February 16, 2025

ஜபம்-பதிவு-1024 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-2

                                                   அர்ஜுனனைக் கொன்ற

                                          பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-2


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அனுபவ நினைவும், சிந்தனையும், தெளிவும் 

அளிக்கின்ற நல்ல முடிவுகளைக் கொண்டு

உணர்ச்சிகளை  ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறன் தோன்றும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

இன்னது செய்தால் இன்னது விளையும் 

எனவே இன்னது செய்து வாழ வேண்டும் என்று கூறும் 

பக்தி மார்க்கம் என்றால் என்ன என்று தெரியும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

இன்னது செய்தால் இன்னது விளையும் 

எனவே இன்னது செய்து வாழ வேண்டும் என்று தானே உணர்ந்து செய்யும் 

ஞான மார்க்கம் என்றால் என்ன என்று தெரியும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அறிவென்றால் என்னவென்றும்

அறிவது எது என்றும்

அறியும் நான் யார் என்றும்

எது என் மூலம் என்றும்

அறியும் அறிவு தோன்றும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

ஆன்மாவை அறிந்து

ஆன்மாவின் பேராற்றலை அறிந்து

அதில் உள்ள இருப்பு நிலையை அறிந்து கொள்ளும்

அறிவு தோன்றும்


நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை

சரியாக நடத்தி இருக்கிறோம் என்பதற்கு

நாம் இறந்த பிறகு கூடும் கூட்டமும், ஆடும் ஆட்டமும், 

சிந்தும் கண்ணீரும் சாட்சி கிடையாது

நாம் இந்த உலகத்தில் உயிரோடு வாழும் போது

நாம் கஷ்டப்பட்டு வாடும் போது

அந்த கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்து நீக்கும் 

ஒரு துணை நமக்கு இருந்தால்

அது தான் நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை

சரியாக நடத்தி இருக்கிறோம் என்பதற்கான சாட்சி


நாம் நம் வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்தி இருந்தால்

எந்த செயலை எப்போது செய்ய வேண்டும் என்பதையும்

எப்படி செய்ய வேண்டும் என்பதையும்

எந்த நேரத்தில் எந்த செயலை செய்யக் கூடாது என்பதையும்

இடம், நேரம், காலம், சூழ்நிலை உணர்ந்து

எந்த செயலை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதையும்

நாம் தெரிந்து அதை செய்வோம்


இதுவரை வாழ்க்கைப் பயணத்தை 

நீ சரியாக வாழவில்லை என்பது தெரிகிறது

இனிமேல் வாழ்க்கைப் பயணத்தை சரியாக வாழ்ந்து பார்


சீடன் : இப்போது நான் என்ன செய்ய வேண்டும்


குரு : உனக்கென்று ஒதுக்கப்பட்ட பணி என்ன என்பதை முதலில் 

தெரிந்து கொள்ள வேண்டும் உனக்கென்று ஒதுக்கப்பட்ட பணியைச் செய்ய வேண்டும்


சீடன் : எனக்கு தெரியவில்லை


குரு : உனக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம்

கேட்டு தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்


சீடன் : என்னுடைய வேலை என்ன என்பதையும்

நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும்

நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும்


குரு : நாம் கடவுளுக்கு சேவை செய்யப் படைக்கப்பட்டவர்கள்

கடவுளின் அருளைப் பெற்ற நாம்

கடவுளின் அருளைப் பெற முடியாதவர்களுக்கு

கடவுளின் அருளைப் பெறுவதற்கு

ஒரு வழிகாட்டியாய் இருந்து வழிகாட்ட வேண்டும்.


கடவுள் எங்கே இருக்கிறார்

அவரை அடையக்கூடிய வழி என்ன

எதைக் கொண்டு கடவுளை அடையலாம்

என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டி

மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி

கடவுளுடன் இணைந்து என்ன வேண்டுமோ

அதை பெற்றுக் கொள்ளும் வழியை

மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் புனிதமான பணியைச்

செய்வவதற்காகப் பிறந்தவர்கள் நாம்


அந்த புனிதமான பணியைத் தவிர்த்து

வேறு எந்த ஒரு பணியையும் செய்யக் கூடாது


பசுக்களை மீட்டு வரும் பணியை செய்வது 

நம்முடைய வேலை அல்ல

அது ஷத்திரியர்களின் வேலை


நாட்டை ஆள்பவர்களின் வேலை

நாட்டை ஆளும் தர்மரின் வேலை


சீடன் : அவரிடம் போய் சொல்ல வேண்டுமா


குரு : ஆமாம் அவரிடம் போய் சொல்

நான் சொன்னேன் என்று சொல்

என்னுடைய குருநாதர் சொன்னார் என்று சொல்


கொள்ளையர்கள் பெருகி விட்டனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


கொள்ளையர்கள் தைரியமாக 

கொள்ளையடித்து விட்டு செல்கின்றனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


அட்டூழியங்களும், அராஜகங்களும், 

அநியாயங்களும் பெருகி விட்டது

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


மக்களை அச்சத்திலேயே 

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


நாட்டை ஆளத் தெரியாத 

தர்மருக்கு நாடு எதற்கு என்று சொல்


மக்களை காப்பாற்றத் தெரியாத 

தர்மருக்கு ஆட்சி எதற்கு என்று சொல்


மக்களுடைய பயத்தை நீக்கி 

தர்மருக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று சொல்


மக்கள் வாழக் கூடிய ஒரு நாடாக 

தர்மரின் நாடு இல்லை என்று சொல்


ஆட்சி நடத்தத் தெரியவில்லை என்றால் 

தர்மரை காட்டிற்குப் போகச் சொல்.


சீடன் : அப்படியே சொல்கிறேன்

தர்மரிடம் என்ன சொல்லச் சொன்னீர்களோ அதையே

தர்மரிடம் சொல்கிறேன்

என்னுடைய குருநாதர் சொன்னதாக சொல்கிறேன்


இந்த நாட்டின் மன்னனிடம் சொல்கிறேன்

உண்மையைச் சொல்கிறேன். 


(என்று சீடன் தர்மரின் அரண்மனையை நோக்கி செல்கிறான்)


-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

ஜபம்-பதிவு-1023 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-1

                                                    அர்ஜுனனைக் கொன்ற

                                       பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-1


(குரு ஆசிரமத்தில் அமர்ந்து யாகம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக அவருடைய சீடர்களும் அவருடன் அமர்ந்து யாகம் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் கொள்ளையர்கள் ஆசிரமத்தில் இருந்த பசுக்களை ஓட்டிக் கொண்டு செல்கின்றனர். அதைப்பார்த்து சீடர்கள் அதைத் தடுக்க செல்கின்றனர். குரு தன் தலைமைச் சீடனை அழைக்கிறார்.)


குரு : எங்கே செல்கிறாய்?

சீடன் : கொள்ளையர்களை தடுக்கப் போகிறேன்!

குரு : உன்னால் முடியுமா?

சீடன் :  முடியாது? 

இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன்.


குரு : முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் 

முயற்சி செய்து பார்க்கலாம்.


முடியாது என்று முடிவெடுத்து விட்ட பிறகு

முயற்சி செய்வதால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது.


முடியாத ஒன்றை ஏன் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.


முடியாது என்று தெரிந்தும் முயற்சி செய்து பார்ப்பது

அறிவற்றவர்களின் வேலை அல்லவா?


அந்த வேலையையா நீ செய்யப் போகிறாய்?


சீடன் : அப்படி என்றால் தடுக்க வேண்டாமா ?


குரு :  உன்னால் முடியாது என்று சொல்லி விட்டாய்

பிறகு ஏன் தடுக்கப் போகிறேன் என்று சொல்கிறாய்.


நமக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்வதும் தவறு.

நம்மால் முடியாத வேலையை செய்வதும் தவறு.

முடியாது என்று தெரிந்தும் முயற்சி செய்து பார்ப்பதும் தவறு.


நமக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளில் 

நாம் தலையிடக் கூடாது.


நம்முடைய வேலை என்ன என்பதை 

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


இந்த உலகத்தில் பிறக்கும் அனைவரும் 

தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையை 

முடிப்பதற்காகத் தான் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள்


தாங்கள் எதற்காக பிறந்திருக்கிறோம்

எந்த வேலையை முடிப்பதற்காக 

இந்த உலகத்திற்காக வந்திருக்கிறோம்

என்பதை உணர்ந்தவர்கள் 

தங்கள் கடமையை முடித்து விட்டு

தாங்கள் வந்த வேலையை முடித்து விட்டு

கர்மாவைக் கழித்து 

பிறவியை அறுத்து

இறைவனுடன் இரண்டறக் கலந்து 

முக்தி என்ற நிலையை அடைந்து விடுகின்றனர்

இந்த உலகத்தை விட்டு சென்று விடுகின்றனர்.

அவர்கள் இந்த உலகத்தில் மீண்டும் வந்து பிறப்பதேயில்லை

அவர்களுக்கு பிறவி என்பதே கிடையாது.


ஆனால்,

தாங்கள் எதற்காகப் பிறந்திருக்கிறோம்

எந்த வேலையைச் செய்வதற்காகப் பிறந்திருக்கிறோம் 

என்ன காரணத்திற்காக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம் 

எந்த வேலையை முடிப்பதற்காக 

இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம்

எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

என்பதை உணராதவர்கள்

அதைக் கண்டு பிடிக்க முடியாதவர்கள்

தாங்கள் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப 

துன்பங்களுக்குள் மாட்டிக் கொண்டு

பல்வேறு கஷ்டங்களை அடைந்து

மீள முடியாத துயரத்தில் மூழ்கி.

மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வந்து பிறக்கிறார்கள்

வாழ்கிறார்கள்,

இறந்து விடுகிறார்கள்


தாங்கள் எதற்காகப் பிறக்கிறோம் என்பதை உணர்ந்து

அந்த வேலையை முடித்தவர்களுக்கு 

கர்மவினைகளைக் கழித்தவர்களுக்கு

மீண்டும் பிறவி என்பதே கிடையாது

ஆனால்

தாங்கள் எதற்காகப் பிறந்திருக்கிறோம் 

என்பதை உணராமல் இருப்பவர்களுக்கு

தாங்கள் வந்த வேலையை முடிக்காமல் 

வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு

பிறவி என்பது உண்டு


சீடன் : மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்


குரு : முதலில் பயணம் என்றால் என்ன என்பதை

தெரிந்து கொள்ள வேண்டும்


நாம் மேற்கொள்ள வேண்டிய பயணம் என்ன என்பதைத் 

தெரிந்து கொள்ள வேண்டும்


பயணம் மேற்கொண்டால் என்ன நடக்கும் என்பதைத்

தெரிந்து கொள்ள வேண்டும்.


சீடன் : பயணம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?


குரு : பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நம்முடைய

வாழ்க்கைப் பயணத்தைத் தான் குறிப்பிடுகிறேன்.


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அனைவரையும் சமமாகப் பாவித்து

ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழ வேண்டும் 

என்ற சமத்துவ எண்ணம் தோன்றும்



-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

February 13, 2025

திருக்குறள்(18)-உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு-13-02-2025

 

 

திருக்குறள்(18)-உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு-13-02-2025

 

அன்பிற்கினியவர்களே!

 

உறங்கு வதுபோலுஞ்

சாக்காடு உறங்கி

விழிப்பது

போலும் பிறப்பு

என்ற

திருக்குறளின்

அர்த்தம்

என்ன என்று

பார்ப்போம்.

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

-----13-02-2025

-----வியாழக்கிழமை

///////////////////////////////////////////////



February 08, 2025

அர்ஜுனன் மகன் அரவான் களப்பலி சிறந்த நூல் விருது பெறும் விழா-07-02-2025

 

அர்ஜுனன் மகன் அரவான் களப்பலி சிறந்த நூல் விருது பெறும் விழா-07-02-2025

 

அன்பிற்கினியவர்களே!

 

நாடகம் (உரைநடை, கவிதை)

எனும் வகைப்பாட்டில்

2023 ஆம் ஆண்டு

சிறந்த நூலாக

நான் எழுதிய

அர்ஜுனன் மகன்

அரவான் களப்பலி

என்ற நூல்

தெரிவு செய்யப்பட்டு

ரூ.5000/-

பரிசுத்தொகையும்

சான்றிதழும்

தமிழக அரசால்

07-02-2025 ஆம் ஆண்டு

வெள்ளிக் கிழமை

அன்று

வழங்கி

சிறப்பிக்கப்பட்டது

என்ற தகவலை

அனைவருக்கும்

தெரிவித்துக் கொள்வதில்

நான் மிக்க மகிழ்ச்சி

அடைகிறேன்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

///////////////////////////////////////////////





January 27, 2025

ஆன்மீகம்(56)-கர்மாவை மாற்ற முடியாது-27-01-2025

 

ஆன்மீகம்(56)-கர்மாவை மாற்ற முடியாது-27-01-2025

 

அன்பிற்கினியவர்களே!

 

கர்மாவை

அனுபவித்துத் தான்

ஆக வேண்டும்

 

கர்மாவை மாற்ற

முடியாது

 

கர்மாவைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

-----27-01-2025

-----திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




January 22, 2025

கடவுளுக்கே சாபம் கொடுத்த அஸ்வத்தாமன்

 

அன்பிற்கினியவர்களே

 

நம்முடன்

இருப்பவர்களுடைய

மதிப்பு தெரியவில்லை எனில்

நாம் அழிந்து விடுவோம்

என்பதற்கு

மிகச் சிறந்த எடுத்துக்காட்டு

துரியோதனன்

என்று

 

கடவுளுக்கே

சாபம் கொடுத்த அஸ்வத்தாமன்

மதவாதிகளிடம் மண்டியிடாத கலீலியோ

என்ற இரண்டு புத்தகங்களின்

புத்தக வெளியீட்டு விழாவில்

 

புத்தகத்தை எழுதிய

எழுத்தாளர், K.பாலகங்காதரன்

அவர்கள் பேசிய உரையின்

ஒரு பகுதி

 

புத்தக வெளியீட்டு விழாவின்

முழுபகுதி

விரைவில்

வெளிவருகிறது

காத்திருங்கள்

 

நன்றி

 

----K.பாலகங்காதரன்,

----எழுத்தாளர்

 

........////////////////////////////




January 19, 2025

சமணர் கற்படுக்கை(1)-திருப்பரங்குன்றம் சமணர் கற்படுக்கைகள்-19-01-2025

 

சமணர் கற்படுக்கை(1)-திருப்பரங்குன்றம் சமணர் கற்படுக்கைகள்-19-01-2025

 

அன்பிற்கினியவர்களே

 

சங்கம் வைத்து

தமிழ் வளர்த்த

பாண்டியர்கள் வாழ்ந்த

தலைநகரமான

மதுரையில்

திருப்பரங்குன்றத்தில்

சமணர்

கற்படுக்கைகள்

காண்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

-----19-01-2025

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////