ஜபம்-பதிவு-702
(சாவேயில்லாத
சிகண்டி-36)
இதனால் 
விரும்பத்தகாத 
விளைவுகள் ஏற்படும்
இத்தகைய ஒரு 
சூழ்நிலை உருவாக 
நான் விரும்பவில்லை
என்னுடைய நாட்டு 
மக்கள் பாதிப்பு
அடைவதை 
நான் பார்த்துக் 
கொண்டு சும்மா 
இருக்க முடியாது
உங்களை ஏற்றுக் 
கொள்ள முடியாது
அம்பை :
காசி நாட்டு 
அரசியாக என்னை 
ஏற்றுக் கொள்ள 
வேண்டாம்
உங்களுடைய மகளாக 
என்னை ஏற்றுக் 
கொள்ளுங்கள்
பீமதேவன் :
பீஷ்மர் உங்களை
எப்போது சிறை 
எடுத்துச் சென்றாரோ
அப்போதே நீங்கள் 
அஸ்தினாபுரத்தின் 
சொத்து
அஸ்தினாபுரத்திற்கு 
சொந்தமானவர் 
நீங்கள்
என்னுடைய மகள் 
கிடையாது
அப்புறம் எப்படி 
உங்களை மகளாக 
ஏற்றுக் கொண்டு 
அடைக்கலம் 
அளிக்க முடியும்
அம்பை :
வாழ்விழந்த 
அபலைப் 
பெண் ஒருத்தி 
தங்கள் நாட்டில் 
தஞ்சம் கேட்டு 
வந்திருக்கிறார் 
என்று நினைத்து 
அகதியாக
ஏற்றுக் கொள்ளுங்கள்
பீமதேவன் :
ஏற்றுக் கொள்ள 
முடியாது
அம்பை :
என்னுடைய தாயை 
நான் தனிமையில் 
சந்தித்துப் பேச
வேண்டும்
என் மனதில் உள்ள 
குறைகளை 
அவரிடம் 
சொல்ல வேண்டும்
என்னுடைய 
கவலைகளை 
அவரிடம் கொட்டித் 
தீர்க்க வேண்டும்
என்னுடைய இந்த 
கோரிக்கையையாவது
ஏற்றுக் கொள்வீர்களா
பீமதேவன் :
ஏற்றுக் கொள்ள 
முடியாது
நீங்கள் 
அஸ்தினாபுரம் 
செல்லலாம்
(அம்பை பொறுமை 
இழந்து பேசத் 
தொடங்கினாள்)
அம்பை :
அஸ்தினாபுரம்
செல் என்று 
கட்டளையிடும்
உரிமை உங்களுக்கு 
இல்லை
ஏனென்றால்
நான் காசி நாட்டின்
இளவரசியும்
இல்லை
உங்கள் மகளும்
இல்லை
காசி நாட்டை
விட்டு வெளியே
செல் என்று
கட்டளையிடும்
உரிமை மட்டுமே
உங்களுக்கு
இருக்கிறது
ஏனென்றால்
நீங்கள் இந்நாட்டின் 
மன்னர்
பீமதேவா
(அம்பை தன்னுடைய 
தந்தையைப் பெயர் 
சொல்லி அழைத்ததும் 
அங்கிருந்தவர்கள் 
அனைவரும் அதிர்ச்சி 
அடைந்தனர். 
அதிர்ச்சியுடன் 
அம்பையைப் 
பார்த்தனர். 
எதையும் கண்டு 
கொள்ளாமல் 
அம்பை தன்னுடைய 
பேச்சைத் 
தொடர்கிறாள்)
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment