March 25, 2022

ஜபம்-பதிவு-713 (சாவேயில்லாத சிகண்டி-47)

 ஜபம்-பதிவு-713

(சாவேயில்லாத

சிகண்டி-47)

 

(காசி நகரத்தை

விட்டு வெளியே

வந்த அம்பை

யோசித்தாள்.

காதலனும் கைவிட்டான்.

பெற்றோர்களும்

கைவிட்டார்கள்.

அனாதையாக நின்று

கொண்டிருக்கும்

தன்னுடைய இந்த

இழிநிலைக்கு காரணமான

பீஷ்மனைக்

கொன்றே

ஆக வேண்டும்.

 

அதற்காக தவம்

கற்றுக் கொள்ள

வேண்டும் என்ற

எண்ணத்துடன்

நகரத்திற்கு வெளியில்

பரிசுத்தமான

ஒழூக்கத்தையுடையவர்களும்

மகாத்மாக்களுமான

தவசிகளுடைய

ஆசிரமத்தை அடைந்தார்.

 

அந்த ஆசிரத்தில்

மகானும், கடுமையான

விரதமுடையவரும்,

தவத்தில் சிறந்தவரும்,

சாஸ்திர விஷயத்திலும்,

உபநிஷத் விஷயத்திலும்

குருவுமான

சைகாவத்யர் பார்த்தார்.

அம்பையிடம் பேசினார்.)

 

சைகாவத்யர் :

தலைவிரி

கோலத்துடனும்

அழுக்கடைந்த

உடையுடனும்

சாப்பிடாமல்

இருந்தததால்

மெலிந்த உடலுடனும்

தூங்காமல்

விழித்திருந்ததால்

பாதிப்படைந்த

கண்களுடனும்

காணப்படும் பெண்ணே

நீ யார்

 

அம்பை :

நான்

 

காசி நாட்டின்

மன்னன் பீமதேவனின்

மூத்த மகள்

 

என்னுடைய

பெயர் அம்பை

 

சைகாவத்யர் :

பீஷ்மரால் சிறை

எடுக்கப்பட்டவள்

 

அம்பை :

இல்லை

பீஷ்மரால்

வாழ்வை இழந்தவள்

 

சைகாவத்யர் :

எதற்காக இங்கே

வந்திருக்கிறீர்கள்

 

அம்பை :

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

அதற்காக

வந்திருக்கிறேன்

 

சைகாவத்யர் :

தவறான

இடத்திற்கு

வந்திருக்கிறீர்கள்

 

அம்பை :

சரியான இடத்திற்குத்

தான் வந்திருக்கிறேன்

 

சாதாரண பெண்ணாக

இருக்கும் என்னால்

சக்தி படைத்த

பீஷ்மரைக்

கொல்ல முடியாது

 

தவம் செய்து

சக்தி பெற்று

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

அதற்காக தவம்

கற்றுக் கொள்ள

வந்திருக்கிறேன்

 

இந்த உலக

வாழ்க்கையைத்

துறந்து விட்டு

வந்திருக்கிறேன்

 

வன வாழ்க்கையை

மேற்கொள்வதற்காக

வந்திருக்கிறேன்

 

என்னுடைய

லட்சியத்தை

நிறைவேற்றுவதற்காக

தவம் செய்வது

எப்படி என்பதை

எனக்குக்

கற்றுத் தருவீர்களா

 

சைகாவத்யர் :

ஒருவரைக்

கொல்வதற்காக

தவம் செய்வது

தவறல்லவா

 

அம்பை :

தவறு கிடையாது

 

ஒருவரைக்

கொல்வதற்காக

தவம் செய்வது

தவறு கிடையாது

 

தவறாக இருந்தால்

மந்திரத்தின் மூலம்

ஒருவரைக்

கொல்வதற்காக

மாரணம்

என்ற ஒன்றை

அஷ்டகர்ம

பிரயோகத்தில்

வைத்திருப்பார்களா

 

தனக்கும்

தன்னைச்

சார்ந்தவர்களுக்கும்

கெடுதல்

விளைவிப்பவர்களை

மாரணத்தைப்

பயன்படுத்தி

கொல்வதற்காகத் தானே

அஷ்டகர்ம

பிரயோகத்தில்

மாரணம் என்ற

ஒன்றை

வைத்திருக்கிறார்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////

March 06, 2022

ஜபம்-பதிவு-712 (சாவேயில்லாத சிகண்டி-46)

 ஜபம்-பதிவு-712

(சாவேயில்லாத

சிகண்டி-46)

 

உடலின் வலி

மனதின் வலி

ஆகிய

இரண்டையும்

ஒன்றாக

அனுபவித்து

கொஞ்சம்

கொஞ்சமாகத் தான்

நீ இறப்பாய்

 

உன் கண்

முன்னால்

அஸ்தினாபுரத்தின்

வாரிசுகள்

ஒருவொருக்கொருவர்

அடித்துக் கொண்டு

இறப்பதை

தடுக்க முடியாமல்

பார்த்து

விட்டுத் தான்

இறக்கப்

போகிறாய்

 

அஸ்தினாபுரத்தின்

அழிவை

அஸ்தினாபுரத்தின்

மக்களின்

அழிவை

அஸ்தினாபுரத்தின்

வாரிசுகளின்

அழிவை

உன்னுடைய

கண்களால்

பார்த்து

விட்டு தான்

இறக்கப்

போகிறாய்

 

நீ பெற்ற

வரமே

உனக்கு

சாபமாக

மாறப்போகிறது

பீஷ்மா

இன்று முதல்

உன்னுடைய

அழிவு

ஆரம்பமாகப்

போகிறது

 

இந்த அவையில்

உன்னுடைய

இறப்பு

குறிக்கப்பட்டு

விட்டது

 

அம்பையின்

அம்புகளால்

இறப்பதற்கு

தயாராக இரு

பீஷ்மா

 

தயாராக இரு

 

பீஷ்மா

உன்னுடைய

சாவு என் கையில்

என்னுடைய

கையில்

 

(என்று

ஆவேசமாகப்

பேசிவிட்டு

தலைவிரி

கோலத்துடன்

அந்த அவையை

விட்டு

வெளியேறினாள்

அம்பை)

 

(பதினெட்டு நாள்

நடந்த

குருஷேத்திரப் போரில்

பத்தாம்

நாளில்

யாரராலும்

அழிக்க

முடியாத

பீஷ்மரை

சிகண்டியாக

மாறிய அம்பை

தன்னுடைய

அம்புகளால்

பீஷ்மரின்

நெஞ்சை

பிளந்தாள்

 

அம்பை

சிகண்டியாக

எப்படி

மாறினாள்

என்பதைத்

தெரிந்து

கொள்ள

அம்பையைப்

பின்

தொடருவோம்)

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-711 (சாவேயில்லாத சிகண்டி-45)

 ஜபம்-பதிவு-711

(சாவேயில்லாத

சிகண்டி-45)

 

பிரம்மச்சாரியாக

இருந்தால்

அனைத்தையும்

துறந்தவனாக

இருக்க வேண்டும்

ஆனால் நீ

அனைத்தையும்

அனுபவித்துக்

கொண்டிருப்பவனாக

இருக்கிறாய்

அப்படி

இருக்கும் போது

உன்னை எப்படி

பிரம்மச்சாரியாக

ஏற்றுக்

கொள்ள முடியும்

 

நியாயம் கேட்டு

போராடிக்

கொண்டிருக்கும்

இளவரசியாக

இருந்த எனக்கே

நியாயம்

கிடைக்கவில்லை

என்றால்

இந்த உலகத்தில்

உள்ள ஒரு

சாதாரண பெண்ணுக்கு

அநீதி

இழைக்கப்பட்டால்

எப்படி நியாயம்

கிடைக்கும்

 

பணம்

பதவி

அதிகாரம்

ஆகியவற்றைக்

கொண்டிருப்பவர்கள்

எப்படி நியாயம்

வழங்குவார்கள்

 

இளவரசியாய்

இருந்த நான்

யாரும் இல்லாத

அனாதையாக

இப்படி நிற்பதற்கும்

நிர்க்கதியாக

நிற்பதற்கும்

வாழ்விழந்து

நிற்பதற்கும்

காரணமான பீஷ்மனை

நான் சும்மா

விடப்போவதில்லை

 

நான் சபதம்

ஏற்கிறேன்

இந்த அம்பை

சபதம் ஏற்கிறேன்

இந்த சபையில்

உள்ள அனைவர்

முன்னிலையிலும்

இந்த அம்பை

சபதம் ஏற்கிறேன்

 

அந்த வானத்தின்

மீது சத்தியம்

இந்த பூமியின்

மீது சத்தியம்

இறந்த காலம்

நிகழ் காலம்

எதிர்காலம் ஆகிய

முக்காலங்களின்

மீதும் சத்தியம்

 

பஞ்ச பூதங்களின்

மீது சத்தியம்

இந்த உலகத்தில்

உள்ள

ஓரறிவு முதல்

ஆறறிவு வரை

உள்ள அனைத்து

உயிரினங்களின்

மீதும் சத்தியம்

இந்த பிரபஞ்சத்தை

இயக்கிக்

கொண்டிருக்கும்

கடவுளின்

மீது சத்தியம்

முபபத்து முக்கோடி

தேவர்களின்

மீதும் சத்தியம்

மும்மூர்த்திகளின்

மீதும் சத்தியம்

இந்த உலகத்தில்

பிறந்தவர்கள்

இனி பிறக்கப்

போகிறவர்கள்

அனைவர்

மீதும் சத்தியம்

இந்த உலகத்தில்

இறந்தவைகள்

இனி இறக்கப்

போகிறவைகள்

அனைத்தின்

மீதும் சத்தியம்

 

மரணமற்றவன்

என்று தன்னை

சொல்லிக் கொள்ளும்

இந்த பீஷ்மனை

விரும்பும் போது

தான் மரணம்

என்று வரம்

பெற்று இருக்கும்

இந்த பீஷ்மனை

நான் கொல்லுவேன்

இந்த அம்பையின்

கையால் தான்

பீஷ்மனுக்கு சாவு

 

நான் விடும்

அம்பு தான்

பீஷ்மனுடைய

நெஞ்சை

இரண்டாகப் பிளக்கும்

 

பீஷ்மா

மரணம் என்பது

உனக்கு

உடனே

கிடைத்து விடாது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-710 (சாவேயில்லாத சிகண்டி-44)

 ஜபம்-பதிவு-710

(சாவேயில்லாத

சிகண்டி-44)

 

பரதவர்

குல மன்னனின்

மகள் சத்தியவதியை

திருமணம்

செய்து கொண்டு

அஸ்தினாபுரத்தின்

எல்லையை

மேலும்

விரிவாக்கம்

செய்யவும்

படைவலிமையை

மேலும்

பெருக்கவும்

சந்தனு மகாராஜா

முடிவு செய்த போது

பரதவர் குல மன்னன்

தன்னுடைய

மகள்

சத்தியவதி தான்

பட்டமகிஷியாக

வேண்டும் என்றும்

அவளுடைய

வாரிசுகள் தான்

அரசாள வேண்டும்

என்றும்

சத்தியவதியின்

தந்தை

வேண்டுகோள்

வைத்ததால்

எதுவும் செய்ய

முடியாமல்

இருந்த நீ

சூழ்நிலையின்

காரணமாகத் தான்

பிரம்மச்சரியம்

என்ற வேஷத்தையும்

திருமணம் செய்து

கொள்ள

மாட்டேன் என்ற

சபதத்தையும்

ஏற்றாய்

 

ஆமாம்

சந்தனு மகாராஜாவும்

நீயும் சேர்ந்து போட்ட

சதித் திட்டம் தான்

நீ போட்டிருக்கும்

இந்த பிரம்மச்சரியம்

என்ற வேஷம்

 

ஆமாம்

பிரம்மச்சரியம்

என்பது

நீ உண்மையாக

ஏற்றுக் கொண்டது

கிடையாது

இந்த உலகத்தை

ஏமாற்றுவதற்காக

நீ போட்டிருக்கும்

வேஷம்

 

அரசியலுக்காகவும்

உன்னுடைய

பெருமைக்காகவும்

நீ போட்டிருக்கும்

வேஷம்

 

அரியணைக்கு

ஆசைப்படாதவன் என்பதை

இந்த உலகம்

நம்ப வேண்டும்

என்பதற்காக

நீ போட்டிருக்கும்

வேஷம்

 

பெண்களின் மேல்

ஆசை

இல்லாதவன் என்று

இந்த உலகத்தை

நம்ப வைக்க

வேண்டும்

என்பதற்காக

நீ போட்டிருக்கும்

வேஷம்

 

நீ பிரம்மச்சரியம்

என்ற வேஷத்தைப்

போட்டுக் கொண்டு

இருப்பது

அரியணையில் அமரும்

அரசர்களை ஆட்டி

வைப்பதற்காகவும்

தலையாட்டி

பொம்மைகளாக

அவர்களை ஆட

வைப்பதற்காகவும்

நீ எண்ணியதை

நிறைவேற்றுவதற்காகவும்

நீ விரும்பியதை

செயல்படுத்துவதற்காகவும்

உன் இஷ்டப்படி

அரசாட்சி

செய்வதற்காகவும்

தான்

 

நீ உண்மையாகவே

பிரம்மச்சாரியாக

இருந்திருந்தால்

உறவுகள்

அனைத்தையும்

அறுத்து விட்டு

ராஜ போகங்களைத்

துறந்து விட்டு

துறவறத்தை

மேற்கொண்டு

காட்டிற்குள்

தவமியற்றச் சென்று

இருக்க வேண்டும்

 

ஆனால் இவைகள்

எதையும் செய்யாமல்

அரியணையைப்

பாதுகாக்கிறேன்

என்று மக்களை

ஏமாற்றிக் கொண்டு

ராஜபோகங்களை

அனுபவித்துக்

கொண்டிருக்கிறாய்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////