June 26, 2022

ஜபம்-பதிவு-788 (சாவேயில்லாத சிகண்டி-122)

 ஜபம்-பதிவு-788

(சாவேயில்லாத

சிகண்டி-122)

 

பாஞ்சால மன்னன்

துருபதன்

தன்னுடைய மகள்

சிகண்டினிக்கு

இளவரசிக்குத்

தேவையான அனைத்து

கலைகளையும்

பயிற்றுவித்தான்.

 

கல்வி, அரசியல்,

பொருளாதாரம்,

இலக்கியம்,

நீதிநூல்கள், வரலாறு,

சோதிட சாஸ்திரம்,

பஞ்ச பட்சி

சாஸ்திரம்,

சர சாஸ்திரம்

ஆகியவற்றையும், 

வாள் பயிற்சி,

வில் பயிற்சி,

ஈட்டி எறிதல்,

குதிரை ஏற்றம்,

யானை ஏற்றம்

உட்பட

போர்க்கலைகள்

அனைத்தையும்

கசடறக் கற்றுத்

தேர்ந்தாள்

சிகண்டினி,

 

சிகண்டினி

ஆண் வேடம்

போட்டுக் கொண்டு

சென்று துரோணரிடம்

சீடனாகச் சேர்ந்து

கற்க வேண்டிய

அனைத்து

வித்தைகளையும்

கற்றுத் தேர்ந்தாள்.  

துரோணரிடம்

கல்வி கற்றவர்களில்

அனைத்து

கலைகளிலும்

சிறந்து

விளங்கியவள்

சிகண்டினி மட்டுமே. 

 

சிகண்டினி

வில் எடுத்தால்

அவளை

எதிர்த்து யாரும்

நிற்க முடியாது

என்று

போற்றப்பட்டாள்

 

உலகத்திலேயே

சிகண்டினிக்கு

இணையாக

வில்லைக்

கையாளும் திறமை

பெற்றவர்கள்

யாரும் கிடையாது

என்ற சிறப்பைப்

பெற்றாள்

 

சிகண்டினி

வில் எடுத்தால்

அவளை எதிர்த்து

யாரும் போரிட

முடியாது என்று

அனைவராலும்

அழைக்கப்பட்டாள்

 

வில் வித்தையில்

சிகண்டினியின்

திறமையைக்

கண்டவர்கள்,

சிகண்டினியை

வெல்வதற்கு

உலகத்தில்

யாரும் இல்லை

என்று உணர்ந்து

கொண்ட

அறிவாளிகளும்,

புத்திசாலிகளும்,

திறமைசாலிகளும்,

சிந்தனைவாதிகளும்,

ஞானிகளும்,

மேதைகளும்  

உண்மையை

உணர்ந்தவர்களும்,

போர்க்கலையை

முழுவதுமாக கற்றுத்

தேர்ந்தவர்களும்

வில் வித்தையில்

உச்சம்

தொட்டவர்களும்

சிகண்டினியை.

வில்லுக்கு சிகண்டினி

என்று அழைத்தனர்.

 

இத்தகைய சிறப்பு

மிக்க சிகண்டினிக்கு

திருமண வயது

வந்ததால் அவளுக்கு

திருமணம் செய்து

வைக்க

வேண்டும் என்று

அவளுடைய

தந்தையான

பாஞ்சால மன்னன்

துருபதனும்,

துருபதனின் மனைவி

கௌசவியும்

முடிவு செய்தனர்

 

தனியறையில்

சிகண்டினி,

துருபதன்,

கௌசவி

ஆகியோர்

சிகண்டினிக்கு

திருமணம் செய்து

வைப்பது

பற்றி பேசிக்

கொண்டு

இருந்தனர்

 

கௌசவி :

நாங்கள் என்ன

சொன்னாலும்

எதிர்த்துப்

பேச மாட்டாய்

 

இப்போது

எதிர்த்து

பேசிக் கொண்டு

இருக்கிறாய்

 

சிகண்டினி :

எதிர்த்து

பேச வேண்டிய

சூழ்நிலை

ஏற்பட்டு விட்டது

 

 

கௌசவி :

இந்த உலகத்தில்

நடக்காததையா

நாங்கள் உன்னை

செய்யச்

சொல்கிறோம்

 

சிகண்டினி :

நடக்க முடியாததை

நடக்க வைக்க

முயற்சி செய்து

கொண்டிருக்கிறீர்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-787 (சாவேயில்லாத சிகண்டி-121)

 ஜபம்-பதிவு-787

(சாவேயில்லாத

சிகண்டி-121)

 

சிவன்

மறைந்து விட்ட

பிறகு துருபதன்

காட்டிலிருந்து

நேராக தன்னுடைய

நாட்டில் உள்ள

அரண்மனைக்குச்

சென்று

தன்னுடைய

மனைவியிடம்

நடந்த

விஷயங்களைச்

சொன்னான்

 

சிவன்

சொன்னால்

சரியாகத் தான்

இருக்கும்

என்பதை

ஏற்றுக்

கொண்டாள்

துருபதனின்

மனைவி

 

சிவன் சொன்னபடி

பிறக்கப் போகும்

பெண்குழந்தை

குறிப்பிட்ட

காலத்திற்குப் பிறகு

ஆணாக மாறும்

அதனால்

பிறக்கப் போகும்

பெண்

குழந்தையை

பெண் குழந்தை

பிறந்திருக்கிறது

என்று

இந்த உலகத்திற்கு

தெரிவிக்காமல்

ஆண் குழந்தை

பிறந்திருக்கிறது

என்றே இந்த

உலகத்திற்குத்

தெரிவிப்போம்

 

பெண்

குழந்தையை

ஆண்

குழந்தையாக

வளர்ப்போம்

என்று இருவரும்

முடிவு செய்தனர்

 

அம்பை

துருபதன்

பீஷ்மன்

ஆகிய

மூன்று

பேர்களுடைய

கர்மாக்கள்

இயங்கத்

தொடங்கிய பிறகு

துருபதனுக்கு

ஒரு அழகான

பெண் குழந்தை

பிறந்தது

 

சிவன்

சொன்னபடி

அந்த

பெண் குழந்தைக்கு

சிகண்டினி

என்று

பெயரிட்டனர்

 

ஆண் குழந்தை

சிகண்டி

பிறந்திருக்கிறது என்று

இந்த உலகத்திற்கு

அறிவித்தனர்

 

பிறந்தது

பெண் குழந்தையான

சிகண்டினி என்று

துருபதனுக்கும்

அவனுடைய

மனைவி

மற்றும் ஒரு

சிலருக்கு மட்டுமே

தெரியும்

 

சிகண்டினி

எப்பொது

ஆணாக மாறுவார்

எப்படி

ஆணாக மாறுவார்

என்பதைத்

தெரிந்து கொள்ள

சிகண்டினியைப்

பின் தொடருங்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-786 (சாவேயில்லாத சிகண்டி-120)

 ஜபம்-பதிவு-786

(சாவேயில்லாத

சிகண்டி-120)

 

தங்கள்

உணர்வுகளை

மறைத்துக்

கொள்ளாமல்

தங்கள் பாலினத்தை

மாற்றிக் கொண்டு

இந்த உலகத்தில்

வாழும்

மாற்றுப்பால்

இனத்தவர்கள்

உயர்ந்தவர்களா

தங்கள் உணர்வுகளை

மறைத்துக் கொண்டு

வாழும்

ஆண்களும்

பெண்களும்

உயர்ந்தவர்களா

 

தங்கள் மீது

நடத்தப்படும்

விமர்சனங்களைப்

பற்றிக்

கவலைப்படாமல்

இந்த உலகத்தில்

தைரியமாக வாழும்

மாற்றுப்

பாலினத்தவர்களை

நாம் இழிவாகக்

கருதுகிறோம்

 

தங்கள் மீது

நடத்தப்படும்

விமர்சனங்களுக்குப்

பயந்து

தைரியமில்லாமல்

கோழையாக வாழ்ந்து

கொண்டிருக்கும்

ஆண்களையும்

பெண்களையும்

உயர்வானவர்களாகக்

கருதுகிறோம்

 

இதிலிருந்து

தெரியவில்லையா

 

இந்த உலகம்

எப்போதும்

உயர்வானவர்களை

இழிவானவர்களாகவும்

இழிவானவர்களை

உயர்வானவர்களாகயும்

தான் கருதும் என்று

 

இந்த உலகம்

எப்போதுமே

இப்படித் தான்

துருபதா

 

இன்று உ,ன்னை

புகழ்ந்து பேசும்

நாளையே உன்னை

இகழ்ந்து பேசும்

இந்த உலகம்

பேசுவதை கேட்டுக்

கொண்டு இருந்தால்

உன்னால் இந்த

உலகத்தில்

நிம்மதியாக வாழ

முடியாது

 

நீ இந்த உலகத்தில்

நிம்மதியாக

வாழ வேண்டும்

என்றால்

இந்த உலகம்

சொல்வதை காதில்

கேட்கக் கூடாது

 

யாராலும் கொல்ல

முடியாத பீஷ்மனைக்

கொல்லும்

பிள்ளையைப்

பெறப்போகிறவன் நீ

 

சரித்திரம்

படைக்கப்போகும்

பிள்ளைக்கு

தந்தையாகப்

போகிறவன் நீ

 

இந்த உலகத்தைப்

பற்றிக்

கவலைப்படாதே

 

உன்னைப் பார்

உனக்குப்

பிறக்கப் போகும்

பிள்ளையைப் பார்

உன்னுடைய பிள்ளை

பெண்ணாக

இருக்கும் போதும்

ஆணாக

மாறும் போதும்

நிகழ்த்தப் போகும்

சாதனையைப் பார்

 

துருபதன் :

இறைவா

உங்கள் சித்தப்படி

அனைத்தும்

நடக்கட்டும்

சிகண்டினியே

எனக்கு பெண்

பிள்ளையாகப்

பிறக்கட்டும்

 

சிவன் :

அப்படியே

ஆகட்டும்

 

(என்று சிகண்டினி

என்ற

பெண் பிள்ளை

துருபதனுக்கு

பிறக்கும் என்ற

வரத்தை

அளித்து விட்டு

சிவன் மறைந்து

விட்டார்)

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-785 (சாவேயில்லாத சிகண்டி-119)

 ஜபம்-பதிவு-785

(சாவேயில்லாத

சிகண்டி-119)

 

மனதில் என்ன

உள்ளதோ அப்படியே

வாழாமல் இந்த

உலகத்திற்காக

வாழ்கிறார்கள்

 

எப்படி வாழ

விரும்புகிறார்களோ

அப்படி வாழாமல்

இந்த உலகத்திற்காக

வாழ்கிறார்கள்

 

இந்த உலகம்

தவறாக சொல்லி

விடுமோ என்று

பயந்து வாழ்கிறார்கள்

இந்த உலகத்திற்கு

அஞ்சி வாழ்கிறார்கள்

 

தங்களுடைய

உண்மையான

முகத்தை

மறைத்துக் கொண்டு

இந்த சமுதாயம்

எதை எல்லாம்

நல்ல பழக்கம் என்று

வரையறுத்து

வைத்திருக்கிறதோ

அதை வெளிப்படுத்திக்

கொண்டு

வாழ்கின்றனர்

 

தங்களுக்காக

ஒரு நாளும்

வாழ்வதில்லை

 

ஆனால்

மாற்றுப்பால்

இனத்தவர்கள் தான்

இந்த உலகத்திற்காக

வாழாமல்

தங்கள் பாலினத்தை

மாற்றிக் கொண்டு

தாங்கள் எப்படி

வாழ வேண்டும்

என்று

ஆசைப்பட்டார்களோ

அப்படியே

வாழ்கிறார்கள்

 

தங்களுடைய

ஆசைகளையும்

கனவுகளையும்

விருப்பங்களையும்

மனதிற்குள் போட்டு

புதைத்து விட்டு

இந்த உலகத்திற்காக

தங்களுடைய

போலியான முகத்தை

வெளிப்படுத்திக்

கொண்டு வாழாமல்

தங்களுடைய

பாலினத்தை

மாற்றிக் கொண்டு

எந்த பாலினமாக வாழ

ஆசைப்பட்டார்களோ

அந்த பாலினமாக

தங்களுடைய

உண்மையான

முகத்தை

வெளிப்படுத்திக்

கொண்டு

வாழ்கிறார்கள்

 

இந்த உலகம்

தவறாக வரையறுத்து

வைத்திருக்கும்

நியாயங்கள்

ஒழுக்கங்கள்

ஆகியவற்றுக்குள்

சிக்கி

நல்லவர்களாக

தங்களை

வெளிப்படுத்தி வாழ்ந்து

கொண்டிருக்கும்

ஆண் பெண் போன்று

வாழாமல்

எந்த பாலினமாக வாழ

ஆசைப்பட்டார்களோ

அந்த பாலினமாக

மாற்றுப் பாலினமாக

வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள்

 

தாங்கள் எந்த

பாலினமாக வாழ

வேண்டும் என்று

ஆசைப்பட்டார்களோ

அந்த பாலினமாக

தங்களை மாற்றிக்

கொண்டு வாழ்ந்தால்

இந்த உலகம்

தங்களை

இழிவு படுத்தும்

தங்களை

அவமானப்படுத்தும்

தங்களை

கேவலப்படுத்தும்

தங்களை

அசிங்கப்படுத்தும்

தங்களை

ஏளனப்படுத்தும்

தங்களை

வாழ விடாது

என்று தெரிந்தும்

தாங்கள் எந்த

பாலினமாக வாழ

வேண்டும் என்று

ஆசைப்பட்டார்களோ

அந்த பாலினமாக

தங்கள் பாலினத்தை

மாற்றிக் கொண்டு

மாற்றுப் பாலினமாக

வாழ்கிறார்கள்

 

இந்த உலகத்தைப்

பார்த்து பயப்படாமல்

மக்களைப் பார்த்து

பயப்படாமல்

இந்த உலகத்தில்

தாங்கள் எப்படி

வாழ வேண்டும் என்று

ஆசைப்பட்டார்களோ

அப்படியே வாழும்

மாற்றுப்

பாலினத்தவர்கள்

உயர்ந்தவர்களா

 

இந்த உலகத்தைப்

பார்த்து

பயந்து கொண்டு

மக்களைப் பார்த்து

பயந்து கொண்டு

தங்களுடைய

ஆசைகளை

மறைத்துக் கொண்டு

தாங்கள் எப்படி

வாழ வேண்டும் என்று

ஆசைப்பட்டார்களோ

அப்படி வாழாமல்

இந்த

உலகத்திற்காக

வாழ்ந்து

கொண்டிருக்கும்

ஆண்களும் பெண்களும்

உயர்ந்தவர்களா

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-784 (சாவேயில்லாத சிகண்டி-118)

 ஜபம்-பதிவு-784

(சாவேயில்லாத

சிகண்டி-118)

 

நீ பீஷ்மனைக்

கொல்வதற்கு

ஆண் பிள்ளை

வேண்டும் என்று

தவம் இருந்ததால்

பீஷ்மனைக்

கொல்வதற்காக

அவள் சிகண்டி

என்ற

ஆணாக மாறுவான்

 

விருப்பப்படும்

போது தான்

மரணம் என்ற

வரத்தைப் பெற்றவன்

பீஷ்மன்

சாகாவரத்திற்கு

இணையான

வரத்தைப் பெற்றவன்

அவன்

 

இது போன்ற

சக்தி வாய்ந்த

வரத்தைப்

பெற்றவர்கள்

நல்லவர்களாக

இருந்தாலும்

கெட்டவர்களாக

இருந்தாலும்

அவர்களை

மனிதர்களாகப்

பிறப்பெடுக்கும்

ஆணாலோ அல்லது

பெண்ணாலோ

கொல்லவே முடியாது

கடவுளால் மட்டுமே

கொல்ல முடியும்

 

இந்த உலகத்தில்

கடவுளாகப்

பிறப்பெடுப்பவர்கள்

மாற்றுப்

பாலினத்தவர்கள்

உனக்கு

பிள்ளையாகப்

பிறக்கப் போகும்

சிகண்டினி

என்ற பெண்

சிகண்டி என்ற

ஆணாக மாற்றுப்

பாலினமாக

மாறும் போது

பீஷ்மனைக்

கொல்வார்

 

இப்போது

புரிகிறதா துருபதா

உனக்கு நான்

வழங்கப் போகும்

குழந்தை வரத்தில்

எவ்வளவு ரகசியங்கள்

அடங்கி

இருக்கிறது என்று

 

துருபதன் :

மாற்றுப்பால்

இனத்தவர்கள்

அனைவரும்

இப்படித் தான்

பிறக்கிறார்களா

இறைவா

 

அவர்கள் பிறப்பிற்கான

காரணம் இது தானா

 

சிவன் :

இல்லை

 

மாற்றுப்பால்

இனத்தவர்கள்

அனைவரும் இவ்வாறு

பிறப்பதில்லை

 

பிறப்பதற்கான

காரணமும்

இது இல்லை

 

துருபதன் :

வேறு என்ன காரணம்

 

சிவன் :

பரம்பொருள்

ரகசியங்களை

மனிதனால் உணர்ந்து

கொள்ள முடியாது

 

உணர்ந்து கொள்ளும்

அறிவும்

மனிதனுக்கு இல்லை

 

துருபதன் :

இருந்தாலும் இறைவா

 

மாற்றுப்பால்

பிள்ளையை

இந்த உலகம்

கிண்டல் பண்ணாதா

இழிவாக நினைக்காதா

 

சிவன் :

இந்த உலகம்

எதை எல்லாம்

இழிவானதாகக்

கருதுகிறதோ

அவை எல்லாம்

இழிவானது

கிடையாது

 

இந்த உலகம்

எதை எல்லாம்

உயர்வானதாகக்

கருதுகிறதோ

அவை எல்லாம்

உயர்வானதும்

கிடையாது

 

இந்த உலகம்

தனக்கு சாதகமாக

இருப்பதை எல்லாம்

இழிவானதாக

இருந்தாலும்

உயர்வானதாகவும்

 

தனக்கு சாதகமாக

இல்லாதவைகளை

உயர்வானதாக

இருந்தாலும்

இழிவானதாகவும்

வைத்திருக்கிறது

 

அதில் ஒன்று தான்

உயர்வானதாகக்

கருதப்பட வேண்டிய

மாற்றுப்பால்

இனத்தவர்களை

இழிவானதாக

வைத்திருக்கிறது

 

இந்த உலகத்தில்

ஆண்களை

எடுத்துக்

கொண்டாலும்

பெண்களை

எடுத்துக்

கொண்டாலும்

தாங்கள்

எப்படி வாழ

வேண்டும் என்று

ஆசைப்படுகிறார்களோ

அப்படி வாழாமல்

தங்களுடைய

ஆசைகளையும்

கனவுகளையும்

மறைத்து

வைத்துக் கொண்டு

இந்த

உலகத்திற்காக

வாழ்கிறார்கள்

 

தங்களுடைய சொந்த

விருப்பத்தின்

பேரில் வாழாமல்

இந்த உலகத்திற்காக

வாழ்கிறார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////