June 10, 2020

திருக்குறள்-பதிவு – 3


           திருக்குறள்-பதிவு – 3

நீதி – 5
“நம்முடன் நட்பாக
இருந்து கொண்டு
நமக்குப் பின்னால்
இருந்து நம்மை
இகழ்பவர்கள் சொல்லும்
வார்த்தைகளை
நாம் கணக்கில் எடுத்துக்
கொள்ளக்கூடாது;
ஏனென்றால் அவர்கள்
நம்முடைய முகத்திற்கு
நேராக நின்று பேச
பயப்படும் கோழைகள்”

“ஒருவர் தன்னுடைய
உழைப்பால்
வாழ்வில் உயர்ந்த
நிலைக்குச் சென்று
விட்டால்
அவரைப் போல
நாமும் உழைக்க
வேண்டும்;
வாழ்க்கையில்
உயர்ந்து நிலைக்கு
செல்ல வேண்டும்;
என்று இந்த உலகம்
யோசிப்பதே இல்லை;”

“அவர் மேல்
பொறாமை கொண்டு
வெறுப்பின் காரணமாக
அவருக்குத் தெரியாமல்
அவருக்கு பின்னால்
இருந்து பேசி சந்தோஷம்
அடைவார்கள் “

“இதைத் தான்
இந்த உலகம்
காலம் காலமாக
செய்து கொண்டிருக்கிறது”

“இத்தகையவர்கள்
பேசும் பேச்சுக்களை
கணக்கில் எடுத்துக்
கொண்டால்
நம்மால் நிம்மதியாக
இருக்க முடியாது ;
நம்முடைய
வாழ்க்கையில்
மகிழ்ச்சி போய் விடும் ;
அத்தகையவர்கள்
சொல்லும் வார்த்தைகளை
காதில் வாங்கிக்
கொள்ளக்கூடாது ;”

“நம்முடன் நட்பாக
இருந்து கொண்டு
நமக்குப் பின்னால்
இருந்து நம்மை
இகழ்பவர்கள் சொல்லும்
வார்த்தைகளை
நாம் கணக்கில் எடுத்துக்
கொள்ளக்கூடாது;
ஏனென்றால் அவர்கள்
நம்முடைய முகத்திற்கு
நேராக நின்று பேச
பயப்படும் கோழைகள்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்”

“மேற்கண்ட
ஐந்து நீதிகளையும்
மனதில் நிறுத்தி
ஆராய்ந்து பார்த்தால்
இதில் ஒன்று அல்லது
இரண்டு நீதிகளில் நாம்
பாதிக்கப்பட்டிருப்போம்
அல்லது
நாம் பிறருக்கு
இத்தகைய
நீதிகளைச் செய்து
இருப்போம் “

“இந்த ஐந்து நீதிகளில்
ஏதேனும் ஒன்று
அல்லது இரண்டு
நீதிகளில் நாங்கள்
பாதிக்கப்படவில்லை
அல்லது
நாங்கள் யாருக்கும்
இத்தகைய நீதிகளில்
ஒன்றைக் கூட
செய்யவில்லை என்று
யாரேனும் சொன்னால்
அவர் கண்டிப்பாக
கடவுளாகத்தான்
இருப்பார் “

“இலக்கியங்களிலும்
நீதி நூல்களிலும்
இதிகாசங்களிலும்
பகவத் கீதையிலும்
சொல்லப்பட்டிருக்கும்
இத்தகைய உயர்வான
நீதிகளை படிப்பதால்
எந்த உண்மையும்
வாழ்வில் விளங்காது ;
இந்த நீதிகளை
வாழ்வில் அனுபவிக்கும்
போது தான் அந்த
நீதிகளில் உள்ள
உண்மை விளங்கும் ;”

“கற்க கசடற
என்றால்
வாழ்க்கையில்
அனுபவங்களின்
மூலம்
கிடைக்கக்கூடிய
உண்மைகளை
நன்றாகக் கற்றுக்
கொள்ள வேண்டும்
என்று பொருள் “

“கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக
என்றால்
கற்றுக் கொண்ட
உண்மைகளின்படி
சொல்லப்பட்ட
நீதிகளின்படி வாழ்ந்தால்
வாழ்க்கையில் என்றும்
துன்பம் இல்லை
என்று பொருள்”

“அதாவது
வாழ்க்கையில்
அனுபவங்களின் மூலம்
கிடைக்கக்கூடிய
உண்மைகளை
நன்றாகக் கற்றுக்
கொண்டபின்
உண்மைகளை
உணர்ந்து
சொல்லப்பட்ட
நீதிகளின்படி வாழ்ந்தால்
வாழ்க்கையில் என்றும்
துன்பம் இல்லை
என்பதைத் தான்
திருவள்ளுவர்
கற்க கசடற
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்கிறார்

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------10-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment