November 23, 2020

அறிய வேண்டியவை-172

 

ஜபம்-பதிவு-664

(அறிய வேண்டியவை-172)

 

விதுரர் :

“காந்தார அரசே

தங்கள் கைகளில்

வைத்திருக்கும்

பகடைகளை

என்னிடம்

கொஞ்சம்

கொடுங்கள்

நான் பார்க்க

வேண்டும்”

 

(என்று விதுரர்

கேட்டவுடன் சகுனி

தன் கையில் இருந்த

பகடைகளை

எந்தவிதமான

மறுப்பும்

சொல்லாமல்

விதுரரின் கைகளில்

கொடுத்தார்

 

பகடைகளை பெற்றுக்

கொண்ட விதுரர்

பகடைகளை

தன்னுடைய கைகளில்

வைத்துக் கொண்டு

நன்றாகப் பார்த்தார்.

 

பிறகு சகுனியைப்

பார்த்து பேசத்

தொடங்கினார்)

 

விதுரர் :

“நீங்கள் விளையாடும்

பகடை விளையாட்டில்

நீங்கள் வெற்றி

பெற வேண்டும்

என்பதற்காக

சூழ்ச்சியை

கையாள்கிறீர்கள்

என்று பல பேர்கள்

சொல்வதை நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன் “

 

“நீங்கள் பகடை

விளையாட்டில்

வெற்றி பெற

வேண்டும்

என்பதற்காக

எத்தகைய

தந்திரத்தையும்

கையாள்வீர்கள்

என்று நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன்”

 

“உங்களுடைய

பகடைகள்

உங்கள் சொல்படி

தான் நடக்கும் என்று

கேள்விப்பட்டு

இருக்கிறேன்”

 

“நீங்கள் பகடையை

உருட்டினாலும்

உங்களை எதிர்த்து

விளையாடும் எதிரி

பகடையை

உருட்டினாலும்

நீங்கள் என்ன

எண்னை

நினைக்கிறீர்களோ

அந்த எண் தான்

உங்கள் பகடையில்

விழும் என்று

கேள்விப் பட்டு

இருக்கிறேன்”

 

“சூழ்ச்சி நிறைந்த

உங்களுடைய

பகடைகளை

நீங்கள்

பயன்படுத்தக்கூடாது “

 

(என்று சொல்லிக்

கொண்டே சகுனி

தன்னிடம் கொடுத்த

பகடைகளை விதுரர்

சுக்கல் சுக்கலாக

உடைத்து விட்டு

அதன் துகள்களை

தரையில் போட்டார்,

 

விதுரரின் இந்த

செயலைக் கண்டு

அந்த அவையில்

உள்ளவர்கள்

அனைவரும்

அதிர்ச்சியால்

வாயடைத்துக்

கொண்டு

இருந்தார்கள் .

 

ஆனால் அதிக

அளவில் அதிர்ச்சி

அடைந்தது

துரியோதனனும்

கர்ணனும் தான்

 

ஏனென்றால் சகுனி

நேற்று தங்களிடம்

என்ன பேசினாரோ

என்ன நடக்கும்

என்று சொன்னாரோ

அது தான் நடந்து

கொண்டிருந்தது.

 

விதுரர் என்ன

பேசுவார்

விதுரர் என்ன

செய்வார் என்று

சகுனி சொன்னது

அப்படியே தங்களுடைய

கண்கள் முன்னால்

நடப்பதைக் கண்டு

துரியோதனனும்,

கர்ணனும் அதிர்ச்சியில்

நின்று கொண்டிருந்தனர்.

 

சகுனியின் அறிவுத்

திறனைக் கண்டு

கர்ணன் மலைத்து

நின்று விட்டான்

 

எதிரி எத்தகைய

வார்த்தைகளை

பேசுவான்

எதிரி எத்தகைய

செயல்களைச்

செய்வான்

என்பதை

அறிந்த பிறகே

எதிரியை எதிர்த்து

செயலில்

இறங்க வேண்டும்.

அப்படி செய்தால்

தான் நாம்

செய்யும் செயலில்

வெற்றி பெற

முடியும்

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-171

 

ஜபம்-பதிவு-663

(அறிய வேண்டியவை-171)

 

(அஸ்தினாபுரம்

அவையில்

திருதராஷ்டிரன்

தலைமையில்

பாண்டவர்கள்

கௌரவர்கள்

பீஷ்மர், துரோணர்,

விதுரர், கிருபர்,

சகுனி உட்பட

பலர் அமர்ந்து

இருந்தார்கள். 

 

அவை ஆரம்பித்த

பின்னர் பகடை

விளையாட்டை

தொடங்குவதற்கு

முன்னால் பகடை

விளையாட்டை

எப்படி நடத்துவது

எந்த விதத்தில்

நடத்துவது,

எந்த முறையில்

நடத்துவது,

எந்த விதிகளைப்

பின்பற்றி நடத்துவது,

பகடை விளையாட்டை

நடத்துவதற்கு

ஏற்கனவே இருக்கும்

விதிமுறைகள்

போதுமானவையா

அல்லது புதியதாக

ஏதேனும்

விதிமுறைகள்

உருவாக்கப்பட

வேண்டுமா என்ற

முறையில்

பல்வேறு கேள்விகள்

அவையில் எழுப்பப்பட்டு

அந்த கேள்விகளின்

மேல் பல்வேறு

கருத்துக்கள், பேச்சுக்கள்,

கேள்விகள், சந்தேகங்கள்

என்று அவையில்

உள்ளவர்களால்

பல்வேறு

நிலைகளில்

விவாதங்கள்

நடத்தப்பட்டு

விவாதங்களின் முடிவில் 

பகடை விளையாட்டை

நடத்துவதற்குத்

தேவையான

விதிமுறைகளை

அனைவரும்

ஒன்று சேர்ந்து

உருவாக்கி விட்டு,

உருவாக்கப்பட்ட

விதிகளுக்குள் தான்

பகடை விளையாட்டை

விளையாட வேண்டும்,

உருவாக்கப்பட்ட

விதிகளை மீறி

பகடை விளையாட்டை

விளையாடக்கூடாது

அவ்வாறு நடத்தினால்

பகடை

விளையாட்டானது

பாதியில் நிறுத்தப்படும்

என்றும் பகடை

விளையாட்டானது

கண்ணியத்துடன் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

கட்டுப்பாட்டுடன் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

வரையறுக்கப்பட்ட

விதிகளுக்குள் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

அறிவுரை வழங்கிவிட்டு

அதனை அவையில்

உள்ள அனைவராலும்

ஏற்றுக் கொள்ளப்பட்டு

பகடை விளையாட்டை

தொடங்கலாம் என்று

அனுமதி அளிக்கப்பட்டு

விட்டது.”

 

துரியோதனனிடமும்,

கர்ணனிடமும்

சகுனி என்ன

பேசினாரோ

அந்த விஷயங்கள்

அனைத்தும்  

அப்படியே

நடைபெற்றுக்

கொண்டிருந்தது

 

சகுனி பகடையை

கைகளில் எடுத்து

உருட்டத் தொடங்கும்

போது நிறுத்துங்கள்

என்று ஒரு சத்தம்

அந்த அவையை

கிழித்துக் கொண்டு

அந்த அறை முழுவதும்

எதிரொலித்தது.

 

அவையில் உள்ள

அனைவரும் சத்தம்

வந்த திசையையே

நோக்கி பார்த்தனர்

சத்தத்தை

எழுப்பியது யார்

பகடை விளையாட்டை

நிறுத்தச் சொன்னது

யார் என்று அறிவதற்காக

அனைவரும் சத்தம்

வந்த திசையை

நோக்கி தங்கள்

பார்வையைத்

திருப்பினர்.

 

நிறுத்துங்கள் என்று

சொல்லிக் கொண்டே

விதுரர் தன்னுடைய

இருக்கையில்

இருந்து எழுந்து

சகுனியிடம் வந்தார்

 

சகுனி இருக்கும்

இடத்தை நோக்கி

நடந்து வந்தார்.

 

சகுனியின் எதிரே

வந்து நின்றார்

 

சகுனியிடம் பேசத்

தொடங்கினார்.

 

விதுரர் என்ன பேசப்

போகிறார் என்று

அந்த அவையில்

உள்ள அனைவரும்

கவனித்துக்

கொண்டிருந்தனர்

 

துரியோதனனும்,

கர்ணனும் நடக்கும்

நிகழ்வுகள் அனைத்தும்

சகுனி சொன்னது

போலவே நடந்து

கொண்டு இருப்பதை

நேரில் தங்களுடைய

கண்களால் கண்டு

ஆச்சரியத்தால்

நின்று கொண்டிருந்தனர்

 

விதுரர் சகுனியிடம்

பேசத் தொடங்கினார்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-170

 

ஜபம்-பதிவு-662

(அறிய வேண்டியவை-170)

 

துரியோதனன் :

"நண்பா எனக்காக

நாளை மட்டும்

மாமா அவர்கள்

சொல்படி

கேட்டு நட நாளை

நடக்கும் பகடை

விளையாட்டின் போது

அமைதியாக இரு

அது போதும்"

 

கர்ணன் :

"நண்பா

என்னுடைய உயிர்

உனக்காகத் தான்

இருக்கிறது

உனக்காக

என்னால் என்ன

செய்ய முடியுமோ

அதை கண்டிப்பாகச்

செய்வேன்

நாளை

நடக்கப்போகும்

பகடை விளையாட்டில்

நான் உனக்கு

ஆதரவாக

இருப்பேன் என்று

உறுதியளிக்கிறேன் "

 

துரியோதனன் :

"எனக்கு அது

போதும் நண்பா"

 

"அடுத்து என்ன

செய்ய வேண்டும்

மாமா அவர்களே!"

 

சகுனி :

"விடியலுக்காக

காத்திரு என்

அன்பு மருமகனே!"

 

"நாளைய விடியல்

பல பேருடைய

வாழ்க்கையையே

மாற்றப் போகிறது"

 

"சரித்திரத்தின்

முக்கியமான

நிகழ்வுகள்

அனைத்தும்

நாளைய பகடை

விளையாட்டின் போது

நடக்கவிருக்கிறது"

 

"சரித்திரம்

இதுவரை கண்டிராத

நிகழ்ச்சிகள் அனைத்தும்

நாளைய பகடை

விளையாட்டின் போது

நடத்தப்படவிருக்கிறது"

 

"அஸ்தினாபுரத்தின்

வருங்காலம்

என்ன என்பது

நாளைய பகடை

விளையாட்டின் போது

தீர்மானிக்கப்

படவிருக்கிறது"

 

"கெளரவர்களுக்கும்

பாண்டவர்களுக்கும்

நாளை போர்

என்ற ஒன்று

நடைபெற்றால்

அந்த போரில்

பாண்டவர்கள்

பக்கம் நிற்கப்

போகிறவர்கள்

யார் என்பதையும்

கௌரவர்கள்

பக்கம் நிற்கப்

போகிறவர்கள்

யார் என்பதையும்

நாளைய பகடை

விளையாட்டின் போது

தீர்மானிக்கப்

படவிருக்கிறது"

 

"அதனால்

என் அன்பு

மருமகனே நாளைய

விடியலுக்காக

காத்திரு

நாளை

நடைபெறவிருக்கும்

பகடை

விளையாட்டிற்காக

காத்திரு!"

 

"நமக்கு நல்லவற்றை

செய்யப்போகும்

பகடை

விளையாட்டிற்காக

காத்திரு!"

 

(என்று சகுனி

தன்னுடைய

பேச்சை முடித்தபின்

துரியோதனனும்

கர்ணனும்

சகுனியிடம்

விடை பெற்று

அந்த இடத்தை விட்டு

அகன்று சென்று

விடுகின்றனர்.

 

சகுனி தன்னுடைய

அறையில் தனியாக

அமர்ந்து கொண்டு

இருந்தார்

 

சரித்திரத்தையே

மாற்றியமைக்கப்

போகும் பகடை

விளையாட்டை தனி

ஒரு மனிதனாக

பகடை விளையாட்டை

சகுனி நடத்தப்

போவதை

 

இந்த சரித்திரம்

கண்டிராத அறிவுலக

மாமேதையாக சகுனி

திகழப் போவதை

 

இப்படியும் யோசிக்க

முடியுமா என்று

ஆச்சரியப்படத்தக்க

வகையில் யோசித்த

சகுனியின் அறிவு

செயல்படப் போவதை

 

சகுனியைப் போன்று

இந்த உலகத்தில்

ஒருவர் யோசிக்க

முடியுமா

யோசித்து செயல்பட

முடியுமா என்று

கற்பனை செய்து கூட

பார்க்க முடியாத

ஒரு நிலை

நடக்கப் போவதை

அறியாமல்

 

இரவானது விடிந்து

கொண்டிருந்தது

நிலவானது கொஞ்சம்

கொஞ்சமாக மறைந்து

கொண்டிருந்தது

கதிரவன் உதிக்கத்

தொடங்கி விட்டான்

விடியல் விடிந்து

விட்டது

 

பகடை

விளையாட்டானது

தொடங்குவதற்கான

வேளை

நெருங்கி விட்டது)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////