February 03, 2020

பரம்பொருள்-பதிவு-123


                 பரம்பொருள்-பதிவு-123

கிருஷ்ணன் :
"உன்னுடைய ஒப்புதலை
மட்டும் வைத்துக் கொண்டு
உன்னை களப்பலி
கொடுப்பதற்கு
களப்பலியை என்ன
சாதாரணமான விஷயம்
என்று நினைத்து
விட்டாயா அரவான்?"

"களப்பலி எவ்வளவு
உயர்ந்த விஷயம் என்பது
உனக்குத் தெரியுமா ?"

"எப்படி வேண்டுமானாலும்
பலி கொடுக்கலாம்
என்பதற்கு இது ஒன்றும்
சாதாரணமான
பலி அல்ல களப்பலி "

"களப்பலி என்றால்
என்ன என்பதையும் ;
அதனுடைய முழு
விவரங்கள் எவைகள்
என்பதையும் ;
அறிந்தவர்கள் யாருமே
களப்பலியை சாதாரணமான
விஷயமாக எடுத்துக்
கொள்ள மாட்டார்கள் ;
அவர்களுக்கு மட்டுமே
களப்பலி எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது
என்பது தெரியும் "

“போரில் வெற்றி
பெற வேண்டும் என்பதற்காக
போர் தொடங்குவதற்கு
முன் செய்யப்படும்
சடங்கிற்குப் பெயர்
தான் களப்பலி “

"போரில் வெற்றி பெறவே
முடியாது என்ற நிலையில்
இருப்பவர்களும் - போர்
தொடங்குவதற்கு முன்னர்
களப்பலி கொடுத்தால்
வெற்றி பெற முடியும்
என்ற சிறப்பைக் கொண்டது
தான் களப்பலி “

“களப்பலி கொடுப்பதற்கு
என்றே சில விதிமுறைகள்
இருக்கிறது - அந்த
விதிமுறைகளைப்
பின்பற்றித்  தான் களப்பலி
கொடுக்க வேண்டும் - அந்த
விதிமுறைகளைப்
பின்பற்றாமல் களப்பலி
கொடுக்கவும் கூடாது ;
களப்பலி கொடுத்தாலும்
எந்தவிதமான
பயனும் கிடைக்காது ; “

“யாராலும் மதிப்பிட
முடியாத இத்தகைய
மதிப்பு வாய்ந்த
களப்பலியைப் பற்றி - நீ
அறிந்து இருந்தாலும்
நான் சொல்லப்போகும்
சில விஷயங்களையும்
மனதில் நிறுத்திப்
பார்த்தாயானால்
களப்பலி எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது
என்பது உனக்குத் தெரியும் “

“கேள் அரவான் கேள் “

“களப்பலி என்றால்
என்ன என்று - நான்
சொல்லப் போவதை
நன்றாகக் கேள் “

“களப்பலியுடன் நீ
சம்பந்தப்பட்டவன் என்பதால்
களப்பலி என்றால்
என்ன என்பதை
நான் உனக்கு விளக்கி
சொல்கிறேன் கேள் “

“போரில் வெற்றி பெற
வேண்டும் என்பதற்காக
போருக்கு முன்னால்
களப்பலி கொடுப்பதற்கு
உரிய நாளை சோதிடத்தை
சரியான முறையில்
கணிப்பவர் மூலம்
தேர்ந்தெடுக்க வேண்டும் “

“களப்பலியாகக் கூடிய நபர்
எத்தகைய தன்மைகளைப்
பெற்று இருக்க வேண்டும்
என்பதை முதலில்
தெரிந்து கொள்ள வேண்டும்.”

“களப்பலியாகப் போகிறவர்  
எத்தகைய தன்மைகளைப்
பெற்று இருக்க வேண்டும்
என்பது ஏற்கனவே
உனக்குத் தெரியும் ;
இருந்தாலும் நான்
சொல்கிறேன் கேள்.
32 லட்சணங்கள்
கொண்டவராகவும் ;
எதிர் ரோமம்
படைத்தவராகவும் ;
இருப்பவரைத் தான்
களப்பலியாகக் கொடுப்பதற்குத்
தேர்ந்தெடுக்க வேண்டும் ;”

“தேர்ந்தெடுக்கப் பட்ட
களப்பலியாகப்
போகிறவரின் ஒப்புதலைப்
பெற வேண்டும் ;
களப்பலியாகப் போகிறவரின்
ஒப்புதலைப் பெற்றால்
மட்டும் போதாது ;
களப்பலியாகப் போகிறவரின்
தாய், தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்கள் ஆகியோரின்
அனுமதியையும்
பெற்ற பின்பு தான்
களப்பலியாகப் போகிறவரை
களப்பலியாகக் கொடுக்கலாம்
என்ற முடிவை
எடுக்க வேண்டும் ”

“களப்பலி கொடுக்கக்
கூடிய நாளன்று
களப்பலியாகப் போகிறவரின்
தாய், தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களில்
யாரேனும் ஒருவர்
களப்பலியாகப் போகிறவரின்
தலையை வெட்டி
அந்த தலையை காளி
தேவிக்கு படைக்க வேண்டும்”

“தாய் , தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களில் யாரும்
களப்பலியாகப் போகிறவரின்
தலையை வெட்ட
முன்வரவில்லை என்றால்
களப்பலியாகப் போகிறவரே
தன் தலையை தானே
வெட்டி காளி தேவிக்கு
படைக்க வேண்டும் “

“இவைகள் அனைத்தையும்
முறைப்படி செய்தால்
காளிதேவி நேரில் தோன்றி
போரில் வெற்றி பெறுவதற்கான
வரத்தை அளிப்பாள்”

இது தான் களப்பலி”

“இப்போது புரிகிறதா
அரவான் - நான் ஏன்
அனைவரிடமும் ஒப்புதல்
பெற வேண்டும் - என்று
கூறினேன் என்று “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 03-02-2020
//////////////////////////////////////////

February 02, 2020

பரம்பொருள்-பதிவு-122


                 பரம்பொருள்-பதிவு-122

அரவான்  :
"யோசித்தால் நல்ல
முடிவை
எடுக்கலாம் அல்லவா?"

கிருஷ்ணன் :
"யோசித்தால் நம்மால்
முடிவைத் தான்
எடுக்க முடியும் "

"அது நல்ல முடிவா
அல்லது
கெட்ட முடிவா
என்பதை நம்மால்
எப்படி தீர்மானம்
செய்ய முடியும் "

"ஒருவருக்கு நல்ல
முடிவாகத் தெரிவது
மற்றொருவருக்கு - கெட்ட
முடிவாகத் தெரியும் "

"ஒருவருக்கு கெட்ட
முடிவாகத் தெரிவது
மற்றொருவருக்கு - நல்ல
முடிவாகத் தெரியும் "

"யோசித்து
முடிவு எடுக்கும்
உரிமை மட்டுமே
நம்மிடம் இருக்கிறது
அது நல்ல முடிவா
அல்லது
கெட்ட முடிவா
என்பதை தீர்மானிக்கும்
உரிமை நம்மிடம்
இல்லை - அது
இந்த சமுதாயத்திற்கு
மட்டுமே இருக்கிறது "

அரவான்  :
"அப்படி என்றால்
யோசிக்க வேண்டாம்
என்கிறீர்களா ?"

கிருஷ்ணன்  :
"துரியோதனனுக்காக
களப்பலி ஆகாதே ;;
பாண்டவர்களுக்காக
களப்பலியாகு
என்று நான்
கேட்டிருந்தால்
நீ யோசித்திருக்கலாம் "

"நான் அவ்வாறு
கேட்கவேயில்லையே "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா
என்று தானே கேட்டேன் "

"நான் கேட்டதில்
ஏதேனும் தவறு
இருக்கிறதா யோசிக்க
வேண்டும் என்கிறாய் "

அரவான்  :
"பரந்தாமா !
நீங்கள் கேட்டதில்
எந்தவிதமான
தவறும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை "

"நீங்கள் சொல்வது
அனைத்தும்
சரியானதாகவே
எனக்குப் படுகிறது "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் என்னை
களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் - நான்
பாண்டவர்களுக்காக
களப்பலியாவதன்
மூலம் நான் பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களுக்கு செய்து
கொடுத்த வாக்கை
மீறியவன் ஆக மாட்டேன் "

"வாக்குத் தவறியவன்
ஆக மாட்டேன் "

"நான் சம்மதிக்கிறேன் "

"நான் களப்பலியாவதற்கு
சம்மதிக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் என்னை
களப்பலியாகக் கேட்டு
வந்தால் அவருக்காக
களப்பலியாகிறேன்  ;
பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
என்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் நான்
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
சம்மதிக்கிறேன் ;"

கிருஷ்ணன்  :
"அரவான் ! - நீ
களப்பலியாக
சம்மதித்ததை
ஏற்றுக் கொள்கிறேன் ;
ஆனால்,
உன்னுடைய சம்மதத்தை
மட்டுமே வைத்துக்
கொண்டு உன்னை நான்
களப்பலி கொடுப்பதற்கான
முடிவை எடுக்க முடியாது "

"உன்னுடைய தாய்
தந்தை மற்றும் உன்னுடன்
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
அனுமதி பெற்ற
பிறகே வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
உன்னை களப்பலி
கொடுப்பதற்கான
முடிவை எடுப்பேன் "

"அவர்களுடைய சம்மதம்
பெறாமல் உன்னை
நான் களப்பலி
கொடுக்க மாட்டேன் "

அரவான் :
"ஏன் அனைவரிடமும்
ஒப்புதல் பெற வேண்டும் ;
என்னுடைய அனுமதி
மட்டும் இருந்தால்
போதாதா………………………………..? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 02-02-2020
//////////////////////////////////////////




February 01, 2020

பரம்பொருள்-பதிவு-121


            பரம்பொருள்-பதிவு-121

கிருஷ்ணன் :
"துரியோதனனுக்காக- நீ
களப்பலியாகி
குருஷேத்திரப் போரில்
துரியோதனன்
வெற்றி பெற்று
விட்டான் என்றால்
வருங்கால உலகம்
இருள்மயமானதாக
இருப்பதோடு
மட்டுமல்லாமல்
அதற்குக் காரணமான
உன்னை இந்த
உலகம் வசைபாடும்"

"ஆனால்
பாண்டவர்களுக்காக - நீ
களப்பலியாகி
குருஷேத்திரப் போரில்
பாண்டவர்கள்
வெற்றி பெற்று
விட்டார்கள் என்றால்
வருங்கால உலகம்
ஒளிமயமானதாக
இருப்பதோடு
மட்டுமல்லாமல்
அதற்குக் காரணமான
உன்னை இந்த உலகம்
தெய்வமென வழிபடும் "

"அதனால் நீ
துரியோதனனுக்காக
களப்பலியாகக் கூடாது  ;
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
வேண்டும் - என்று
நான் உன்னை
கேட்கமுடியாது?"

"ஏனென்றால் நீ
ஏற்கனவே
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக வாக்கு
கொடுத்திருக்கிறாய் "

"இப்போது
துரியோதனனிடம்
சென்று
துரியோதனனுக்காக
களப்பலி ஆக
மாட்டேன் என்று
நீ சொன்னால் 
துரியோதனனுக்கு
நீ செய்து
கொடுத்த வாக்கை
மீறியவன் ஆவாய் "

"ஆனால், துரியோதனன்
வரவில்லை என்ற
காரணத்திற்காக
பாண்டவர்களுக்காக நீ
களப்பலியானாய் என்றால்
துரியோதனனுக்கு நீ
செய்து கொடுத்த
வாக்கை மீறியவன்
ஆக மாட்டாய் "

"அதனால் தான் நான்
உன்னை கேட்கிறேன்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா ?"

அரவான் :
“நீங்கள் கேட்டதில்
எந்தவித முடிவும்
இருப்பதாக எனக்குத்
தெரியவில்லையே ! “

“அது அல்லது இது
என்று விடை
காண முடியாத
கேள்வியுடன் நிற்கிறது”

கிருஷ்ணன் :
“நம்முடைய
வாழ்க்கையில்
நமக்கு எதிராக
எதிர்ப்படுபவை எல்லாம்
அது அல்லது இது
என்ற நிலையில்
தான் இருக்கும் “

“சிலவற்றை நாம்
தீர்மானம் செய்ய
வேண்டியதாய் இருக்கும் ;

சிலவற்றை காலம்
தீர்மானம் செய்ய
வேண்டியதாய் இருக்கும் ;”

“நீ துரியோதனனுக்காக
களப்பலியாகப்
போகிறாயா அல்லது
பாண்டவர்களுக்காக
களப்பலியாகப்
போகிறாயா என்பதை
காலம் தான் தீர்மானம்
செய்ய வேண்டும் “

“அதனால் வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று வாக்கு
கொடு அது போதும் “

“மற்றதை காலம்
பார்த்துக் கொள்ளும்”

அரவான் :
"நான் கொஞ்சம்
யோசிக்க வேண்டும்?"

கிருஷ்ணன்  :
"அதர்மத்தை
நிலைவாட்டுவதற்காக
துரியோதனன்
உன்னை நாடி வந்து
களப்பலியாக
உன்னைத் தருகிறாயா?
என்று கேட்டபோது
யோசிக்காமல்
களப்பலியாகிறேன் ;
என்று வாக்கு
கொடுத்த - நீ
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
தர்மத்தை
நிலை நாட்டுவதற்காக
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
உன்னைத் தருகிறாயா ?
என்று நான் கேட்கும்
போது மட்டும் எப்படி
நீ யோசிக்க
வேண்டும் என்கிறாய் ?"

"எதற்கு
யோசிக்க வேண்டுமோ?
அதற்கு எல்லாம்
யோசிக்காமல்
விட்டு விட்டு - எதற்கு
யோசிக்கக் கூடாதோ
அதற்கு எல்லாம்
யோசிக்க வேண்டும்
என்கிறாய் கேட்கவே
விசித்திரமாக இருக்கிறது "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

------------01-02-2020
//////////////////////////////////////////

January 31, 2020

பரம்பொருள்-பதிவு-120


                பரம்பொருள்-பதிவு-120

அரவான் :
"நான் ஏற்கனவே
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு
களப்பலியாவதாக
வாக்கு
கொடுத்திருக்கிறேன் !"

"அப்படி இருக்கும்
போது நான் எப்படி
பாண்டவர்களுக்காக
களப்பலி
ஆக முடியும்?"

"பாண்டவர்களுக்காக
நான் களப்பலியானால்
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
செய்து கொடுத்த
வாக்கை மீறியவன்
ஆக மாட்டேனா ?"

கிருஷ்ணன் :
"பாண்டவர்களுக்காக
களப்பலியாக வேண்டும்
என்று தான் - நான்
உன்னை கேட்டேனே தவிர
துரியோதனனுக்காக
களப்பலியாக வேண்டாம்
என்று - நான் உன்னை
கேட்கவேயில்லையே?"

அரவான் :
"நீங்கள் சொல்வது
எனக்குப் புரியவில்லை?"

கிருஷ்ணன்  :
"வருகின்ற அமாவாசை
தினத்தன்று தானே
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
வாக்கு கொடுத்திருக்கிறாய் "

அரவான் :
"ஆமாம்"

கிருஷ்ணன்  :
"வருகின்ற  அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகு "

அரவான் :
"அது எப்படி சாத்தியம்?"

கிருஷ்ணன்  :
"யோசித்துப் பார்த்தால்
எல்லாமே சாத்தியம் தான்"

"சாத்தியமாகாதது என்று
எதுவுமே - இந்த
உலகத்தில் இல்லை"

"ஒரு விஷயத்திற்காக
ஒரு நாள் குறித்து
அந்த நாளை
ஒருவர் பயன்படுத்திக்
கொள்வதற்காக
ஒரு வாய்ப்பு கொடுத்து
அந்த வாய்ப்பைப்
பெற்றவர்
அந்த  வாய்ப்பைப்
பயன்படுத்திக்
கொள்வதற்காக
வரவில்லையென்றால்
வாய்ப்பு
கொடுக்கப்பட்டவருக்கு
அடுத்து யார் இருக்கிறாரோ
அவருக்கு
அந்த வாய்ப்பை
வழங்குவது தானே
உலக நடைமுறை ;

அந்த உலக
நடைமுறையின்
படியே தான்
நான் கேட்கிறேன் ;
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று வாக்கு கொடு
அது போதும்."

அரவான் :
“நான் வாக்கு
கொடுப்பதினால் - எனக்கு
எந்தவிதமான நன்மைகளும்
ஏற்படப் போவதாகத்
தெரியவில்லையே ?”

“வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
களப்பலியாக என்னைக்
கேட்டு வரவில்லை
என்றால் தானே
பாண்டவர்களுக்காக-நான்
களப்பலியாக முடியும் ;
எனக்கு வருங்காலத்தில்
நல்ல பெயர் கிடைக்கும் ”

“ஆனால், பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
களப்பலியாக என்னைக்
கேட்டு வந்து விட்டால்
அவருக்கு தானே - நான்
களப்பலியாக முடியும் ;
அப்படி என்றால்
வருங்காலத்தில் எனக்கு
கெட்ட பெயர்
தானே ஏற்படும் ;”

“பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாகாமல்
தடுப்பதற்கு நீங்கள்
எந்தவிதமான உபாயமும்
சொல்லவே இல்லையே?”
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாவது
தடுக்கப்படவில்லையே !”

கிருஷ்ணன்  :
“அரவான் ஒன்றை
நன்றாக ஞாபகம்
வைத்துக் கொள் ;
இந்த உலகத்தில்
நடக்கக் கூடியவைகள்
எவற்றையும் தடுத்து
நிறுத்த முடியாது ;
மாற்றி அமைக்கத்
தான் முடியும் ;”

“துரியோதனனுக்காக-நீ
களப்பலியாவதை
தடுத்து நிறுத்த-நான்
முயற்சி செய்யவில்லை ;
துரியோதனனுக்காக
செய்யவிருக்கும்
உன்னுடைய களப்பலியை
பாண்டவர்களுக்கு
மாற்றி அமைக்கத் தான்
நான் முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் ;”

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

------------31-01-2020
//////////////////////////////////////////