April 24, 2021

பதிவு-7-சினமென்னும்- -திருக்குறள்

 பதிவு-7-சினமென்னும்-

-திருக்குறள்

 

ஒருவரையொருவர்

விரும்பத்தகாத

வார்த்தையினால்

வாயினால்

சண்டையிட்டுக்

கொண்டு இருந்தவர்கள் ;

கைகளினால்

அடித்துக் கொள்ளுதல் ;

கட்டிப் புரண்டு

சண்டை போடுதல் ;

ஆயுதம் எடுத்து

தாக்கிக் கொள்ளுதல் ;

என்ற நிலை உருவாகி

யாரேனும் ஒருவர்

மற்றரை

குத்தி கொலை

செய்து விடுவார்

 

அறிவின்றி

கோபம் கொண்டு

செயல்பட்ட இருவரில்

யாரேனும் ஒருவர்

இறந்து விட்டால்

கத்தியால் குத்தியவர்

சிறை சென்று விடுவார்

கத்தியால் குத்தியவர்

குடும்பமும் துன்பத்தை

அனுபவிக்க வேண்டும் ;

அவமானங்களைச்

சந்திக்க வேண்டும் ;

இழப்புகளை

ஏற்க வேண்டும் .

இறந்தவருடைய

குடும்பமும்

துக்கத்தில் வாடும் ;

இழப்பினால் வருந்தும் ;

துன்பத்தில் துவளும் ;

ஆக மொத்தம்

இருவருடைய

குடும்பமும்

வேதனையில் வாடும்.

 

இருவருடைய குடும்பமும்

மிகப்பெரிய

அசிங்கங்களையும்  ;

அவமானங்களையும் ;

அவதூறுகளையும்  ;

இழப்புகளையும் ;

கவலைகளையும் ;

துக்கங்களையும் ;

துயரங்களையும் ;

சுமக்க வெண்டிய

கட்டாயத்திற்கு

உள்ளாகும் .

 

அறிவின்றி கோபம்

வெளிப்படும் போது

இந்த நிலை

தான் ஏற்படும் .

 

நண்பர்களிடையே

ஏற்படும் கோபம்

கணவன்

மனைவியிடையே

ஏற்படும் கோபம்

முதாலாளி தொழிலாளி

இடையே

ஏற்படும் கோபம்

ஆசிரியர் மாணவர்

இடையே

ஏற்படும் கோபம்

ஆகியவை

அறிவுடன் வெளிப்படும்

கோபமாக இருந்தால்

கோபம் முடிந்தாலும்

அவர்களுடைய

நட்பு தொடரும்.

 

நண்பர்களிடையே

ஏற்படும் கோபம்

கணவன்

மனைவியிடையே

ஏற்படும் கோபம்

முதலாளி தொழிலாளி

இடையே ஏற்படும்

ஆசிரியர் மாணவர்

இடையே

ஏற்படும் கோபம்

ஆகியவை

அறிவின்றி வெளிப்படும்

கோபமாக இருந்தால்

அவர்களுடைய

நட்பு தொடராது.

கோபம் என்பதை

வெளிப்படுத்துவதே

தவறானது

அத்தியாவசிமான

நிலைகள்

ஏற்படும் போது கோபம்

வெளிப்படாலாம்

தப்பில்லை

ஆனால் அந்த

கோபத்தை

வெளிப்படுத்தும் முன்னர்

அறிவுடன்

வெளிப்படும் கோபமா

(அல்லது)

அறிவின்றி

வெளிப்படும் கோபமா

என்பதை

உணர்ந்து பிறகே

வெளிப்படுதத

வேண்டும்.

 

கோபத்தை

வெளிப்படுத்தும்

முன்னர்

கோபத்தின்

தன்மையை உணராமல்

அறிவுடன் வெளிப்படும்

கோபத்தை

வெளிப்படுத்தாமல்

அறிவின்றி

வெளிப்படும் கோபத்தை

வெளிப்படுத்தினால்

நம்முடைய வாழ்க்கை

பிறருடைய வாழ்க்கை

நம்மைச்

சுற்றியுள்ளவர்கள்

வாழ்க்கை ஆகிய

அனைத்தும்

பாதிக்கப்படும் .

 

அறிவின்றி

வெளிப்படும் கோபத்தை

வெளிப்படுத்தி

விட்ட பிறகு

வருந்துவதால்

ஒரு பயனும் இல்லை

இழந்த வாழ்க்கை

இழந்தது தான்

மீண்டும் பெற

முடியாது

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment