November 14, 2020

அறிய வேண்டியவை-163

 

ஜபம்-பதிவு-655

(அறிய வேண்டியவை-163)

 

சகுனி :

“நாம் கவனம்

செலுத்த வேண்டியது

பீஷ்மரின் மேல் தான்”

 

துரியோதனன் :

“கிருபர்”

 

சகுனி :

“விதுரர் எப்படி

பீஷ்மருடன்

சம்பந்தப்பட்டு

இருக்கிறாரோ

அவ்வாறே கிருபரும்

துரோணருடன்

சம்பந்தப்பட்டு

இருக்கிறார்”

 

“ஆமாம்

கிருபரின்

சகோதரியான

கிருபியைத் தான்

துரோணர்

திருமணம் செய்து

கொண்டிருக்கிறார்

தனது சகோதரியின்

கணவரான

துரோணருக்கு எதிராக

கிருபர் எப்படி

எதிராக நின்று

போர் செய்ய

முடியும்

துரோணர் எங்கு

இருக்கிறாரோ

அங்கு தான்

கிருபரும்

இருந்து தான்

ஆக வேண்டும்

துரோணர் யார்

பக்கம் இருக்கிறாரோ

அவர் பக்கம் தான்

கிருபரும் இருந்து

தான் ஆக

வேண்டும்

துரோணர்

யார் சார்பாக

போரிடுகிறாரோ

அவர் பக்கம் தான்

இருந்து கிருபரும்

போர் புரிந்து தான்

ஆக வேண்டும்”

 

“கிருபர் தனிப்பட்ட

முறையில் யாருடன்

சேர்வது என்று

முடிவு எடுக்க

முடியாது

அவருடைய

விருப்பப்படி

யாருடனும்

சேர முடியாது

துரோணர் எங்கு

இருக்கிறாரோ

அங்கு தான்

கிருபரும் இருந்து

தான் ஆக வேண்டும்

என்ற கட்டாயத்தில்

இருக்கிறார் கிருபர்”

 

“ஆகவே துரோணர்

நம் பக்கம்

இருந்தால் போதும்

கிருபர் நம் பக்கம்

வந்து விடுவார்”

 

“துரோணர் நமக்கு

ஆதரவு அளித்து

விட்டால் போதும்

கிருபரும் நமக்கு

ஆதரவு அளித்துத்

தான் ஆக வேண்டும்”

 

“துரோணர் நம்

பக்கம் நின்று

போரிட்டால் போதும்

கிருபரும்

நம்முடன் இருந்து

போரிட்டு தான்

ஆக வேண்டும்”

 

“நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டிலும்

அதைத் தொடர்ந்து

பாண்டவர்களுக்கு

எதிராக நடைபெறப்

போகும் நிகழ்விலும்

துரோணர் ஒன்றும்

செய்ய முடியாமல்

அந்த அவையில்

அமர்ந்திருந்தார்

என்றால் கிருபரும்

அந்த அவையில்

ஒன்றும் செய்ய

முடியாமல்

அமைதியாக

அமர்ந்து இருந்து

தான் ஆக

வேண்டும் “.

 

“துரோணரைச்

சார்ந்து தான்

கிருபர் இருப்பார்

என்ற காரணத்தினால்

துரோணர் மேல்

கவனம் செலுத்தி

அவர் நம் பக்கம்

இருக்கும் படி

பார்த்துக் கொள்ள

வேண்டும். அப்படி

பார்த்துக் கொண்டாலே

போதும் கிருபர்

நம் பக்கம்

தான் இருப்பார்”

 

“பீஷ்மரையும்

துரோணரையும்

நம் பக்கம் இருக்கும்

படிச் செய்து

விட்டால் போதும்

விதுரரும் கிருபரும்

நம் பக்கம் தான்

இருப்பார்கள்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

 

No comments:

Post a Comment