August 28, 2020

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-9

 

கண்ணதாசன்-பதிவு-9

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

இருப்பு நிலையில்

இருக்கும் கடவுள்

படைத்தல் காத்தல்

அழித்தல் மறைத்தல்

அருளல் என்ற

ஐந்து தொழில்களை

செய்வதற்காக

பேராற்றல் பேரறிவு

என்ற இரண்டு

தன்மைகளைத்

தன்னுள் கொண்டு

அமைதியாக

இருந்து கொண்டு

இருக்கிறார் என்பதை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

எளிமையான வகையில்

எளிதாக

தெரிந்து கொள்ள

வேண்டும் என்பதற்காக

எட்டு என்ற எண்ணில்

மேலே உள்ள

பூஜ்ஜியமானது

கடவுள்

இருப்பு நிலையில்

இருக்கிறார் என்பதைக்

குறிப்பதற்காகப்

பயன்படுத்தப் படுகிறது

 

இருப்பு நிலையில்

இருக்கும் கடவுள்

இருப்பு நிலையில்

எத்தகைய தன்மைகள்

அனைத்தையும்

தன்னுள் கொண்டு

இருந்தாரோ அந்த

தன்மைகளில்

எந்த தன்மையை

எந்த பொருள்

மூலமாக வெளிப்படுத்த

வேண்டுமோ

அந்த பொருளாக

மாற்றமடைந்து

இயங்கிக்

கொண்டிருப்பதற்காக

படைத்தல் காத்தல்

அழித்தல் மறைத்தல்

அருளல் எனற

ஐந்தொழில்களை

பேராற்றல் பேரறிவு

என்ற இரண்டு

தன்மைகளைக் கொண்டு

இயக்க நிலையில்

ஒரு பொருள்

மூலமாக

கடவுள் செய்து

கொண்டு இருக்கிறார்

என்பதை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

எளிமையான வகையில்

எளிதாக தெரிந்து

கொள்ள  வேண்டும்

என்பதற்காக

எட்டு என்ற எண்ணில்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

கடவுள்

இயக்க நிலையில்

இருக்கிறார்

என்பதைக்

குறிப்பதற்காகப்

பயன்படுத்தப் படுகிறது

 

இருப்பு நிலையிலிருந்து

தோன்றிய

இயக்க நிலையானது

இருப்பு நிலையிலிருந்து

தனியாகப் பிரிந்தாலும் 

இருப்பு நிலையானது

எப்படி

இயக்க நிலையை

தனித்து விடாமல்

தன்னுடன்

இணைத்து பிடித்து

வைத்துக் கொண்டு

இருக்கிறதோ

அதைப்போல

இயக்க நிலையும்

இருப்பு நிலையை

தன்னுடன் இணைத்து

பிடித்து

வைத்துக் கொண்டு

இருக்கிறது என்பதை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

எளிமையான வகையில்

எளிதாக தெரிந்து

கொள்ள  வேண்டும்

என்பதற்காக

எட்டு என்ற எண்ணில்

இருப்பு நிலையுடன்

ஒப்பிடப்படும்

மேலே உள்ள

பூஜ்ஜியமானது

எட்டு என்ற எண்ணில்

இயக்க நிலையுடன்

ஒப்பிடப்படும்

கீழே உள்ள

பூஜ்ஜியத்தை

தன்னுடன் இணைத்து

பிடித்து

வைத்துக் கொண்டு

இருப்பதைப் போல

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

மேலே உள்ள

பூஜ்ஜியத்தை

பிடித்து வைத்துக்

கொண்டு இருக்கிறது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

No comments:

Post a Comment