November 14, 2020

அறிய வேண்டியவை-158

 

ஜபம்-பதிவு-650

(அறிய வேண்டியவை-158)

 

சகுனி :

“பீஷ்மர்

துரோணர்

விதுரர்

கிருபர்

ஆகிய நால்வரும்

அஸ்தினாபுரத்தை

காத்துக்

கொண்டிருப்பவர்கள்

என்று இந்த

சமுதாயம்

நினைத்துக்

கொண்டிருக்கிறது”

 

“இவர்கள்

நால்வரும் தான்

அஸ்தினாபுரத்தின்

அரியணையை

பாதுகாக்கும்

பாதுகாவலர்கள்

என்று இந்த

சமுதாயம் நினைத்துக்

கொண்டிருக்கிறது”

 

“இவர்கள்

நால்வரும் தான்

அஸ்தினாபுரத்தை

பாதுகாத்துக்

கொண்டிருப்பவர்கள்

என்று இந்த

சமுதாயம் நினைத்துக்

கொண்டிருக்கிறது “

 

“இவர்கள்

நால்வரும் இல்லை

என்றால்

அஸ்தினாபுரத்தை

யாராலும்

காப்பாற்ற முடியாது

என்று இந்த

சமுதாயம் நினைத்துக்

கொண்டிருக்கிறது”

 

“இவர்கள் நால்வரும்

அஸ்தினாபுரத்தை

காப்பதற்காகவே

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

என்று இந்த

சமுதாயம்

நினைத்துக்

கொண்டிருக்கிறது”

 

“ஆனால் இவர்கள்

நால்வரும்

உண்மையில்

அஸ்தினாபுரத்தை

காப்பாற்றுவதற்காகவே

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

இல்லை.”

 

“இவர்கள்

நால்வரும் வெளியில்

அஸ்தினாபுரத்தை

காப்பாற்றுவதாக

நடித்துக்

கொண்டிருப்பவர்கள்

ஆனால் உள்ளுக்குள்

பாண்டவர்களை

காக்க வேண்டும்

என்பதற்காக வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள் “

 

“அதாவது

இவர்கள் நால்வரும்

உண்மையான

வாழ்க்கையை

வாழ்வதாக இந்த

சமுதாயத்தை நம்ப

வைத்துக் கொண்டு

போலியான

வாழ்க்கையை

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“அதாவது

இவர்கள் நால்வரும்

இரட்டை வாழ்க்கை

வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள்

வெளியில் வேறொரு

வாழ்க்கையும்

உள்ளுக்குள் வேறொரு

வாழ்க்கையும் வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள்”

 

“எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழாமல் வாழ்வதற்கு

தைரியம் இல்லாமல்

போலியாக வாழ்க்கையை

ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்”

 

“இவர்கள் நால்வரும்

உண்மையான

வாழ்க்கை

வாழ முடியாமல்

போலியான வாழ்க்கை

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“இந்த சமுதாயத்திற்கு

பயந்து தன்னுடைய

உணர்வுகளை

மறைத்துக் கொண்டு

வாழ்பவர்கள்”

 

“தன்னுடைய

உணர்வுகளை

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வெளிப்படுத்தி வாழ

முடியாதவர்கள்”

 

“இத்தகைய போலியான

வாழ்க்கை வாழ்ந்து

கொண்டிருக்கும்

இவர்கள்

நால்வரிடமும் நாம்

எச்சரிக்கையாக

இருக்க வேண்டும்

மருமகனே ! “

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment