ஜபம்-பதிவு-706
(சாவேயில்லாத
சிகண்டி-40)
அம்பையை 
பீமதேவன், புராதேவி, 
பால்குனர் மற்றும் 
பலர் பார்த்துக் 
கொண்டு இருந்தனர். 
அம்பை 
காசி நாட்டை 
விட்டு வெளியேறி 
அஸ்தினாபுரம் நோக்கி 
சென்று 
கொண்டிருந்தார்.
அஸ்தினாபுரத்தை 
அம்பை என்ற 
புயல் தாக்க 
வருவதை 
அறியாமல் 
அஸ்தினாபுரத்தின் 
அவை நடந்து 
கொண்டிருந்தது.)
(அஸ்தினாபுரத்தின்
அவைக்குள் 
அம்பை நுழைய 
முயன்றபோது 
காவலர்கள் 
அவரை தடுத்தனர். 
தடையை மீறி 
அம்பை 
அஸ்தினாபுரத்தின் 
அவைக்குள் நுழைந்தாள். 
சிம்மாசனத்தில் 
விசித்திரவீர்யன் 
அமர்ந்து இருந்தான். 
சிம்மாசனத்திற்குச் 
சற்று கீழே 
போடப்பட்ட 
அரியணையில் 
பீஷ்மர் அமர்ந்து 
இருந்தார். 
அமைச்சர் 
மக்கள் 
என்று பலர் 
அந்த அவையில் 
இருந்தனர். )
விசித்திர வீர்யன் :
காவலர்களின் 
தடையை மீறி 
உள்ளே 
வந்திருக்கிறீர்களே
யார் நீங்கள்
அம்பை :
காசி நாட்டின் 
அரசர் பீமதேவனின் 
மூத்த மகள் அம்பை
விசித்திர வீர்யன் :
எதற்காக 
வந்திருக்கிறீர்கள்
அம்பை :
நியாயம் கேட்டு 
வந்திருக்கிறேன்
விசித்திர வீர்யன் :
அநீதி யாருக்கு 
இழைக்கப்பட்டிருக்கிறது
அம்பை :
எனக்கு
விசித்திர வீர்யன் :
நீங்கள் விரும்பும் 
வாழ்க்கையை 
தேர்ந்தெடுக்கும் 
உரிமை தான்
உங்களுக்கு 
வழங்கப்பட்டதே
அம்பை :
அதைத் தான் 
பிச்சை என்கிறார்
விசித்திர வீர்யன் :
யார்
அம்பை :
சௌபால நாட்டு 
மன்னன் சால்வன்
விசித்திர வீர்யன் :
ஏன் அவ்வாறு 
சொல்கிறார்
அம்பை :
சிறை எடுத்துச் 
சென்ற பெண்ணை 
பெறுவது 
பிச்சையாம்
சிறை எடுத்துச் 
சென்றவரை கொன்று 
அந்த பெண்ணைப் 
பெறுவது தான் 
வீரமாம்
எனவே,
பிச்சையாக வந்த 
என்னை ஏற்றுக் 
கொள்ள மறுத்து 
விட்டார்
விசித்திர வீர்யன் :
இப்போது நாங்கள் 
என்ன செய்ய 
வேண்டும் என்று 
எதிர்பார்க்கிறீர்கள்
அம்பை :
நியாயம் வழங்க 
வேண்டும்
விசித்திர வீர்யன் :
தவறு செய்த 
சால்வன் மீது 
படையெடுத்து
அவனை தண்டிக்க 
வேண்டுமா
அம்பை :
இல்லை
தவறு செய்தவன் 
சால்வன் கிடையாது
தண்டிக்கப்பட 
வேண்டியவனும் 
சால்வன் கிடையாது
நான் யாரையும் 
தண்டிக்க வேண்டும் 
என்று கேட்பதற்காகவும் 
வரவில்லை
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment