April 13, 2020

பரம்பொருள்-பதிவு-190


              ஜபம்-பதிவு-438
            (பரம்பொருள்-190)

கிருஷ்ணன் :
“அரவானுடைய தலையை
வெட்ட மாட்டேன்
என்பதற்கு நகுலன்
சொன்ன காரணங்கள்
அனைத்தும்
உனக்கும் பொருந்தும் “

“அதனால் அதே
காரணங்களை நீயும்
சொல்லலாம் என்று
நினைத்து விடாதே
சகாதேவா “

“ஏனென்றால் அதே
காரணங்களை
உன்னால்
சொல்ல முடியாது “

“அதே காரணங்களை
நீ சொல்லவும் கூடாது “

“குந்தி தாயின்
வாரிசான
அரவானை
மாத்ரி தாயின்
வாரிசான நீ
அரவானுடைய
தலையை
வெட்ட முடியாது
என்று சொல்ல
முடியாது “

“குந்தி தாயின்
வாரிசான அரவானை
மாத்ரி தாயின்
வாரிசான நீ
அரவானுடைய
தலையை
வெட்டினால் உனக்கு
அவப்பெயர் ஏற்படும்  ;
பாண்டவர்களுக்கு
கெட்ட பெயர்
ஏற்படும் என்றும் நீ
சொல்ல முடியாது ; “

“ஏனென்றால்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
அரவானை
களப்பலியாகக்
கொடுக்கலாம் ;
களப்பலி
கொடுப்பதற்கு
அனைத்து
தகுதிகளையும்
படைத்தவன்
அரவான் என்று
துரியோதனனுக்கு
குறித்துக்
கொடுத்ததே
நீ தான் “

“துரியோதனன்
வேண்டுமென்றால்
களப்பலியை
ஆரம்பித்து
இருக்கலாம் ;
ஆனால்
குந்தி தாயின்
வாரிசான
அரவானின் பெயரை
களப்பலியாகக்
கொடுக்கலாம்
என்று சொன்னதே
மாத்ரி தாயின்
வாரிசான நீ தான் “

“குந்தி தாயின்
வாரிசான
அரவானை
களப்பலி
கொடுக்கலாம்
என்று ஏற்கனவே
குந்தி தாயின்
வாரிசின் பெயரை
மாத்ரி தாயின்
வாரிசான நீ
குறித்துக்
கொடுத்திருக்கிறாய் “

“குந்தி தாயின்
வாரிசு அரவான்
என்று தெரிந்தும்
மாத்ரி தாயின்
வாரிசான நீ
குறித்துக்
கொடுத்திருக்கிறாய் “

“எனவே
குந்தி தாயின்
வாரிசான
அரவானுடைய
தலையை என்னால்
வெட்ட முடியாது
என்று நீ
சொல்ல முடியாது “

“ஏற்கனவே குந்தி
தாயின் வாரிசை
எழுதிக் கொடுத்த நீ
குந்தி தாயின்
வாரிசான
அரவானின்
தலையை வெட்ட
முடியாது என்று
சொல்ல முடியாது “

“களப்பலி கொடுப்பதற்கு
அனைத்து
தகுதிகளையும்
படைத்தவன்
அரவான் என்று
துரியோதனனுக்கு
குறித்துக் கொடுத்த
மாத்ரி தாயின்
வாரிசான நீ தான்
குந்தி தாயின்
வாரிசான
அரவானுடைய
தலையை
வெட்ட வேண்டும்  

“வெட்ட மாட்டேன் என்று
சொல்ல முடியாது “

“ஆரம்பித்து
வைத்தது நீ தான்
அதனால் நீ தான்
முடித்தும்
வைக்க வேண்டும் “

“வாளை எடு
சகாதேவா “

சகாதேவன் :
“நீங்கள்
சொன்னவைகள்
அனைத்தும்
உண்மை தான்
பரந்தாமா “

“அதை நான்
மறுக்கப்போவதில்லை “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment