ஜபம்-பதிவு-705
(சாவேயில்லாத
சிகண்டி-39)
இந்த உலகத்தில் 
ஒரு பெண் 
தலையாட்டி 
பொம்மையாக
அடிமையாக
உணர்ச்சியற்ற 
பிண்டமாகத்
தான் வாழ 
வேண்டுமா
சுய உணர்ச்சியுடன் 
வாழ விட 
மாட்டீர்களா
ஆணுக்குத் தான் 
ஒரு பெண்ணை 
காதலிக்கும் உரிமை 
காதலை 
சொல்லும் உரிமை 
காதலித்தவளை 
திருமணம் செய்யும் 
உரிமை உண்டா
ஏன் பெண்ணுக்கு 
இல்லையா
அமைதியாக இருந்தால் 
அடக்கமாக பெண்
அநீதியை எதிர்த்து 
போராடினால் 
கெட்ட பெண்ணா
மற்றவர்கள் 
சொற்படி கேட்டு 
நடந்தால் 
நல்ல பெண்
சொல்லும் 
சொல்லில் தவறு 
இருக்கிறது என்று 
எதிர்த்துக் கேள்வி 
கேட்டால் 
கெட்ட பெண்ணா
தவறுக்கு 
துணை போனால் 
நல்ல பெண் 
தவறுக்கு துணை 
போகவில்லை என்றால் 
கெட்ட பெண்ணா
ஆணிற்கு 
அடங்கி நடந்தால் 
குடும்ப பெண்
அடங்காமல் இருந்தால் 
குடும்பத்திற்கு 
லாயக்கில்லாத பெண்ணா
பெண்களை 
இந்த சமூகம் 
அடிமையாகத் தான்
வைத்திருக்கிறது
அடிமையாக 
வைக்கத் தான் 
நினைக்கிறது
பெண்களுக்குள்ள 
உரிமையை 
கொடுப்பதற்கு 
அது 
நினைப்பதேயில்லை
பெண்களுக்கான 
உரிமையை இந்த 
சமூகம் 
தருவதேயில்லை
பெண்களுக்கு 
சுதந்திரம் 
கொடுக்கிறோம் என்று 
சொல்லிவிட்டு 
கொடுப்பதேயில்லை
காசி நாட்டில் 
பெண்கள் தங்கள் 
கணவரை தாங்களே 
தேர்ந்தெடுக்க 
வேண்டும்
என்ற 
காரணத்திற்காகத் 
தான் சுயம்வரம் 
நடத்துகிறோம் 
என்று சொன்ன 
பீமதேவன் 
தன் மகள் 
விரும்பிய ஆணுக்கு 
திருமணம் செய்து 
வைக்க முடியவில்லை
சிறை எடுத்துச் 
சென்றவரிடமிருந்து
தன் மகளை 
காப்பாற்ற 
முடியவில்லை
பெற்ற மகளைக் 
காப்பாற்ற முடியாது 
என்று சொன்ன
கையாலாகாத 
பெற்றோர்களிடம் 
அடைக்கலம் கேட்டு 
வந்ததை எண்ணி 
வெட்கப்படுகிறேன்
இந்த உலகத்தில் 
அம்பையின் பெயர் 
இருக்கும் வரைக்கும்
பெற்ற மகளை 
காப்பாற்ற 
வக்கில்லாதவன் 
பீமதேவன் 
என்று 
பீமதேவா 
உன்னுடைய 
பெயரும் இருக்கும்
காதலன் 
கைவிட்டாலும்
பெற்றோர்கள் 
கைவிட்டாலும்
வாழ வழி 
இல்லாமல் நிற்பாள் 
இந்த அம்பை 
என்று நினைத்தீர்களா
எதற்கும் கலங்காதவள் 
இந்த அம்பை
எந்த பிரச்சினை 
வந்தாலும் 
நேருக்கு நேராக 
சந்திப்பவள் 
இந்த அம்பை
யாருக்கும் எதற்கும் 
அஞ்சாதவள் 
இந்த அம்பை
என்பதை நினைவில் 
கொள்ளுங்கள்
(என்று அம்பை 
சொல்லி விட்டு 
அரண்மனையின் 
அறையை விட்டு 
வெளியேறும் போது 
காவலர்கள் விலகி 
வழி விட்டனர். 
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment