May 12, 2022

பதிவு-2-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-2-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

அலெக்ஸாண்டர்

ஒரு நாட்டின்

மீது படையெடுத்து

வெற்றி

பெற்று விட்டால்

தோற்ற

நாட்டிற்குள்

அலெக்ஸாண்டரின்

படை வீரர்கள்

உள்ளே சென்றால்

நீர் நிலைகளில்

விஷத்தை

கலக்குவார்கள்

விளை நிலங்களை

அழிப்பார்கள்

வீடுகளைக்

கொளுத்துவார்கள்

பெண்களை

பலாத்காரம்

செய்வார்கள்

ஆண்களைக்

கொல்வார்கள்

செல்வங்களை

கொள்ளை

அடிப்பார்கள்

கொள்ளை அடித்த

செல்வங்களை

மூன்றாகப்

பிரித்து

ஒரு பங்கை

அலெக்ஸாண்டரின்

படை வீரர்கள்

எடுத்துக்

கொள்வார்கள்

ஒரு பங்கை

அலெக்ஸாண்டருக்கு

கொடுத்து

விடுவார்கள்

ஒரு பங்கை

அரசாங்கத்திற்கு

கொடுத்து

விடுவார்கள்

 

அலெக்ஸாண்டர்

போரிட்டு வெற்றி

பெற்ற நாடுகளில்

அனைத்திலும்

இதைத் தான்

செய்தார்

 

அலெக்ஸாண்டர்

நெப்போலியன்

ஜுலியஸ்சீசர்

அனைவருமே

இதைத்தான்

செய்தார்கள்

அவர்களைத் தான்

இந்த உலகம்

மாவீரர்கள் என்று

தலைமேல்

வைத்துக்

கொண்டாடுகிறது

 

ஆனால்

படைப்பாளியான

செங்கிஸ்கான்

விரும்பி

எந்த ஒரு

போரையும் செய்தது

கிடையாது

அனைத்து போர்களும்

அவன் மீது

திணிக்கப்பட்ட

போர்கள் தான்

அவன்

சமாதானத்தையே

நாடினான்

சமாதானத்திற்கு

வராமல் தன்னை

எதிர்த்தவர்கள்

தன்னையும்

தன்னுடைய நாட்டையும்

தன்னுடைய நாட்டு

மக்களையும்

இழிவு

செய்தவர்கள்

ஆகியோரை

எதிர்த்து தான்

போர் செய்தான்

தன்னுடைய

நாட்டுக்காகவும்

தன்னுடைய நாட்டு

மக்களுக்காகவும் தான்

போர் செய்தான்

 

செங்கிஸ்கான்

ஒரு நாட்டின்மீது

படையெடுத்து

வெற்றி பெற்று

விட்டால்

தோற்ற நாட்டிற்குள்

செங்கிஸ்கான் படை

வீரர்கள்

உள்ளே சென்றால்

நீர் நிலைகளில்

விஷத்தை

கலக்க மாட்டார்கள்

விளை நிலங்களை

அழிக்க மாட்டார்கள்

வீடுகளைக் கொளுத்த

மாட்டார்கள்

பெண்களை

பலாத்காரம் செய்ய
மாட்டார்கள்

ஆண்களை

கொல்ல

மாட்டார்கள்

செல்வங்களை

கொள்ளை

அடிக்க மாட்டார்கள்

 

தோற்ற நாட்டையும்

தோற்ற நாட்டு

மக்களையும்

ஒன்றும் செய்ய

மாட்டார்கள்

 

ஆனால் தோற்ற

நாட்டில் பணம்

பதவி அதிகாரம்

படைத்தவர்களில்

தன்னையும்

தன்னுடைய

நாட்டையும் இழிவு

படுத்தியவர்களையும்

நல்லவர்கள் போல்

நடித்து

தனக்கு துரோகம்

செய்தவர்களையும்

நண்பர்களாக

இருந்து விட்டு

விரோதிகளாக

மாறியவர்களையும்

செங்கிஸ்கான் போரில்

வென்ற பிறகு

அவரவருக்குரிய

தண்டனையை

அளிப்பார்

 

இதனால்

தோற்ற நாட்டில்

உள்ள மக்கள்

செங்கிஸ்கானை

மதித்தனர்

அவர் சொற்படி

நடந்தனர்

ஆனால்

பணம் பதவி

அதிகாரத்தில்

இருந்தவர்கள்

செங்கிஸ்கானுக்கு

எதிராக இருந்தார்கள்

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

 

பதிவு-1-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-1-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

“””துன்பம் உறவரினும்

செய்க துணிவாற்றி

இன்பம்

பயக்கும் வினை”””

 

----------திருவள்ளுவர்

----------திருக்குறள்-669

 

இன்பம் தரக்கூடிய

செயல் என்பது,

துன்பம் வந்தாலும்

அதனைப்

பொருட்படுத்தாமல்

துணிவுடன்

நிறைவேற்றி

முடிக்கக்

கூடியதேயாகும்

என்பதே

இத்திருக்குறளுக்கு

பொதுவாகச்

சொல்லக்கூடிய

விளக்கமாகும்.

 

இத்திருக்குறளுக்கு

கீழ்க்கண்டவாறும்

விளக்கம்

சொல்லலாம்

 

துன்பம் உறவரினும்

செய்க துணிவாற்றி

என்றால்

எத்தகைய

துன்பம் வந்தாலும்

அதாவது

சாவே வந்தாலும்

சாவைக்கண்டு

பயப்படாமல்

செயலைச் செய்தல்

என்று பொருள்

 

இன்பம்

பயக்கும் வினை

என்றால்

இன்பம்

தரக்கூடிய

சாதனையை

படைக்க முடியும்

என்று பொருள்

 

துன்பம் உறவரினும்

செய்த துணிவாற்றி

இன்பம் பயக்கும்

வினை என்றால்

சாவைக் கண்டு

பயப்படாமல்

செயலைச்

செய்பவனால்

மட்டுமே

சாதனை

படைக்க முடியும்

சாவைக் கண்டு

பயப்படுபவன்

சாதனை

செய்ய மாட்டான்

என்றும்

இத்திருக்குறளுக்கு

விளக்கம்

சொல்லலாம்

 

இந்த உலகத்தை

உழைப்பாளிகள்

படைப்பாளிகள்

என்று

இரண்டாகப்

பிரித்து விடலாம்

 

கஷ்டப்பட்டு

உழைத்தால்

முன்னேறலாம்

என்று சிலர்

சொல்கிறார்கள்

இஷ்டப்பட்டு

உழைத்தால்

முன்னேறலாம்

என்று சிலர்

சொல்கிறார்கள்

 

கஷ்டப்பட்டு

உழைத்தாலும் சரி

இஷ்டப்பட்டு

உழைத்தாலும் சரி

முன்னேற முடியாது

படைப்பாளியாக

இருந்தால் மட்டுமே

முன்னேற முடியும்

 

படைப்பாளி என்றால்

எழுதுவது பேசுவது

கிடையாது

சாவைக்

கண்டு யார்

பயப்படவில்லையோ

அவன் தான்

படைப்பாளி

ஏனென்றால்

அவன் தான்

யாரும்

செய்யாததையும்

யாராலும் செய்ய

முடியாததையும்

செய்வான்

 

உழைப்பாளியால்

ஒன்றை உருவாக்க

முடியாது

யாரேனும் உருவாக்கி

வைத்ததைக் கொண்டு

உழைப்பாளியால்

உழைக்கத் தான்

முடியும்

அதனால் தான்

உழைப்பாளி

கஷ்டப்பட்டு

உழைத்தாலும்

இஷ்டப்பட்டு

உழைத்தாலும்

உழைப்பாளியால்

இந்த உலகத்தில்

முன்னேற

முடிவதில்லை

ஆனால்

படைப்பாளியால்

ஒன்றை உருவாக்க

முடியும்

படைப்பாளியால்

ஒன்றை உருவாக்கத்

தெரிந்த

காரணத்தினால் தான்

படைப்பாளியால்

இந்த உலகத்தில்

முன்னேற முடிகிறது

 

படைப்பாளியால்

மட்டுமே

இந்த உலகத்தில்

முன்னேற முடியும்

 

அலெக்ஸாண்டரை

எடுத்துக் கொண்டால்

அலெக்ஸாண்டர்

செய்த போர்கள்

அனைத்துமே

நாட்டுக்காகவும்

நாட்டு

மக்களுக்காவும்

செய்த போர்கள்

கிடையாது

நாடு பிடிக்கும்

ஆசையில்

செய்தவைகள் தான்

அனைத்து

போர்களும்

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

 

 

May 03, 2022

ஜபம்-பதிவு-752 (சாவேயில்லாத சிகண்டி-86)

 ஜபம்-பதிவு-752

(சாவேயில்லாத

சிகண்டி-86)

 

கங்காதேவி :

ஆனால்,

பரசுராமர்

அனைத்தும் அறிந்தவர்

 

பீஷ்மர் :

பரசுராமர்

அனைத்தையும்

அறிந்தவர் கிடையாது

அனைத்தையும் 

அறிந்தவராக

இருந்திருந்தால்

என்னை

அறிந்திருப்பார்

என்னுடைய

கொள்கையை

அறிந்திருப்பார்

நியாயம் எது

அநியாயம் எது

என்று

தெரிந்திருப்பார்

 

ஒன்றும் அறியாத

காரணத்தினால்

தான் சீடனுடன்

போரிட

போர்க்களத்திற்கு

வந்திருக்கிறார்

 

பரசுராமர்

அறியாததை

நான் அவருக்கு

அறிய

வைக்கிறேன்

நியாயம் எது

என்பதை

அவரை

உணர

வைக்கிறேன்

 

தாயே

இனி போரை

யாராலும்

நிறுத்த

முடியாது

போரை நிறுத்த

எந்த ஒரு

வழியும்

கிடையாது

 

தாயே

என்னை

ஆசிர்வதித்து விட்டு

செல்லுங்கள்

 

கங்காதேவி :

எதையும் சொல்லி

வாழ்த்தும்

நிலையில்

நான் இல்லை

மகனே

கடவுள் உனக்கு

துணை நிற்கட்டும்

 

(என்று

சொல்லி விட்டு

கங்காதேவி

அந்த இடத்தை

விட்டு சென்று

விடுகிறாள்)

 

பீஷ்மருக்கும்

பரசுராமருக்கும்

போர்

ஆரம்பிக்கப்

போகிறது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////

ஜபம்-பதிவு-751 (சாவேயில்லாத சிகண்டி-85)

 ஜபம்-பதிவு-751

(சாவேயில்லாத

சிகண்டி-85)

 

பீஷ்மர் :

என்னைப் புரிந்து

கொள்ளாதவர்கள்

என் மேல் பொறாமை

கொண்டவர்கள்

என் வளர்ச்சியை

பிடிக்காதவர்கள் தான்

என்னைக் குற்றவாளி

என்கிறார்கள்

 

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

சாதாரண

மனிதர்களுடன்

போட்டி போட

மாட்டார்கள்

அவர்களை

குற்றம் சொல்ல

மாட்டார்கள்

குறை சொல்ல

மாட்டார்கள்

ஏளனம் செய்ய

மாட்டார்கள்

அவர்கள்

தனித்திறமை

வாய்ந்தவர்களைத் தான்

குற்றம் சொல்வார்கள்

குறை சொல்வார்கள்

 

தனக்கென்று

தனித்திறமை

இல்லாதவர்கள்

பிறருடைய

திறமையுடன் போட்டி

போட முடியாதவர்கள்

பிறருடைய

வளர்ச்சியைக் கண்டு

பொறாமைப் படுபவர்கள்

தான்

எதற்கெடுத்தாலும்

குறை சொல்லிக்

கொண்டு திரிவார்கள்

 

அவர்களுக்கு குறை

சொல்வதைத் தவிர

வேறு வேலை

கிடையாது

குறை சொல்வதையே

தொழிலாகக் கொண்டு

திரிவார்கள்

 

ஒருவர் தன்

தனித்திறமையினால்

சமுதாயத்தில்

உயர்ந்த நிலைக்கு

சென்று விட்டால்

பணம் பதவி

புகழ் பெற்று விட்டால்

அவரைப் போல

நாமும்

முன்னேற வேண்டும்

அதற்காக

உழைக்க வேண்டும்

என்று இந்த

உலகத்தில்

உள்ள மக்கள்

யாரும் முயற்சி

செய்ய மாட்டார்கள்

 

உயர்ந்த நிலையில்

இருப்பவரை

எப்படி கீழே

இறக்க வேண்டும்

அவரை எப்படி

அவமானப்

படுத்த வேண்டும்

ஏளனம்

செய்ய வேண்டும்

குறை

சொல்ல வேண்டும்

என்று தான்

செயல்களைச்

செய்வார்கள்

 

வயிற்றெரிச்சலால்

அவமானப்படுத்துவார்கள்

அவமானங்கள்

அசிங்கங்கள்

ஏளனங்கள்

ஆகியவற்றால்

இழிவு படுத்தும்

வேலையைச்

செய்வார்கள்

 

பொறாமை கொண்ட

மனிதர்களால் செ

ய்யப்படும்

இந்த செயல்களை

நாம் கவனித்துக்

கொண்டு இருந்தால்

நம்மால் எந்த

ஒரு செயலையும்

செய்ய முடியாது

நமக்கு நிம்மதி

இருக்காது

 

நம்முடைய

வாழ்க்கையை

நாம் நிம்மதியாக

வாழ முடியாது

 

பொறாமை

கொண்டவர்களால்

வயிற்றெரிச்சலால்

செய்பவர்களுடைய

வார்த்தைகளைப்

புறம் தள்ள வேண்டும்

 

குறை

சொல்பவர்களை

ஒரு மனிதாரகவும்

குறை சொல்பவர்களின்

வார்த்தைகளையும்

ஒரு பொருட்டடாகவும்

மதிக்கவே கூடாது

நான் செய்த செயல்

சரியானது தான்

என்பது

எனக்குத் தெரியும்

 

நான் செய்த செயல்

தவறானது என்று

எனக்கு சிறிதளவு

சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும்

என் மேல் எனக்கே

சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும்

என்னால்

பரசுராமரை மட்டுமல்ல

யாரையும்

எதிர்க்க முடியாது

 

எதிர்த்து போர்

புரியவே முடியாது

நான் பரசுராமருடன்

போரிட வந்தே

இருக்க மட்டேன்

 

நான் பரசுராமரை

எதிர்த்துப் போரிட

போர்க்களத்திற்கு

வந்து இருக்கிறேன்

என்றால்

நான் செய்த செயல்

சரியானது என்ற

காரணத்திற்காகத் தான்

 

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

//////////////////////////////////////////////////