November 17, 2019

பரம்பொருள்-பதிவு-85


               பரம்பொருள்-பதிவு-85

உலூபி :
"ஆமாம் விசித்திரமாகத்
தான் இருக்கும் ;
உங்களுக்கு மட்டுமல்ல
இந்த உலகத்திற்கும்
விசித்திரமாகத்
தான் இருக்கும்."

"ஒரு பெண்ணை
விரும்பிய ஒரு ஆண்
தன்னுடைய காதலை
அந்த பெண்ணிடம்
சொல்வதும் தப்பில்லை ;
அவளை திருமணம்
செய்து கொள்ள
விரும்புவதும்
தப்பில்லை. ;
விருப்பப்பட்ட
பெண்ணை அவள்
விருப்பம் இல்லாமல்
கடத்தி செல்வதும்
கூட தப்பில்லை ; "

"ஆனால் ஒரு
ஆணை விரும்பிய
ஒரு பெண்
தன்னுடைய காதலை
அந்த ஆணிடம்
சொல்வதும் தப்பு  ;
அவனை திருமணம்
செய்து கொள்ள
விரும்புவதும் தப்பு  ;
விருப்பப்பட்ட
ஆணை கடத்தி
வருவதும் தப்பு ;"

"ஆணுக்கு ஒரு
நியாயம் பெண்ணிற்கு
ஒரு நியாயம்
என்று இருவேறுபட்ட
நியாயத்தை
வகுத்து
வைத்திருக்கிறீர்களே
இது எந்த
விதத்தில் நியாயம்?"

"அன்பு ; பாசம் ;
நேசம் ; காதல் ;
காமம் ; போன்ற
அனைத்து உணர்வுகளும்
ஆண். பெண் உட்பட
அனைவருக்கும்
ஒன்று தானே !
அப்படியிருக்கும் போது
ஒரு பெண்ணை
விரும்பும் ஒரு ஆண்
தன்னுடைய காதலை
தான் விரும்பும்
பெண்ணிடம்
தன்னுடைய காதலை
வெளிப்படுத்துவது
தப்பில்லை ;
ஆனால்
ஒரு ஆணை
விரும்பும் ஒரு பெண்
தன்னுடைய காதலை
தான் விரும்பும்
ஆணிடம்
தன்னுடைய காதலை
வெளிப்படுத்துவது
மட்டும் எவ்வாறு
தப்பாகும் ;"

"காதல் செய்வதில்
கூட ஒரு ஆண்
தன்னுடைய காதலை
தைரியமாக
வெளிப்படுத்த
முடியும் என்ற
நிலையையும் ;
ஒரு பெண்
தன்னுடைய காதலை
தைரியமாக
வெளிப்படுத்த
முடியாது என்ற
நிலையையும் ;
தானே இச்சமுதாயத்தில்
உருவாக்கி
வைத்திருக்கிறீர்கள் "

"ஒரு பெண்
தன்னுடைய காதலை
தான் விருப்பப்பட்ட
ஆணிடம்
வெளிப்படுத்தும்போது
தன்னுடைய காதலை
வெளிப்படுத்தும்
பெண்ணை
இந்த சமூகம் தவறான
கண்ணோட்டத்துடன்
தானே பார்க்கிறது ;
அவளது நடத்தையை
இழிவான பார்வையுடன்
தானே பார்க்கிறது ;
அவளுடைய
கற்பை சந்தேகப்
படும் விதத்தில்
தானே பார்க்கிறது ; "

"உங்களைப் பார்த்தால்
மிகுந்த கற்றவர்
போல் தெரிகிறது ;
உலக அனுபவம்
அதிகம் பெற்றவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை
கடைபிடிப்பவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை உணர்ந்து
அதை உரைப்பவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை உணர்ந்து
நியாயத்தின் வழி
நடப்பவர் போல்
தெரிகிறது ;"

"அப்படி இருக்கும்
தாங்களே 
உங்கள் மேல் நான்
கொண்ட காதலைப்
பார்த்து சிரிக்கிறீர்கள் ;
என்னை தவறான
கண்ணோட்டத்துடன்
பார்க்கிறீர்கள் ;
விசித்திரமாக
இருக்கிறது என்று
கேலி செய்கிறீர்கள் ;"

"உணர்வுகள் என்பது
ஆண் பெண்
இருவருக்குமே சமம்  ;
என்பதை இச்சமுதாயம்
எப்போது உணர்ந்து
கொள்கிறதோ ?
அப்போது தான்
ஒரு பெண்
தன்னுடைய
காதலை தான்
விரும்பும் ஆணிடம்
தைரியமாக
வெளிப்படுத்த
முடியும் ;"

--------- இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------17-11-2019
//////////////////////////////////////////

November 16, 2019

பரம்பொருள்-பதிவு-84


             பரம்பொருள்-பதிவு-84

அர்ஜுனன் :
“அழகிய பெண்ணே
ஒருவரை
கடத்திக் கொண்டு
வருவது என்பது
எவ்வளவு
பெரிய குற்றம்
என்பது உனக்குத்
தெரியாதா?
எத்தகைய குற்றத்தை
இழைத்திருக்கிறாய்
என்பதை நீ
உணர்ந்திருக்கிறாயா?
சட்டத்தை
காப்பாற்ற வேண்டிய
ஒரு இளவரசியே
குற்றத்தை
துணிந்து செய்வது
சரியாகுமா?
எத்தகைய
எண்ணத்தை
உன் மனதில்
வைத்துக் கொண்டு
இத்தகைய
விரும்பத்தகாத
செயலைச் செய்தாய்?”

உலூபி :
“நான் செய்த
செயல் விரும்பாமல்
செய்த செயல் அல்ல ;
நான் விரும்பியே
செய்த செயல் ;
நான் விருப்பப்பட்டதால்
செய்த செயல் ;”

அர்ஜுனன் :
“என்னை
கடத்தி வந்ததையா ?
நீ விரும்பிய
செயல் என்கிறாய்”

உலூபி :
“ஆமாம்”

அர்ஜுனன் :
“ஏன் அவ்வாறு
சொல்கிறாய்?”

உலூபி :
“கங்கைக்
கரையில் தங்களைக்
கண்டேன் ;
தங்களைக் கண்ட
அக்கணமே என்
மனதில் காதல்
பிறந்ததைக்
கண்டேன் ;
என் உணர்வுகள்
அனைத்தும்
தங்களைச் சுற்றியே
வட்டமிடுவதைக்
கண்டேன் ;
என் சிந்தனை
செயலற்று
இருப்பதைக்
கண்டேன் ;
என் அறிவு
உங்களிடம்
மயங்கிக்
கிடப்பதைக்
கண்டேன் ;”

“அதுமட்டுமல்ல
நான் இதுவரை
கண்டிராத
தங்களுடைய
அழகும்  ;
காண்போரை
வசீகரிக்கும்
தங்களுடைய
வசீகரத் தன்மையும் ;
பிறர் மனதை
மயக்கும்
தங்களுடைய
புன்சிரிப்பும் ;
யாராலும்
கணிக்க முடியாத
தங்களுடைய
மௌனமும் ;
இதுவரை நான்
பார்க்காதவை”

“நான் பார்த்த
ஆண்களிலேயே
நீங்கள் மிகவும்
வித்தியாசமானவர்  ;
அதனால் தான்
நான் தங்கள்
மேல் காதல்
கொண்டேன் ;
தங்களைத் தான்
திருமணம் செய்ய
வேண்டும்
என்ற ஆசை
கொண்டேன் ;
தங்களுடன் தான் 
என்னுடைய
இல்லற
வாழ்க்கையை
அனுபவிக்க
வேண்டும்
என்ற விருப்பம்
கொண்டேன்;
அதனால் தான்
நான் உங்களை
என்னுடைய
இருப்பிடத்திற்கு
அழைத்து கொண்டு
வந்தேன்”

அர்ஜுனன் :
“அழைத்து வரவில்லை
என்னுடைய விருப்பம்
இல்லாமல் என்னை
கடத்தி வந்தாய்
என்று சொல்”

உலூபி :
“ஆமாம்! நான்
உங்களை
கடத்தி கொண்டு
தான் வந்தேன்;
விருப்பப்பட்டவரை
கடத்தி கொண்டு
வருவது ஒன்றும்
குற்றம் இல்லையே?”

அர்ஜுனன்:
“குற்றம் தான்”

உலூபி:
“நான்
தங்களை
விரும்பியது குற்றமா”

அர்ஜுனன்:
“விசித்திரமாக
இருக்கிறது
தங்களுடைய கேள்வி”


-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------16-11-2019
//////////////////////////////////////////

November 14, 2019

பரம்பொருள்-பதிவு-83


            பரம்பொருள்-பதிவு-83

“அந்தப் பெண்
அர்ஜுனனை கங்கையின்
அடிவரை தன்னுடைய
மாய சக்தியால்
இழுத்துச் சென்றாள் ;
கங்கையின் அடியில்
கட்டப்பட்டிருந்த
அழகான அரண்மனையில்
அர்ஜுனனை
விட்டு விட்டாள் ;
அழகான அரண்மனையில்
அர்ஜுனனை விட்டு
விட்ட அந்தப் பெண்
அர்ஜுனனுக்கு
தெரியாத வகையில்
அர்ஜுனன் தன்னைப்
பார்க்க முடியாத
வகையில் ;
அந்தப் பெண்
அந்த அரண்மனையில்
மறைந்து கொண்டாள் ;

“கங்கையின் அடியில்
மிகவும்
பிரமிக்கத்தக்க
விதத்தில்
கட்டப்பட்டிருந்த
அந்த அரண்மனையை ;
அற்புதம் என்று
ஒரே வார்த்தையில்
சொல்ல முடியாதபடி
கட்டப்பட்டிருந்த
அந்த அரண்மனையை ;
கற்பனையில் கூட
சிந்தித்துக் கூட பார்க்க
முடியாத வகையில்
அழகுடன் திகழ்ந்த
அந்த அரண்மனையை ;
கண் இமைக்காமல்
அந்த அரண்மனையை
சுற்றிப் பார்த்துக்
கொண்டே வந்தான்
அர்ஜுனன் ;”

“அக்னிஹோத்திரம்
செய்வதற்காக
கங்கையில்
குளித்து விட்டு
கரை ஏறிய
அர்ஜுனனை ;
அக்னிஹோத்திரம்
செய்ய விடாமல் தடுத்து;
அந்தப் பெண்
அர்ஜுனனை
கங்கைக்குள்
இழுத்துச் சென்று ;
கங்கையின்
அடியில் உள்ள
அரண்மனையில்
விட்டு விட்டதால் ;
அக்னிஹோத்திரம்
செய்யாமல் இருந்த
அர்ஜுனன் ;
அக்னிஹோத்திரம்
செய்வதற்கான
சரியான இடத்தைத் தேடி
அந்த அரண்மனை
முழுவதும் அலைந்தான் ;
நியமங்களைத்
தவறாது கடைபிடிக்கும்
அர்ஜுனன்
அக்னிஹோத்திரம்
செய்வதற்கான
சரியான இடம்
அந்த அரண்மனையில்
இருக்கிறதா என்று
தேடி அலைந்தான்;”

“அந்த அரண்மனையில்
ஒரு இடத்தில்
அக்னி எரிந்து
கொண்டிருப்பதைக்
கண்டான் அர்ஜுனன் ;
அந்த இடம்
அக்னி ஹோத்திரம்
செய்வதற்கு
ஏற்ற இடமாக
இருந்த காரணத்தினால்
அர்ஜுனன் அந்த
இடத்தில் அமர்ந்து
அக்கினையை வளர்த்து
அக்னிஹோத்திரம்
செய்தான் ;”

“அர்ஜுனன் செய்த
அக்னிஹோத்திரத்தை
ஏற்றுக் கொண்ட
அக்னி பகவான்
மனம் குளிர்ந்தார்”

“அர்ஜுனன்
அக்னிஹோத்திரம்
செய்து முடித்தபின்
மறைவில் இருந்து
வெளிப்பட்டாள்
அந்தப் பெண்”

அர்ஜுனன் :
“அச்சத்துடன்
காணப்படும்
அழகிய பெண்ணே !
வார்த்தைகளால்
சொல்ல முடியாமல்
தயக்கத்துடன்
நின்று கொண்டிருக்கும்
இளம் பெண்ணே !
நீ யார் ?
நீ யாருடைய
பெண் ?
இது எந்த இடம் ?
இந்த அரண்மனை
யாருடையது ?
என்ன காரணத்திற்காக
என்னை இங்கே
கொண்டு வந்தாய் ?
என்னுடைய அனுமதி
இல்லாமல் என்னை
இங்கே கொண்டு
வந்ததன் காரணம் என்ன?
உன்னுடைய நோக்கம்
தான் என்ன ?
நீ என்ன
காரியம் செய்து
இருக்கிறாய் என்று
தெரியுமா ?
நீ மிகப்பெரிய
தவறை செய்திருக்கிறாய்
என்பதை
உணர்ந்திருக்கிறாயா?
என்று அடுக்கடுக்கான
கேள்விகளால்
அந்த பெண்ணை
துளைத்து எடுத்தான்
அர்ஜுனன்”

“அர்ஜுனன் கேட்ட
கேள்விகளால்
தாக்குண்ட அந்தப்
பெண் பேசத்
தொடங்கினாள்”

“ஐராவத
நாக குலத்தில்
பிறந்த
கௌரவ்யனென்னும்
நாகராஜன் ஒருவன்
இருக்கிறான் ;
நான் அவனுடைய
மகளான
நாககன்னிகை ;
நாககன்னிகையான
என்னுடைய பெயர்

உலூபி……….!
உலூபி……….!
உலூபி……….!”

-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------14-11-2019
//////////////////////////////////////////


November 13, 2019

கடிதம்


அன்பிற்கினியவர்களே!

“19-10-2011-ஆம் தேதி முதல்
kbalagangadharan.blogspot.com
என்ற BLOGSPOT-முகவரியில்
“பாலாவின்
பார்வையில் சித்தர்கள்”
என்ற தலைப்பில் நான்
எழுதத் தொடங்கினேன்!”

“இயேசு கிறிஸ்து என்ற
தலைப்பில் இயேசு கிறிஸ்து
சொன்ன உவமைகளுக்கு
விளக்கங்கள்!”

“அகஸ்தியர், போகர்,
சிவவாக்கியர் என்று
பெரும்பாலான சித்தர்கள்
எழுதிய கடினமாக
பாடல்களுக்கு விளக்கங்கள்!”

“கிறிஸ்தவ மதத்தையும்
இந்து மதத்தையும் 
ஒப்பீடு செய்து ஆய்வுக்
கட்டுரைகளுடன்
கூடிய விளக்கங்கள்!”

“பல்வேறு வகையான
தமிழ் இலக்கியங்களில்
உள்ள பலதரப்பட்ட
பாடல்களுக்கு விளக்கங்கள்!“

“திருவள்ளுவர் எழுதிய
திருக்குறளுக்கு விளக்கங்கள்!

“பழமொழிகளை மாற்றாமல்
அதற்குரிய விளக்கங்கள்!”

“வாழ்த்து மடல்!
கவிதைகள்!
வரலாற்றுக் கட்டுரைகள்!
அறிவியல் கட்டுரைகள்!
என்று பல்வேறு விதமான
கட்டுரைகள் என
இன்று வரை 476-க்கும்
மேற்பட்ட கட்டுரைகளை
எழுதி இருக்கிறேன்
எழுதிக் கொண்டு
இருக்கிறேன்!”

“பாலாவின் பார்வையில்
சித்தர்கள் என்ற
தலைப்பைக் கொண்ட
BLOGSPOT-லும்,

Bala Gangadharan-என்ற
பெயரைக் கொண்ட
FACE BOOK-லும்,

பாலாவின் பார்வையில்
சித்தர்கள் என்ற
தலைப்பைக் கொண்ட
FACE BOOK-லும்,

தொடர்ந்து கட்டுரைகள்
எழுதி வருகிறேன்”

“ஒரு வருடத்திற்கு முன்பு
WHATS APP-ல் ஜபம் என்ற
தலைப்பில் பல்வேறு
கட்டுரைகள் எழுதி
வருகிறேன்!”

“உலகத்தில் நடந்தவைகள்
எதுவாக இருந்தாலும் சரி!
எழுதப்பட்டவைகள்
எதுவாக இருந்தாலும் சரி!
அதனுடைய
மையக் கருத்தையும்
கதையையும் மட்டுமே
எடுத்துக் கொண்டு
கதை,திரைக்கதை,வசனம்,
என்னுடைய சொந்த
அறிவைப் பயன்படுத்தி
தமிழ்மொழியில் எழுதிக்
கொண்டு வருகிறேன்
என்பதை அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்ள
ஆசைப்படுகிறேன்”

“உலகம் முழுவதும்
இருக்கும் என்னுடைய
ரசிகர்கள் என்மேல்
அன்பு கொண்டவர்கள்
என பல்வேறு தரப்பினரும்
ஒன்றாக இணைந்து
என்னுடைய கட்டுரைகளை
ஒவ்வொரு கால கட்டத்திலும்
புத்தகமாக கொண்டுவர
முயற்சி செய்தோம்”

“இயேசு கிறிஸ்து என்ற
தலைப்பில் இயேசு கிறிஸ்து
சொன்ன உவமைக்குரிய
விளக்கங்களை புத்தகமாக
கொண்டு வர முயற்சி
செய்தோம் முடியவில்லை”

“சித்தர்கள் எழுதிய
பாடல்களுக்கு நான்
எழுதிய விளக்கங்கள்
அடங்கியவைகளை
புத்தகமாக கொண்டு
வர முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“கிறிஸ்தவ மதத்தையும்
இந்து மதத்தையும்
ஒப்பிட்டு நான் எழுதிய
ஆய்வுக் கட்டுரையை
புத்தகமாக கொண்டு வர
முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“நான் எழுதிய பல்வேறு
கட்டுரைகளை ஒன்றிணைத்து
கட்டுரைகளாக கொண்டு
வர முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“ஆனால் தற்போது
BLOGSPOT-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
FACEBOOK-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
WHATSAPP-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
ஆகிய அனைத்தையும்
புத்தகமாக கொண்டு
வருவதற்கான அனைத்து
ஆயத்த வேலைகளையும்
தொடங்கி செய்து
கொண்டு இருக்கிறோம்”

“இதற்காக உலகம்
முழுவதும் இருக்கும்
என்னுடைய ரசிகர்கள்
என்மேல் அன்பு
கொண்டவர்கள் ஆகிய
அனைவரும் ஒன்றாக
இணைந்து பொருளுதவி
மற்றும் பல்வேறு
உதவிகளை தங்களால்
இயன்ற அளவு
செய்து வருகிறார்கள்”

“நான் எழுதிய கட்டுரைகளை
எப்படி எந்த வடிவில்
புத்தகமாக கொண்டு
வருவது என்பதைப் பற்றியும்
எத்தகைய புத்தகங்களாக
பதிப்பு செய்வது
என்பதைப் பற்றியும்
எத்தகைய வடிவத்தில்
கொண்டு வருவது
என்பதைப் பற்றியும்
கட்டுரைகளை எந்த
தலைப்பின் கீழ்
தனித்தனியாக பிரித்து
வெளியிடுவது என்பதைப்
பற்றியும் கடினமாக அலுவல்
பணிகளுக்கிடையேயும்
கஷ்டமான குடும்ப
சூழ்நிலைகளுக்கிடையேயும்
என்னுடைய கட்டுரைகளை
புத்தகமாக கொண்டு வர
முயற்சி செய்து
அனைவரும் உழைத்துக்
கொண்டிருக்கிறார்கள்”

“இறைவனின் அருளாலும்
சித்தர்களின் ஆசியினாலும்
அன்புள்ளம் கொண்டவர்களின்
வழிகாட்டுதலினாலும்
உயிரனைய உறவுகளின்
உழைப்பாலும் -என்னுடைய
கட்டுரைகள் அனைத்தும்
2020 ஆம் ஆண்டு
ஒவ்வொன்றாக
புத்தகமாக வெளிவரும்
என்பதைத் தெரிவித்துக்
கொள்வதில் நான்
மிகுந்த மகிழ்சசி
அடைகிறேன்!”

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
--------13-11-2019
//////////////////////////////////////////////