June 10, 2020

திருக்குறள்-பதிவு - 2


           திருக்குறள்-பதிவு - 2

நீதி – 3
“இந்த உலகத்தில்
உள்ள
ஒவ்வொருவரும்
தாங்கள் செய்யும்
தவறான செயலை
சரியானது என்று
நிரூபிக்க சொல்லும்
காரணங்கள்
அனைத்தும்
தவறானவையாகத்
தான் இருக்கும்”

“துரியோதனன்
தன்னுடைய
மானத்தை
காப்பாற்றியவன்;
அதனால்
அவனுக்கு
நான் நன்றிக்கடன்
பட்டிருக்கிறேன் ;
அவனுக்காக
உயிரையும்
கொடுப்பேன்
என்று சொல்லி
துரியோதனனுக்காக
உயிரையும்
கொடுத்தான்
கர்ணன் ;
கர்ணனை
நட்பிற்கு
இலக்கணமாக
சொல்வார்கள் ;

“அதர்மத்தின்
வழி நடந்து
தவறுகளை
செய்து
கொண்டிருந்த
துரியோதனனுக்கு
துணையாக
இருந்து
அதர்மச் செயலை
செய்து விட்டு ;
அதர்மத்தை
செய்து
கொண்டிருந்த
கெளரவர்களுக்கு
துணையாக
இருந்து விட்டு ;
தன்னுடைய
தவறுகளை
மறைப்பதற்காக
நட்பு என்றும்
செஞ்சோற்றுக்
கடன்
என்றும் சொல்லிக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“கர்ணன் சொன்ன
காரணத்தை
சிந்தித்துப்
பார்த்தால்
அவன் செய்த
தவறான
செயலை
மறைப்பதற்காக
சொன்ன
காரணங்களாகத்
தான் அவைகள்
இருக்கும் “

“இந்த
உலகத்தில் உள்ள
ஒவ்வொருவரும்
தாங்கள்
செய்யும்
தவறான
செயலை
சரியானது என்று
நிரூபிக்க
சொல்லும்
காரணங்கள்
அனைத்தும்
தவறானவையாகத்
தான் இருக்கும்
என்பதை
கர்ணனின் கதை
மூலமாகத்
தெரிந்து கொள்ளலாம்”

நீதி – 4 :
“ஒரு ஆணுடைய
வாழ்க்கைக்கு
தேவையானவர்கள்
தாயும் தாரமும்;
இருவரும்
ஆண்மகனைப் புரிந்து
கொள்ளாவிட்டால்
ஆண் மகனுடைய வாழ்க்கை
நரகமாகத் தான் இருக்கும் “

“ஒரு ஆண் மகனைப்
பெற்று பாலூட்டி
உணவு ஊட்டி
அன்பு செலுத்தி
பாராட்டி சீராட்டி
வளர்த்தவள் தாய்”

“தாய்க்குப் பிறகு
தாய் காட்டிய
அன்பை மட்டுமல்ல
தன்னையும்
சேர்த்துத் தருவதினால்
தான் தாய்க்குப்
பின் தாரம்
என்றார்கள் “

“தாய் தன்னுடைய
மகனுடைய
மனதை புரிந்து
கொள்ளாமல்
சண்டையிட்டுக்
கொண்டிருந்தாலோ
தாரம் தன்னுடைய
கணவனுடைய
மனதை
புரிந்து கொள்ளாமல்
சண்டையிட்டுக்
கொண்டிருந்தாலோ
ஆண்மகனுடைய
வாழ்க்கை
நரகத்தில் தான்
இருக்கும் “

“ஒரு ஆணுடைய
வாழ்க்கைக்கு
தேவையானவர்கள்
தாயும் தாரமும் தான்;
ஆண் மகனைப் பற்றிப்
புரியாதவர்கள்
தாயாக இருந்தாலும்
தாரமாக இருந்தாலும்
இருவரில் யாராக
இருந்தாலும்
ஆணமகனைப் புரிந்து
கொள்ளாவிட்டால்
ஆண்மகனுடைய வாழ்க்கை
நரகமாகத் தான் இருக்கும்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------10-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment