April 28, 2020

பரம்பொருள்-பதிவு-216


              ஜபம்-பதிவு-464
            (பரம்பொருள்-216)

“குருஷேத்திரப் போரில்
உலகத்திலேயே
சிறந்த வீரர்களாக
கருதப்படுபவர்கள்
அனைவரும்
போரிட்டார்கள்  ;”

“நினைத்து கூட
பார்க்க முடியாத
அளவிற்கு
சதித் திட்டங்கள்
தீட்டப்பட்டன ; “

“இப்படியும்
சிந்திக்க முடியுமா
என்று அனைவரையும்
சிந்திக்க வைக்கும்
வகையில் வியூகங்கள்
வகுக்கப்பட்டன ; “

“இப்படியும் துரோகத்தை
வெளிப்படுத்த முடியுமா
என்று சிந்திக்க முடியாத
அளவிற்கு துரோகங்கள்
வெளிப்படுத்தப்பட்டன ; “

“தர்மம் இறந்து விட்டதா
என்று சொல்லத்தக்க
வகையில் தர்மங்கள்
மீறப்பட்டன ; “

“அதர்மங்கள்
எவரைப் பற்றியும்
கவலைப்படாமல்
நடைமுறைப்படுத்தப்பட்டன  ; “

“தெய்வீக ஆயுதங்களை
வைத்திருந்தவர்கள்
அனைவராலும்
தெய்வீக ஆயுதங்கள்
பயன்படுத்தப்பட்டன  

“குருஷேத்திரப்
போர்க்களத்தின்
எல்லா இடங்களிலும்
கையிழந்து
அவதிப்பட்டவர்களும் ;
காலிழந்து
வேதனைப் பட்டவர்களும்;
குடல் சரிந்து
வலியால் துடித்தவர்களும் ;
போர்க்களத்தை விட்டு
செல்லவில்லை “

“ஒரு கையை
இழந்தவர்கள்
மற்றொரு கையால்
போரிட்டனர் ;
கையிழந்தாலும்
மற்றொரு கையால் சாகும்
வரை போரிட்டனர் ; “

“காலில்லாதவர்கள்
தரையில் ஊர்ந்து
சென்று உயிர் போகும்
வரை போரிட்டனர் “

“குடல் சரிந்தவர்கள்
குடலை எடுத்து
வயிற்றுக்குள் போட்டு
துணியால் வயிற்றை
இறுகக் கட்டிக்
கொண்டு போரிட்டனர் “

“காயத்தினால் ஏற்பட்ட
இரத்தம் உடல்
முழுவதையும்
நனைத்தாலும் ;
காயத்தினால் ஏற்பட்ட
வலியானது உடலை
வேதனையில்
வாட்டினாலும் ;
அதை எல்லாம்
பொருட்படுத்தாமல்
போரிட்டனர் “

“சில சமயங்களில்
வீரர்கள்
இரத்த வெள்ளத்தில்
நின்ற படி போர்
செய்தார்கள் “

“சில சமயங்களில்
போரிடுவதற்கு
இடம் இல்லாமல்
வீரர்கள்
பிணத்தின் மீது
ஏறி நின்று
போரிட்டார்கள் “

“காயம் பட்டவர்களுக்கு
மருத்துவ உதவிகள்
செய்வதற்குக் கூட
ஆட்கள் இல்லை “

“தலை இழந்து
இறந்தவர்களும் ;
துண்டிக்கப்பட்ட
தலைகளும் ;
அதிக அளவில்
காணப்பட்டன “

“பிணங்கள் குவியல்
குவியலாக எல்லா
இடங்களிலும்
சிதறிக் கிடந்தன “

“இறந்தவர்களை
தூக்கிச் செல்வதற்குக்
கூட ஆட்கள் இல்லை “

“குருஷேத்திரப்
போர்க்களத்தில்
அனுதினமும்
இரத்த ஆறு
ஓடவில்லை
இரத்தக் கடலே
ஓடியது “

“இது வரை
இப்படிப்பட்ட
ஒரு போரை
இந்த உலகம்
கண்டதில்லை ;
இனியும் இப்படிப்பட்ட
ஒரு போரை
இந்த உலகம்
காணப்போவதில்லை ;
என்று சொல்லத்தக்க
விதத்தில்
குருஷேத்திரப் போர்
நடைபெற்றது “

“பாண்டவர்கள் சார்பிலோ
அல்லது
கௌரவர்கள் சார்பிலோ
போரிடாமல்
இருக்கக்கூடிய
எந்த வீரனும்
பாரத மண்ணில்
இல்லை என்று
சொல்லத்தக்க
வகையில்
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
போரிட்டனர் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment