April 26, 2020

பரம்பொருள்-பதிவு-210


               ஜபம்-பதிவு-458
             (பரம்பொருள்-210)

தர்மர் :
“நீங்கள் எங்கே
இருப்பீர்கள் ? “

கிருஷ்ணன் :
“இப்போது நான் ஒரு
முக்கியமான இடத்தில்
இருக்க வேண்டும்  

“அந்த இடத்தில்
ஒரு முக்கியமான
கடமையை நிறைவேற்ற
வேண்டிய பொறுப்பு
எனக்கு இருக்கிறது “

“அந்த கடமையை
நிறைவேற்றுவதற்காக
உடனே நான்
செல்ல வேண்டும்  

“அந்த இடத்தில்
நான் இருக்க
வேண்டிய கட்டாயம்
இருக்கிறது “

“எனக்கென்று
ஒதுக்கப்பட்ட
கடமையை நான்
கண்டிப்பாக
நிறைவேற்றியாக
வேண்டும் “

“எனக்காக ஒரு
வேலை காத்துக்
கொண்டிருக்கிறது “

“நான் எங்கே
செல்லப் போகிறேன்
என்ன செய்யப்
போகிறேன்
என்பதைப் பற்றி
எல்லாம் - நீங்கள்
ஆராய்ச்சி
செய்ய வேண்டாம் ;
யோசித்துக் கொண்டு
நேரத்தை வீணடித்துக்
கொண்டிருக்க வேண்டாம் ;
நான் செய்ய
வேண்டிய கடமையை
செய்யப் போகிறேன் ;
உங்களுக்கென்று நான்
ஒதுக்கிய கடமையை
செயல் படுத்துங்கள் ;“

தர்மர் :
“நீங்கள் இல்லாமல்
எந்தவொரு
விஷயத்தையும் - நாங்கள்
செய்ததில்லையே
இப்போது நீங்கள்
இல்லாமல்
நாங்கள் மட்டும்
இந்த விஷயத்தை
எப்படி செய்ய முடியும் “

“எங்களால்
செய்ய முடியுமா ? “

கிருஷ்ணன் :
“உங்களால்
செய்ய முடியும்  

“உங்களால் செய்ய
முடியும் என்ற
காரணத்திற்காகவும்  ;
அந்த கடமையை
நீங்கள் தான்
செய்ய வேண்டும் என்ற
காரணத்திற்காகாவும் தான்
இந்த விஷயத்தை
உங்களிடம்
ஒப்படைத்தேன் “

“நான் காட்டிய
வழியைப் பின்பற்றி
உங்களிடம் நான்
ஒப்படைத்த
கடமையை
நிறைவேற்றுங்கள் “

“நான் இல்லாமல்
நீங்கள் எந்தவொரு
செயலையும்
செய்வதாக நீங்கள்
நினைக்க வேண்டாம் “

“நான் இல்லாமல்
நீங்கள் எந்தவொரு
செயலையும் நீங்கள்
செய்யப் போவதில்லை “

தர்மர் :
“அப்படி என்றால்
அரவானுடைய
தகனத்தில்
நீங்கள் இருக்கப்
போவதில்லையா ? “

கிருஷ்ணன் :
“நான் எல்லா
இடத்திலும் இருந்து
கொண்டிருக்கிறேன் “

“இந்த உலகத்தில்
உள்ள அனைத்து
பொருட்களிலும்
நான் இருந்து
கொண்டு தான்
இருக்கிறேன் “

“பஞ்ச பாண்டவர்களாகிய
உங்களுக்குள்ளும்
நான் இருக்கிறேன் “

“அரவானுடைய
மனைவியின்
உடலிலும் நான்
இருக்கிறேன் “

“அதை நீங்கள்
உணர்ந்து
கொண்டீர்களா
என்று எனக்குத்
தெரியவில்லை “

“நான் உங்களுக்குள்
இருப்பதை - நீங்கள்
உணர்ந்து கொள்ளாத
போது எப்படி - நான்
அரவானின் மனைவியாக
இருப்பதை உங்களால்
எப்படி உணர்ந்து
கொள்ள முடியும் “

“ஆகவே நீங்கள்
சென்று உங்களுக்கு
ஒப்படைக்கப்பட்ட
கடமையைச் செய்யுங்கள்”

“நான் என்னுடைய
கடமையை
நிறைவேற்ற வேண்டும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-209


               ஜபம்-பதிவு-457
             (பரம்பொருள்-209)

தர்மர் :
“அரவானுடைய உடல்
இருக்கும் இடத்தில்
அரவானுக்கு
செய்ய வேண்டிய
ஈமச்சடங்குகளை
யார் செய்வார்கள் ?“

“அந்த இடத்தில்
ஈமச் சடங்குகளைச்
செய்வதற்கு யார்
இருக்கிறார்கள் ?“

“அதற்கு ஏதேனும்
ஏற்பாடுகளை நீங்கள்
செய்து இருக்கிறீர்களா ? “

கிருஷ்ணன் :
“அதற்கு நான்
எந்தவிதமான
ஏற்பாட்டையும்
செய்யவில்லை  ;
எந்தவிதமான
ஏற்பாட்டையும் நான்
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை “

“அரவானுடைய
உடலுக்கு செய்ய
வேண்டிய
ஈமச் சடங்குகளைச்
செய்வதற்கு
அரவானுடைய
மனைவி இருக்கிறாள் “

தர்மர் :
“என்னது
அரவானுடைய
மனைவியா ? “

கிருஷ்ணன் :
“ஆமாம் ! அரவானுடைய
மனைவி தான் “

“அரவானுடைய
மனைவி தான்
அரவானுக்கு
செய்ய வேண்டிய
ஈமச் சடங்குகளைச்
செய்யப் போகிறாள் “

“அரவான்
களப்பலியாவதற்கு
முன்பு அரவானுக்குத்
திருமணம் நடந்து
விட்டது என்பது
உங்களுக்குத் தெரியும் “

“அரவானுடைய வாரிசாக
அரவானுடைய
மனைவி இருக்கிறாள்  

“எனவே, அரவானுடைய
உடலுக்கு செய்ய
வேண்டிய அனைத்து
ஈமச் சடங்குகளையும்
அரவானுடைய
மனைவியே செய்வாள் ‘

“அரவான் கேட்டுக்
கொண்டபடியே
அனைத்தும் நடக்கும் ‘

“அரவான் கேட்டுக்
கொண்டபடியே அனைத்தும்
நடக்கப் போகிறது  

தர்மர் :
“அரவான் என்ன
கேட்டான் ? “

கிருஷ்ணன் :
“தான் இறந்த பிறகு
தன்னை கணவன்
என்று சொல்லி
தன்னுடைய பிணத்தை
கட்டிபிடித்து கதறி
அழுவதற்கு
மனைவியாக இந்த
உலகத்தில் தனக்கு
ஒரு உறவு இருக்க
வேண்டும் என்றும் ;
தான் இறந்த பிறகு
தன்னுடைய
இறுதிச் சடங்கை
உரிமை கொண்டாடி
செய்து முடிப்பதற்கு
மனைவி
என்ற முறையில்
ஒரு பெண் இருக்க
வேண்டும் என்றும் ;
அதற்கு தான்
ஒரு பெண்ணை
திருமணம்
செய்து கொண்டு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க
வேண்டும் என்றும்  ;
அரவான் என்னிடம்
முதல் வரத்தைக்
கேட்டான் “

“அரவான் கேட்டுக்
கொண்டபடியே அரவான்
களப்பலியாவதற்கு
முன்பு அரவானுடைய
முதல் வரத்தை
நிறைவேற்றி விட்டேன் “

“முதல் வரத்தின்
தொடர்ச்சியாக
அரவான் கேட்டுக்
கொண்டபடி
இப்போது
அரவானுடைய
உடலைக் கட்டிப்பிடித்து
கதறி அழுது
ஈமச் சடங்குகளைச்
செய்வதற்கு
அரவானுடைய
மனைவி இருக்கிறாள் “

“அரவானுடைய
மனைவி
அரவானுக்கு செய்ய
வேண்டிய அனைத்து
ஈமச் சடங்குகளையும்
செய்வாள் “

“நீங்கள் அரவானை
தகனம் செய்வதற்கு
தேர்ந்தெடுத்த இடத்தில்
அரவானை தகனம்
செய்வதற்கு
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து முடித்து விட்டு
அரவான் இருக்கும்
இடத்திற்கு செல்லுங்கள் “

“அந்த இடத்தில்
அரவானுடைய மனைவி
தன்னுடைய கணவனுக்கு
செய்ய வேண்டிய
அனைத்து ஈமச்
சடங்குகளையும்
செய்து முடித்திருப்பாள் “

“அந்த இடத்திற்கு சென்று
அரவானுடைய உடலை
கொண்டு சென்று
தகனம் செய்யுங்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-208


               ஜபம்-பதிவு-456
             (பரம்பொருள்-208)

(கிருஷ்ணன்
பஞ்ச பாண்டவர்கள்
பக்கம் திரும்பினார்
அவர்களிடம் பேசத்
தொடங்கினார்)

கிருஷ்ணன் :
“ஒரு முக்கியமான
கடமையை
நிறைவேற்றும் பொறுப்பை
உங்களிடம்
ஒப்படைக்கப் போகிறேன் ;
அந்த கடமையை
வெற்றிகரமாக
நிறைவேற்ற
வேண்டிய பொறுப்பு
உங்களுக்கு இருக்கிறது “

“அந்த கடமையை
நீங்கள் தான்
நிறைவேற்ற வேண்டும் “

“உங்களுக்கு
கொடுக்கப்பட்ட
கடமையை உணர்ந்து
செயல் படுவீர்கள்
என்று நம்புகிறேன் “

தர்மர் :
“பரந்தாமா! உங்கள்
உத்தரவிற்காக
காத்திருக்கிறோம் “

கிருஷ்ணன் :
“களப்பலியான
அரவானுடைய உடலை
தகனம் செய்வதற்குத்
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
பஞ்ச பாண்டவர்களாகிய
நீங்கள் அனைவரும்
தான் செய்ய வேண்டும் “

தர்மர் :
“நாங்கள் என்ன
செய்ய வேண்டும்  ? “

கிருஷ்ணன் :
“முதலில் அரவானுடைய
உடலைத் தகனம்
செய்வதற்குத் தகுந்த
ஒரு இடத்தைத்
தேர்ந்தெடுத்துக்
கொள்ளுங்கள்  

“அந்த இடத்தில்
அரவானைத் தகனம்
செய்வதற்கு முன்
செய்ய வேண்டிய
அனைத்து
ஈமச் சடங்குகளையும்
செய்வதற்குத்
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்யுங்கள் “

“அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து
முடித்த பின்னர்
நீங்கள் அனைவரும்
களப்பலியான
அரவானுடைய உடல்
இருக்கும் இடத்திற்கு
செல்லுங்கள் “

“அந்த இடத்திற்கு
சென்று அந்த
இடத்தில் தலை
இல்லாமல் இருக்கும்
அரவானுடைய உடலை
தகனம் செய்யும்
இடத்திற்கு கொண்டு
சென்று தகனம்
செய்வதற்கு முன்
செய்ய வேண்டிய
அனைத்து
ஈமச் சடங்குளையும்
செய்து முடித்த பின்னர்
அரவானுடைய
உடலைத் தகனம்
செய்யுங்கள் “

“பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற
வேண்டும் என்பதற்காகத்
தன்னையே
களப்பலியாகக் கொடுத்த
அரவானுடைய
உடலுக்கு செய்ய
வேண்டிய அனைத்து
ஈமச் சடங்குகளையும்
எந்தவிதக் குறையும்
இல்லாமல் செய்து
முடித்த பின்னர்
அரவானுடைய உடலை
மரியாதையுடன் தகனம்
செய்ய வேண்டியது
உங்களுடைய
பொறுப்பு ஆகும் “

“உங்களுக்கு
வழங்கப்பட்ட
பொறுப்பை உணர்ந்து
செயல்படுவீர்கள்
என்று நினைக்கிறேன்”

தர்மர் :
“இந்த விஷயத்தைப்
பற்றி நீங்கள் கவலைப்பட
வேண்டியதில்லை“

“எங்களுக்கு
வழங்கப்பட்ட
பொறுப்பை
உணர்ந்து
செயல்படுவோம் “

“அரவானுடைய
உடலுக்கு முறைப்படி
எத்தகைய
ஈமச்சடங்குகள்
செய்ய வேண்டுமோ
அத்தகைய
ஈமச்சடங்குகளை
எந்தவிதமான குறையும்
வைக்காமல் முறைப்படி
செய்வோம் “

“ஆனால் ஒரு
சந்தேகம் ? “

கிருஷ்ணன் :
“என்ன சந்தேகம் ?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////











April 20, 2020

பரம்பொருள்-பதிவு-207


               ஜபம்-பதிவு-455
              (பரம்பொருள்-207)

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
நன்றாக வாழ
வேண்டும்
என்பதற்காக
தன்னையே
களப்பலியாகக்
கொடுத்தவன்
அரவான்”

“அதனால் தான்
நான் சொல்கிறேன்
களப்பலியான
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுத்து
உயிர்த்தெழ செய்யும்
உயிர்த்தெழுதல்
இது வரை
யாரும் செய்யாத
உயிர்த்தெழுதல் ;
இனியும் யாரும்
செய்ய முடியாத
உயிர்த்தெழுதல்”

“இதுவரை
யாரும் செய்யாத
இனியும் யாரும்
செய்ய முடியாத
உயிர்த்தெழுதலை
இப்போது செய்யப்
போகிறேன்”

“இப்போது
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுக்கப் போகிறேன் “

(என்று சொல்லிக்
கொண்டே கிருஷ்ணன்
அரவானுடைய
தலையைப்
பிடித்துக் கொண்டு
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுத்தார் )

கிருஷ்ணன் :
“அரவான் மெதுவாக
உன்னுடைய கண்களைத்
திறந்து பார்”

(அரவானுடைய
தலை
உயிர் பெற்றது
அரவான் மெதுவாக
கண்களைத் திறந்தான் ;
இந்த உலகத்தைப்
பார்த்தான் ;
தன் முன்னால்
நின்று கொண்டிருந்த
கிருஷ்ணனையும்
பஞ்ச
பாண்டவர்களையும்
தன்னுடைய
கண்களால் பார்த்தான் ; )

அரவான் :
“உங்கள்
அனைவரையும்
என்னுடைய
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்  ;
என்னுடைய
வணக்கத்தை
அனைவரும் ஏற்றுக்
கொள்ளுங்கள் ; “

(அனைவரும்
அரவானுக்கு வணக்கம்
செலுத்துகின்றனர் )

கிருஷ்ணன் :
“என்ன தெரிகிறது
அரவான் “

அரவான் :
“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள ஒவ்வொரு
பொருளிலும்
நீங்கள் இருப்பது
தெரிகிறது பரந்தாமா “

கிருஷ்ணன் :
“வேறு என்ன
தெரிகிறது அரவான் ? “

அரவான் :
“உங்களுக்குள் இந்த
பிரபஞ்சமே இருப்பது
தெரிகிறது பரந்தாமா “

கிருஷ்ணன் :
“ஞானம் என்பது
உனக்குள்
பிறந்திருக்கிறது  ;
ஆன்மீகத்தின் மிக
முக்கியமான
வாயிலை நீ
இப்போது
கடந்திருக்கிறாய் ;
அதனால் தான்
பிரபஞ்ச ரகசியங்கள்
அனைத்தும் உனக்கு
தெரிய ஆரம்பித்து
இருக்கிறது “

“இன்னும் பல
விஷயங்களை
உனக்கு
வழங்குவதற்காக
இந்த உலகமே காத்துக்
கொண்டிருக்கிறது “

“அதற்கு அடித்தளம்
அமைக்கும் விதத்தில்
நீ கேட்டபடி
நடக்கப்போகும்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்ப்பதற்கு
வசதியாக
உன்னுடைய
தலையை இங்கே
கொண்டு வந்து
இந்த கம்பத்தில்
உன்னுடைய
தலையைப் பொருத்தி
வைத்திருக்கிறேன் “

“குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும் இடம்
முழுவதையும்
இப்போது உன்னுடைய
கண்ணால் பார்த்துக்
கொண்டிருக்கிறாய்”

“குருஷேத்திரப் போர்
நடக்கும் போது நீ
அனைத்தையும்
பார்க்கப்
போகிறாய்”

“குருஷேத்திரப்போர்
முழுவதையும்
பார்க்கக்கூடிய
பாக்கியம் உனக்குக்
கிடைத்திருக்கிறது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////