ஜபம்-பதிவு-703
(சாவேயில்லாத
சிகண்டி-37)
பலபேர் 
முன்னிலையில்
சிறை எடுத்துச் சென்ற
பெற்ற மகளை
காப்பாற்றத் 
தெரியாத பீமதேவா
நீ எப்படி 
காசி நாட்டில் 
உள்ள பெண்களைக்
காப்பாற்றுவாய்
காசி நாட்டு 
இளவரசியான எனக்கே 
பாதுகாப்பில்லை
காசி நாட்டில் 
வாழும் பெண்களுக்கு 
எங்கே 
பாதுகாப்பு இருக்கும்
உன்னுடைய 
மகளின் மனதைப் 
புரிந்து கொள்ளாத 
நீ எப்படி மக்களின் 
மனதைப் புரிந்து 
கொள்ளப் போகிறாய்
மகளின் துயரத்தையே 
உன்னால் போக்க 
முடியவில்லை
நீ எப்படி மக்களின் 
துயரத்தைப் 
போக்குவாய்
எதற்கும் 
லாயக்கில்லாத 
உனக்கு
நாடு எதற்கு
மணி முடி எதற்கு
சிம்மாசனம் எதற்கு
செங்கோல் எதற்கு
புராதேவி :
அம்பை
பெற்ற தந்தையை 
ஏன் பெயரைச் 
சொல்லி 
அழைக்கிறாய்
அம்பை :
என்னை
இந்த அம்பையை
மகள் இல்லை 
என்று சொல்லி 
விட்ட பிறகு
பீமதேவனை 
தந்தை என்று 
எப்படி 
அழைக்க முடியும்
பீம தேவனை 
பீமதேவன் 
என்று தானே
அழைக்க முடியும்
புராதேவி
பால்குனர் :
தந்தையையும் 
தாயையும்
இப்படித் தான் 
பெயர் சொல்லி 
அழைப்பதா
இளவரசி
அம்பை :
பெற்றோர்களுக்கு 
நான் மகள் 
இல்லை என்று 
ஆனபிறகு
பீமதேவன் 
புராதேவி என்று 
அவர்களை பெயர்
சொல்லித் தானே 
அழைக்க வேண்டும்
பால்குனரே
(இளவரசி அம்பை 
தன்னை பெயர் 
சொல்லி அழைத்ததும் 
அமைச்சர் பால்குனர் 
ஒரு கணம் 
ஆடிப்போய்விட்டார்.
இருந்தாலும், 
சமாளித்துக் கொண்டு 
பேச ஆரம்பிக்கிறார்.)
பால்குனர் :
அம்பை அவர்களே
நீங்கள் கோபத்தில் 
இருக்கிறீர்கள்
கோபத்தில் 
இருக்கும் போது 
அறிவு வேலை 
செய்யாது
அதனால் என்ன 
பேசுகிறோம்
என்பது தெரியாமல் 
பேசுகிறீர்கள்
எதை எல்லாம் 
பேசக்கூடாதோ
அதை எல்லாம் 
பேசுகிறீர்கள்
நிதானம் தடுமாறி 
பேசுகிறீர்கள்
மற்றவர்கள் மனம் 
புண்படுமே என்பதை
நினைத்துக்கூட 
பார்க்காமல் 
பேசுகிறீர்கள்
கோபம் தணிந்த 
பிறகு பேசுங்கள்
சரியாகப் பேசுவீர்கள்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment