July 27, 2025

கூடா நட்பு கேடாய் முடியும்

 

அன்பிற்கினியவர்களே

நான் எழுதிய

விரைவில் வெளியிடப்பட

இருக்கும்

பழமொழிகள்

புத்தகத்தில்

ஒரு பழமொழியின்

அர்த்தம் உங்களுக்காக

நன்றி

K.பாலகங்காதரன்

எழுத்தாளர்

 

 பதிவு-1

கூடா நட்பு கேடாய் முடியும்

ஒருவருடன் நட்பு கொள்ளும் போதே, அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று ஆராய்ந்து பார்த்த பிறகே நட்பு கொள்ள வேண்டும். நல்ல நண்பருடன் நட்பு கொள்ளவில்லை என்றால் நமக்கு துன்பம் தான் ஏற்படும் என்பது தான் இந்த பழமொழிக்கு பொதுவாக சொல்லப்படும் அர்த்தம் ஆகும்

இந்த பழமொழிக்கு சொல்லப்படும் இந்த அர்த்தம் தவறானது ஆகும்

நாம் ஒருவருடன் நட்பு கொள்ளும் போதே அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பது எப்படி தெரியும். நண்பர்களாக பழகும் போது தான் நாம் நட்பு கொண்ட நண்பர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை அறிந்து கொள்ள முடியும். பழகாமல் ஒருவரை நாம் நல்லவரா கெட்டவரை என்பதை உணர்ந்து கொள்ள முடியாது.

நாம் நட்பு கொண்டவர்,

நமக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்,

நமக்கு அழிவை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்,

நாம் அழிவதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்,

நம் அழிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்,

நாம் அழிவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்,

என்பதை உணரவில்லை என்றால்

அவருடன் நாம் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தால்

நாம் அழிந்து விடுவோம்.

ஆனால், நாம் நட்பு கொண்டவர்

நமக்கு துரோகம் செய்கிறார் என்பதை

நாம் உணர்ந்து கொண்டு

அவரிடம் இருந்து விலகி வந்து விட்டால்

நமக்கு அழிவு ஏற்படாது என்பது தான்

இந்த பழமொழிக்கு அர்த்தம்

 

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்,

தவறான நட்பு கொண்டிருந்தால

நமக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தான்

இந்த பழமொழிக்கு அர்த்தம்

 

நாம் நண்பரைத் தேர்ந்தெடுக்கும் போது

எந்த ஒரு தவறும் ஏற்படுவதில்லை.

ஆனால், நம்முடன் நண்பராக இருப்பவர்

நண்பராக பழகிக் கொண்டு இருப்பவர்

நல்லவராக வெளியில் தெரிந்தவர்

உள்ளுக்குள் கெட்டவராக இருந்து

நம்மை அழிக்கக் கூடிய வேலைகளைச்

செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால்

அதை நாம் கண்டுபிடித்தால்

அவர் வெளியில் நல்லவர் போல் இருக்கிறார்

ஆனால் உள்ளுக்குள் கெட்டவராக இருக்கிறார் என்பதை

நாம் கண்டு பிடித்து விட்டால்

அந்த நேரத்திலேயே அவரை விட்டு

நாம் விலகி வந்து விட வேண்டும்.

நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்

அவரிடம் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தால்

அவரால் நமக்கு பாதிப்பு தான் ஏற்படும்

அழிவு தான் ஏற்படும்

இது தான்

கூடா நட்பு கேடாய் முடியும்

என்பதற்கா அர்த்தம்

 

பெண் ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை வளர்க்கிறார். தான் வசிக்கும் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கிறார். அந்த மலைப்பாம்பின் மீது அளவற்ற பாசம் வைத்து அந்த மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.

அந்த மலைப்பாம்பு என்ன சாப்பிடுமோ அத்தனையும் கொடுக்கிறார். அதன் மேல் மிகுந்த அக்கறையாக இருக்கிறார். தன்னுடைய குழந்தையைப் போல் மிகவும் பத்திரமாக அதைப் பார்த்து கொள்கிறார்.

அந்த பெண் அந்த பாம்பை குளிப்பாட்டுவார். வேளா வேளைக்கு சாப்பாடு கொடுப்பார். தூங்க வைப்பார்.

அந்த பெண் தன் கட்டிலுக்கு கீழே தரையில் அந்த மலைப்பாம்பை தான் பார்க்கும் வகையில் தள்ளி படுக்க வைத்து இருப்பார். அந்த பெண் தூங்கும் போது அந்த மலைப்பாம்பும் அந்த பெண்ணின் கட்டிலுக்கு கீழே தரையிலே அந்த மலைப்பாம்பும் படுத்து கொள்ளும். இது பல நாட்களாக தொடராக நடந்து கொண்டிருந்தது

ஒரு நாள் அந்த பெண் அந்த மலைப்பாம்புக்கு உடம்பு சரியில்லை என்று மருத்துவரிடம் கொண்டு வந்து அந்த மலைப்பாம்பை காட்டினார்.

மருத்துவரும் அந்த மலைப்பாம்பை தனி அறையில் அடைத்து வைத்து அந்த மலைப்பாம்பை ஆராய்ந்து பார்த்தார்.

பின்பு அந்த மலைப்பாம்பை வைத்திருந்த அறையை விட்டு வெளியே வந்த மருத்துவர் அந்த பெண்ணை தனியே அழைத்து நீங்கள் வளர்க்கும் உங்களுடைய மலைப்பாம்புக்கு உடம்பு சரியில்லை என்று எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டார்.

No comments:

Post a Comment