ஜபம்-பதிவு-710
(சாவேயில்லாத
சிகண்டி-44)
பரதவர் 
குல மன்னனின்
மகள் சத்தியவதியை
திருமணம் 
செய்து கொண்டு
அஸ்தினாபுரத்தின் 
எல்லையை 
மேலும் 
விரிவாக்கம் 
செய்யவும்
படைவலிமையை 
மேலும்
பெருக்கவும் 
சந்தனு மகாராஜா
முடிவு செய்த போது
பரதவர் குல மன்னன்
தன்னுடைய 
மகள் 
சத்தியவதி தான் 
பட்டமகிஷியாக 
வேண்டும் என்றும்
அவளுடைய 
வாரிசுகள் தான் 
அரசாள வேண்டும் 
என்றும் 
சத்தியவதியின் 
தந்தை
வேண்டுகோள் 
வைத்ததால்
எதுவும் செய்ய 
முடியாமல்
இருந்த நீ
சூழ்நிலையின் 
காரணமாகத் தான்
பிரம்மச்சரியம் 
என்ற வேஷத்தையும்
திருமணம் செய்து 
கொள்ள 
மாட்டேன் என்ற 
சபதத்தையும் 
ஏற்றாய்
ஆமாம்
சந்தனு மகாராஜாவும்
நீயும் சேர்ந்து போட்ட 
சதித் திட்டம் தான்
நீ போட்டிருக்கும்
இந்த பிரம்மச்சரியம்
என்ற வேஷம்
ஆமாம்
பிரம்மச்சரியம்
என்பது
நீ உண்மையாக 
ஏற்றுக் கொண்டது 
கிடையாது
இந்த உலகத்தை 
ஏமாற்றுவதற்காக 
நீ போட்டிருக்கும் 
வேஷம்
அரசியலுக்காகவும்
உன்னுடைய 
பெருமைக்காகவும் 
நீ போட்டிருக்கும் 
வேஷம்
அரியணைக்கு 
ஆசைப்படாதவன் என்பதை 
இந்த உலகம் 
நம்ப வேண்டும் 
என்பதற்காக 
நீ போட்டிருக்கும் 
வேஷம்
பெண்களின் மேல் 
ஆசை 
இல்லாதவன் என்று 
இந்த உலகத்தை 
நம்ப வைக்க 
வேண்டும் 
என்பதற்காக 
நீ போட்டிருக்கும் 
வேஷம்
நீ பிரம்மச்சரியம்
என்ற வேஷத்தைப் 
போட்டுக் கொண்டு 
இருப்பது
அரியணையில் அமரும் 
அரசர்களை ஆட்டி 
வைப்பதற்காகவும்
தலையாட்டி 
பொம்மைகளாக 
அவர்களை ஆட 
வைப்பதற்காகவும்
நீ எண்ணியதை 
நிறைவேற்றுவதற்காகவும்
நீ விரும்பியதை 
செயல்படுத்துவதற்காகவும்
உன் இஷ்டப்படி 
அரசாட்சி 
செய்வதற்காகவும்
தான்
நீ உண்மையாகவே 
பிரம்மச்சாரியாக 
இருந்திருந்தால்
உறவுகள் 
அனைத்தையும் 
அறுத்து விட்டு
ராஜ போகங்களைத் 
துறந்து விட்டு
துறவறத்தை 
மேற்கொண்டு 
காட்டிற்குள் 
தவமியற்றச் சென்று 
இருக்க வேண்டும்
ஆனால் இவைகள் 
எதையும் செய்யாமல்
அரியணையைப் 
பாதுகாக்கிறேன் 
என்று மக்களை 
ஏமாற்றிக் கொண்டு 
ராஜபோகங்களை 
அனுபவித்துக் 
கொண்டிருக்கிறாய்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment