May 06, 2020

மகாபாரதப் போரை நிறுத்த வழி


“பாராளக் கன்னன்இகல்
பார்த்தனையும்
கொன்றுஅணங்கின்
காரார் குழல்களைந்து
காலில் தளைபூட்டி
நேராகக் கைப்பிடித்து
நின்னையும்யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம்
மாபார தம்என்றான்”

---------மகாபாரதம்
---------வில்லிபுத்தூரார்

பாடலுக்கு கதை
மூலம் விளக்கம்

(கிருஷ்ணன்
சகாதேவனிடம்
பேசத் தொடங்கினார்)

கிருஷ்ணன் :
“சகாதேவா!
குருஷேத்திரப் போரை
நிறுத்துவதற்கு ஏதேனும்
வழி இருக்கிறதா?”

சகாதேவன் :
“இருக்கிறது”

கிருஷ்ணன் :
“என்ன வழி?”

சகாதேவன் :
“நான்கு வழிகள்
இருக்கிறது
அந்த வழிகளை
செயல்படுத்தினால்
குருஷேத்திரப் போரை
நடக்க விடாமல் தடுத்து
நிறுத்தி விடலாம்”

கிருஷ்ணன் :
“என்ன வழிகள்
அவை “

சகாதேவன் :
ஒன்று :
“கர்ணனை மன்னனாக்கி
நாடாளச் செய்ய வேண்டும் “

இரண்டு :
“அர்ஜுனனைக் கொன்று
விட வேண்டும் “

மூன்று :
“திரௌபதியின் தலையை
மொட்டை அடித்து
விட வேண்டும் “

நான்கு :
“கிருஷ்ணனாகிய உங்களை
கயிற்றால் கட்டி ஒரே
இடத்தில் அசைய
விடாமல் இருக்கும்படி
செய்து விட வேண்டும்”

“இந்த நான்கும் நடந்தால்
குருஷேத்திரப் போரை
நடக்க விடாமல்
தடுத்து விடலாம்”

கிருஷ்ணன் :
“சகாதேவா! நீ சொல்லும்
இந்த நான்கு
வழிகளையும் செய்வது
என்பது இயலாத காரியம் “

சகாதேவன் :
“இல்லை பரந்தாமா !
முதல் மூன்று வழிகளை
செய்வது என்பது
வேண்டுமானாலும்
இயலாத காரியமாக
இருக்கலாம் - ஆனால்
நான்காவது வழியை
செய்யலாம்  

கிருஷ்ணன் :
“என்னை கயிற்றால்
கட்டும் செயலைச்
செய்ய முடியுமா?”

சகாதேவன் :
“செய்ய முடியும்
கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“எங்கே என்னைக்
கட்டு பார்க்கலாம்”

(என்று சொல்லிக் கொண்டே
கிருஷ்ணன் பதினாறாயிரம்
உருவெடுத்து இந்த உலகம்
முழுவதும் பரவி நின்று
காட்சி அளித்தார் )

கிருஷ்ணன் :
“இப்போது என்னை
கயிற்றால் கட்டு
பார்க்கலாம் “

சகாதேவன் :
“சகாதேவன் தியானம்
பண்ணுகிறவன் ;
சகாதேவன் சிரித்துக்
கொண்டே அமர்ந்தான் ;
தனியாக உட்கார்ந்து
கண்களை மூடி
கிருஷ்ணனை தன்னுடைய
உள்ளமாகிய கோயிலில்
வைத்து தியானித்தான் ;
சகாதேவனுடைய உள்ளமாகிய
கோயிலில் கிருஷ்ணன்
வந்து அமர்ந்தார் ;
சாகாதேவனுடைய
உள்ளமாகிய கோயிலில்
கிருஷ்ணன் வந்து
அமர்ந்த பிறகு
சகாதேவன் கிருஷ்ணனை
பக்தி என்ற கயிற்றால்
கட்டினான் ;
கிருஷ்ணன் சகாதேவனுடைய
உள்ளமாகிய கோயிலில்
மாட்டிக் கொண்டார் ;
அவரால் எங்கும்
அசைய முடியவில்லை ; “

கிருஷ்ணன் :
“சகாதேவா! நான் ஒப்புக்
கொள்கிறேன் - என்னை
பக்தி என்ற கயிற்றால்
கட்ட முடியும் என்பதை
ஒப்புக் கொள்கிறேன்  

(என்னை விடுவித்து விடு
என்று கிருஷ்ணன் கேட்டுக்
கொண்டதற்கிணங்க
சாகாதேவன் கிருஷ்ணனை
விடுவித்தான்)

கிருஷ்ணன் :
“பக்தி என்ற கயிற்றால்
என்னை கட்ட முடியும்
என்பதை உன்னுடைய
செயல் மூலம் நிரூபிக்க
முடிந்த உன்னால் மற்ற
மூன்று வழிகளையும்
செயல் படுத்துவதற்கு
வழி ஏதேனும் இருந்தால்
உன்னால் சொல்ல
முடியுமா ? “

சகாதேவன் :  
“முதல் மூன்று வழிகளை
செயல் படுத்துவதற்கு
எந்த வழியும் கிடையாது
பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“அப்படி என்றால் “

சகாதேவன் :  
“குருஷேத்திரப் போர்
கண்டிப்பாக நடந்தே
ஆக வேண்டும்
அந்த போரை
யாராலும் தடுத்து நிறுத்த
முடியாது பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
நீ சோதிடத்தில்
சிறந்தவன் என்று தான்
இந்த உலகம் உன்னை
நினைத்துக் கொண்டிருக்கிறது
நீ பக்தியிலும் உயர்ந்தவன்
என்பதை உன்னுடைய
இந்த செயல் நிரூபித்து
விட்டது - உன்னுடைய
புகழ் என்றும் நிலைத்து
இருக்கும் சகாதேவா ! “

(என்று வாழ்த்தினார்
கிருஷ்ணன் ;
சகாதேவன் சொன்னது
போல் குருஷேத்திரப்
போரை யாராலும்
தடுத்து நிறுத்த
முடியவில்லை
18 நாள் குருஷேத்திரப்
போர் நடந்து முடிந்தது)

-------என்றும் அன்புடன்
-------K.பாலகங்காதரன்
-------06-05-2020
//////////////////////////////////////////

May 05, 2020

நன்றி தெரிவிக்கும் மடல்


அன்பிற்கினியவர்களே !

“அரவான் களப்பலி”
கதைக்கு
திரைக்கதை வசனம்
எழுதி முடிப்பதற்கு
ஆரம்பம் முதல்
முடிவு வரை எனக்கு
உதவியாக பலபேர்
இருந்திருக்கிறார்கள்
அவர்களுடைய உதவி
இல்லை என்றால்
என்னால்
அரவான் களப்பலி
கதைக்கு திரைக்கதை
வசனம் எழுதி முடித்து
இருக்க முடியாது

“அரவான் களப்பலி”
கதையை எழுத
வேண்டும் என்று
முதலில் என்னைக்
கேட்டுக் கொண்டதோடு
மட்டுமில்லாமல்
எனக்கு அவ்வப்போது
ஏற்பட்டுக் கொண்டிருந்த
ஐயங்களைத் தீர்ப்பதற்காக
திருநங்கை சமுதாயத்தைச்
சேர்ந்தவர்களிடமும்
மற்றும் அவருடைய
நண்பர்களிடமும்
விவரங்களைப் பெற்று
எனக்கு ஏற்பட்ட ஐயத்தை
நீக்கி கதை எழுதுவதற்கு
உதவியாக இருந்தவர்
என்னுடைய தோழி
திருநங்கை
பாவனா அவர்கள்
(1)
பாவனா.P
திருநங்கை
Diploma in
Acupuncture Healer ;
Diploma in Fashion
Tech (Tailor) ;
Actor in Short Film by
Trans empowered movie; 
Community Development
Officer,
Born2win
Chennai

அரவான் கதைக்கு
முதன் முதலில்
திரைக்கதை வசனம்
எழுதியது நான் தான்
என்ற காரணத்தினால்
இணையதளத்தில்
விவரங்களோ
எந்த வித குறிப்புகளும்
அவ்வளவாக
இல்லாத நிலையில்
மகாபாரதம் சம்பந்தப்பட்ட
புத்தகங்களை
வாங்குவதற்கும்
நூலகத்தில் சென்று
குறிப்புகள் எடுப்பதற்கும்
அவ்வப்போது எனக்கு
ஏற்பட்ட சந்தேகங்களுக்கு
விடைகளை கண்டுபிடித்து
எனக்கு உதவியவர்கள்
(1)
என்.கார்த்தி
VISA EXECUTIVE
Pricol Travel Private
Limited
(2)
கே.சந்தோஸ குமார்
மனிதவள உதவியாளர்
யோர்க் ரெக்ரூட்மன்ட்
ஹெல்த் கேர் & டெக்னிகல்
சென்னை
(3)
ரா.கிரிஷ் கிருஷ்ணன்
எழுத்தாளர், இயக்குநர்
இசை அமைப்பாளர்
சென்னை

இரவு 02.00
மணியானாலும்
எந்த நேரமானாலும்
நான் போன் பேசி
எனக்கு தேவைப்படும்
விவரங்களைச் சேகரித்து
கொடுக்க வேண்டும்
என்று கேட்டாலும்
சில தகவல்களுக்கு
விளக்கங்கள் கேட்டாலும்
எந்தவித மறுப்பும்
சொல்லாமல் சேகரித்து
எனக்கு போன்
மூலமாகவும்
WHATS APP மூலமாகவும்
விவரங்களையும்
தகவல்களையும்
அளித்தது மட்டுமல்லாமல்
வீடியோக்களை
கதைக்கு ஏற்றபடி
தயார் செய்து கொடுத்தது
(1)
இரா.மு.வெங்கட சுப்பிரமணி
நிர்வாக இயக்குநர்
பெஸ்ட் காயில் ஸ்பிரிங்ஸ்
ராணிப்பேட்டை
(2)
அ.செய்யது ரியாஸ்
BUSINESS ANALYST
(3)
என்.கார்த்தி
VISA EXECUTIVE
Pricol Travel Private
Limited
வீடியோவிற்கு
இசையமைத்தது
(4)
ரா.கிரிஷ் கிருஷ்ணன்
எழுத்தாளர், இயக்குநர்
இசை அமைப்பாளர்
சென்னை

அரவான் களப்பலி
கதையை புத்தகமாகக்
கொண்டு வருவதற்காக
அனுதினமும் நான்
எழுதிய பதிவுகளை
தொகுத்தவர்
(1)
அ.செய்யது ரியாஸ்
BUSINESS ANALYST

அரவான் களப்பலி
கதையை
அரவான் களப்பலி
என்ற தலைப்பில்
புத்தகமாக கொண்டு
வருவதற்காக
ஆலோசனைகளையும்
உதவிகளையும் செய்து
கொண்டிருந்தவர்கள்
(1)
திருஞானதுரை
பயணச்சீட்டு ஆய்வாளர்
தென்னக இரயில்வே
(2)
சோ.கல்யாணசுந்தரம்
வருமானவரி அதிகாரி
சென்னை
(3)
கி.வேதாச்சலம்
மென்பொருள்
பொறியாளர்
எல்.ஜி

நான் எழுதிய
ஒவ்வொரு பதிவுகளையும்
படித்து கருத்து சொல்லி
தவறுகளை சுட்டிக்காட்டி
பிழைகளை திருத்தி
எனக்கு உதவியாக
இருந்தவர் என்னுடைய
மனைவி
திருமதி. பிரதீபா
அவர்கள்

நான் தொடர்ந்து
எழுதுவதற்கு
தன்னம்பிக்கையை
அளித்து
தூண்டுகோலாக என்றும்
இருந்து கொண்டிருப்பவர்
என்னுடைய அம்மா
திருமதி
சொர்ணம் காசிநாதன்
அவர்கள்

அரவான் களப்பலி
கதைக்கு திரைக்கதை
வசனம் எழுதி முடிக்கக்
காரணமாக இருந்த
இவர்கள் அனைவருக்கும்
என்னுடைய நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

அரவான் களப்பலி
கதையை புத்தகமாக
அரவான் களப்பலி
என்ற தலைப்பில்
கொண்டு வருவதற்கான
அனைத்து முயற்சிகளையும்
என்னுடைய சீடர்கள்
செய்து வருகிறார்கள்

இந்த செய்தியைத்
தெரிந்து கொண்ட
என் மேல் அன்புள்ளம்
கொண்டவர்கள்
தங்களால் இயன்ற
பொருளுதவியும்
உடல் உழைப்பும்
செய்து வருகிறார்கள்

இறைவனின்
அருளுடனும்
சித்தர்களின்
வழிகாட்டுதலுடனும்
பெரியோர்களின்
ஆசியுடனும்
உறவினர்களின்
ஆதரவுடனும்
அன்புள்ளம்
கொண்டவர்களின்
துணையுடனும்
சீடர்களின்
முயற்சியுடனும்
விழா நடத்தி
அரவான் களப்பலி
என்ற புத்தகத்தை
வெளியிட இருக்கிறேன்
என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

நன்றி

-------என்றும் அள்புடன்
-------K.பாலகங்காதரன்

-------05-05-2020
/////////////////////////////////////////




May 03, 2020

பரம்பொருள்-பதிவு-228


               ஜபம்-பதிவு-476
             (பரம்பொருள்-228)

“கம்பத்தில்
பொருத்தி
வைக்கப்பட்ட
அரவானுடைய
தலையானது
கம்பத்தில்
இருந்து
மேல் எழும்பி
விஸ்வரூப தரிசனம்
எடுத்து நின்று
கொண்டிருந்த
மஹாவிஷ்ணுவின்
இதயத்தில்
கலந்து
ஒன்றாகி
விட்டது”

“அரவான்
இறைவனுடன்
ஒன்றாகக்
கலந்து
இறைவனாகவே
மாறி விட்டான்”

“ஆமாம் அரவான்
மோட்சம்
அடைந்து
விட்டான்”

“தன்னலம்
கருதாது
மக்களின்
நலத்தை
மட்டுமே
கருத்தில் கொண்டு
தர்மத்தை நிலை
நாட்டுவதற்காக
தன்னையே
களப்பலியாகக்
கொடுத்த
அரவானின்
மாபெரும்
சகாப்தம்
அரவான்
மோட்சம்
அடைந்தவுடன்
முடிந்து விட்டது
என்று சொல்ல
முடியாது”

“ஏனென்றால்
இந்த உலகத்தில்
உள்ள
கோடிக்கணக்கான
திருநங்கைகளின்
மனதில்
இன்றும்
தெய்வமாக
வாழ்ந்து
கொண்டு தான்
இருக்கிறார்
அரவான்”

ஒவ்வொரு
வருடமும்
அரவானை
கணவனாக
நினைத்து
தாலி
கட்டிக் கொண்டு
அரவான்
களப்பலியான
பிறகு
தங்களுடைய
பொட்டை
அழித்து
பூவை
எறிந்து
வளையல்களை
உடைத்து
தாலியை
அறுத்து
அழுது
கொண்டிருப்பவர்கள்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“தன்னுடைய
கணவானான
அரவான்
களப்பலியானதற்காக
வெள்ளைப் புடவை
அணிந்து
கொண்டு
துக்கம்
கொள்பவர்கள்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“அரவானுக்காக
அழுது
கொண்டிருப்பவர்களும்
அரவானை
தெய்வமாக
நினைத்து
வணங்கிக்
கொண்டிருப்பவர்களும்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“இந்த உலகம்
இருக்கும் வரை
இருந்து
கொண்டு தான்
இருக்கப்
போகிறார்கள்”

“””பஞ்ச பாண்டவர்கள்
குருஷேத்திரப் போரில்
வெற்றி
பெற்றதற்கு
முழுக்காரணமே
அரவான்
என்பதை
உணர்ந்து
கொள்வோம்”

“உலூபி என்ற
தெய்வத்தாய்
பெற்றெடுத்த
தெய்வமகனான
அரவானின்
பாதம் தொட்டு
வணங்குவோம்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////