May 03, 2022

ஜபம்-பதிவு-747 (சாவேயில்லாத சிகண்டி-81)

 ஜபம்-பதிவு-747

(சாவேயில்லாத

சிகண்டி-81)

 

(பரசுராமரைச் சந்தித்த

கங்காதேவி

பேச ஆரம்பித்தாள்)

 

கங்காதேவி :

பரசுராமரே

அனைத்தும்

அறிந்தவர்

நீங்கள்

 

எந்த ஒரு

விஷயத்தைப்

பற்றியும்

உங்களுக்கு சொல்லி

விளங்க

வைக்க வேண்டிய

அவசியம் இல்லை

 

எது சரி

எது தவறு

என்பது

உங்களுக்குத் தெரியும்

 

நியாயத்தை

அறிந்தவர் நீங்கள்

 

ஏன் உங்கள்

சீடனுடன்

போரிடுகிறீர்கள்

 

போரிடுவதை

நிறுத்துங்கள்

 

உங்கள் சீடன்

தவறு

செய்யாதவன்

என்பது

உங்களுக்குத்

தெரியவில்லையா

 

உங்கள் சீடனுடன்

போரிடுவது

நியாயமா

 

பரசுராமர் :

நியாயம் தான்

பீஷ்மனுடன் போரிடுவது

நியாயம் தான்

 

குருவை

மதிக்காதவனுடன்

போரிடுவது

நியாயம் தான்

 

குருவின்

வார்த்தைக்கு

கட்டுப்படாதவனுடன்

போரிடுவது

நியாயம் தான்

 

தான் செய்த

தவறை

ஒத்துக்

கொள்ளாதவனுடன்

போரிடுவது

நியாயம் தான்

 

தான் செய்த

தவறை

நியாயப்

படுத்துகிறவனுடன்

போரிடுவது

நியாயம் தான்

 

தான் செய்த

தவறை உணர்ந்து

அம்பையை

திருமணம் செய்து

கொண்டிருந்தால்

பீஷ்மனுக்கும்

எனக்கும் போர்

ஏற்பட்டிருக்காது

 

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள மறுத்த

காரணத்தினால்

தான்
எனக்கும்

பீஷ்மனுக்கும் போர்

ஏற்பட்டிருக்கிறது

 

கங்காதேவி :

பிரம்மச்சரியம்

விரதம்

மேற்கொண்டவன்

எப்படி அம்பையை

திருமணம்

செய்து கொள்வான்

 

பரசுராமர் :

பிரம்மச்சரியம்

விரதம்

மேற்கொண்டவன்

அம்பையை

சிறை எடுப்பான்

ஆனால் அம்பையை

திருமணம்

செய்து கொள்ள

மாட்டானா

 

கங்காதேவி :

தம்பிக்காக

சிறை எடுத்தேன்

என்று

சொல்லித் தானே

சிறை எடுத்தான்

 

பரசுராமர் :

பிறருக்காக

ஒரு பெண்ணை

யாரேனும்

சிறை எடுப்பார்களா

இது அறிவுள்ளவர்கள்

செய்யும் செயலா

 

அறிவுள்ளவர்கள்

இத்தகைய

ஒரு செயலை

செய்வார்களா

 

அறிவிருப்பவர்கள்

யாரும்

இத்தகைய ஒரு

செயலைச் செய்ய

மாட்டார்கள்

அறிவில்லாதவர்கள்

தான் செய்வார்கள்

 

ஒரு பெண்ணை

சிறை எடுப்பதற்கு

முன்னர்

யோசிக்க வேண்டாமா

யோசித்து செய்ய

வேண்டாமா

 

பீஷ்மனுக்கு

அறிவில்லை

அதனால்

தான் செய்த தவறை

உணராமல்

இருக்கிறான்

 

பீஷ்மனுக்கு

புத்தியில்லை

அதனால்

தான் செய்த தவறை

சரி என்று

வாதிட்டுக்

கொண்டு இருக்கிறான்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment