October 23, 2021

பதிவு-4-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-4-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

இன்ப

உணர்வுகளையும்

துன்ப

உணர்வுகளையும்

வார்த்தைகளால்

வெளிப்படுத்த முடியாது

செயல்களால்

மட்டுமே

வெளிப்படுத்த முடியும்

 

(3) அமைதி

 

இன்பத்தையும்

துன்பத்தையும்

சமமாக

ஏற்றுக் கொள்ளும்

நிலைக்கு

மனிதன்

வரும்போது

மனிதனுடைய

மனதில் அமைதி

என்பது ஏற்படுகிறது

 

மௌனம்

என்பதற்கும்

அமைதி என்பதற்கும்

வேறுபாடு இருக்கிறது

 

மௌனம் என்பது

சத்தங்கள்

அனைத்தும்

நீங்கிய பின்

ஏற்படுவது

ஆனால்

அமைதி என்பது

உண்மையை

உணரும் போது

ஏற்படுவது

 

தவம் செய்வதின்

மூலம் கிடைக்கும்

ஞானம்

சமாதி

முக்தி

என்ற மூன்று

நிலைகளில்

 

முதல் நிலையான

ஞானம் என்பது

ஏற்படும் போது

அமைதி என்பது

உண்டாகிறது

அமைதி என்பது

மனிதனுக்கு

ஞானம் என்பது

ஏற்பட்டால்

மட்டுமே

உண்டாகும்

 

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம்

என்பது வராமல்

யாராலும்

தவத்தின் உயர்ந்த

நிலைகளை

அடைய முடியாது

 

தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடைந்தவர்கள்

அனைவரும்

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம்

கொண்டு அமைதியாக

இருப்பார்கள்

என்பதை தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடைந்தவர்களை

உற்று

நோக்கினாலோ

தெரியும்

 

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம் இல்லாமல்

அமைதியாக

செயல்படாமல்

இருப்பவர்கள்

தாங்கள் தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடைந்திருக்கிறேன்

என்று சொன்னால்

அவர் தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடையவில்லை

என்று பொருள்

 

தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடைய வேண்டும்

என்றால்

கோபம் நீங்கி

பொறுமை நிதானம்

வர வேண்டும்

அப்படி வந்தால்

மட்டுமே அமைதி

என்பது ஏற்படும்

 

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம் என்பது

வரவில்லை என்றால்

அமைதி என்பது

வரவே வராது

 

நம்முடன்

ஒட்டிக் கொண்டு

வருவது எது

என்பதையும்

நாம் நம்முடன்

ஒட்ட வைத்துக்

கொள்வது எது

என்பதையும்

நம்முடன்

ஒட்டிக் கொண்டு

போவது எது

என்பதையும்

மனிதன் ஆராய்ச்சி

செய்கிறான்

 

அவ்வாறு மனிதன்

ஆராய்ச்சி

செய்யும்போது

நம்முடைய உயிரில்

ஒட்டிக் கொண்டு

வருவது நாம்

செய்த பாவ

புண்ணியங்கள்

அடங்கிய கர்மா

என்பதையும்

 

நாம் உயிர்

வாழும் போது

நாம் செய்யும்

செயல்கள் மூலம்

பாவ புண்ணியங்கள்

அடங்கிய கர்மாவை

நம்முடைய உயிரில்

ஒட்ட வைத்து

கொள்கிறோம்

என்பதையும்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

பதிவு-3-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-3-அருள்சேர்ந்த-   

திருக்குறள்

 

துன்பமற்ற

வாழ்க்கையேயே

வாழ

ஆசைப்படுகின்றனர்

துன்பமற்று

வாழ

வேண்டும் என்று

நினைப்பதினால்

கடவுளை நோக்கி

ஓடுகின்றனர்

மதத் தலைவர்களை

நாடுகின்றனர்

ஆன்மீகவாதிகளை

தேடுகின்றனர்

தனக்கு வந்த

துன்பம் தான்

அதிகம் என்று

நினைத்துக் கொண்டு

துன்புறுகின்றனர்

 

துன்பத்தை

அனுபவிக்கக் கூடாது

என்று நினைப்பவர்கள்

ஒன்றை மறந்து

விடுகின்றனர்

ஒரு துன்பத்தை

அனுபவிக்கும் போது

தங்களுடைய

பாவத்தில்

ஒரு பகுதி

கழிந்து விடுகிறது

என்பதை மறந்து

விடுகின்றனர்

எப்போது எல்லாம்

எந்த காலத்தில்

எல்லாம்

எந்த இடத்தில்

எல்லாம்

எந்த நேரத்தில்

எல்லாம்

எந்த சூழ்நிலையில்

எல்லாம்

மனிதன் ஒரு

துன்பத்தை

அனுபவிக்கிறானோ

அப்போது எல்லாம்

பாவமும்

புண்ணியமும்

சேர்ந்த

மனிதனுடைய

கர்மாவில்

பாவத்தில் ஒன்று

கழிகிறது

என்று பொருள்

 

மனிதன் தன்னுடைய

வாழ்வில் துன்பத்தை

அனுபவிக்கும் போது

தன்னுடைய

கர்மாவில்

பாவத்தில் ஒன்று

கழிகிறது என்பதையும்

தொடர்ந்து

பாவத்தையே

அனுபவித்துக்

கொண்டு இருந்தால்

தன்னுடைய

பாவங்கள்

தொடர்ந்து கழிந்து

கொண்டு இருக்கின்றன

என்பதையும்,

இப்படியே

தொடர்ந்து

துன்பத்தையே

அனுபவித்துக்

கொண்டு இருந்தால்

துன்பங்கள் அனைத்தும்

கழிந்து விடும்

என்பதையும்

பாவங்கள் எதுவும்

இல்லை என்றால்

துன்பம் எதையும்

அனுபவிக்க முடியாது

என்பதையும்

உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

துன்பத்தின்

முதல் நிலை

என்பது

சோகமாக நாம்

விரும்பும்

பாடலைப் பாடுவது

அந்தப் பாடலை

நம்மை அறிந்த

நிலையிலும்

பாடலைப் பாடலாம்

நம்மை அறியாத

நிலையிலும்

பாடலைப் பாடலாம்

 

துன்பத்தின்

இடைப்பட்ட நிலை

என்பது

சோகமாக நாம்

விரும்பும்

நடனத்தை ஆடுவது

அந்த நடனத்தை

நம்மை அறிந்த

நிலையிலும்

நடனத்தை ஆடலாம்

நம்மை அறியாத

நிலையிலும்

நடனத்தை ஆடலாம்

 

துன்பத்தின்

முடிவு நிலை

அல்லது

உச்சநிலை என்பது

கண்ணிலிருந்து

வரும் கண்ணீர்

அந்தக் கண்ணீர்

அழுகைக் கண்ணீர்

எனப்படும்

 

இன்பத்தின்

உச்ச நிலையில்

வருவது

ஆனந்தக் கண்ணீர்

துன்பத்தின்

உச்ச நிலையில்

வருவது

அழுகைக் கண்ணீர்

 

கண்ணின் ஓரமாக

கண்ணீர் வந்தால்

அது

ஆனந்தக் கண்ணீர்

 

மூக்கின் ஓரமாக

கண்ணீர் வந்தால்

அது

அழுகைக் கண்ணீர்

அதைத் தான்

மூக்கால் அழுகிறான்

என்பார்கள்

 

ஆனந்தக் கண்ணீர்

நாவில் பட்டால்

இனிக்கும்

அழுகைக் கண்ணிர்

நாவில்

பட்டால் கரிக்கும்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

 

 

பதிவு-2-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-2-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

இன்பத்தை

அனுபவிக்க

வேண்டும் என்று

நினைப்பவர்கள்

ஒன்றை மறந்து

விடுகின்றனர்

ஒரு இன்பத்தை

அனுபவிக்கும் போது

தங்களுடைய

புண்ணியத்தில்

ஒரு பகுதி

கழிந்து விடுகிறது

என்பதை மறந்து

விடுகின்றனர்

 

எப்போது

எல்லாம்

எந்த காலத்தில்

எல்லாம்

எந்த இடத்தில்

எல்லாம்

எந்த நேரத்தில்

எல்லாம்

எந்த சூழ்நிலையில்

எல்லாம்

மனிதன் ஒரு

இன்பத்தை

அனுபவிக்கிறானோ

அப்போது எல்லாம்

மனிதனுடைய

பாவமும்

புண்ணியமும்

சேர்ந்த கர்மாவில்

புண்ணியத்தில்

ஒன்று கழிகிறது

என்று பொருள்

 

மனிதன்

தன்னுடைய

வாழ்வில்

இன்பத்தை

அனுபவிக்கும் போது

இன்பமும்

துன்பமும் சேர்ந்த

தன்னுடைய

கர்மாவில்

புண்ணியத்தில்

ஒன்று கழிகிறது

என்பதையும்

தொடர்ந்து

இன்பத்தையே

அனுபவித்துக்

கொண்டு இருந்தால்

தன்னுடைய

புண்ணியங்கள்

தொடர்ந்து

கழிந்து கொண்டு

இருக்கின்றன

என்பதையும்,

இப்படியே

தொடர்ந்து

இன்பத்தையே

அனுபவித்துக்

கொண்டு இருந்தால்

புண்ணியங்கள்

அனைத்தும்

கழிந்து விடும்

என்பதையும்

புண்ணியங்கள்

எதுவும் இல்லை

என்றால்

வரும் காலங்களில்

இன்பம் எதையும்

அனுபவிக்க

முடியாது

என்பதையும்

இன்பம் என்பதை

அனுபவிக்க

வேண்டும் என்றால்

நாம் புண்ணியங்கள்

செய்ய வேண்டும்

என்பதையும்

உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

இன்பத்தின்

முதல் நிலை

என்பது

சந்தோஷமாக

நாம் விரும்பும்

பாடலைப் பாடுவது

அந்தப் பாடலை

நம்மை அறிந்த

நிலையிலும்

பாடலைப் பாடலாம்

நம்மை அறியாத

நிலையிலும்

பாடலைப் பாடலாம்

 

இன்பத்தின்

இடைப்பட்ட நிலை

என்பது

சந்தோஷமாக

நாம் விரும்பும்

நடனத்தை ஆடுவது

அந்த நடனத்தை

நம்மை அறிந்த

நிலையிலும்

நடனத்தை ஆடலாம்

நம்மை அறியாத

நிலையிலும்

நடனத்தை ஆடலாம்

 

இன்பத்தின்

முடிவு நிலை

அல்லது

உச்சநிலை என்பது

கண்ணிலிருந்து

வரும் கண்ணீர்

அந்தக் கண்ணீர்

ஆனந்தக் கண்ணீர்

எனப்படும்

 

(2) துன்பம்

 

இந்த உலகத்தில்

உள்ள அனைவரும்

துன்பம் என்ற

ஒன்று தங்கள்

வாழ்வில்

எதிர்ப்படக் கூடாது

என்று

நினைக்கின்றனர்

 

துன்பம்

ஏற்பட்டாலே

கலங்குகின்றனர்

துன்பத்தை கண்டு

நடு நடுங்குகின்றனர்

துன்பதைப்

பார்த்து

பயப்படுகின்றனர்

துன்பம் ஏற்பட்டால்

வருந்துகின்றனர்

துன்பம் தனக்கு

ஏற்படக்கூடாது

என்று

விரும்புகின்றனர்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

 

பதிவு-1-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-1-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

"அருள்சேர்ந்த

நெஞ்சினார்க்

கில்லை

இருள்சேர்ந்த

இன்னா

உலகம்

புகல்""

 

-----திருக்குறள்

----திருவள்ளுவர்

 

இருள்

அடர்ந்திருக்கும்

துன்ப

உலகமாகிய

நரகத்துக்குச்

செல்லுதல்,

அருள்பொருந்திய

நெஞ்சம்

உடையவர்களுக்கு

ஒரு போதுமே

இல்லையாகும்

என்பதே

இந்த திருக்குறளுக்கு

வழங்கப்படும்

கருத்தாகும்

 

இந்தத்

திருக்குறளுக்கு

கீழ்க்கண்டவாறும்

அர்த்தம்

சொல்லலாம்

 

இன்பம்

துன்பம்

இரண்டையும்

ஒன்றாகப்

பாவித்து

அமைதி என்ற

நிலையை

அடைந்து

இறைவனுடன்

இரண்டறக்

கலந்து

இறைவனின்

அருளைப்

பெற்றவர்களுக்கு

பிறவிகள்

பல எடுத்து இந்த

உலகமாகிய

நரகத்தில்

வாழ வேண்டிய

அவசியம் இல்லை

 

இதனை

விளக்கமாகப்

பார்ப்போம்

 

மனிதனுடைய

வாழ்க்கையில்

எதிர்ப்படும்

அனைத்தையும்

இன்பம், துன்பம்,

அமைதி, பேரின்பம்

என்ற நான்கு

நிலைகளில்

பிரித்து விடலாம்

 

இன்ப

உணர்வுகளையும்

துன்ப

உணர்வுகளையும்

வார்த்தைகளால்

வெளிப்படுத்த முடியாது

ஆனால்

செயல்களால்

வெளிப்படுத்த முடியும்

 

அமைதி

பேரின்பம்

இரண்டையும்

வார்த்தைகளாலும்

வெளிப்படுத்த முடியாது

செயல்களாலும்

வெளிப்படுத்த முடியாது

இரண்டையும்

உணர மட்டுமே

முடியும்

 

(1) இன்பம்

 

இந்த உலகத்தில்

உள்ள அனைவரும்

இன்பம் என்ற

ஒன்றை மட்டுமே

அனுபவிக்க

வேண்டும் என்று

நினைக்கின்றனர் ;

இன்பம் என்ற

ஒன்றை மட்டுமே

அடைய வேண்டும்

என்று

விரும்புகின்றனர் ;

இன்பம் என்ற

ஒன்றை மட்டுமே

விரும்பி ஏற்றுக்

கொள்கின்றனர் ;

இன்பம் என்ற

ஒன்றை மட்டுமே

நாடிச் செல்கின்றனர் ;

இன்பத்தை

அடைய வேண்டும்

என்பதற்காக

எதைச் செய்தால்

இன்பம்

கிடைக்கும் என்று

நினைக்கிறார்களோ

அந்த செயல்களை

எல்லாம் செய்து

இன்பத்தை

அடையத்

துடிக்கின்றனர்.

 

தாங்கள் இன்பம்

என்று எதை

எல்லாம்

நினைக்கிறார்களோ

அந்த இன்பத்தை

எல்லாம்

அடைய வேண்டும்

என்பதற்காக

தாங்கள் சரியானது

என்று நினைக்கும்

செயல்களை

எல்லாம்

சரியானது என்று

நினைத்துக்

கொண்டு செய்து

வருகின்றனர்.

 

இன்பம் என்ற

ஒன்றை அடைய

வேண்டும் என்பதற்காக

செய்யக்கூடாத

செயல்களைக் கூட

துணிந்து செய்கின்றனர்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////