November 23, 2020

அறிய வேண்டியவை-172

 

ஜபம்-பதிவு-664

(அறிய வேண்டியவை-172)

 

விதுரர் :

“காந்தார அரசே

தங்கள் கைகளில்

வைத்திருக்கும்

பகடைகளை

என்னிடம்

கொஞ்சம்

கொடுங்கள்

நான் பார்க்க

வேண்டும்”

 

(என்று விதுரர்

கேட்டவுடன் சகுனி

தன் கையில் இருந்த

பகடைகளை

எந்தவிதமான

மறுப்பும்

சொல்லாமல்

விதுரரின் கைகளில்

கொடுத்தார்

 

பகடைகளை பெற்றுக்

கொண்ட விதுரர்

பகடைகளை

தன்னுடைய கைகளில்

வைத்துக் கொண்டு

நன்றாகப் பார்த்தார்.

 

பிறகு சகுனியைப்

பார்த்து பேசத்

தொடங்கினார்)

 

விதுரர் :

“நீங்கள் விளையாடும்

பகடை விளையாட்டில்

நீங்கள் வெற்றி

பெற வேண்டும்

என்பதற்காக

சூழ்ச்சியை

கையாள்கிறீர்கள்

என்று பல பேர்கள்

சொல்வதை நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன் “

 

“நீங்கள் பகடை

விளையாட்டில்

வெற்றி பெற

வேண்டும்

என்பதற்காக

எத்தகைய

தந்திரத்தையும்

கையாள்வீர்கள்

என்று நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன்”

 

“உங்களுடைய

பகடைகள்

உங்கள் சொல்படி

தான் நடக்கும் என்று

கேள்விப்பட்டு

இருக்கிறேன்”

 

“நீங்கள் பகடையை

உருட்டினாலும்

உங்களை எதிர்த்து

விளையாடும் எதிரி

பகடையை

உருட்டினாலும்

நீங்கள் என்ன

எண்னை

நினைக்கிறீர்களோ

அந்த எண் தான்

உங்கள் பகடையில்

விழும் என்று

கேள்விப் பட்டு

இருக்கிறேன்”

 

“சூழ்ச்சி நிறைந்த

உங்களுடைய

பகடைகளை

நீங்கள்

பயன்படுத்தக்கூடாது “

 

(என்று சொல்லிக்

கொண்டே சகுனி

தன்னிடம் கொடுத்த

பகடைகளை விதுரர்

சுக்கல் சுக்கலாக

உடைத்து விட்டு

அதன் துகள்களை

தரையில் போட்டார்,

 

விதுரரின் இந்த

செயலைக் கண்டு

அந்த அவையில்

உள்ளவர்கள்

அனைவரும்

அதிர்ச்சியால்

வாயடைத்துக்

கொண்டு

இருந்தார்கள் .

 

ஆனால் அதிக

அளவில் அதிர்ச்சி

அடைந்தது

துரியோதனனும்

கர்ணனும் தான்

 

ஏனென்றால் சகுனி

நேற்று தங்களிடம்

என்ன பேசினாரோ

என்ன நடக்கும்

என்று சொன்னாரோ

அது தான் நடந்து

கொண்டிருந்தது.

 

விதுரர் என்ன

பேசுவார்

விதுரர் என்ன

செய்வார் என்று

சகுனி சொன்னது

அப்படியே தங்களுடைய

கண்கள் முன்னால்

நடப்பதைக் கண்டு

துரியோதனனும்,

கர்ணனும் அதிர்ச்சியில்

நின்று கொண்டிருந்தனர்.

 

சகுனியின் அறிவுத்

திறனைக் கண்டு

கர்ணன் மலைத்து

நின்று விட்டான்

 

எதிரி எத்தகைய

வார்த்தைகளை

பேசுவான்

எதிரி எத்தகைய

செயல்களைச்

செய்வான்

என்பதை

அறிந்த பிறகே

எதிரியை எதிர்த்து

செயலில்

இறங்க வேண்டும்.

அப்படி செய்தால்

தான் நாம்

செய்யும் செயலில்

வெற்றி பெற

முடியும்

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment