October 22, 2020

அறிய வேண்டியவை-147

 

ஜபம்-பதிவு-639

(அறிய வேண்டியவை-147)

 

“அப்படி நாங்கள்

ஒன்று சேர்ந்து

பாண்டவர்களை

அழித்து விட்டால்

என்னுடைய

மருமகன்

துரியோதனனைத்

தவிர வேறு யாரும்

மன்னனாகவும்

முடியாது

மன்னனாக

இருக்கவும் முடியாது”

 

“என்னுடைய

திட்டங்கள் அனைத்தும்

வெற்றிகரமாக

நடந்து முடிந்து

விட்டால்

என் தங்கை

என் தங்கையின்

கணவன்

என் மருமகன்

ஆகியோருக்கு

கிடைக்க வேண்டிய

உரிமையைப்

பெற்றுத் தந்து

விடுவேன்”

 

“என் தங்கையின்

கணவரான

திருதராஷ்டிரனுக்கு

கிடைக்கக் கூடாது

என்று மறுக்கப்பட்ட

உரிமையை

என் மருமகன்

துரியோதனனுக்கு

கிடைக்கக்கூடாது

என்று ஒதுக்கப்பட்ட

நீதியை

நான் பெற்றுத்

தந்து விடுவேன்

அதற்கு நீங்கள்

தான் உதவிகள்

செய்ய வேண்டும்

என்னருமைப்

பகடைகளே !"

 

"நாளை நடத்தப் போகும்

ஆட்டத்தில்

சந்திர வம்சத்தின்

தலைவிதியே

நிர்ணயிக்கப்படப்

பட இருக்கிறது”

 

“"எதிர்காலம் யார்

கையில் இருக்கப்

போகிறது என்று

தீர்மானிக்கப்பட

இருக்கிறது"

 

“அஸ்தினாபுரத்தை

யார் அரசாளப்

போகிறார்கள் என்பது

நிர்ணயிக்கப்பட

இருக்கிறது”

 

“நாளை மிக

முக்கியமான நாள்

நாளை மட்டும் நான்

சொல்கிறபடி

நடந்து கொண்டு

என்னுடைய

எண்ணங்களை

நிறைவேற்றி

என்னை வெற்றி

பெறச்செய்ய

நான் கேட்கும்

எண்களை

தவறாமல்

எனக்கு அளியுங்கள்

என்னருமைப்

பகடைகளே

 

(சகுனி தன்னுடைய

பகடைகளுடன்

பேசிக்

கொண்டிருக்கும் போது

அங்கு கர்ணனும்

துரியோதனனும்

வந்து

கொண்டிருக்கிறார்கள்)

 

கர்ணன் :

“என்ன

காந்தார அரசர்

தனிமையில்

புலம்ப

ஆரம்பித்து விட்டார்

உங்களுடைய

ஆதங்கத்தை

உங்களுடைய

பகடைகளிடம்

கொட்டிக்

கொண்டிருக்கிறீர்களா?”

 

சகுனி :

“என்னுடைய பேச்சை

அறிவுள்ளவர்கள்

புரிந்து ஏற்றுக்

கொள்வார்கள்?”

 

கர்ணன் :

“அறிவுள்ளவர்கள் சரி

பகடைக்குத் தான்

உயிர் இல்லையே

அது எப்படி நீங்கள்

சொல்வதை புரிந்து

ஏற்றுக் கொள்ளும்”

 

சகுனி :

“யார் சொன்னது

என்னுடைய

பகடைகளுக்கு

உயிர் இல்லை என்று?”

 

கர்ணன் :

“இதை நான் தனியாக

வேறு யோசித்து

சொல்ல வேண்டுமா

உலகத்தில் உள்ள

அனைவரையும்

கேட்டாலே சொல்லி

விடுவார்களே

உயிர் இல்லை

என்று”

 

சகுனி :

“தெரியாமல்

பேசுகிறாய் கர்ணா

பொருட்களுக்கு

உயிர் இல்லை

என்று எப்படி

உன்னால்

சொல்ல முடியும்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------21-10-2020

/////////////////////////////////

 

No comments:

Post a Comment