August 28, 2020

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-6

 

கண்ணதாசன்-பதிவு-6

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையை

ஆன்மீக உலகம்

நீண்ட காலமாகவே

பயன்படுத்திக்

கொண்டு வருகிறது

என்பதையும்

எட்டிரண்டு என்ற

வார்த்தை

ஆன்மீக உலகத்தில்

உயர்வாக

கருதப்படும

ஒரு வார்த்தை

என்பதையும்

எட்டிரண்டு

என்ற வார்த்தை

பல்வேறு

ஆன்மீக ரகசியங்கள்

அனைத்தையும்

தன்னுள் கொண்ட

வார்த்தை

என்பதையும்

ஆன்மீக உலகத்தில்

பிரவேசித்து

பயிற்சி செய்பவர்கள்

அனைவருமே

கண்டிப்பாக தெரிந்து

வைத்திருக்க

வேண்டியது

அவசியமானதாகும்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கு

அர்த்தம் தெரிந்தாலும்

அர்த்தம்

தெரியாவிட்டாலும்

எட்டிரண்டு என்ற

வார்த்தை

ஆன்மீக உலகத்தில்

இருக்கிறது என்பதை

ஆன்மீக உலகத்தில்

உள்ளவர்கள்

தெரிந்து கொள்ள

வேண்டியது

இன்றியமையாத ஒன்றாகும்.

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இறைவனாக

மாறுவதற்கான

வழியைத்

தெரிந்து கொள்ளலாம்

நாம் இறைவனாகவே

மாற வேண்டும்

என்றால்

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கான

அர்த்தமும் தெரிந்து

வைத்திருக்க வேண்டும்

 

சித்தர்களுடைய

பாடல்களை

எடுத்துக் கொண்டால்

அவர்கள் எட்டிரண்டு

என்ற வார்த்தையை

பாடலில்

எந்த இடத்தில்

எதற்காகப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

எந்த கருத்தை

மக்களிடம்

தெரிவிக்க வேண்டும்

என்பதற்காகப்

பயன் படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

எந்த கருத்தை

மக்களிடம் கொண்டு

சேர்க்க வேண்டும்

என்பதற்காகப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

உணர்ந்து கொண்டால்

மட்டுமே

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தத்தைத்

தெரிந்து கொள்ளலாம்,.

 

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கு

பலர் பல்வேறு

விதமாக

அர்த்தங்களைச்

சொல்லிச் சென்றாலும்

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தம் குரு சீடர்

மூலமாக பரம்பரை

பரம்பரையாக

குரு சீடர்

பரம்பரை மூலமாக

காலம் காலமாக

எட்,டிரண்டு என்ற

வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தமானது

பரிமாற்றம்

செய்யப்பட்டு

இன்றும் வந்து

கொண்டிருக்கிறது

என்பதை அனைவரும்

தெரிந்து

கொள்ள வேண்டும்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்ததை

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

எட்டிரண்டு

என்ற வார்த்தையில்

இரண்டு நிலைகள்

இருக்கின்றன

என்பதைத் தெரிந்து

கொள்ள வேண்டும்

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்காக

சொல்லப்படும்

அனைத்து அர்த்தங்களும்

இந்த இரண்டு

நிலைகளுக்குள் தான்

இருக்கும் என்பதைத்

தெரிந்து கொள்ள

வேண்டும்

 

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-5

 

கண்ணதாசன்-பதிவு-5

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

எட்டு என்ற

எண்ணை எடுத்துக்

கொள்வோம்

இந்த எட்டு

என்ற எழுத்துடன்

இரண்டு என்ற

எண்ணைச்

சேர்த்துத் தான்

எட்டிரண்டு என்று

சொல்கிறார்கள்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தை

ஆன்மீக உலகத்தால்

நீண்ட நெடுங்காலமாக

பயன்படுத்தப்பட்டு

வரும் மிகவும்

புகழ் பெற்ற வார்த்தை

ஆன்மீக உலகத்தில்

உள்ளவர்கள்

அனைருமே

தெரிந்து வைத்திருக்க

வேண்டிய வார்த்தை

 

காலத்தால்

அழியாத வார்த்தை

யாராலும் அழிக்க

முடியாத வார்த்தை

பரம்பொருள்

ரகசியங்கள்

அனைத்தையும்

தன்னுள்

கொண்ட வார்த்தை

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இந்த உலகத்தின்

ஆரம்பம் எது

முடிவு எது

என்பதைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

பரம்பொருள்

ரகசியத்தைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இருப்பு நிலை

எப்படி

இயக்க நிலையாக

மாறுகிறது

என்பதையும்

இயக்கநிலை எப்படி

மீண்டும்

இருப்பு நிலையாக

மாற்றமடைகிறது

என்பதையும்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

ஜீவாத்மாவுக்கும்

பரமாத்மாவுக்கும்

இடையே உள்ள

வேறுபாட்டைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

அறிவு உயிர் மனம்

என்ற மூன்றுக்கும்

உள்ள தொடர்பைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

ஞானம் சமாதி முக்தி

என்ற மூன்றுக்குள்

உள்ள வேறுபாட்டைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

நாம் எங்கிருந்து

வந்தோம்

எந்த செயலை

முடிக்க வந்தோம்

எங்கு போகப்

போகிறோம் என்பதைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இறைவனாகவே

மாறுவதற்கான

வழிகளைத்

தெரிந்து கொண்டு

இறைவனாகவே மாறலாம்

 

முக்தி என்ற

நிலையை

அடைய வேண்டும்

என்றால்

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கான

அர்த்தம் கண்டிப்பாக

தெரிந்து பயன்படுத்தித்

தான் ஆக வேண்டும்

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

 

 

 

 

 

 

கண்ணதாசன்-பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-4

 

கண்ணதாசன்-பதிவு-4

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

பத்தாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையானது

தாயின் கருப்பையை

விட்டு வெளியே

வந்து குழந்தையானது

பிறக்கிறது

இதைக் குறிப்பது

தான் 10-பத்து

என்ற எழுத்து

 

10 - என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால் 10-பத்து

என்ற எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

1 - என்ற

எழுத்தானது

தாயைக் குறிக்கிறது

0 – பூஜ்ஜியம் என்ற

எழுத்தானது

குழந்தையைக் குறிக்கிறது

 

1-ஒன்று என்ற

எண்ணைக் கொண்ட

தாயின் கருப்பையில்

0-பூஜ்ஜியம் என்ற

எண்ணைக் கொண்ட

குழந்தையானது

உருவாகி வளர்ந்து

முழுமையடைந்து

பிறந்தவுடன்

தாயிலிருந்து தனியாக

வேறுபட்டு நிற்கிறது

 

10 - என்ற

எழுத்தை நன்றாக

உற்று நோக்கினால்

பத்து என்ற எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

1-ஒன்று என்ற

எழுத்தும் 0-பூஜ்ஜியம்

என்ற எழுத்தும்

தனித்தனியாக

இருப்பதைக் காணலாம்

 

தாயின் கருப்பையில்

உருவாகி வளர்ந்து

முழுமையடைந்த

குழந்தையானது

பிறந்தவுடன் தாயை

விட்டு பிரிந்து தாயும்

குழந்தையும்

தனித் தனியாக

வேறுபட்டு நிற்கிறது

என்பதைக் குறிப்பது

தான் 10-பத்து

என்ற எழுத்து

 

ஒன்று முதல்

பத்து வரை உள்ள

எழுத்துக்கள்

அனைத்தும்

தாயின் கருப்பையில்

உருவான

குழந்தையின்

உடலில்

ஒவ்வொரு மாதமும்

வேறுபட்ட உறுப்புகள்

உருவாகி

குழந்தையானது

முழுமையான

வளர்ச்சி அடைந்து

தாயை விட்டு

பிரிந்து தனியாக

சென்றதைக் குறிக்கிறது

 

ஒன்று முதல்

பத்து வரை உள்ள

இந்த பத்து எண்களில்

பூஜ்ஜியம் மற்றும்

எட்டு என்ற இரண்டு

எண்களைத் தவிர

மற்ற அனைத்து

எண்களுக்கும்

ஆரம்பம்

என்பது உண்டு

முடிவு

என்பது உண்டு

அதாவது

அந்த எண்கள்

எங்கே ஆரம்பித்து

எழுதப்படுகிறது

எங்கே எழுதி

முடிக்கப்படுகிறது

என்பது தெரியும்

 

ஆனால் பூஜ்ஜியம்

என்ற எண்ணிற்கும்

எட்டு என்ற

எண்ணிற்கும்

ஆரம்பம் என்பதும்

கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதாவது

இந்த இரண்டு

எண்களும்

எங்கே ஆரம்பித்து

எழுதப்படுகிறது

என்பதும்

எங்கே எழுதி

முடிக்கப் பெறுகிறது

என்பதும் தெரியாது

கண்டு பிடிக்கவும்

முடியாது

 

கடவுளுக்கு

எப்படி

ஆரம்பம் என்பதும்

முடிவு என்பதும்

கிடையாதோ

அவ்வாறே

பூஜ்ஜியம் என்ற

எண்ணிற்கும்

எட்டு என்ற

எண்ணிற்கும்

ஆரம்பம் என்பதும்

முடிவு என்பதும்

கிடையாது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

 

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-3

 

கண்ணதாசன்-பதிவு-3

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

ஆறாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் நகங்கள்

உருவாகிறது

இதைக் குறிப்பது

தான் 6-ஆறு

என்ற எழுத்து

 

6 -என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

6-ஆறு என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

கீழே உள்ள

வட்டமானது

ஆறாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் நகங்கள்

உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

வட்டத்திலிருந்து

மேல் நோக்கி

நீட்டிக் கொண்டிருக்கும்

கோடானது

விரல்களில் தோன்றும்

நகமானது

விரல்களை விட்டு

வெளியே வருவதற்கு

தயாராகிக்

கொண்டிருக்கிறது

என்பதைக் குறிக்கிறது

 

ஏழாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் தலை மயிர்

மற்றும் எலும்பு

ஆகியவை உருவாகிறது

இதைக் குறிப்பது

தான் 7-ஏழு

என்ற எழுத்து

 

7 - என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

7-ஏழு என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

மேலே உள்ள

கிடைமட்ட கோடானது

ஏழாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

தலையில் மயிர்

உருவாகி

வளர்வதைக் குறிக்கிறது

 

கீழே உள்ள

நீளமான கோடானது

ஏழாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் எலும்புகள்

உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

எட்டாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் மேல் பகுதி

மற்றும் கீழ் பகுதி

ஆகிய இரண்டு

பகுதிகளும்

முழுவதுமாக

உருவாகிறது

இதைக் குறிப்பது

தான் 8-எட்டு

என்ற எழுத்து

 

8 - என்ற

எழுத்தை நன்றாக

உற்று நோக்கினால்

8-எட்டு என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

மேலே உள்ள

வட்டம் எட்டாவது

மாதத்தில் தாயின்

கருப்பையில் உள்ள

குழந்தையின் உடலில்

மேல் பகுதி

முழுவதும்

உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

கீழே உள்ள வட்டம்

எட்டாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் கீழ் பகுதி

முழுவதும் உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

ஒன்பதாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையானது

தாயின் கருப்பையை

விட்டு வெளியே

வருவதற்கு

தயாராகிறது

இதைக் குறிப்பது

தான் 9-ஒன்பது

என்ற எழுத்து

 

9 - என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

ஒன்பது என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

மேலே உள்ள வட்டம்

ஒன்பதாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலானது

முழுமையான

வளர்ச்சி

அடைந்ததைக்

குறிக்கிறது

கீழே உள்ள

வளைந்த கோடானது

ஒன்பதாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலானது தாயின்

உடலை விட்டு

வெளியே வருவதற்கு

தயாராக இருக்கிறது

என்பதைக் குறிக்கிறது

 

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////