July 27, 2025

பதிவு-2- கூடா நட்பு கேடாய் முடியும்

 

பதிவு-2

அதற்கு அந்த பெண் மருத்துவரிடம்,

"என்னுடைய மலைப்பாம்பு

ஒரு வாரமாக சரியாக சாப்பிடுவதில்லை,

சரியாக தூங்குவதில்லை,

நான் நிற்கும் போதும்

என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது,

நான் உட்காரும் போதும்

என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது,

நான் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் போது

என் கட்டிலையே சுற்றி சுற்றி வருகிறது

கட்டிலின் ஒவ்வொரு பக்கமாக நின்று கொண்டு

என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது

அதனால் தான் என்னுடைய மலைப்பாம்புக்கு

உடம்பு சரியில்லை என்று முடிவு பண்ணி

உங்களிடம் கொண்டு வந்தேன்" என்றார்.

 

அதற்கு அந்த மருத்துவர் நீங்கள் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இருக்கிறீர்கள். நீங்கள் வளர்க்கும் மலைப்பாம்பு உங்களை சாப்பிட முடிவு எடுத்து விட்டது.

 

அதற்காக அந்த மலைப்பாம்பு தான் சாப்பிடுவதை நிறுத்தி விட்டது. தன்னுடைய வயிற்றை காய போட்டு விட்டது.

 

அந்த மலைப்பாம்பு உங்களை விழுங்க வேண்டும் என்பதற்காக உங்களை அளவு எடுத்து இருக்கிறது. அந்த மலைப்பாம்பு விழுங்க முடியும் அளவுக்கு நீங்கள் இருக்கிறீர்களாக என்பதை ஆராய்வதற்காக நீங்கள் நிற்கும் போதும் உங்களை பார்த்துக் கொண்டிருந்த்து, நீங்கள் உட்காரும் போதும் உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

நீங்கள் கட்டிலில் படுத்து கொண்டு இருக்கும் போது உங்கள் கட்டிலின் ஒவ்வொரு பக்கமாக வந்து உங்களை அளவு எடுத்து கொண்டு இருந்து இருக்கிறது,

 

நீங்கள் எவ்வளவு உயரம் இருக்கிறீர்கள். எவ்வளவு அகலம் இருக்கிறீர்கள். எவ்வளவு பருமன் இருக்கிறீர்கள். தன்னால் விழுங்க முடியுமா என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறது.

 

இன்னும் பல நாள் சாப்பிடாமல் இருந்தால் தான் உங்களை விழுங்க முடியும் என்பதற்காக தான் சாப்பிடாமல் ஒரு வாரமாக இருந்து வந்திருக்கிறது.

 

அந்த மலைப்பாம்பு உங்களை விழுங்க முடியும் என்ற நிலை வந்து விட்டு விட்டு இருந்தால் உங்களை எப்போதோ விழுங்கி இருக்கும்.

 

ஆனால், அந்த மலைப்பாம்பு உங்களை விழுங்கும் அளவுக்கு அந்த மலைப்பாம்பு தயார் ஆகாத காரணத்தினால் உங்களை விழுங்காமல் விட்டு விட்டது.

 

அதனால் தான்,

உங்களுடைய மலைப்பாம்பு

சாப்பிடாமல் இருந்தது

உங்களை தினமும் பார்த்துக் கொண்டு இருந்தது

உக்ஙளைச் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தது

 

நீங்கள் இந்த மலைப் பாம்பை இங்கு கொண்டு வரவில்லை என்றால், உங்களுடைய மலைப்பாம்பு உங்களை விழுங்கி இருக்கும். நீங்கள் அந்த மலைப்பாம்பிடமிருந்து தப்பி விட்டீர்கள். உங்களுடைய மலைப்பாம்பை காட்டில் கொண்டு விட்டு விடுங்கள் என்றார் மருத்துவர்.

 

விஷயத்தை கேட்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். தான் வளர்த்த மலைப்பாம்பு இப்படி செய்து விட்டதே என்று வேதனை அடைந்தார்.

 

தன்னுடைய பிள்ளை போல பார்த்துக் கொண்டோமோ, அதற்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டோமோ எனக்கு இப்படி துரோகம் செய்து விட்டதே என்று மருத்துவரிடம் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment