February 23, 2025

குடைவரைக்கோயில்(24)-அரிட்டாப்பட்டி குடைவரைக் கோயில், மதுரை-23-02-2025

 

குடைவரைக்கோயில்(24)-அரிட்டாப்பட்டி குடைவரைக் கோயில், மதுரை-23-02-2025

 

அன்பிற்கினியவர்களே!

 

சங்கம் வைத்து

தமிழ் வளர்த்த

பாண்டியர்களின்

தலைநகரமான

மதுரையில்

உள்ள

அரிட்டாப்பட்டி

குடைவரைக் கோயிலின்

சிறப்பைப் பற்றி

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----23-02-2025

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////






February 16, 2025

ஜபம்-பதிவு-1032 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-10

                                                        அர்ஜுனனைக் கொன்ற

                                           பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-10


அர்ஜுனன் நாகக் கன்னி உலூபியைச் சந்தித்து காதல் செய்து திருமணம் செய்து கொண்ட பிறகு தென்னாட்டினை அடைந்தான்.


திருவேங்கடமலை, திருக்காளத்தி, திருத்தணிகை, திருக்காஞ்சீபுரம்,

திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, திருத்தில்லை,

சீர்காழி, புள்ளிருக்குவேளூர், மாயூரம், திருவிடைமருதூர்,

திருக்குடந்தை, திருவானைக்கா, திருவாவினன்குடி,

முதலிய திருத்தலங்களை சேவித்துக் கொண்டும்,

பாலாறு, சேயாறு, காவிரி முதலிய நதிகளில் முழுகிக் கொண்டும்,

திருவெண்ணீற்றால் முழுகிய திருமேனியுடன், உருத்திராட்சை அணிந்து,

நமசிவய என்ற ஐந்தெழுத்தை உச்சரித்துக் கொண்டு

மதுரையை அடைந்தான்


பாண்டியன் தலைநகராகிய மணலூர் வந்தடைந்தான் அர்ஜுனன்

பாண்டிய நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்து விட்டான் அர்ஜுனன்

பாண்டியர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறான் அர்ஜுனன்


வீரத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


வீரர்களுக்கு உதாரணமாக இருப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மரணத்தை நேருக்கு நேராக சந்திப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மாணத்திற்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


நீதிக்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


தமிழை வாழ வைக்க தன்னையே எரிக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


ஏரும், போரும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழக் கூடியவர்கள் 

பாண்டியர்கள் என்பதையும்,


மானம் போனால் தன் உயிரையும் விட்டு விடுபவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


அன்புக் காட்டினால் அடங்கிப் போகிறவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


ஆணவத்தைக் காட்டினால் அடக்கி விட்டு போகிறவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


பாண்டியர்களைப் பார்த்து அர்ஜுனன்

இனி தான் தெரிந்து கொள்ளப்போகிறான்


அர்ஜுனனைப் பின்தொடருங்கள் 

நாமும் பாண்டியர்களைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1031 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-9

                                                      அர்ஜுனனைக் கொன்ற

                                          பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-9


அனைத்துமாக பரிணமித்து இருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்துமாக இருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்தையும் இயக்கிக் கொண்டிருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்திற்குள்ளும் இருப்பவன் இறைவன் இருக்கின்றன காரணத்தினால்

செய்யும் செயலில் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

அதனால் உண்டாகும் விளைவில் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

விளைவுக்குரிய பாவ புண்ணியத்திற்குள் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

இடம் நேரம் காலம் சூழ்நிலையைப் பொறுத்து 

ஒருவன் செய்யும் செயலுக்குரிய விளைவில் உண்டாகும்

பாவ புண்ணியத்திற்குரிய பலன்களை

உலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் இறைவன் அமர்ந்து கொண்டு

வழங்க வேண்டிய அவசியம் இல்லை

அனைத்திற்குள்ளும் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

இடம், நேரம், காலம், சூழ்நிலையைப் பொறுத்து பலன்களை

இறைவன் அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்.


இந்த உண்மைகளை நான் உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால் 

நாம் எந்த ஒரு குற்றச் செயலைச் செய்தாலும்

அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால்

நான் செய்த குற்றச் செயலுக்குரிய தண்டனையை 

காலம் எனக்கு வழங்குவதற்கு முன்பாகவே

தண்டனையை நானே அனுபவிக்கத் தீர்மானித்துட்டேன்


நான் செய்த குற்றச் செயலை மறைக்க விரும்பவில்லை

குற்றச் செயலைச் செய்து விட்டு 

அதற்குரிய தண்டனையிலிருந்து தப்பிக்க நான் விரும்பவில்லை


குற்றச் செயலுக்குரிய தண்டனையை அனுபவிக்க முடிவு செய்து விட்டேன்

தண்டனையை அனுபவிக்க நான் வனவாசம் செல்லத் தீர்மானித்து விட்டேன்

அதனால் வனவாசம் செல்ல கிளம்பி விட்டேன்


தர்மர் : நீ வனவாசம் செல்வதை மாற்ற முடியாதா?


அர்ஜுனன் : நடக்கப் போகும் எந்த ஒரு செயலையும் தடுக்க முயற்சி செய்யக் கூடாது நடக்கப் போகும் செயல் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தினாலும் அந்த செயலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்

அந்த செயலுக்குரிய பாதிப்பை அனுபவித்து விட்டு தான் கடந்து போக வேண்டும்

அப்போது தான் அந்த செயல் கழிந்து போகும்

இல்லை என்றால் அந்த செயலும் கழிந்து போகாது

அது ஏற்படத்த வேண்டிய பாதிப்பும் கழிந்து போகாது


நடக்க வேண்டிய எந்த ஒரு செயலையும் தடுக்கவும் முடியாது

அதனுடைய பாதிப்பிலிருந்து தப்பிக்கவும் முடியாது


நடக்கப் போகும் செயல் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதற்காக

நடக்கப் போகும் செயலை தடுக்க முயற்சி செய்தால்

அந்த செயல் வேறொரு செயலாக வெளிப்பட்டு

அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்

ஆகவே எந்த ஒரு செயலையும் தடுக்க முயற்சி செய்யக்கூடாது

நடக்கும் செயலை அனுபவித்து விட்டுத் தான் கடந்து போக வேண்டும்


தர்மர் : நீ இல்லாமல் நான் இருப்பேனா என்பதை நீ நினைத்துப் பார்த்தாயா. 

உன் பிரிவால் எனக்கு ஏற்படும் கஷ்டத்தை நீ நினைத்துப் பார்த்தாயா

நீ இல்லாமல் நான் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பேன் என்பதை 

நீ நினைத்துப் பார்த்தாயா 


இதை எல்லாம் நீ நினைத்துப் பார்த்து இருந்தால் 

வனவாசம் செல்லப் போகிறேன் என்று நீ சொல்லி இருக்க மாட்டாய்

என்னை தவிக்க விட்டு செல்லப் போகிறேன் என்று

சொல்லி இருக்க மாட்டாய்


அர்ஜுனன் : அண்ணா

நான் இருந்தால் தான் இன்பம் இருக்கும் என்பதும் கிடையாது

நான் இல்லா விட்டால் துன்பம் என்பது உருவாகும் என்பதும் கிடையாது


நான் இருந்தால் தான் குடும்பத்தால் வாழ முடியும் என்பதும் கிடையாது

நான் இல்லா விட்டால் குடும்பத்தால் வாழ முடியாது என்பதும் கிடையாது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும் 

இன்பமும், துன்பமும் இருக்கத் தான் போகிறது


நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும்

இந்த உலகம் இருக்கத் தான் போகிறது

இயங்கத் தான் போகிறது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும்

சூரியன் உதிக்கத் தான் போகிறது மறையத் தான் போகிறது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும்

இந்த பிரபஞ்சத்தில் நடக்க வேண்டியது 

நடந்து கொண்டு தான் இருக்கப் போகிறது


அப்படி இருக்கும் போது நான் வனவாசம் செல்வதால் 

ஒரு இழப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை


நான் செல்கிறேன் என்னை வழியனுப்பி வையுங்கள்


தர்மர் : அர்ஜுனா இனி உன்னை யாராலும் தடுக்க முடியாது


கண்டிப்பாக நீ வனவாசம் சென்றே ஆக வேண்டும் என்பதை 

காலம் முடிவு செய்து விட்டது


ஏதோ ஒரு விஷயத்திற்காக 

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


ஒரு உயர்ந்த விஷயத்தை உருவாக்குவதற்காக

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


நல்லதை நடக்க வைக்க

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


தர்மத்தை நிலைநாட்ட

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


சென்று வா

காலம் என்ன சொல்கிறதோ அதை செய்

காலம் ‘உன்னை வழி நடத்தும்

காலம் உன்னை காப்பாற்றும்

சென்று வா


(அண்ணனிடம் விடைபெற்றுக் கொண்டு அர்ஜுனன் வனவாசம் புறப்பட்டான்)


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

ஜபம்-பதிவு-1030 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-8

                                                      அர்ஜுனனைக் கொன்ற

                                           பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-8


அர்ஜுனன் : நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று 

எனக்குத் தெரிந்து விட்டது.


எனக்குத் தெரிந்தது இந்த உலகத்திற்குத் தெரிய வேண்டாம்


என்ன வார்த்தை சொல்ல வருகிறீர்கள் என்று யாருக்கும் தெரிய வேண்டாம்


அந்த வார்த்தை உங்களுடனேயே இருந்து விடட்டும்

வெளிப்பட வேண்டாம்


நீங்கள் சொல்ல விரும்பும் வார்த்தைகளை 

நான் மட்டுமல்ல இந்த உலகமும் கேட்க வேண்டாம்


அந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லவே வேண்டாம்  

அந்த வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே வரவே வேண்டாம்


உங்கள் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு விட்டால் 

அது அந்த தர்மத்திற்கே இழுக்காகி விடும்


தர்மம் தலை குனியக்கூடிய நிலை கூட ஏற்பட்டு விடலாம்


தர்மத்தை தலை குனிய வைத்து விடாதீர்கள்


நீங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்

நாம் செய்யும் செயலைப் பொறுத்து 

பாவமும் புண்ணியமும் உண்டாவதில்லை

நாம் செய்யும் செயலின் விளைவைப் பொறுத்துத் தான்

பாவமும், புண்ணியமும் உண்டாகிறது


ஒருவர் தன்னுடைய நலனைப் பெரிதெனக் கருதாமல்

சுயநலம் கொண்டு வாழாமல்

மற்றவர்களுடைய நலனே பெரிதெனக் கொண்டு

பொதுநலன் கொண்டு பிறருடைய நலனுக்காகவே 

வாழ்ந்து கொண்டிருக்கிறார்


சமுதாயத்தில் பலருக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கிறார்

அவரால் வாழ்வு பெற்றவர்களை எண்ணிக்கையில் அடக்க முடியாது 

அத்தகையவரை அத்தகைய சிறப்பு மிக்கவரை

அத்தகைய குணநலன்களைப் பெற்றவரை

நான் கொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்

அவரைக் கொன்றது என்பது ஒரு செயல்


அவர் இறந்ததைக் கண்டு சமுதாயமே வருத்தப்படுகிறது

நல்லவர் இறந்து விட்டாரே என்று 

மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்


நான் செய்த செயலின் விளைவு சோகமாக இருக்கிறது 

எனவே, இது ஒரு பாவச் செயல்


இந்த இடத்தில் நான் ஒருவரைக் கொன்ற செயல் ‘

பாவமா புண்ணியமா என்பதை தீர்மானிக்கவில்லை

நாம் செய்த செயலின் விளைவு தான் 

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கிறது


ஒருவர் தன்னலம் கொண்டு

சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டு 

பிறர் செல்வங்களைக் கொள்ளையடிப்பது

பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது 

பித்தலாட்டம் செய்து பிறரை ஏமாற்றுவது

நன்றாக வாழும் குடும்பங்களைக் கெடுப்பது

என்று பல செயல்களைச் செய்து வருகிறார்

அத்தகையவரை நான் கொல்கிறேன்

அவரை நான் கொல்வது என்பது ஒரு செயல்

இதில் பாவமோ புண்ணியமோ ஏற்படாது


அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும்

பாவி இறந்து விட்டானே என்று சந்தோஷப்பட்டனர்

இறந்தவரை நினைத்து யாரும் வருத்தப்படவில்லை

எத்தனை குடும்பங்களை அழித்தான்

எத்தனை பேர்களின் வாழ்க்கையை கெடுத்தான்

படுபாவி இறந்து விட்டான்

இறந்தது நல்லது தான்

அவனைக் கொன்றது சரிதான்

அவன் சாக வேண்டியவன் தான்

அவனுக்கு சாவு என்பது வர வேண்டும் தான்

அவனைக் கொன்றவன் நன்றாக இருக்க வேண்டும்

என்று மக்கள் சொல்கின்றனர்


செய்த செயலின் விளைவு சந்தோஷமாக இருக்கிறது

எனவே செயலின் விளைவு புண்ணியம் ஆகும்


கொலை என்ற செயல் 

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கவில்லை

செயலின் விளைவு தான்

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கிறது


ஆகவே, நாம் செய்யும் செயலைப் பொறுத்து 

பாவமும், புண்ணியமும் ஏற்படுவதில்லை.

செய்யும் செயலின் விளைவைப் பொறுத்துத் தான்

பாவமும் புண்ணியமும் உண்டாகிறது 


கடவுள் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு

நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்குரிய பலன்களை

வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே தவறான விஷயம்


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////