November 14, 2020

அறிய வேண்டியவை-162

 

ஜபம்-பதிவு-654

(அறிய வேண்டியவை-162)

 

துரியோதனன் :

“விதுரரை நாம்

எப்படி கணிப்பது

விதுரர் அறிவுப்

பெட்டகம் ஆயிற்றே

பாண்டவர்களுக்கு

ஒன்று என்றால்

பொங்குபவர் ஆயிற்றே

விதுரர் அறிவாளி

ஆயிற்றே”

 

சகுனி :

“அறிவை

வைத்துக் கொண்டு

ஒன்றும்

செய்ய முடியாது

அறிவு தனியாக

இயங்க முடியாது

அறிவு இயங்குவதற்கு

ஏதேனும்

ஒன்று தேவை

எந்த ஒன்றும்

இல்லாமல்

அறிவால் தனியாக

இயங்க முடியாது”

 

துரியோதனன் :

“அப்படி என்றால்

விதுரரைப் பற்றி

கவலைப்பட

வேண்டாம்

என்று சொல்ல

வருகிறீர்களா?”

 

சகுனி :

“இல்லை”

 

துரியோதனன் :

“பிறகு?”

 

சகுனி :

“அறிவு தனியாக

இயங்க முடியாது

என்றேன்

அறிவு

இயங்குவதற்கு

ஏதேனும் ஒன்று

தேவை என்று

சொன்னேன்

நான் சொன்ன

அந்த ஒன்று

தான் பீஷ்மர்”

 

“விதுரர்

தன்னுடைய

அறிவை பீஷ்மரின்

துணை கொண்டு

தான் செயல்படுத்த

முடியும்

விதுரர் தன்னுடைய

அறிவை

வெளிப்படுத்த

வேண்டும் என்றால்

அதை

செயல்படுத்துவதற்கு

பீஷ்மர் தேவை

பீஷ்மர் இல்லை

என்றால்

விதுரர் தன்னுடைய

அறிவை

செயல்படுத்த முடியாது”

 

“விதுரரின் அறிவு

இயங்குவதற்கான

ஒரு பொருள்

தான் பீஷ்மர்

எனவே, பீஷ்மர்

எங்கு இருக்கிறாரோ

அங்கு விதுரரும்

இருந்து தான்

ஆக வேண்டும்.

 

தன்னுடைய

அறிவை

வைத்துக் கொண்டு

தன்னால் செயல்பட

முடியாது என்பதை

விதுரர் உணர்ந்து

இருக்கின்ற

காரணத்தினால்

அவர் பீஷ்மர்

இருக்கும் இடத்தில்

இருந்து தான்

ஆக வேண்டும்”

 

“பீஷ்மர்

கௌரவர்கள் பக்கம்

இருந்தால் விதுரரும்

கௌரவர்கள் பக்கம்

இருந்து தான்

ஆக வேண்டும்”

 

“நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டிலும்

அதைத் தொடர்ந்து

பாண்டவர்களுக்கு

எதிராக

நடைபெறப் போகும்

நிகழ்விலும்

பீஷ்மர் ஒன்றும்

செய்ய முடியாமல்

அந்த அவையில்

அமர்ந்திருந்தார்

என்றால்

விதுரரும்

அந்த அவையில்

ஒன்றும் செய்ய

முடியாம்ல்

அமைதியாக

அமர்ந்து இருந்து

தான் ஆக வேண்டும்.

 

பீஷ்மரைச்

சார்ந்து தான்

விதுரர் இருப்பார்

என்ற காரணத்தினால்

பீஷ்மர் மேல்

கவனம் செலுத்தி

அவர் நம் பக்கம்

இருக்கும் படி

பார்த்துக் கொள்ள

வேண்டும்.

அப்படி பார்த்துக்

கொண்டாலே போதும்

விதுரர் நம்

பக்கம் தான்

இருப்பார்”

 

“அதனால் நாம்

விதுரரைப் பற்றி

கவலைப்பட வேண்டிய

அவசியம் இல்லை”

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment