April 24, 2021

பதிவு-3-சினமென்னும்- -திருக்குறள்

 பதிவு-3-சினமென்னும்-

-திருக்குறள்

 

நீங்கள் வேலையின்

மதிப்பை உணர்ந்து

செய்து இருந்தால்

நம்முடைய கம்பெனிக்கு

இவ்வளவு பெரிய

இழப்பும்

ஏற்பட்டிருக்காது.

குறிப்பிட்ட

காலத்திற்குள் வேலையை

முடிக்கவில்லை என்ற

அவப்பெயரும்

நம்முடைய

கம்பெனிக்கு

ஏற்பட்டிருக்காது.

 

நீங்கள் வேலையின்

மதிப்பை உணர்ந்து

செய்யாத காரணத்தினால்

கம்பெனிக்கு எவ்வளவு

இழப்புகள் அவமானங்கள்

ஏற்பட்டிருக்கிறது

என்பதைப் பாருங்கள்.

 

உங்களால் முடிக்க

முடியவில்லை என்று

உங்களுக்கு தெரிந்து

இருந்தால்

அப்போதே நீங்கள்

என்னிடம் சொல்லி

இருக்கலாம்

மேலும் ஆட்களை

வைத்து வேலையை

முடிப்பதற்கான

வழிகளை உங்களுக்கு

நான் ஏற்படுத்திக்

கொடுத்து இருப்பேன்.

 

இனி வருங்காலங்களில்

உங்களிடம் ஒரு

வேலையை ஒப்படைக்கும்

போது அந்த

வேலையை உங்களால்

முடிக்க முடியாது

என்று உங்களுக்கு

தெரிய வந்தால்

அந்த வேலையை

செய்வதற்குரிய

திறமை உங்களுக்கு

இல்லை என்று

தெரிய வந்தால்

சொல்லி விடுங்கள்

வேறு ஒரு ஆளை

வைத்து அந்த

வேலையை

நான் முடிக்கிறேன்

 

(அல்லது)

 

ஆட்கள் போதவில்லை

மேலும் ஆட்கள்

தேவை என்றால்

சொல்லுங்கள்

எவ்வளவு ஆட்கள்

தேவையோ அத்தனை

ஆட்களை நான் ஏற்பாடு

செய்து தருகிறேன்

 

(அல்லது)

 

வேலையை

முடிப்பதற்கு என்று

கொடுக்கப்பட்ட காலம்

போதாது என்றால்

சொல்லுங்கள்

அதற்கு என்ன

செய்ய முடியுமோ

அதை செய்து தருகிறேன்

 

நீங்கள் அனுபவம்

வாய்ந்தவர் என்ற

காரணத்தினாலும் ;

பல ஆண்டுகள்

நம்முடைய கம்பெனியில்

வேலை செய்தவர் என்ற

காரணத்தினாலும் ;

உண்மையானவர்

நம்பிக்கைக்குரியவர் என்ற

காரணத்தினாலும் ;

கொடுக்கும் வேலையை

ஆர்வத்துடன் செய்து

முடிப்பீர்கள் என்ற

காரணத்தினாலும் ;

நான் உங்களை

வேலையில் இருந்து

விடுவித்து

அனுப்பவில்லை.

 

ஆனால் நீங்கள்

செய்த தவறுக்கு

தண்டனை அனுபவித்து

ஆக வேண்டும் என்ற

காரணத்தினால்

கம்பெனிக்கு ஏற்பட்ட

இழப்பை ஈடுசெய்யும்

விதமாக தங்களுடைய

சம்பளத்தில் இருந்து

மாதாமாதம் ஒரு

குறிப்பிட்ட தொகையை

பிடித்தம் செய்ய

உத்தரவிட்டிருக்கிறேன்.

 

இது தான் நான்

உங்களுக்கு தரும்

தண்டனை

இந்த தண்டனையில்

நான் எந்தவிதமான

சமரசமும் செய்து

கொள்ள விரும்பவில்லை.

 

அனைவரிடமும் கலந்து

ஆலோசித்த பிறகே

இந்த தண்டனையை

நான் உங்களுக்கு

வழங்குகிறேன்

வருங்காலங்களில்

இனி இது போல்

ஒரு தவறு ஏற்படாத

வண்ணம் பார்த்துக்

கொள்ளுங்கள்.

 

இதற்கு மேல்

நான் எதுவும்

சொல்வதற்கில்லை.

 

இனி மேலாவது

கொடுக்கப்பட்ட

வேலையின் அவசியம்

உணர்ந்து செயல்படுங்கள்

இனி மேல்

இது போல்

ஒரு தவறு ஏற்படுவதை

நான் விரும்பவில்லை.

 

கடைசியாக ஒன்றே

ஒன்று தான் நான்

சொல்வேன்

இனி இதுபோல்

ஒரு தவறு

ஏற்படக் கூடாது

இனி இது போல்

ஒரு தவறு

ஏற்படுவதை நான்

விரும்பவில்லை

அப்படி ஏற்பட்டால்

என்ன செய்வேன்

என்பதை நான்

செய்யும் போது

தெரிந்து கொள்வீர்கள்

 

இதற்கு மேல்

நான் சொல்வதற்கு

ஒன்றும் இல்லை

நீங்கள் செல்லலாம்

என்று கம்பெனியின்

முதலாளி தவறு

செய்த தன்னுடைய

மேனேஜரை

கோபத்துடன் திட்டி

அனுப்புகிறார்

 

முதலாளி நிகழ்வால்

பாதிக்கப்பட்டவர்

மேனேஜர் நிகழ்வின்

தவறுக்கு காரணமானவர்

முதலாளியிடம்

வெளிப்பட்ட

கோபம் அறிவுடன்

வெளிப்பட்ட கோபம்

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment