August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-131


              ஜபம்-பதிவு-623
        (அறிய வேண்டியவை-131)

கர்ணன் :
“வேறு யார் நாட்டை
காப்பாற்றுகிறார்கள்”

சகுனி :
“மக்கள் அனைவருக்கும்
உணவு கிடைக்க
வேண்டும் என்பதற்காக
அல்லும் பகலும்
விவசாயம் செய்து
உழைத்துக்
கொண்டிருக்கிறானே
அந்த விவசாயி

மக்களுடைய
வயிற்றுப் பசியை
போக்குகிறானே
அந்த விவசாயி

மக்களுடைய
உயிரானது
பசியால் உடலை விட்டு
வெளியே போகாமல்
காப்பாற்றுகிறானே
அந்த விவசாயி

அந்த விவசாயி
இந்த நாட்டில்
உள்ள மக்களை
காப்பாற்றவில்லையா?”

“மக்கள் அனைவரும்
மானத்தோடு
வாழ வேண்டும்
என்ற காரணத்திற்காக
உடலை மறைத்து
மானத்தைக்
காப்பாற்றுவதற்காக
உடைகளைத் தைத்து
கொடுக்கிறானே
அந்த நெசவாளி

அந்த நெசவாளி
இந்த நாட்டில்
உள்ள மக்களை
காப்பற்றவில்லையா?”

“நோயினால்
பாதிக்கப்பட்ட
நோயாளிகளை
நோயின்
பாதிப்பிலிருந்து
மீட்டெடுக்கும்
மிகப் பெரும்
பணியினையினைச்
செய்து
கொண்டிருக்கிறார்களே
அந்த மருத்துவர்கள்

இறப்பின் வாசலில்
இருப்பவர்களை
இறப்பின் வாயில்
விழாமல்
இறப்பிலிருந்து
நோயாளியை
மீட்டெடுத்து
வாழ்வு கொடுக்கும்
மிகப்பெரிய
வேலையைச்
செய்கிறார்களே
அந்த மருத்துவர்கள்

அந்த மருத்துவர்கள்
இந்த நாட்டில்
உள்ள மக்களைக்
காப்பாற்றவில்லையா?”

“மக்கள் அனைவரும்
கல்வி அறிவைப் பெற்று
இந்த சமுதாயத்தில்
சுயமரியாதையுடன்
கூடிய ஒரு
மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காக
தேவையான கல்வியை
போதிக்கிறார்களே
அந்த ஆசிரியர்கள்

மடமை
இருளை நீக்கி
அறிவுக்
கண்ணைத் திறந்து
இந்த சமுதாயத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
தங்களைத் தாங்களே
காப்பாற்றிக்
கொள்வதற்குத்
தேவையான கல்வியை
போதிக்கிறார்களே
அந்த ஆசிரியர்கள்

அந்த ஆசிரியர்கள்
இந்த நாட்டில்
உள்ள மக்களைக்
காப்பாற்றவில்லையா?”

“இந்த நாட்டைக்
காப்பாற்றுவதற்காகப்
போரிடப் போகிறேன்
என்று சொன்னாலும்
உனக்கு
போரிடுவதற்குத்
தேவையான
ஆயுதங்களை செய்து
கொடுக்கிறானே
ஒரு ஆயுதம்
செய்யும் தொழிலாளி
அவன்
போரிடுவதற்குத்
தேவையான
ஆயுதங்களைச்
செய்து கொடுத்தால்
தான் உன்னால்
போரிடவே முடியும்
நாட்டைக்
காப்பாற்ற முடியும்
நீ போரிட்டு
நாட்டைக்
காப்பாற்றுவதற்குத்
தேவையான
ஆயுதங்களைச்
செய்து
கொடுக்கிறானே
அந்த ஆயுதம்
செய்யும் தொழிலாளி

அந்த ஆயுதம்
செய்யும் தொழிலாளி
இந்த நாட்டில்
உள்ள
மக்களைக்
காப்பாற்றவில்லையா?”

“இந்த நாட்டில் உள்ள
ஒவ்வொருவரும்
தாங்கள் செய்யும்
ஏதேனும் ஒரு
தொழிலின் மூலம்
இந்த நாட்டில்
உள்ள மக்கள்
அனைவரையும்
காப்பாற்றிக்
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“அப்படி இருக்கும்
போது ஒரு
போர் வீரன்
மட்டும் தான்
நாட்டைக் காப்பாற்றிக்
கொண்டு இருக்கிறான்
என்று எப்படி
சொல்ல முடியும்”

“இந்த நாட்டில்
உள்ள
ஒவ்வொருவரும்
ஏதேனும்
ஒரு வழியில்
இந்த நாட்டைக்
காப்பாற்றிக்
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“நீ ஒரு போர்
வீரன் என்பதற்காக
இந்த நாட்டைக்
காப்பாற்றிக்
கொண்டிருக்கும்
மற்றவர்களுடைய
தியாகங்களை
மற்றவர்களுடைய
செயல்களை
மற்றவர்களுடைய
உழைப்பை
மற்றவர்களுடைய
நேர்மையை
களங்கப்படுத்தாதே
கர்ணா”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-130

             ஜபம்-பதிவு-622
       (அறிய வேண்டியவை-130)

“தீட்டும் திட்டங்களை
செயல்படுத்திக்
கொண்டே
இருப்பேன்
தீட்டி
செயல்படுத்திய
திட்டங்கள்
தோல்வியில்
முடிந்தாலும்
என்னுடைய
முயற்சியை
நிறுத்தவே
மாட்டேன்
தொடர்ந்து
திட்டங்களைத்
தீட்டிக் கொண்டு
செயல்படுத்திக்
கொண்டு தான்
இருப்பேன்”

“கர்ணா நீ
சொல்வது
போல் அது
சதித்திட்டமாகவும்
இருக்கலாம்
அல்லது
நான் சொல்வது
போல் அது
ராஜ நீதியாகக்
கூட இருக்கலாம்”

கர்ணன் :
“அதனால் தான்
நான்
சதித்திட்டங்கள்
வேண்டாம்
என்கிறேன்
பாண்டவர்களுடன்
போர் செய்வோம்
என்கிறேன்”

“பாண்டவர்களை
போரில் தான்
கொல்ல வேண்டும்
என்கிறேன்”

“வீரர்களை
வீரத்துடன் தான்
கொல்ல வேண்டும்
என்கிறேன்”

“நான் ஒரு
போர் வீரனாக
இருப்பதால் தான்
எதிரிகளை
போரிட்டுத்
தான் கொல்ல
வேண்டும் என்று
சொல்கிறேன்
நீங்களும் ஒரு
போர் வீரனாக
இருந்திருந்தால்
நீங்களும்
போரிட்டுத் தான்
எதிரிகளைக்
கொல்ல
வேண்டும் என்று
சிந்தித்திருப்பீர்கள்”

சகுனி :
“நான் ஒரு
போர் வீரனா
இல்லையா
எனக்கு
சண்டையிடத்
தெரியுமா
தெரியாதா
என்று தானே
கேட்க வருகிறாய்”

கர்ணன் :
“நீங்கள் செய்யும்
செயல்களைப்
பார்த்தால்
நீங்கள் ஒரு
போர் வீரனா
என்பதில்
எனக்கு சந்தேகம்
ஏற்படத் தான்
செய்கிறது “

சகுனி :
“நான் ஒரு போர்
வீரனா என
சந்தேகப்படுகிறாய்”

“ஆனால் நீ ஒரு
போர் வீரன் என்று
உன்னை நீயே
சொல்லிக்
கொள்கிறாய்”

“நான் ஒரு
போர் வீரனாக
இருக்கிறேன்
என்று சொல்லிக்
கொள்கிறாயே
நீ ஒரு போர்
வீரனாக இருந்து
கொண்டு என்ன
செய்ய வேண்டும்
என்று நினைத்துக்
கொண்டிருக்கிறாய்”

கர்ணன் :
“பாண்டவர்கள்
அனைவரையும்
போரிட்டு
அழித்து விட்டு
துரியோதனன்
இந்த நாட்டை
அரசாட்சி
செய்யும்படி
செய்ய
வேண்டும் என்று
நினைத்துக்
கொண்டிருக்கிறேன்”

சகுனி :
“நானும் அதையே
தான் செய்து
கொண்டிருக்கிறேன்”

கர்ணன் :
“ஆனால்
நீங்கள் அதை
சதி வேலையின்
மூலமாக
அல்லவா செய்து
கொண்டிருக்கிறீர்கள்
ஒரு போர் வீரனாக
இருந்து கொண்டு
இந்த காரியத்தை
செய்யவில்லையே”

“ஒரு போர்
வீரனால் மட்டுமே
எதிரிகளிடமிருந்து
நாட்டை
பாதுகாக்க
முடியும்
ஒரு போர்
வீரனால் மட்டுமே
எதிரிகளிடமிருந்து
நாட்டை
காப்பாற்ற
முடியும்”

சகுனி :
“நான் ஒரு
போர் வீரன்
நான் ஒரு
போர் வீரன்
என்று தொடர்ந்து
சொல்லிக்
கொண்டிருக்காதே
கர்ணா”

“போர் வீரர்கள்
தான் நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்
போர் வீரர்கள்
தான் நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்
என்று தொடர்ந்து
கத்திக்
கொண்டிருக்காதே
கர்ணா”

“போர் வீரர்கள்
மட்டும் தான்
நாட்டைக்
காப்பாற்றுகிறார்களா
வேறு யாரும்
நாட்டை
காப்பாற்றவில்லையா”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-129


                ஜபம்-பதிவு-621
          (அறிய வேண்டியவை-129)

கர்ணன்  :
“உங்களை எப்படி
கிருஷ்ணனுடன்
இணைத்து
பேசுகிறீர்கள்
நீங்களும்
கிருஷ்ணனும்
எப்படி
ஒன்றாவீர்கள்”

சகுனி :
“துரியோதனனுக்கு
மாமா இந்த சகுனி
அதைப்போல்
யுதிஷ்டிரனுக்கு
மாமா அந்த
வாசுதேவ
கிருஷ்ணன்
திருதராஷ்டிரனுக்கு
இழைக்கப்பட்ட
அநீதி
திருதராஷ்டிரனுடைய
மகனான
துரியோதனனுக்கும்
இழைக்கப்படக்கூடாது
என்று நான்
போராடுகிறேன்”

“திருதராஷ்டிரனுக்கு
தடுக்கப்பட்ட
அரசாளும் உரிமை
துரியோதனனுக்கும்
தடுக்கப்படக்கூடாது
துரியோதனனுக்கு
கிடைக்க
வேண்டும்
என்பதற்காக நான்
போராடுகிறேன்”

“பாண்டுவிற்குக்
கிடைத்த
அரசாட்சி
செய்யும் உரிமை
பாண்டுவின்
மகனான
யுதிஷ்டிரனுக்கும்
கிடைக்க
வேண்டும் என்று
கிருஷ்ணன்
போராடுகிறார்”

“துரியோதனனுக்குக்
கிடைக்க
வேண்டிய
உரிமைகளுங்காக
நான்
போராடுகிறேன்
யுதிஷ்டிரனுக்கு
அரசாட்சி
கிடைக்க வேண்டும்
என்று கிருஷ்ணன்
போராடுகிறார்”

“துரியோதனனை
அரியணையில்
அமர்த்துவதற்காக
நான்
திட்டங்களைத்
தீட்டுகிறேன்
யுதிஷ்டிரனை
அரியணையில்
ஏற்றுவதற்காக
கிருஷ்ணன்
திட்டங்களைத்
தீட்டுகிறார்”

“நான் செய்வதைத்
தான் கிருஷ்ணன்
செய்கிறார்
கிருஷ்ணன்
செய்வதைத்
தான் நான்
செய்கிறேன்
இந்த உலகம்
நான் செய்வதை
சதித்திட்டம்
என்கிறது
ஆனால்
இந்த உலகம்
கிருஷ்ணன்
செய்வதை
கடவுளின் லீலை
என்கிறது “

“இந்த உலகம்
நான் செய்வதை
அதர்மச் செயல்
என்கிறது
ஆனால் நான்
செய்வதைத் தான்
கிருஷ்ணனும்
செய்கிறார்
இந்த உலகம்
கிருஷ்ணன்
தர்மச் செயல்
புரிகிறார்
என்கிறது “

“நான் செய்வதைத்
தான்
கிருஷ்ணனும்
செய்கிறார்
என்னை திட்டும்
உலகம் ஏன்
கிருஷ்ணனை
திட்டுவதில்லை”

“இந்த உலகம்
ஒருவரை
நல்லவர்
என்று சொல்லி
விட்டால்
அந்த நல்லவர்
எந்த கெடுதல்கள்
செய்தாலும்
அவைகளை
இந்த உலகம்
கெடுதல்களாகப்
பார்க்காது
ஆனால் இந்த
உலகம் ஒருவரை
கெட்டவன் என்று
சொல்லி விட்டால்
அவர் எவ்வளவு
நல்லது
செய்தாலும்
அந்த
நல்லவைகளை
நல்லவைகளாகப்
பார்க்காது”

“இது தான்
என்னுடைய
செயல்களிலும்
நடைபெற்று
இருக்கிறது”

“என்னை
சதி வேலை
செய்பவன் என்று
சொல்லும்
இந்த உலகம்
கிருஷ்ணனை
சதி வேலை
செய்பவன் என்று
சொல்வதில்லை”

“இதிலிருந்து
தெரியவில்லையா
இந்த உலகம்
தனக்கு
தேவைப்படுபவர்களை
உயர்ந்த நிலையில்
வைத்து
அழகு பார்க்கும்
தனக்கு
தேவைப்படாதவர்களை
தாழ்ந்த நிலையில்
வைத்து இழிவு
படுத்தும் என்று “

“இந்த உலகம்
என்னை திட்டுகிறது
என்பதற்காக
நான் தீட்டும்
திட்டங்களை
நிறுத்தி விட
மாட்டேன்
துரியோதனனை
அரியணையில்
ஏற்றுவதற்காக
எத்தனை
திட்டங்களை
வேண்டுமானாலும்
தொடர்ந்து
தீட்டிக் கொண்டே
இருப்பேன்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////