ஜபம்-பதிவு-698
(சாவேயில்லாத
சிகண்டி-32)
அறிவில்லையா 
அந்த பீஷ்மனுக்கு
பீஷ்மனுக்குத் தான் 
அறிவில்லை என்றால்
அஸ்தினாபுரத்தில் 
இருப்பவர்களுக்கும் 
அறிவில்லை 
போலிருக்கிறது
அறிவிருந்தால்
ஒரு பெண்ணை 
சிறை எடுப்பதற்கு 
முன்னர்
அந்த பெண் 
யாரையாவது 
காதலிக்கிறாளா 
என்பதைத் 
தெரிந்த பின் 
சிறை எடுக்க
வேண்டும் என்பதை
பீஷ்மனிடம்
சொல்லி இருப்பார்கள்
அம்பை :
நான் சொன்ன 
பிறகு தான்
பீஷ்மர் உட்பட
அனைவருக்கும் 
தெரியும்
நம்முடைய 
காதலைப்
புரிந்து கொண்டு 
என்னை அனுப்பி 
வைத்தார் பீஷ்மர்
சால்வன்
:
உங்களை 
அனுப்பி வைத்தார்
என்று சொல்லாதீர்கள்
உங்களை எனக்கு 
பிச்சை 
போட்டிருக்கிறான்
அந்த பீஷ்மன்
என்று சொல்லுங்கள்
உங்களை எனக்கு 
பிச்சை போட்டு
என்னை 
அவமானப்படுத்தி
இருக்கிறான்
அந்த பீஷ்மன் 
என்று சொல்லுங்கள்
என்னை பிச்சைக்காரன்
என்று நினைத்து
விட்டான் 
அந்த பீஷ்மன் 
என்று சொல்லுங்கள்
அம்பை :
மற்றவர்கள் என்ன 
நினைக்கிறார்கள் 
என்று எனக்குத்
தெரியாது
ஆனால்
நான் உங்களை 
உண்மையாகக் 
காதலித்தேன்
காதலித்துக்
கொண்டு தான்
இருக்கிறேன்
சால்வன்
:
நீங்கள் என்னை
உண்மையாகவே 
காதலித்து 
இருந்தால்
பீஷ்மன் உங்களை
சிறை எடுத்துச்
செல்லும் போதே
சொல்லி இருக்க 
வேண்டும்
நான் சால்வனைக்
காதலிக்கிறேன் என்று
அப்போதும்
சொல்லவில்லை
உங்களை மீட்பதற்காக 
நான் பீஷ்மனிடம் 
சண்டையிட்டேன்
அப்போதாவது 
சொல்லி இருக்க 
வேண்டும்
நான் சால்வனைக்
காதலிக்கிறேன்
என்று
அப்போதும் 
சொல்லவில்லை
பீஷ்மன் என்னை 
காயப்படுத்தி கீழே 
சாய்த்து விட்டுச் 
சென்றான் 
அப்போதாவது
சொல்லி 
இருக்க வேண்டும்
நான் சால்வனைக்
காதலிக்கிறேன் என்று
அப்போதும் 
சொல்லவில்லை
அம்பை :
நடந்த 
நிகழ்ச்சிகளைப் 
பார்த்து
அதிர்ச்சியில்
இருந்ததால்
சால்வனைக்
காதலிக்கிறேன்
என்று என்னால்
சொல்ல 
முடியவில்லை
மேலும் நான் 
ஒரு பெண்
ஒரு பெண்ணாக
இருக்கும் என்னால்
வெளிப்படையாக 
எப்படி 
சால்வனைக்
காதலிக்கிறேன்
என்று சொல்ல 
முடியும்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment