October 17, 2022

ஜபம்-பதிவு-873 மரணமற்ற அஸ்வத்தாமன்-5 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-873

மரணமற்ற

அஸ்வத்தாமன்-5

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

குருவானர்

சீடன் கேட்பது

அனைத்தையும்

செயல்படுத்துபவர்

கிடையாது

சீடனின்

கர்மவினையை

உணர்ந்து

சீடனுடைய

வாழ்க்கைக்த்

தேவையானதை

செயல்படுத்துபவர்

 

சீடனால் செய்ய

முடிந்தவற்றை

குருவானவர்

செய்து

கொடுப்பது

கிடையாது

சீடனால்

எந்த ஒன்றை

செய்ய

முடியவில்லையோ

அந்த ஒன்றை

செய்து

கொடுப்பவர்

 

குருவை

உணர்ந்து

கொள்வது

கடினம்

 

துருபதன் :

குருவை

உணர்ந்து

கொள்ள

வழி எதுவும்

கிடையாதா

 

துரோணர் :

இருக்கிறது

 

துருபதன் :

என்ன அது

 

துரோணர் :

கடவுளை

உணர்ந்து

கொண்டால்

குருவை

உணர்ந்து

கொள்ளலாம்

 

கடவுளும்

குருவும் ஒன்று

இருவரும்

வேறு வேறு

கிடையாது

 

இருவருமே

கேட்பவர்களுக்கு

கேட்டதை

எல்லாம்

கொடுப்பவர்கள்

கிடையாது

இருவருமே

கேட்பவர்

கேட்டதை

எல்லாம்

செய்பவர்கள்

கிடையாது

 

கேட்பவர்களுக்கு

எது தேவையோ

அதை

கொடுப்பவர்கள்

கேட்பவர்களுக்கு

எது தேவையோ

அதை

செய்பவர்கள்

 

தன்னால்

இந்த செலைச்

செய்ய முடியாது

மனித சக்தியால்

இந்தச் செயலைச்

செய்ய முடியாது

மனித சக்திக்கு

அப்பாற்பட்ட

சக்தியால் தான்

இந்த செயலைச்

செய்ய முடியும்

என்ற நிலை

வரும் போது

குருவும் கடவுளும்

ஓடோடி வந்து

சீடனுக்குத்

தேவையானதைச்

செய்வார்கள்

 

துருபதன் :

குரு மனிதர்

தானே

 

துரோணர் :

இல்லை

கடவுள்

 

குருவுக்குள்

கடவுள்

இருக்கிறார்

கடவுளுக்குள்

குரு

இருக்கிறார்

இதனை புரிந்து

கொண்டவர்கள்

குருவுக்குள்

கடவுளையும்

கடவுளுக்குள்

குருவையும்

கண்டிருக்கிறார்கள்

 

இதனைப்

புரிந்து

கொள்ளாதவர்கள்

கடவுளையும்

குருவையும்

வெவ்வேறு

நிலைகளில்

நின்று

தேடிக்

கொண்டிருக்கிறார்கள்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-872 மரணமற்ற அஸ்வத்தாமன்-4 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-872

மரணமற்ற

அஸ்வத்தாமன்-4

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

நாளையே

நீ அரசனாகி

விட்டால்

உன்னுடைய

தகுதிக்கு

ஏற்றாற்போல்

தான் நட்பை

வைத்துக்

கொள்வாயே

ஒழிய

என்னைப்

போன்ற ஏழை

பிராமணனையா

நட்பாக

வைத்துக்

கொள்வாய்

 

என்னை

நண்பன்

என்று

ஏற்றுக்

கொள்ளவே

உன் மனம்

மறுக்கும்

 

என்னை

நண்பன்

என்று

சொல்லவதையே

நீ இழிவாக

நினைப்பாய்

 

துருபதன் :

நீ என்னுடைய

நண்பன்

உன்னை

நான் எப்படி

அவ்வாறு

நினைப்பேன்

 

துரோணர் :

அதை

இப்போதே

எப்படி

சொல்ல

முடியும்

காலமாற்றத்தால்

உன்னுடைய

மனம்

மாறலாம்

அல்லவா

 

துருபதன் :

என்னுடைய

மனம் மாறும்

அளவிற்கா

நான் உன்னுடன்

நட்பு

கொண்டிருக்கிறேன்

 

நான்

உன் மேல்

கொண்டிருக்கும்

நட்பை

சாதாரணமானது

என்று நினைத்து

விட்டாயா

 

நான்

உன் மேல்

வைத்திருக்கும்

நட்பு

எவ்வளவு

புனிதமானது

என்று உனக்குத்

தெரியுமா

 

நான்

நம்முடைய

குருவிடம்

கற்றுக்

கொண்டதை விட

நீ என்னுடைய

சந்தேகங்களை

தீர்த்து

வைத்ததின்

மூலமாக

உன்னிடமிருந்து

நான்

கற்றுக்

கொண்டது

தான் அதிகம்

 

அதனால்

நீயும்

எனக்கு

ஒரு

குரு தான்

 

துரோணர் :

சந்தேகத்தை

தீர்த்து

வைப்பவர்கள்

அனைவரும்

குருவாகி

விட

முடியாது

 

கற்றுக்

கொடுப்பவர்

மட்டுமே

குருவாக

இருக்க

முடியும்

 

குருவானவர்

கற்று கொடுப்பவர்

மட்டுமே

கிடையாது

சீடனின்

வாழ்க்கை

உயர்வதற்கு

காரணமாக

இருப்பவரும் கூட

 

சீடனின்

வாழ்க்கைக்கு

எது தேவை

எது தேவையில்லை

என்பதை உணர்ந்து

சீடனுடைய

வாழ்க்கைக்கு

தேவையானதை

உருவாக்கிக்

கொடுப்பவர்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-871 மரணமற்ற அஸ்வத்தாமன்-3 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-871

மரணமற்ற

அஸ்வத்தாமன்-3

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

எனவே வெற்றி

பெற வேண்டும்

என்றால்

அனுபவம்

வெறித்தனம்

உழைப்பு

ஆகிய

மூன்றும் தான்

ஒன்றாக சேர

வேண்டுமே ஒழிய

அனுபவம்

ஆர்வம்

உழைப்பு

ஆகிய மூன்றும்

ஒன்றாக

சேரக்கூடாது

 

துருபதன் :

அப்படி என்றால்

நான் வெற்றி

பெறவே முடியாதா

 

துரோணர் :

துருபதா

 

நீ பிறக்கும் போதே

அரச குலத்தில்

பிறந்தவன்

 

சுபபோகத்தில்

திளைத்தவன்

 

உன் முன்னால்

நின்று பேசவே

பயப்படுபவர்கள்

 

உன்னை எப்படி

இழிவு படுத்துவார்கள்

அவமானப் படுத்துவார்கள்

அசிங்கப்படுத்துவார்கள்

 

ஆனால்

நாளை நான்

உனக்கு

விரோதியாகலாம்

என்னால் ஏற்பட்ட

அவமானத்தைத்

துடைக்க வெறித்தனம்

உன் மனதில்

குடிபுகலாம்

என்னை

அழிப்பதற்காக

நீ உழைக்கலாம்

அனுபவம்

வெறித்தனம்

உழைப்பு

ஆகிய மூன்றும்

சேர்ந்து

நீ எடுத்த

காரியத்தில்

வெற்றியும்

பெறலாம்

 

துருபதன் :

துரோணா

நீ எனக்கு

நண்பன்

நீ எப்படி

எனக்கு

விரோதியாக

முடியும்

 

துரோணர் :

நண்பர்கள் தான்

விரோதியாகவும்

முடியும்

துரோகியாகவும்

முடியும்

 

நண்பர்கள்

இறுதிவரை

நண்பர்களாக

இருக்கவே

முடியாது

 

துருபதன் :

நீண்ட

நாட்கள்

நண்பர்களாக

இருப்பவர்கள்

 

துரோணர் :

ஏதோ ஒரு

காரணத்திற்காகத்

தான் நண்பர்களாக

இருப்பார்களே

ஒழிய

காரணமில்லாமல்

நண்பர்களாக

இருக்க

மாட்டார்கள்

 

துருபதன் :

எந்தக்

காரணமும்

இல்லாமல்

நட்பாக

இருப்பவர்கள்

 

துரோணர் :

கோடியில்

ஒரு நட்பாக

இருக்க முடியும்

 

துருபதன் :

ஏன் அந்த

நட்பு

நம்முடைய

நட்பாக

இருக்கக்

கூடாது

 

துரோணர் :

என்னால்

முடியும்

உன்னால்

முடியாது

 

துருபதன் :

ஏன் முடியாது

 

துரோணர் :

நான்

ஒரு ஏழை

பிராமணன்

நீயோ

அரச குலத்தில்

பிறந்தவன்

கல்வி

கற்பதற்காகத்

தான் நாம்

இருவரும்

இங்கே

ஒன்றாக

இருக்கிறோம்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-870 மரணமற்ற அஸ்வத்தாமன்-2 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-870

மரணமற்ற

அஸ்வத்தாமன்-2

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் :

இந்த மூன்றும்

வெவ்வேறு நிலைகளில்

இருந்து

இயங்கக் கூடியது

 

ஒன்றொக்கொன்று

சம்பந்தமே

இல்லாத இவைகள்

எப்படி ஒன்றாக

சந்திக்க முடியும்

 

அப்படியே

சந்தித்தாலும்

இவைகள் எப்படி

ஒன்றாக இணைந்து

இயங்க முடியும்

 

துரோணர் :

வெவ்வேறு

இடங்களில்

உற்பத்தியாகும்

ஆறுகள்

கடலில் ஒன்றாக

சங்கமிக்கவில்லையா

 

அதைப்போலத்

தான் இவைகள்

மூன்றும் ஒன்றாக

சங்கமிக்கும்

போது வெற்றி

என்பது கிடைக்கும்

 

துருபதன் :

எப்போது ஒன்றாக

சங்கமிக்கும்

 

துரோணர் :

அவமானங்கள்

அசிங்கங்கள்

ஏளனங்கள்

ஆகியவற்றால்

பாதிக்கப்படும் போது

கிடைக்கக்கூடிய

அனுபவமே

நம்முடைய மனதில்

வெற்றி பெற

வேண்டும் என்ற

வெறித்தனத்தை

கொழுந்து விட்டு

எரியச் செய்யும்

 

அந்த வெறித்தனமே

எந்த ஒன்றை

நாம் அடைய

முடியாது என்று

இந்த உலகம்

அவமானப் படுத்தியதோ

எந்த ஒன்றாக

நாம் ஆக

முடியாது என்று

இந்த உலகம்

அசிங்கப்படுத்தியதோ

எந்த ஒன்று நமக்கு

கிடைக்கவே

கிடைக்காது என்று

இந்த உலகம்

ஏளனப்படுத்தியதோ

அந்த ஒன்றை

நாம் அடைய

வேண்டும் என்பதற்காக

உண்ணாமல்

உறங்காமல்

அயராது உழைப்போம்

 

அந்த உழைப்பால்

கிடைக்கக்கூடிய

வெற்றி இருக்கிறது

அல்லவா

அந்த வெற்றி

வெற்றி மட்டும்

கிடையாது

சாதனையும் கூட

 

துருபதன் :

வெறித்தனத்திற்கு

பதில்

நாம் ஏன்

ஆர்வத்தைப்

பயன்படுத்தக்கூடாது

 

துரோணர் :

வெறித்தனத்தை

ஆரம்பித்து வைக்க

வேண்டிய அவசியம்

இல்லை

அனுபவம்

ஏற்படும் போது

வெறித்தனம்

தானாகவே

தோன்றி விடும்

 

அது தன்னுடைய

இலக்கை

அடையும் வரை

தன்னுடைய

இயக்கத்தை நிறுத்தாது

இயங்கிக் கொண்டே

தான் இருக்கும்

 

தன்னுடைய

இலக்கை அடைந்த

பிறகு தான்

தன்னுடைய

இயக்கத்தை நிறுத்தும்

 

ஆனால்

ஆர்வம் அப்படி

கிடையாது

அதை ஆரம்பித்து

வைக்க வேண்டும்

இலக்கை அடையும்

வரை தொடர்ந்து

இயங்கிக்

கொண்டிருக்காது

 

இலக்கை அடைவதற்கு

முன்பாகவே

தன்னுடைய

இயக்கத்தை

நிறுத்தி விடும்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////