்டை
அழித்து
இந்த உலகமே
இதுவரை
பார்த்திராத வகையில்
உலக மக்கள்
அனைவரும்
அதிசயிக்கத்தக்க
விதத்தில்
அழகிய நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
மூன்று உலகங்களிலும்
இப்படி ஒரு
நகரம் இல்லை
என்று அனைவரும்
புகழக்கூடிய
அழகிய நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
இனி இது போல்
ஒரு நகரத்தை
யாராலும் உருவாக்க
முடியாது என்று
உலகமே வியக்கும்
வகையில் அழகிய
நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
என ஆணையிட்டார்
பரம்பொருளான
கிருஷ்ணர்”

“இந்திரன்
மேற்பார்வையில்
விஸ்வகர்மா
காண்டவபிரஸ்தம்
நகரை முற்றிலும்
அடையாளம்
தெரியாத ஒரு
அழகிய நகரமாக
மாற்றி விட்டார்”

“காண்டவபிரஸ்தம்
நகரம் முழுவதும்
தங்கத்தாலேயே
கட்டப்பட்டிருக்கிறது
என்று சொல்லத்தக்க
வகையில் எங்கு
பார்த்தாலும்
தங்கத்தாலான
மாடமாளிகைகள்,
அழகிய அரண்மனைகள்,
பெரிய மதில்கள்,
தோரண வீதிகள்,
பூஞ்சோலைகள்
தடாகங்கள் என
அழகாகவும்
அருமையாகவும்
காண்போர்
வியக்கும் வண்ணம்
அமைக்கப்பட்டிருந்தது
காண்டவபிரஸ்தம்
நகரம்”

“இரவு நேரத்தில் கூட
காண்டவபிரஸ்தம்
நகரம் ஜொலித்தது ;

“காண்டவபிரஸ்தம்
நகரத்தின் அழகை
வார்த்தைகளால்
கூட வர்ணிக்க
முடியாது என்றால்
எத்தகைய
கலைநயத்துடன்
காண்டவபிரஸ்தம்
நகரம்
அமைக்கப்பட்டிருக்கும்
என்பதை உணர்ந்து
கொள்ளுங்கள்”

“இந்திரனின்
மேற்பார்வையில்
கட்டப்பட்டதால்
அந்த நகருக்கு
இந்திரபிரஸ்தம்
என்று பெயர்
சூட்டினர்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------02-10-2019
//////////////////////////////////////////////////////////


September 25, 2019

பரம்பொருள்-பதிவு-66


            பரம்பொருள்-பதிவு-66

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
இருப்பதால்
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
சக்தி வட்டமானது
உருவாக்கப்படுகிறது "

"கோயிலுக்குள்
உருவாக்கப்படும் இந்த
சக்தி வட்டமானது
கோயிலுக்கு வரும்
பக்தர்களுடைய
தேவையை
பூர்த்தி செய்யும்
வேலையை
செய்வதோடு
மட்டுமல்லாமல் ;
வெளியில் உள்ள
எந்த ஒரு எதிர்ப்பு
சக்தியையும் கோயிலுக்கு
உள்ளே விடாமல்
தடுத்து நிறுத்தும்
மிகப்பெரிய
வேலையையும் செய்து
கொண்டிருக்கின்றன ;"

சடவாயு :

"குழந்தையை
கருப்பையிலிருந்து
வெளியே தள்ளும்
வாயுவிற்கு சடவாயு
என்று பெயர்"

"சடவாயு ஒவ்வொரு
மனிதனுக்கும் மாறுபட்ட
தன்மையைக்
கொண்டதாக இருக்கும் ;
மனிதன்
போகும் இடங்கள் ;
தொட்ட இடங்கள் ;
ஆகிய அனைத்திலும்
சடவாயுவானது உண்டு ;
இறக்கும் வரை இந்த
சடவாயுவானது
கூடவே இருக்கும் ;
பிணம் அழுகிய
பின்பு தான் இந்த
சடவாயுவானது
வெளியேறும் ;"

"மனிதர்களால்
சடவாயுவை
உணர்ந்து கொள்ள
முடியாது; - ஆனால்
நாய், நரி, ஓநாய்,
ஆகியவற்றால்
சடவாயுவை உணர்ந்து
கொள்ள முடியும் ;
நாய் மோப்பம்
பிடிப்பது
மனிதர்களுடைய
சடவாயுவைத் தான் ;"

"மனிதனுடைய
நகம், முடி, எச்சில்,
வியர்வை
ஆகியவற்றில்
மனிதனுடைய
சடவாயு இருக்கும் ;
ஒருவரிடம் இருக்கும்
சடவாயு நிரம்பியுள்ள
பொருட்களைப்
பயன்படுத்தித் தான்
ஏவல், பில்லிசூன்யம்
ஆகியவை ஒருவருக்கு
செய்யப்படுகிறது ;
நாம் யாருடைய
சடவாயுவைப்
பயன்படுத்தி
ஒருவரை பாதிக்கும்
வகையில் செயலைச்
செய்தோமோ?
அந்த சடவாயுவை
உடைய மனிதனை
மட்டுமே செய்யப்பட்ட
கெடுதலானது
பாதிப்பை உண்டாக்கும் ;"

"நாய் மூத்திரம்
பெய்து குறிப்பிட்ட
தூரத்தைக் கொண்ட
ஒரு எல்லையை
உருவாக்கும் ;
அந்த எல்லைக்குள்
யாராவது வந்தால்
சடவாயுவை
மோப்பம் பிடித்து
ஓடிப்போய் குலைக்கும் ;
அதாவது தன்னுடைய
எல்லைக்கு உட்பட்ட
சக்திக்குள்
எந்தவிதமான
எதிர்ப்பு சக்தியையும்
நாய் உள்ளே விடாது ;"

"அதைப்போலத்தான்
கோயிலுக்குள்
உருவாக்கப்படும்
சக்தி வட்டமானது
வெளியில் உள்ள
எந்த ஒரு எதிர்ப்பு
சக்தியையும் ;
கோயிலுக்கு உள்ளே
விடாமல் தடுத்து
நிறுத்துகிறது ;'"

"உலகம் முழுவதும்
உள்ள இந்துமதக்
கோயில்களில்
நடைபெறும்
மூன்று முக்கியமான
வேலைகளில்
கோயிலுக்குள்
சக்தியை
உற்பத்தி செய்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதையும் ;

"கோயிலுக்குள்
சக்தியை
குவித்து வைத்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதையும் ;
தெரிந்து கொண்டோம்; "

"கோயிலுக்குள்
சக்தியை
பரிமாற்றம் செய்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டாமா?"

"அதற்கு முன்…………………?"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 25-09-2019
//////////////////////////////////////////////////////////