May 12, 2022

பதிவு-5-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-5-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

அது மட்டுமல்ல

செங்கிஸ்கான்

பட்டமும்

பதவிகளும்

உயர்ந்த

ஜாதியினருக்கு

என்று இருந்த

நிலைமையை

மாற்றினான்

திறமை இருந்த

தாழ்ந்த ஜாதி

மக்களை உயர்ந்த

நிலைக்கு கொண்டு

வந்தான்

பரம்பரை

பரம்பரையாக

பிறப்பின்

அடிப்படையில் வந்த

பதவிகளை

ஒழித்தான்

திறமையின்

அடிப்படையில்

பதவிகளை

வழங்கினான்

 

போரில் இறந்த

போர்வீரர்களின்

குடும்பங்களுக்கு

உதவிகள் செய்தான்

பெண்களை மதித்தான்

சமுதாயத்தில்

பெண்களுக்கு

சம உரிமை

அளித்தான்

குறிப்பிட்ட

மதத்தைத்

தான் பின்பற்ற

வேண்டும் என்று

எந்த ஒரு

ஆணையும் அவன்

பிறப்பிக்கவில்லை

மக்கள் எந்த

மதத்தை

பின்பற்ற

நினைக்கிறார்களோ

அதை

பின்பற்றலாம்

என்ற மதச்

சுதந்திரத்தை

மக்களுக்கு

அளித்திருந்தான்

 

எந்த ஒரு

திட்டத்தை

செயல்படுத்துவதாக

இருந்தாலும்

மக்களின்

கருத்துக்களைக் கேட்டு

அவர்களின்

ஆதரவைப் பெற்ற

பிறகே

செயல்படுத்தினான்

மக்களின்

ஆதரவைப்

பெறாமல் எந்த

ஒரு திட்டத்தையும்

செயல்படுத்தவில்லை

இந்தத் திட்டத்தை

முதன் முதலில்

அறிமுகப்படுத்தியவன்

செங்கிஸ்கான் தான்

 

தன் மேல்

நம்பிக்கை

வைத்தவர்களின்

நம்பிக்கையை

செங்கிஸ்கான்

ஒரு நாளும்

கெடுத்ததில்லை

யாருக்கும்

துரோகம்

செய்ததில்லை

மக்களின்

உணர்வுகளைப்

புரிந்து கொண்டு

செயல்பட்டதால் தான்

ஒரு லட்சத்திற்கும்

மேற்பட்ட

போர் வீரர்கள்

அவர் இட்ட

ஆணைகளை ஏற்று

செயல் படுத்தினர்

 

மங்கோலிய தேசம்

பிரிவு படாமல்

மக்களின்

ஆதரவுடன்

மக்களின்

அன்பைப் பெற்று

மரியாதையைப்

பெற்று

செங்கிஸ்கானால்

21 ஆண்டுகள்

ஆட்சி செய்ய

முடிந்தது

 

எழுதப்படிக்கத்

தெரியாத

செங்கிஸ்கான்

இத்தகைய

மாபெரும்

செயலைச்

செய்தார் என்றால்

அவர் எவ்வளவு

திறமைசாலியாக

உழைப்பாளியாக

அறிவாளியாக

தளபதியாக

மன்னராக

தலைவராக

இருந்திருக்க

வேண்டும்

என்பதைச்

சிந்தித்துப்

பார்க்க வேண்டும்

 

செங்கிஸ்கான்

செய்த செயலை

அலெக்ஸாண்டர்

நெப்போலியன்

ஜுலியஸ் சீசர்

உட்பட யாரும்

இது வரை

செய்ததில்லை

 

அலெக்ஸாண்டர்

நெப்போலியன்

ஜுலியஸ்சீசர்

இவர்கள்

அனைவரும்

செங்கிஸ்கானின்

கால் தூசுக்குக்

கூட சமமாக

மாட்டார்கள்

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

No comments:

Post a Comment