April 28, 2020

பரம்பொருள்-பதிவு-214

              ஜபம்-பதிவு-462
             (பரம்பொருள்-214)

“நட்டு வைக்கப்பட்ட
கம்பத்தில் பொருத்தி
வைக்கப்பட்ட
தலையில் உள்ள
கண்களின் வழியாக
குருஷேத்திரப்
போரைப் பார்க்கத்
தயாரானான் அரவான்

“குருஷேத்திரப்
போருக்கென்று விதிகள்
உருவாக்கப் பட்டன “

“போரில் ஒருவன்
ஆயுதத்தை இழந்து
விட்டால் மீண்டும்
அவன் ஆயுதத்தை
எடுத்துக்
கொள்ளும் வரை
அவனது எதிராளி
அவன் மீது போர்
தொடுக்கக் கூடாது "

“போரில் யாரேனும்
காயமடைந்து
சிகிச்சை செய்து
கொள்வதற்காகப்
பின் வாங்கினாலோ
அல்லது
போர்க்களத்தை
விட்டு ஓடினாலோ
அவர்கள் மீது போர்
தொடுக்கக் கூடாது ;
அவர்களைக்
கொல்லக் கூடாது ;
காயம்பட்டவர்களுக்கு
உதவி செய்பவர்கள்
மீது போர்
தொடுக்கக் கூடாது ; “

“காலாட் படை
காலாட் படையுடனும் ;
தேர்ப்படை
தேர்ப்படையுடனும் ;
குதிரைப் படை
குதிரைப் படையுடனும் ;
தான் போரிட
வேண்டும்”

“மாவீரர்கள்
மாவீரர்களுடனும் ;
அதிரதர்கள்
அதிரதர்களுடனும் ;
தான் போரிட
வேண்டும் “

“ஒரு வீரரைப்
பல வீரர்கள்
சூழ்ந்து கொண்டு
போர் செய்யக் கூடாது  ;
ஒரு வீரரைப்
பல வீரர்கள் சூழ்ந்து
கொண்டு அவரைக்
கொல்லக் கூடாது “

“சூரிய உதயத்துடன்
போர் துவங்க
வேண்டும்
சூரிய அஸ்தனமத்துடன்
போர் முடிய
வேண்டும் “

“மாலையில் போர்
நிறுத்தப்பட்டவுடன்
இரு பக்கத்திலும்
உள்ள வீரர்கள்
விருப்பப்பட்டால்
மனம் விட்டு
ஒருவருடன்
மற்றவர் பேசிக்
கொள்ளலாம்  ;
போரைப் பற்றியும்
பிற விஷயங்களைப்
பற்றியும்
கலந்துரையாடலாம் ; “

“ஒருவருக்கொருவர்
சந்தித்துக்
கொள்ளலாம்  ;
இந்த சந்திப்புகளில்
எல்லாம் பகைமை
உணர்ச்சியை
வெளிப்படுத்தக் கூடாது ;
அமைதி ; நட்பு ;
போன்றவை மட்டுமே
பரிமாறிக் கொள்ளப்
பட வேண்டும் ; “

“வீரர்கள் யாரேனும்
சரணடைந்தால்
அவனை பாதுகாக்கும்
பொறுப்பு அவனை
வெற்றி கொள்ளும்
வீரனுடைய கடமையாகும் “

“குருஷேத்திரப்
போருக்கான
இந்த விதிகளை
பீஷ்மர் உருவாக்கினார்  

“பீஷ்மர் உருவாக்கிய
இந்த விதிகளை
பாண்டவர்களும்
கௌரவர்களும்
ஏற்றுக் கொண்டு
குருஷேத்திரப்
போர்க்களத்திற்கு
போரிடுவதற்காக
வந்தனர் “

“பாண்டவர்கள் சார்பாக
போரிடுவதற்காக
மாவீரர்களான
துருபதன் ; விராடன் ;
திருஷ்டத்யும்னன் ;
சிகண்டி ; சாத்யகி ;
ஆகியோர் இருந்தனர் “

“கெளரவர்கள் சார்பாக
போரிடுவதற்காக
பீஷ்மர்  ;
துரோணச்சாரியார் ;
கிருபாச்சாரியார் ;
வத்ச்சான் ;
சால்யன் ; ஜயத்ரதன் ;
சுதக்‌ஷிணன் ;
கிருதவர்மா ;
அஸ்வத்தாமன் ;
கர்ணன் ;
சகுனி ; பாலிகா ;
ஆகியோர் இருந்தனர் “

“கிருஷ்ணனின்
தமையனாராகிய
பலராமரும் ;
தேவி ருக்மணியின்
சகோதரர்
ருக்மியையும் ;
தவிர்த்து
பாரத நாட்டின்
எல்லா வீரர்களும்
குருஷேத்திரத்தில்
நடக்கவிருக்கும்
மாபெரும் போரில்
பங்கு கொள்வதற்காக
தயாராக இருந்தனர் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment