November 06, 2022

ஜபம்-பதிவு-888 மரணமற்ற அஸ்வத்தாமன்-20 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-888

மரணமற்ற

அஸ்வத்தாமன்-20

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

பகைவனையும்

வசீகரிக்கும்

தன்மை

உங்களிடம் இருக்கிறது

 

எதையும்

எதிர்க்கும்

துணிவு

உங்களிடம் இருக்கிறது

 

யாருக்கும்

அஞ்சாத

தைரியம்

உங்களிடம் இருக்கிறது

 

எடுத்த

காரியத்தை

முடிக்க வேண்டும்

என்ற கொள்கை

உங்களிடம் இருக்கிறது

 

எந்த ஒரு

குறிக்கோளை

எடுத்துக்

கொண்டாலும்

அதை

முடிப்பதற்காக

மூச்சு விடாமல்

உழைக்கக் கூடிய

உழைப்பு

உங்களிடம் இருக்கிறது

 

கலங்காத

நெஞ்சம்

உங்களிடம் இருக்கிறது

 

வருந்தாத உள்ளம்

உங்களிடம் இருக்கிறது

 

எத்தனை பேர்

வந்து எதிர்த்தாலும்

வீழ்த்தும் வீரம்

உங்களிடம் இருக்கிறது

 

அன்புக்கு அடிபணியும்

பண்பு

உங்களிடம் இருக்கிறது

 

காதலில் கரையும்

இதயம்

உங்களிடம் இருக்கிறது

 

காமத்தை சுவைக்கும்

உள்ளம்

உங்களிடம் இருக்கிறது

 

எது வந்தாலும்

எதிர்த்து நிற்கும்

பண்பு

உங்களிடம் இருக்கிறது

 

உயர்ந்தவர்களை

மதிக்கும் நெஞ்சம்

உங்களிடம் இருக்கிறது

 

துரோணர் :

என்னைப் புரிந்து

கொள்ள முடியவில்லை

என்று சொல்லி விட்டு

நான் பேசிக்

கொண்டிருந்த

சிறிது நேரத்திற்குள்

என்னைப் பற்றி

பலவிதமாக அலசி

ஆராய்ந்து இருக்கிறீர்களே

 

நீங்கள் எப்படி

என்னை ஆராய்ந்தீர்களோ

நானும்

உங்களைப் பற்றி

ஆராய்ந்து இருக்கிறேன்

 

கிருபி :

என்னைப் பற்றி

அப்படி என்ன

ஆராய்ந்து இருக்கிறீர்கள்

எங்கே சொல்லுங்கள்

நான் கேட்கிறேன்

 

துரோணர் :

உங்களுக்கு என்னைப்

பிடிக்கவில்லை என்றால்

நீங்கள் என்னைத்

திட்டி விட்டு

எப்போதோ

சென்று இருப்பீர்கள்


என்னை பிடித்த

காரணத்தினால் தான்

என்னிடம்

பேசுவது போல்

என்னைப் பார்த்துக்

கொண்டு இருந்தீர்கள்

என் மேல் கோபம்

இருப்பது போல்

காட்டிக் கொண்டதற்கு

காரணம் நீங்கள்

ஒரு பெண்ணாக

இருந்த

காரணத்தினால் தான்

 

ஒரு பெண்ணாக

இருந்த

காரணத்தினால் தான்

உங்களுடைய காதலை

உங்களால்

சொல்ல முடியவில்லை

 

நீங்கள்

சொல்லாவிட்டாலும்

உங்களுடைய

காதலை நான்

புரிந்து கொண்டேன்

 

என் மேல்

உங்களுக்கு காதல்

வந்து விட்டது

என்பதைப் புரிந்து

கொண்ட

காரணத்தினால் தான்

நான் உங்களிடம்

தொடர்ந்து பேசினேன்

இல்லை என்றால்

நான் பேசியே இருக்க

மாட்டேன்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment