August 13, 2020

திருக்குறள்-தேரான் -பதிவு-2

 திருக்குறள்-தேரான்

-பதிவு-2

 

“நான் கண்டிப்பாக

வந்து விடுகிறேன்

நான் இருந்து

அந்த வேலையை

முடித்து தருகிறேன்

நீங்கள் நேரம்

சொல்லுங்கள்

எந்த இடத்திற்கு

வர வேண்டும்

என்று

சொல்லுங்கள்

நான் வந்து

விடுகிறேன்

என்று சொல்கிறார்”

 

“நாமும்

நாளை காலை

10 மணிக்கு

ஒரு இடத்தைக்

குறிப்பிட்டு

அந்த இடத்திற்கு

வாருங்கள்

அந்த வேலையை

முடிப்பதற்கு

உங்கள் உதவி

தேவைப்படுகிறது

வாருங்கள் என்று

சொல்கிறோம்”

 

“அவரும்

ஒத்துக் கொண்டு

நாளை காலை

10 மணி முதல்

10,30 மணிக்குள்

வந்து விடுகிறேன்

என்று வாக்கு

கொடுக்கிறார்

ஏதேனும் வேலை

இருந்தால்

வேண்டாம்

வேலை எதுவும்

இல்லை என்றால்

வாருங்கள் என்று

சொல்கிறோம்”

 

“அவரும் வேறு

வேலை

எதுவும் இல்லை

நான் வருகிறேன்

உங்களுக்காக

கண்டிப்பாக

வருகிறேன்

என்று சொல்கிறார்”

 

“நாமும்

நாம் சொன்ன

நேரமான

10 மணிக்கு

சொன்ன இடத்திற்கு

வந்து நாம்

சொன்ன

வேலையை

முடித்து தருவார்

என்று நம்பி

அவருக்கு

மாற்றாக

நாம் எந்த

ஒரு மாற்று

ஏற்பாட்டையும்

செய்யாமல்

அவர் செய்வார்

என்று நம்பி

அவருக்காக

காத்துக்

கொண்டிருக்கிறோம்”

 

“அவர் வருவார்

என்று

அவருக்காக

நாம் 10 மணிக்கு

முன்பாகவே

அந்த இடத்திற்கு

சென்று காத்துக்

கொண்டிருக்கிறோம்

அவர் பத்து

மணியாகியும்

வரவில்லை

பத்தரை

மணியாகிவும்

வரவில்லை”

 

“நாம் செய்த

போன் எதையும்

அவர்

எடுக்கவில்லை

இதனால் நம்முடைய

மனதில் பல்வேறு

கேள்விகள்

எழும்புகிறது”

 

“அவர்

வருவாரா

வர மாட்டாரா

நாம் திட்டமிட்டபடி

அந்த வேலை

இன்று

நடக்குமா

அல்லது

நடக்காதா

அந்த வேலையை

இன்று நம்மால்

முடிக்க முடியுமா

அல்லது

முடிக்க முடியாதா

என்று பல்வேறு

கேள்விகள்

மனதில்

எழுந்த வண்ணம்

இருக்கிறது”

 

“அலை பாயும்

மனதுடனும்

கவலை தோய்ந்த

நிலையுடனும்

காத்துக்

கொண்டிருக்கும்

போது

நாம் காத்துக்

கொண்டிருக்கும்

நபர் பத்தரை

மணிக்கு மேல்

போன் செய்து

நான் இப்போது

தான் கிளம்பப்

போகிறேன்

கொஞ்சம் நேரம்

ஆகிவிட்டது

நடுவில் இரண்டு

மூன்று வேலைகள்

வந்து விட்டது

அந்த வேலைகளை

முடித்து விட்டு

வருவதற்கு

நேரம்

ஆகிவிட்டது

நான் வந்து

கொண்டிருக்கிறேன்

என்கிறார்”

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------13-08-2020

/////////////////////////////////////////

No comments:

Post a Comment