ஜபம்-பதிவு-697
(சாவேயில்லாத
சிகண்டி-31)
(அம்பை சௌபால 
நாட்டுக்குள் பிரவேசித்து 
சால்வனின் அறைக்குள் 
நுழைகிறாள். 
அம்பையைப் 
பார்த்தவுடன் சால்வன் 
பேசத் தொடங்குகிறான்)
சால்வன்
:
அஸ்தினாபுரத்தின் 
அரசியை 
வணங்குகிறேன்
அம்பை :
இன்னும் நான் 
காசி நாட்டின் 
இளவரசி தான்
அஸ்தினாபுரத்தின் 
அரசியாகவில்லை
சால்வன்
:
பீஷ்மர் உங்களை 
சிறை எடுத்துச் 
சென்றதே
விசித்திர வீர்யனை
உங்களுக்கு
திருமணம் செய்து
வைக்கத் தானே
உங்களை
அஸ்தினாபுரத்தின் 
அரசியாக்குவதற்குத்
தானே
அம்பை :
ஆமாம் 
ஆனால் 
அச்செயல் 
நடைபெறவில்லை
சால்வன்
:
ஏன் 
நடைபெறவில்லை
அம்பை :
உண்மையைச்
சொல்ல 
வேண்டியவர்களிடம்
சொன்னேன் 
சால்வன்
:
யாரிடம்
அம்பை :
பீஷ்மரிடம்
சால்வன்
:
உண்மைக்கு இந்த 
உலகத்தில்
மதிப்பிருக்கிறதா
அம்பை :
உண்மைக்கு இந்த
உலகத்தில் 
மதிப்பிருக்கிறதா 
இல்லையா 
என்பது 
எனக்குத் தெரியாது
ஆனால் 
நான் சொன்னதை 
உண்மை என்று
உணர்ந்ததால்
பீஷ்மர்  
ஏற்றுக் கொண்டார்
சால்வன்
:
என்ன 
சொன்னீர்கள்
அம்பை :
நான் சௌபால 
நாட்டு மன்னன் 
சால்வனைக்
காதலித்தேன்
சுயம்வர மண்டபத்தில் 
சால்வனுக்கு 
மாலையிட்டு 
அவரையே திருமணம் 
செய்து கொள்ள
நினைத்தேன்
அதற்குள் 
நீங்கள் என்னை 
சிறை எடுத்து 
வந்து விட்டீர்கள்
என்று 
பீஷ்மரிடம்
சொன்னேன்
சால்வன்
:
பீஷ்மர்
என்ன சொன்னார்
அம்பை :
ஒருவரைக் 
காதலித்து விட்டு
வேறு ஒருவரை 
திருமணம் 
செய்து கொள்ளக்கூடாது 
நீங்கள் என்ன 
செய்ய வேண்டும் 
என்று 
நினைக்கிறீர்களோ
அதைச் செய்யலாம் 
என்றார் 
சால்வன்
:
ஒருவரைக் 
காதலித்து விட்டு
வேறு ஒருவரை 
திருமணம் 
செய்யக்கூடாது 
என்று சொல்லத் 
தெரிந்த 
பீஷ்மனுக்கு
ஒரு பெண்ணை 
சிறை எடுப்பதற்கு 
முன்னர் சிறை 
எடுக்கப்போகும்
பெண் யாரையாவது 
காதலிக்கிறாளா
என்பதைத் தெரிந்து 
கொள்ள வேண்டும் 
என்பது
தெரியாதா
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment